Sunday, June 17, 2012

சாருவை படிக்காதீர்கள்- வாசகர் பரபரப்பு பேச்சு - இறைவனுடன் இரண்டு நாட்கள் - பார்ட் 1



வழக்கத்தை விட உற்சாகமாக சாரு வாசகர் வட்ட சந்திப்பு நடந்தது.  இலக்கியம்  , உலக சினிமா ,  சிரிப்பு, உண்ர்வு பூர்வ தருணங்கள் , வாக்கு வாதங்கள்,. சர்ச்சைகள் , சினிமா கிசு கிசு , விருந்தோம்பல் , தியானம் , படகு சவாரி , கிரிக்கெட் போட்டி என ஏராளமான நிகழ்வுகள், 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக , சாருவின் எழுத்துகளை யாரும் படிக்காதீர்கள், beware of charu என வாசகர் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

  வழக்கமாக சென்னை அல்லது சென்னை சுற்றுப்புறங்களில் வாசகர் வட்ட சந்திப்பு நிகழும். தென் மாவட்டங்களில் சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என பலர் குரல் கொடுத்து வந்தனர். அதனால் இம்முறை திண்டுக்கல் அருகே நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சீரிய உள்ளம் கொண்ட செல்வகுமாரும் , வெள்ளை உள்ளம் கொண்ட கருப்புசாமியும் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வைத்து இருந்தனர்.





அதே போல வாகன வசதி , ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் வட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். ராஜ ராஜேந்திரன் தலைமையிலான அணியில் , நான் சென்னையில் இருந்து புறப்பட்டேன். 




இயற்கை அழகு கொஞ்சும் சாலை வழியே பயணம் . வளைந்து நெளிந்து பாதையில் வாகனம் மலையேற தொடங்கியதுமே , சாரு நல்ல இடமாக தேர்ந்து இருக்கிறார் என்பது புரிந்து விட்டது.

வரவேற்பு பேனர் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார்கள். 


கொஞ்ச நேரம் ரிஃப்ரெஷ் , உணவு முடிந்த பின் உடனடியாக அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது. தென் மாவட்டங்க்ளில் பலரை சந்தித்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல ஓசூர் , கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலும் இருந்தும் வந்து இருந்தார்கள்.

சென்னைக்கு வெளியே  நிகழ்ச்சியை நடத்தியது சிறந்த முடிவு. 




வெள்ளை சட்டை , வேட்டி அணிந்து வந்த சாரு, நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். சந்திப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் , மனிதனை மனிதனாக மதிப்பது.  சில எழுத்தாளர் சந்திப்பில் வாசகனை பள்ளிக்கூட மாணவன் போல கருதி ஏராளமான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். சாருவிடம் மனிதனை நேசிக்கும் பண்பு உள்ளதால் , அப்படி ஏதும் இங்கு இல்லை.

தண்ணி அடிக்க கூடாது , அல்லது தண்ணி அடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.. நீ நீயாக இருக்கலாம், வாழ்க்கையை கொண்டாடு - அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் என்பதை சொல்லித்தரும் , பயிலரங்கு போல இருந்தது என்றே சொல்லலாம். 

முதல் நிகழ்ச்சியாக வாசகர் வட்ட விவகாரங்கள் குறித்து பேசினார். த்னது மகிச்சிகளை ,ஏமாற்றங்க்ளை , துரோகங்களை , உன்னத மனிதர்களைப்பற்றி பேசினார்.

தனி மனித ஒழுக்கம் குறித்து உணர்வு பூர்வமாக பேசினார்,

ஒரு காலத்தில் 13 வயதில் திருமணம் செய்வது இயல்பு. இன்று அது தவறு. ஆக , இதெல்லாம் மாறக்க்கூடியது. ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டும் சம்பந்தப்பட்ட விஷ்யம் அல்ல. நேர்மையாக இருப்பது, மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது போன்றவைதான் ஒழுக்கம். நான் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து இருந்தால் , சாமியார்களிடமும் , சினிமா காரர்களிடமும் ஏராளமாக சம்பாதித்து இருக்க முடியும், நான் அப்படி செய்யவில்லை..இப்படி எந்த எழுத்தாளன் ஒழுக்கமாக தன் வேலையை செய்கிறான் என ஆவேசமாக பேசினார்.

பால்ய மணம் குறித்து பேசும்போது முக்கியமாக சம்பவம் ஒன்றை சொன்னார்.
100 வய்தான பாட்டி, இறக்கும் தறுவாயில் தன் ஃபிளாஷ் பேக்கை பேத்தியிடம் சொன்னார்.. ”அந்த காலத்தில் துவைப்பதற்கு வெகு உயரமான கல்லை பயன்பட்த்துவோம். எனக்கு அது எட்டாத உய்ரம் . கஷ்டப்பட்டு துவைப்பேன் “ 

இதை கேட்ட பேத்திக்க்கு , அந்த உய்ரமான கல்லை பார்க்க ஆசை. பாட்டியின் வீட்டுக்கு சென்றாள் . பாட்டி குறிப்ப்பிட்ட இடத்துக்கு சென்ற அவளுக்கு அதிர்ச்சி. அங்கே உய்ரமான கல் ஏதும் இல்லை..  வெகு வெகு சிறிய கல் மட்டுமே இருந்தது.

பிறகுதான் புரிந்தது. பாட்டிக்கு ஐந்து வயதிலேயே திருமணம் ஆகி ஏழு வயதில் கணவ்ன்  வீடு வந்தவள். அந்த வயதில் அந்த சிறிய கல், மாபெரும் உய்ரமாக தோன்றி இருக்கிறது.

இது போல பல தகவகள் , உலக சினிமா , புத்தகங்கள் என ஏராளமான தகவல்களை கொட்டினார் சாரு.

வாழ்வை கொண்டாடுங்கள் என்றார் சாரு.  அது அவர் எப்போதும் சொல்வதுதான். ஆனால் , தண்ணி அடிப்பது மட்டுமே கொண்டாட்டம் என நினைக்காதீர்கள் என சொன்னதுதான் அந்த பேச்சின் ஹை லைட். நான் ஒரு போதும் குடிக்கு அடிமை அல்ல. யாரும் இதை பழகாதீர்கள். குடி குடியை கெடுக்கும் என அரசு சொல்வது சரியானதுதான். என் வீட்டில் பல பாட்டில்கள் குடிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன. உங்களை பார்த்த சந்தோஷத்தில் குடிக்கிறேன். அவ்வளவுதான்.

என்னிடம் உழைப்பை , படிப்பை , தீவிரமாக செயலாற்றுவதை கற்று கொள்ளுங்கள். குடியை கற்கதீர்கள் . கட்டுப்பாடுடன் , ஒழுக்கத்துடன் இருப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய கொண்டாட்டம் என முத்தாய்ப்பாக சொன்னார்.


அப்படி அவர் சொன்னதுதான் , அந்த இரண்டு நாளும் நடை முறையில் இருந்தது. எங்கெங்கும் கொண்டாட்டம் மட்டுமே இருந்தது. ஆனால் அது மற்றவர்களை கஷ்டப்படுத்தாமலும் , வற்புறுத்தாமலும் இருந்தது.

ஒருவர் செய்வதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்ற ஆட்டு மந்தை மனப்பானமை அறவே இல்லை. உனக்கு ராமயணம் படிப்பது , விவாதிப்பது பிடித்தால் , அதை பிடித்தவர்களும் செய். எல்லொர்ரும் அதை கேட்க வேண்டும் என சொல்லாதே . அதுவும் அடக்கு முறைதான்.


அப்படியெல்லாம் , வகுப்புகளோ பேருரைகளோ இல்லாமல்,  கொண்டாட்டமான வாழ்க்கை என்பது திய்ரிட்டிக்கலாக இல்லாமல் , நடை முறையில் இருந்தது. மகிழ்ச்சிதான் இறைத்த்ன்மை என வைத்து கொண்டால் , அந்த இரண்டு நாளும் ., இறைத்தன்மை அங்கு பூரணமாக நிலவியது. 


உதாரணமாக அந்த வித்தியாசமாக சூழ்லில் , புதிய நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது சிலருக்கு பிடித்து இருந்தது ( அதில் எனக்கு பேட் வேண்டாம் , பந்துதான் வேண்டும் என அராத்து அடம் பிடித்தது தனி கதை ) சிலருக்கோ கிரிக்கெட் எங்கு வேண்டுமானாலும் ஆடலாம். அந்த மலை பிரதேசத்தை நன்கு அனுபவிப்போம் என்ற எண்ணம் இருந்தது.. இந்த இரண்டும் ஏற்கப்பட்டது என்பதே முக்கியம்.

அதே போல, தண்ணி அடிப்பது அல்லது அடிக்காமல் இருப்பதெல்லாம் பெர்சனல் சாய்ஸ். இதை போய் ஓர் எழுத்தாளன் கண்டிஷன் போடுவது என்பதெல்லாம் சாருவிடம் கிடையாது..


நான் சில நண்பர்களுடன் போட்டிங் சென்று இருந்தேன். மலைப்பிரதேசங்களுக்கு உரிய இனிய  நறும்ணம் , பறவைகளின் ஒலி என கேட்டவாறே இலக்கின்றி சுற்றினோம்.




அதன் பிறகு நள்ளிரவில் நடந்த கலந்துரையாடல், உணர்வு பூர்வமாக இருந்தது. அதைப்பற்றியெல்லாம் தனியே எழுத வேண்டும், விரிவாக பிறகு எழுதுவேன். 


சீரோ டிகிரியைப்பற்றிய சம்பவங்களை மட்டும் இப்போது சொல்கிறேன்.

சில வாசகர்கள் பேசுகையில், சீரோ டிகிரி புரியவில்லை என்றார்கள். சீரோ டிகிரியை புரிந்து கொள்ள விளக்க உரை ஏதும் படிக்க வேண்டுமா என்றனர்.

அடுத்து பேசிய சு.ரா உணர்ச்சி பூர்வமாக காணப்பட்டார்.


சாருவின் எழுத்து மந்திர சக்தி வாய்ந்தது. அவர் எழுத்தை படிக்க ஆரம்பித்தால் , மற்ற எழுத்துக்ளை படிக்க மனம் வராது.. உங்களை அந்த அளவுக்கு மயக்கி விடுவார். beware of charu  என உணர்வு பூர்வமாக பேசினார். 

சீரொ டிகிரி கவிதை ஒன்றை படித்து காண்பித்தார். இதில் என்ன புரியவில்லை. இதி என்ன செக்ஸ் இருக்கிறது என கேட்டு அவர் வாசித்த போது , பலரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். தன்னிலை மறந்து வேறு ஏதோ ஓர் உலகில் இருப்பது போல இருந்தது.

அந்த நள்ளிரவில், குறைந்த வெளிச்சத்தில், இந்த உணர்ச்சி வெளிப்பாடு இன்னும் துல்லியமாக தெரிந்தது. சாரு அந்த கவிதையை வாசித்த போது , அவருக்குள் வேறொரு தேவதை புகுந்து கொண்டு அவரை பேச வைத்தது போல இருந்தது. 

கவிதையின் இறுதி பகுதியின்போது பலரும் கதறி விட்டனர் .







இந்த நிகழ்ச்சிக்கு பின் ஆடல் பாடல் துவங்கியது. சிலர் குளிருக்கு பயந்து பம்மிவிட்டார்கள். ஆனால் சாரு தலமையில் குத்தாட்டம் பரபரப்பாக நடந்தது.

( சாருவுடன் கலந்துரையாடல் விரிவாக அடுத்த பதிவில் )




13 comments:

  1. Thank you for sharing. Keep posting more

    ReplyDelete
  2. சாரு சாருதான்... :)))

    ReplyDelete
  3. நல்ல ஆரம்பம். முழுவதும் எழுதுங்கள்.
    சாருவுடன் என்னுடைய மூன்றாவது சந்திப்புதான். ஆனால், வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத இலக்கிய இரவு அது.

    ReplyDelete
  4. @நாடோடி . உங்கள் கருத்துகளை தனி பதிவாக பிரசுரித்து விளக்கம் அளிக்க இருக்கிறேன்

    ReplyDelete
  5. //ஒருவர் செய்வதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்ற ஆட்டு மந்தை மனப்பானமை அறவே இல்லை//

    ஆடுகள் மந்தையாக இருப்பதில் எவ்வளவு நன்மை உண்டு என்பதை பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை நண்பரே... " நான்", "எனது" என்று மாறியதால் இன்றைய சமுதாயத்தில் எவ்வளவு மாற்றங்கள்.. தன்னுடன் பிரயாணம் செய்யும் சக மனிதரை கூட நம்ப முடியாமல் நமது பெட்டிகளை சங்கிலி போட்டு கட்டி கொண்டிருக்கிறோம்.

    பிறக்கும் போதே எவன் ஒருவனும் சுயம்பாக பிறப்பதில்லை... இவ்வுலகில் வந்த பிறகு அனுபவகங்களுடன் கூடிய கற்றலில் மூலம் நல்லது கெட்டவைகளை ஆராய்ந்து வாழ்வது தான் பண்பட்டதாக இருக்கும்...

    ReplyDelete
  6. உங்க குழு சிறுமலை வனப் பகுதியில் என்னென்ன பண்ணியிருக்கும் என்றுதான் எங்களுக்குத் தெரியுமே! எங்க தல 'யானை டாக்டர்'-லயே புட்டுப்புட்டு வச்சிட்டாரே! படிக்கலியா? இதோ-

    *** இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக்குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌனவெளியை காரின் ஆரனை அடித்துக்கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலறவிட்டு குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச்சரிவுகளை நோக்கி கெட்டவார்த்தைகளை கூவுவார்கள்.

    ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலைஓரத்துக் குரங்களுக்கு கொய்யாபழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப்பொடியை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தி துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலிமதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது.***

    எப்படி எங்க தலயோட அவதானிப்பு?! நீங்க பதிவே போட்டிருக்க வேணாம்.

    ReplyDelete
  7. good but the same time your comments other writers gathering or meetings not good boz we follow charu and others also. we get some thing from charu and some other aspects from other writers.every one have a own style.respect their rules or await it.why u r criticize their rule.it is rubbish

    ReplyDelete
  8. @ அனானி நண்பரே... உங்க தல , தன் வாசகர்கள் மீது வைத்து இருக்கும் , மேற்கண்ட மதிப்பீடுகளால்தான், பல கண்டிஷன்கள் போட்டார். ஆனால் அதையும் மீறி சிலர் செயல்பட்டதாக கேள்வி பட்டோம், சாரு தன் வாசக்ர்களை நம்புபவர்..எனவே கண்டிஷன் போட வில்லை. வாசகர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டனர்..

    ReplyDelete
  9. parviyalan sir thanks your reply but at the same time how to you categorize me some writer group always the basic theory continuous universally somebody criticized you.yours reply that person that particular group or fan.i strongly objected.i am only fan of literature.argument based on literature not based on writer.thanks

    ReplyDelete
  10. @kurainta velichatil kavithai vaasithaar,thevathai udambil pugunthathu..palar kaneer vitu katharinargal@..

    Nithyananada part2...started...

    ReplyDelete
  11. இரண்டாவது ஒளிப்படக் காட்சியைப் பார்க்கும் போதே சாநியும் அந்த 'உணர்ச்சி' வசப் பட்ட வாசகரும் மப்பில் தள்ளாடுவது தெரிகிறது..

    எலக்கியம் நன்றாக வளர்த்திருக்கிறீர்கள்..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா