Friday, September 4, 2020

சோ தர்மனின் சூல்.. சுயநலத்தால் அழியும் இயற்கை

 நமது கிராம நிர்வாக முறை − குறிப்பாக நீர் மேலாண்மை − வெகு அற்புதமானது.

ஊருணிகள் , ஏரிகள் , குளங்கள் , கண்மாய்கள் என வடிவமைத்து , தலை,போகிற வேலை என்றாலும் அதை,விட்டுவிட்டு , ஆண்டுக்கொரு முறை கிராமத்து மக்கள் அனைவரும் சாதி , பொருளாதார வித்தியாசமின்றி ஒன்றுகூடி கண்மாயை தூர்வாரும் ஊர்க்கட்டளை என மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வயிராற உண்டவர்கள் நாம்

கண்மாய்களை சீரழித்தால் குடும்பத்தில் ஊமைக்குழமை பிறக்கும் என்ற ""மூடநம்பிக்கை " கொண்ட முன்னோர்கள் காலத்தில் வறட்சி கிடையாது

இதெல்லாம் மூடநம்பிக்கை ,  ஏரிகளை மூடி கட்டிடங்கள் கட்டினால் காசு கிடைக்கும் என்று தெரிந்து கொண்ட அறிவாளிகள் அதிகாரம் பெற்றதும் நீர் நிலைகள் அழிய ஆரம்பித்தன

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏராளமான கண்மாய்கள் ஏரிகள் அழிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாகி வருகிறது

இது குறித்து ஆய்வுகள் செய்து சோ. தர்மன் எழுதியுள்ள நாவல் "சூலி"


எப்படி,ஒரு தாய் ஓர் உயிரை பூமிக்கு கொணர்கிறாளோ அதுபோல ஒரு கண்மாய் உலகுக்கு எத்தனைஎத்தனை உயிர்களை புவிக்கு அளிக்கின்றன


ஆரா, உளுவை, கெண்டை, பாம்புக்கெண்டை, கூனக்கெண்டை, அயிரை, கெளுறு, கொரவை, விலாங்கு, விரால், ஊளி, தேழி என எத்தனை மீன்கள் , அவற்றை நாடி வரும் பறவைகள் , அதைச்சுற்றி வாழும் தாவரங்கள் என வாழ வைக்கும் தாய்தான் கண்மாய்


மனசாட்சியின்றி இதை அழித்த கட்சியினரை நோவதா , அழிவது நம் குழந்தைகள்தான் என தெரிந்தும் அழிவுக்கு துணைபோகும் மக்களை நோவதா ?


அரசர் காலத்தில் நீர்நிலை பராமரிப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அழகாக சித்தரித்துள்ளார் தர்மன்

உருளைக்குடி கிராமத்துக்கு தாயாக விளங்கிய கண்மாயை அரசாங்கங்கள் அழிப்பதை கண்முன் காட்டுகிறார்


ரத்தமும் சதையுமான பாத்திரங்கள் ,  பறவைகள் மரங்கள் பற்றிய சுவையான தகவல்கள் , சுவாரஸ்யமான சம்பவங்கள் என நல்ல வாசிப்பனுவம் தருகிறது சூலி







Thursday, September 3, 2020

கார்ட்டூனுக்காக மிரட்டப்பட்ட தேமுதிக . பாசிச பாதையில் தமிழகம்



 

 திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்காக தேமுதிக காத்திருப்பதுபோல தினமலர் கார்ட்டூன் வெளியிட்டது

இது தேமுதிகவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நாங்க ஏன் பிறரை கெஞ்ச வேண்டும்.  பழம் நழுவி பாலில் விழாதா என பிற கட்சியினர்தான் எங்களை கெஞ்சினார்கள் என்பதை நீங்களே சுட்டிக்காட்டியிருக்கிறீர்களே என தேமுதிக ( சுதீஷ்) , தினமலர் 2016ல் வெளியிட்ட காா்ட்டூனை வெளியிட்டது 

இதற்கு தினமலர்தான் டென்ஷனாகியிருக்கவேண்டும். அல்லது தினமலர் மேல் அனைவரும் டென்ஷனாகி இருக்க வேண்டும்.

ஆனால் சம்பந்தமின்றி தேமுதிக மேல் அனைவரும் பாய்ந்து அக்கார்ட்டூனை நீக்கச்செய்து விட்டனர்

நில மாதங்கள் முன் கார்ட்டூனிஸ்ட் மதியை மிரட்டி அவர் வேலையைப் பறித்தனர்;

திராவிட அரசியல் குறித்து நாவல் எழுதினால் தான் உயிரோடு நடமாட முடியாது என சாரு நிவேதிதா சொன்னது,நினைவுக்கு வருகிறது











Saturday, August 29, 2020

மனுதர்ம அடிப்படையில் இந்திய சட்டம் உருவாக்கப்பட்டதா ? விஜயகாந்த் பரபரப்பு

 மனுதர்மம் என்பது எப்போதுமே

 சர்ச்சைக்குரிய ஒன்று


ஏதாவது ஒரு குக்கிராமத்தில் ஏதாவது ஒரு ஆணவக் கொலை நடந்தால் அதற்கு மனுநீதி மேல் பழியைப்போடுவோர் உண்டு. உண்மையில் அந்த கிராமத்தில் யாரும் மனுதர்மம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்


சாதி என்பது பிறப்பால் வராது. குணிதிசயங்கள்தான் மனிதனின் உயர்வை தீர்மானிக்கிறதென அது சொல்வதாக சிலர் சொல்கின்றனர்


அது சாதிய நூல் என்போரும்

உண்டு


கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் இப்படி பேசுகிறார்


வேதம் கற்ற அந்தணன் தவறு செய்தால் அவனுக்கு கூடுதல் தண்டனை விதிக்கிறது மனுதர்மம்.  அந்த மனிததர்ம அடிப்படையில்தான் இந்திய அரசல் சட்டம்  அமைந்துள்ளது என அனல் பறக்க"பேசுகிறார்


அதாவது படித்தவர்கள்  அதிகாரத்தில் இருப்போருக்கு கூடுதல் தண்டனை என மனு சொல்வது நல்லது என்கிறார்;


 மனுதர்ம ஆதரவாக ஒரு சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் பேசியது ஆச்சர்யம்









Wednesday, August 26, 2020

வினோதமான அறிவியல் கேள்விகள்

 திடீரென பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்


90% ஒளியின் வேகத்தில் ஒரு பந்தை எறிந்தால் என்னாகும் 

உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரே நேரத்தில் லேசர் ஒளியை நிலவின் மீது பாய்ச்சினால் அதன் நிறம் மாறுமா



தனிம ஆவர்த்த அட்டவணையில் இருக்கும் தனிமங்களால் உருவான செங்கற்களை பயன்படுத்தி தனிம ஆவர்த்த அட்டவணையைப் போலவே ஒரு சுவர் கட்டினால் என்ன நடக்கும்;


உலகின் அ னைத்து மக்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் ஒரு குதித்தால் என்ன நடக்கும்


திடீரென அனைத்து  மனிதர்களும் ஒரே நேரத்தில் அழிந்துவிட்டால் , மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளி மூலங்கள் அணைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்

கீழ் நோக்கி துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் எதிர்விசையை பயன்படுத்தி பறக்க முடியுமா

நொடிக்கு ஒரு அடி என்ற வேகத்தில் பறக்க ஆரம்பித்தால் நம் மரணம் எப்படி நிகழும்


இண்டர்நெட் இயங்க எவ்வளவு இடம் தேவைப்படுகிறது


பறக்கும் துப்பாக்கி குண்டை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்


ஒரு பந்தை எவ்வளவு வேகத்தில் அடித்தால் அது கோல்கீப்பரைத் 


தள்ளிக்,கொண்டுபோய் அவருடன் சேர்ந்து கோலில் விழும்


உலகில் அனைவரும் தம்மை இரு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஜலதோஷத்தை உலகினின்று ஒழித்துவிடலாகுமா 


திடீரென நம் உடலின் டிஎன்ஏ மறைந்துவிட்டால் என்ன ஆகும்


தேநீரை அதிவேகமாக கலக்குவதன் மூலம் அதை சூடாக்க முடியுமா


இது போன்ற பல சுவையான கேள்விகளையும் பதில்களையும் ஒர் ஆங்கில நூலில் படித்தேன்


பதிலை யோசியுங்கள்...






Monday, August 24, 2020

இந்திய இணைப்பு மொழி !

 டெல்லிக்கு ஒரு வேலை விஷயமாக சக அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன்

எனக்கும் அவருக்கும் இந்தி தெரியாது

ரயிலினின்று இறங்கி ஒருவரிடம் வழி கேட்க வேண்டியிருந்தது

எனது சகா தனது ஆங்கிலப்புலமையைக் காட்டி ஆங்கிலத்தில் வழி கேட்டார்.

டெல்லிக்காரர் புரியாமல் விழித்தார். நான் இந்தி கலந்து தமிழில் கேட்டேன். அவரும் ஏதோ பதிலளித்தார். வழி புரிந்து விட்டது

என்ன தமாஷ் என்றால் எனக்கும் அவருக்கும் இந்தி தாய் மொழி கிடையாது.  

வட இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. உயர்வர்க்கம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும் சராசரி மக்களின் இணைப்பு மொழியாக உள்ளது.

மோடி , காந்தி என பலருக்கு தாய்மொழி ஹிந்தி கிடையாது . ஆனால் வட இந்தியாவில் ஒரு சாமன்யனிடம் ஆங்கிலம் பேசினால் காமெடியாக இருக்கும் என்பதால் இந்தியை ஏற்கின்றனர்

டெல்லி , ஹரியானா , ராஜஸ்தான் , அஸ்ஸாம் , பீகார்  , மகாராஷ்ட்ரா என பல இடங்களிலும் இந்தியை வைத்து ஒரு சாமான்யனிடம் உரையாடிவிட முடியும்

தமிழ் நாட்டில் இப்படி மாநிலங்களுக்கிடையேயான பயணம் குறைவு என்பதால் நமக்கு ஒமெரு

 பொது இந்திய மொழியின் அவசியம் ஏற்படவில்லை


ஆனால் தென் மாநிலங்களிடையே பயணம் என்றால் , ஒரு சாமான்யனிடம் ஆங்கிலம் பேசுவது எவ்வளவு காமெடியோ அதே நிலைதான் ஹிந்திக்கும்

இரண்டுமே தென்னகத்துக்கு அந்நிய மொழிகளே.

இது வட இந்தியர்களுக்குப் புரிவதில்லை


ஆங்கிலத்தை வைத்து சமாளிக்கலாம் என்ற நம் ஆட்கள் கருத்து முட்டாள்தனமானது.  வட இந்தியா போல தென்னக மக்களும் தமக்குள் ஹிந்தி பேசுவார்கள் என்ற வட இந்தியர்கள் கருத்தும் முட்டாள்தனமானது

உலகோடு உறவாட ஆங்கிலம் , நமக்குள் உரையாட தாய்மொழி , இதைத்தவிர இன்னும் இரு இந்திய மொழிகளும் , ஒரு அயல்தேச மொழியும் தெரிந்திருப்பதுதான் நம்மை தன்னம்பிக்கை மிகுந்த முழு மனிதனாக்கும்

பணக்கார மாணவர்களுக்கு இது கிடைக்கிறது

ஏழை மாணவர்கள் வாழ்வில்தான் பலரும் விளையாடுகிறார்கள்

இன்ன மொழி படி என கட்டாயப்படுத்தாமல் , தனியார் பள்ளிகள் பாணியில் மாணவரே அவரவர்க்குத் தேவையான மூன்றாவது மொழியைத் தேர்வு செய்ய வழி வகை செய்வதே சமூக நீதி



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா