Monday, November 10, 2014

வசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து சிவாஜி- மிக்சர் போஸ்ட்

ஒருவர் நம் நட்பை வேண்டாம் என நினைத்தால் அதற்கு மரியாதை கொடுத்து அமைதியாக விலகி விட வேண்டும் என சொன்னேன் அல்லவா..
இதில் இன்னொரு கோணம் இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட துறையில் நல்ல அறிவு கொண்ட நண்பர் அவர்... அந்த துறை சம்பந்தமாக அடிக்கடி சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொள்வேன்...எப்படியோ தவறுதலாக அல்லது தொழில் நுட்ப பிரச்சனைகளால் , அவர் பெயர் அன் ஃபிரண்ட் செய்யப்பட்டு இருக்கிறது..
அவர் கோபித்துகொண்டு போய் இருக்கலாம். ஆனால் அவர் பெருந்தன்மையாக , ஈகோ பார்க்காமல் என்னிடம் விளக்கம் கேட்டார்.. பதறிப்போய் தவறை சரி செய்தேன்... அவர் அமைதியாக விலகி போய் இருந்தால் , ஓர் ஆரோக்கியமான நட்பு ஒரு சாதாரண விஷயத்துக்காக முடிவுக்கு வந்து இருக்கும்..
அவர் பெருந்தன்மைக்கு நன்றி...பாதம் தொட்டு வணங்குகிறேன்
____________________________________________________________________
மனதில் வன்மத்தை கொண்டு , அன்பு காட்டுவது போல நடிப்பதுகூட எளிது... ஒருவர் மேல் அளவுகடந்த அன்பை வைத்துகொண்டு , சாதாரணமாக இருப்பது போல நடிப்பது ரொம்ப கஷ்டம்
_________________________________________________________________________
நான் ஒரு டுபாக்கூர் என நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.. நுனிப்புல் மேய்பவன்... உதாரணமாக ஆலயம் செல்வதால் ( பிராசதத்துக்காக ) , நாத்திகாவதிகள் என்னை ஏற்பதில்லை... சும்மா சைட் அடிப்பது க்யூவில் இரண்டு முறை போய் பிரசாதம் வாங்குவது போன்றவற்றல் ஆத்திகர்களும் என்னை ஏற்பதில்லை..
இன்று காலை கோயிலில் ஓர் அனுபவம்..அருகில் பார்வை அற்றவர் ஒருவர் சாமி கும்பிட வந்திருந்தார்.. சின்ன சின்ன உதவிகள் செய்தேன்... சார்,, ஆராதானை காட்டும்போது சொல்லுங்க என்றார்... காட்டினால் என்ன காட்டாவிட்டால் இவருக்கு என்ன என சற்று சாடிஸ்தனமாக நினைத்து அடுத்த கணமே அந்த நினைப்பை அழித்தேன்...
சாமிக்கு தீப ஆராதானை காட்டும்போது அவரிடம் சொன்னேன்..சாமி இருந்த திசையில் கும்பிட்டார்..முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..மகிழ்ச்சி...ம்ம்... நமக்கு தெரியாத ஏதோ ஒன்று அவருக்கு தெரிகிறது போல என நினைத்து கொண்டேன்.
____________________________________________________________
புத்தக கண்காட்சியில் நான் பரிந்துரைக்கும் இன்னொரு கிளாசிக் இது... ஹாலிவுட் படம் போன்ற ஆக்‌ஷன் த்ரில்லர்..ஸ்பீட் படம் போன்ற வேகம்... ஒரே இடத்தில் குறுகிய கால இடைவெளியில் நடக்கும் சம்பவம்.. தேவையற்ற செண்டிமெண்ட் , காதல் என எதுவும் இல்லை... அதீத கற்பனைகளோ , செயற்கையான ட்விஸ்ட்டுகளோ இல்லாமல் , நம் ஊர் பாரம்பரிய் கதைக்களனை வைத்து விளையாடி இருப்பார் சி சு செல்லப்பா- வாடிவாசல்
___________________________________________________________________

அந்த காலத்தில் எல்லாம் முதல் நாளே படத்துக்கான வசனத்தை கொடுத்து விடுவார்கள் . இவன் (பாரதிராஜா) எனக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட வசனம் கொடுக்கவில்லை . கை வீசி நடங்க . அப்படி பாருங்க . எதுவும் பேசாதீங்க அப்படீனான் . என்னடா பண்றான் இவன் அப்படினு நெனச்சேன் . ஆனா படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன் - முதல் மரியாதை குறித்து சிவாஜி கணேசன்
_______________________________________________________________________
செக்ஸ் ஏன் இந்த அளவுக்கு மனதை ஆக்ரமிக்கிறது ? சுயம் அழிந்து , முழுமையாக ஈடுபட செக்சில் மட்டுமே உங்களால் முடிகிறது . எனவே மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்தை மனதுக்குள் நிகழ்த்துகிறீர்கள் . இது அவசியமற்றது . சாப்பிடுவதை , நீர் அருந்துவதை , உரையாடுவதை , முழுமையாக ஈடுபட்டு செய்து பழகுங்கள் . சுயம் அழிய , செக்ஸ் தேவையில்லை என புரியும்#ஜேகிருஷ்ணமூர்த்தி

____________________________________________________________
நாம் ஏன் பிரபலமடைய துடிக்கிறோம் ? காரணம் , நாம் செய்யும் வேலையை விரும்பி செய்யவில்லை . அந்த கழிவிரக்கத்தை மறைக்க பிரபலமடைதலை விரும்புகிறோம் . ஓவியமோ இசையோ பொறியியலோ கல்வியோ -அதை விரும்பி செய்யும்பட்சத்தில் உங்களுக்கு பிரபலமடைவது முக்கியமாக இராது-ஜே கிருஷ்ண மூர்த்தி
____________________________________________________________
இணையத்தில் அதிக அளவு நண்பர்களை பெற்று இருப்பவர் யார் தெரியுமா? ரஜினி ? கமல்? அஜித் ? விஜய்? ஒபாமா? ம்ஹூம் ...இவர்கள் யாரும் இல்லை... “ ஒரு நண்பர் “ என்ற கற்பனை ஆசாமிதான் எல்லோருக்குமே நண்பராக இருக்கிறார் யாரையாவது ஜாடையாக திட்டுவதற்கு உதவுவது இவர்தான்.. பாவம்..என்ன திட்டினாலும் தலை குனிந்து சென்று விடுவது இவர் இயல்பு... உதாரணமாக கமல்ஹாசனை திட்ட வேண்டுமா? கை கொடுக்க “ ஒரு நண்பர் “ ரெடி ? எப்படி ? ஓர் உதாரணம்...
*****************************************************
“ ஒரு நண்பர் “ என்னைபார்க்க வீட்டுக்கு வந்தார்..அப்படியே டீ சாப்பிடபோனோம்.. அவர்தான் காசு கொடுத்தார் என்பது இங்கு தேவை இல்லை..பேச்சு வாக்கில் உலகத்திலேயே சிறந்த நடிகர் கமல்தான் என்றார் அவர்... அவரிடம் கேட்டேன் ..உலகத்தில் இருக்கும் எல்லா நடிகர்களின் படங்களைப்பார்த்து விட்டுதான் இதை சொல்கிறீர்களா? பாவம்.அவர் தலை குனிந்தவாறு அங்கே இருந்து புறப்பட்டார்
******************************************************
” ஒரு நண்பர் “ ராக்ஸ் 

___________________________________________________________________
என்னதான் நம் ஆட்டோ அண்ணன்கள் சீறும் பாம்பை நம்பு , சிரிக்கும் பெண்ணை நம்பாதே என எச்சரித்தாலும், நாமும் இந்த அட்வைசை பலருக்கு கொடுத்தாலும், ஒரு பெண் நம்மை பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டால் , இந்த அட்வைஸ் எல்லாம் மறந்து விடும்... அந்த சிரிப்புக்கு மயங்கி , நண்பர்கள் இலக்கியம் புரட்சி என எல்லாவற்றையும் மறந்து அந்த பெண் பின்னால் சென்று விடுவேன் - மன்னிக்கவும் சென்று விடுவோம்..இது இன்று நேற்றல்ல...சங்க காலத்திலேயே இப்படித்தான்..
ஒரு தம்மாதூண்டு பாம்பு யானைக்குட்டியை டார்ச்சர் செய்வது போல , அழகிய சிரிப்பழகி இவள் நினைவுகள் என்னை டார்ச்சர் செய்கின்றனவே என புலம்புகிறார் சாத்தினாதனார் எனும் புலவர் , குறுந்தொகையில்...
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே
_____________________________________________________________________
நரமாமிசம் தின்னக்கூடிய தந்தையும் மகனும் சென்னைக்குள் மாறுவேடத்தில் புகுந்து உணவை தேட ஆரம்பித்தனர்...
முதலில் மகன் கண்ணில் பட்டவர் நமீதா.. அப்பா..செம ஃபுட் ..சாப்பிடலாமா என்றான்
வேண்டாம்டா.. ஓவர் கொழுப்பு உடம்புக்கு ஆகாது என மறுத்தார் தந்தை...
அப்பா..அப்பா...இதோ...இது சூட் ஆகும்... அடுத்து தமன்னாவை பார்த்து கத்தினான் மகன்..
வேண்டாம்டா... ஒரே எலும்புதான் ..சதையே இல்லை மறுத்தார் அப்பா..
மகனுக்கு பசி அதிகரித்துக்கொண்டே போனது...வாவ்,,,இதை மறுக்க மாட்டார் என நினைத்து , காஜல் அகர்வாலை காட்டினான்... அப்பா...இது நல்லா இருக்கும்ப்பா....
தந்தை காஜலை பார்த்தார்..
மகனே... என்னதான் நரமாமிசம் சாப்பிடுபவராக இருந்தாலும், நீ உன் அம்மாவையே சாப்பிட நினைக்க கூடாது...அவரை பத்திரமாக ஊருக்கு அழைத்து வா என்றார்...
________________________________________________________________________

விரிவதெல்லாம் வானும் இல்லை. கற்பிப்பதெல்லாம் கல்வியும் இல்லை ‪#‎இளையராஜா‬
-------------------------------------------------------------------------------
இன்றைய பல்ப்..
ஒரு முக்கியமான வேலை இருக்கிறது..காலை ஆறு மணிக்கு போன் செய்து எழுப்பி விடுங்கள்..என நெருங்கிய உறவினர் கூறி இருந்தார்  அவரை இம்ப்ரஸ் செய்ய கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என நினைத்து நான்கு மணிக்கே எழுந்து விட்டேன்..ஷார்ப்பாக ஆறு மணிக்கி கால் செய்து அசத்த வேண்டும்..
மணியை பார்த்துக்கொண்டே இருந்தேன்... 4. 5 5.15 5.30 5.45 5.55 இந்த இடத்தில் கண் அசந்து விட்டேன்..
எட்டு மணிக்கு போன் செய்து அவர் என்னை எழுப்பி விட்டார்

________________________________________________________

என் பேச்சு புரியாமல் நண்பர்கள் கஷ்டப்படுவது பற்றி எழுதினேன் அல்லவா.. ஆனால் நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவன் அல்ல.. நான் உண்டு ,,,ஓசி சாப்பாடு உண்டு என ஒதுங்கி வாழ்பவன்...
நான் மிகைப்படுத்தி சொல்வதாக நினைத்த ஒருவர் , தன்னால் எந்த பேச்சையும் புரிந்து கொள்ள முடியும் என சவால் விட்டு நேற்று இரவு 9மணிக்கு களத்தில் இறங்கினார்...( உங்களைப்போன்றோருடன் பேசுவதாக தெரிந்தால் , என் இமேஜ் பாதிக்கபடும்.. நான் யார் என சொல்ல வேண்டாம் என சொல்லி விட்டார் )
பேசினோமா.. பத்து நிமிடங்களிலேயே ஒப்புக்கொண்டு விட்டார்.. அய்யா சாமி.உங்க பேச்சு புரியல..
அதன் பின் அவர் புரியவில்லை என சொன்ன வாக்கியத்தை இரு வெவ்வேறு மாடுலேஷனலில் பேசிக்காட்டினேன்...
விழுந்து விழுந்து சிரித்தார்...யூ ஆர் வெரி ஃபன்னி என சொல்லி சிரித்துக்கொண்டே கட் செய்தார் ( ஃபோன் லைனை )
அவர் பாராட்டினாரா அல்லது சிரிப்பு போலீஸ் என கிண்டல் செய்தாரா என புரியாமல் இரவெல்லாம் விழித்துக்கொண்டு இருந்தேன்...

____________________________________________________________________________

சற்று தாமதமாகவே இன்று எழுந்தேன்... டீ கடை சென்று தந்தியை மேய்ந்தவாறு , டீ சொல்வதை தாமதப்படுத்திக்கொண்டு இருந்தேன்.. ஒரு காலுக்காக வெயிட்டிங்.. ஏதாச்சும் வந்து இருக்குறதா என பார்ப்பதற்காக போனை எடுக்க சட்டை பையில் கை விட்டவன் திகைத்தேன்.. பாக்கெட்டில் பத்து பைசா கூட இல்ல...மறந்துட்டேன்போல.. ம்ம்ம்.. “ ஹலோ..இதோ வந்துட்டேன் “ என வராத போன் அழைப்பில் “ பேசி” விட்டு எழுந்து வெளியே கிளம்பினேன், அவ்சரமாக...
பக்கத்தில் இருந்த பெரியவர் “ டீ சாப்பிட்டு போங்க..என்ன அவ்சரம் “ என்றார்... அவரை அந்த கடையில் அவ்வப்போது பார்த்து இருக்கிறேன்..பேசியதே இல்லை.. அவராக முதல் முறையாக பேசுகிறார்..
கூட அவர் வயதை ஒத்த அவர் நண்பர்களும் இருந்தனர்... ” ஆமா,,டீ சாப்பிட்டு போங்க..எங்களோட “ என புன்னகையுடன் சொன்னார் ஒருவர்... அவர்களுடன் டெல்லி அரசியல் சூழ்னிலைகள் குறித்து பேசி விட்டு கிளம்பினேன்.. காசு நான் கொடுத்துறேன் என்றார் அவர்..
இது காலத்தினால் செய்த உதவி என்பதில் வராது.. கடையில் சொல்லி விட்டு பிறகுகூட கொடுக்கலாம்... அல்லது டீ சாப்பிடாமல் போனாலும் பெரிய இழப்பு இல்லை..
ஆனால் பாக்கெட்டில் கை விட்ட பின் என் முகம் மாறுவதை கவனித்து , நிலையை யூகித்து , எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் அன்பு ஆச்சர்யமும் நிறைவும் அளித்தது...

_____________________________________________________________

ஏதாவது ஒரு செய்தியை படித்து விட்டால் சூடாக நம் கருத்தை பதிவு செய்ய மனம் துடிக்கும் . ஒரு கணம் அமைதியாக இருந்தால் அந்த துடிப்பு அகன்றுவிடும் .அந்த விஷயம் அற்பமானதாகவோ , நமக்கு சம்பந்தம் இல்லாததாகவோ , நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக தோன்றும் . கருத்து சொல்லாமல் ஒரு செய்தியை கடக்கையில் மனம் உணரும் sense of conquereness இனிமையானது

3 comments:

  1. "ஒரு நண்பர்"-ஐ குறிப்பிட்டுவிட்டு, 'ஒருவர்'-ஐ குறிப்பிட்டுள்ளது முரண் நகை. sense of conquereness - அப்படிங்கறத தமிழ்ல சொல்லாம ஆங்கிலத்தில் சொல்லக் காரணம்?

    ReplyDelete
  2. பிச்சை காரனிடம் இருப்பது அக்ஷய பாத்திரமோ? விஷயங்கள் கொட்டுகின்றதே.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா