Sunday, June 24, 2012

உங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்- ஒழுக்கலாறு எழுத்தாளர் பற்றி சாரு நிவேதிதா நச் கமெண்ட் !!



தினம் தோறும் படித்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் சாரு நிவேதிதா சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ள வாசகர் வட்ட சந்திப்புக்கு சம்மதித்தார். ஆனால் சென்ற சந்திப்பின்போது, லேப்டாப்பும் கையுமாக வந்து இருந்தார். எழுத்து வேலையில் பிசியாக இருந்தார்.

இந்த முறை எந்த வேலையையும் கொண்டு வரவில்லை. ஆனால் வாசகர்களும் நண்பர்களும் அவரை ஒரு நொடி கூட சும்மா இருக்க விடவில்லை. கிரிக்கெட், அரட்டை,  மது, இலக்கிய விவாதம், உலக சினிமா , லோக்கல் சினிமா, வாக்கிங் என அவரை ஆளுக்கு ஒரு புறம் இழுத்து கொண்டு இருந்தனர்.

இந்த நேர நெருக்கடியிலும் , சந்திப்புக்கு வர இயலாத சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒப்புக்கொண்டார்.

அவருடன் பேசுவது ஒரு உன்னத அனுபவம். அறிவுப்பூர்மாக பேசாமல் உணர்வு பூர்வமாக பேசுவார். தெளிவாக தன் கருத்துகளை எடுத்து வைப்பார். அவருடன் பேசியதில் இருந்து......


***************************************************************8

1.     யார்ழ் பத்தேல் செக்ஸுக்கும் மரணத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக் சொல்கிறார், உங்கள் படைப்புகளிலும் இதை காண  முடிகிறது, அதை பற்றி ?

ஜ ஜனன மரணம் . செக்சோட அடிப்படை என்ன ? ஓர் உயிரை உருவாக்குவது. ஆனா அந்த உயிர் உருவாகும்போது , மற்ற உயிர் அணுக்களை அழித்து விட்டுதான் பிறக்கிறது. நானோ சிறுகதையில் எழுதியது போல.   இன்னொன்று , ஜனனம்  என்றாலே அதற்கு அடுத்து மரணம். காஸ் அண்ட் எஃபெக்ட் போல.  மரணத்துக்கு பின் என்ன ? யாருக்கும் தெரியாது . அதே போல பிறப்புக்கு முன் ? யாருக்கும் தெரியாது. பெரும் சூனியம்.
ச் செக்ஸ் எனும் செயலின்போது , தியானம் போல தூக்கம் போல நம்மை மறக்கிறோம். மரணத்தின் போது நாம் இல்லாமல் போகிறோம். அதே போல செக்சின் போதும் இல்லாமல் போகிறோம். என்வேதான் செக்சை சிறிய மரணம் என்கிறார்கள்.
ம மரணமும் உயிர்ப்பும் எப்படி ஒரே இடத்தில் ??
இ இவை இரண்டு பாம்புகள் மாதிரி. ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதுதான ஜனன மரணம். ரோலண்ட் பார்த் கூட இதைப்பற்றி பேசி இருக்கிறார்.
ந்

    நேற்று வாசகர் ஒருவர் , இளைய சமுதாயம் பற்றி சொன்னார். உங்கள் கருத்து ?

    எந்த இளைய சமுதாயம் என்ற கேள்வி வருகிறது. இந்திய இளைய சமுதாயமா? இணையம் வந்த பின் , எல்லா இளைஞர்களும் ஒரே வார்ப்பில் வார்க்கப்படது போல ஆகி விட்டது . பெரு  நாட்டு இளைஞனின் கனவும் , இந்திய இளைஞனின் கனவும் ஒன்றுதான். பணம் ஈட்டுவது. ஒரு பொலிவிய நாட்டு இளைஞனுக்கு தன் நாட்டின் வரலாறு பற்றி கவலை இல்லை. அமெரிக்கா செல்வதுதான் அவன் கனவு. ஐரோப்பியாவில் மட்டும்தான் இளைஞர்கள் கரப்ட் ஆகவில்லை என்பது என் கருத்து.

இலக்கியத்தில் மொராக்கோ மற்ற நாடுகளை முந்தி செல்வதாக சொன்னீர்களே?

       இலக்கியத்தை பொருத்தவரை இது உண்மைதான்.  வறுமை நிலை இருந்தாலும் , இலக்கியம் இருந்து கொண்டே இருக்கிறது.  நோபல் பரிசு பெறும் தகுதி உடைய பதினைந்து பேரை என்னால் சொல்ல முடியும் . எல்லோரும் இலக்கியம் படிப்பதாக நான் சொல்லவில்லை. படித்த வர்க்கத்தினருக்கு இலக்கியம் தெரிந்து இருக்கிறது. நம் நாடு இங்குதான் பின் தங்கி இருக்கிறது. நம் நாட்டில் படித்தவர்கள் , அதிகார வர்க்கத்தினர், வசதியானவர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை. பாமரனுக்கு இலக்கியம் தெரியவில்லை என்பதை ஒரு குறையாக நான் சொல்லவே இல்லை. அவனுக்கு உணவு கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு தலைமுறையே டாஸ்மாக்கினால் வீணாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். விஷ சாராயத்தினால் உடம்பும் , மனமும் பாழாகிறது.
  
   மதுவுக்கு அடிமையாவதை இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்.. நீங்கள் கடும் உழைப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உங்களிடம் இருந்து மதுவை மட்டும் சிலர் கற்க விரும்புகிறார்களே ?
      அதுதானே ஈசியாக இருக்கிறது. எனக்கு குடி என்பது ஒரு கொண்டாட்டம். எப்போதாவது குடிப்பேன். தினமும் குடித்தால் எழுத முடியாது. எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் குடிப்பதையே சிலர் முழு நேர தொழிலாக வைத்து கொண்டுள்ளனர். இதுதான் தவறு .

உ உங்கள் எழுத்தில் பாலுணர்வுதான் அதிகம் இருப்பதாக , படிக்காத சிலர் சொல்கிறார்கள். ஆனால் படித்தவர்களுக்குதான் உங்கள் எழுத்தின் உன்னதம் புரியும். சீரோ டிகிரி வெளி வந்த கால கட்டத்தை விட இன்றுதான் அதிகம் கொண்டாடப்படுகிறது. ஆக , மக்களிடம் இலக்கிய விழிப்புணர்வு வந்து விட்டதாக நினைக்கிறீர்களா? 
     
           ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். சீரோ டிகிரியை அந்த காலத்தில் நானேதான் பதிப்பித்தேன். இன்று பரவாயில்லை. சில பதிப்பகங்கள் பதிப்பிகிறார்கள். ஒரு பத்தாயிரம் பேர் படிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு ஜன தொகை கொண்ட நாட்டில் பத்தாயிரம் என்பது மிக குறைவு.

      இன்றைய இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது? தேக்க நிலையிலா அல்லது ஆரோக்கியமான பாதையிலா ?
மி
     ஜப்பானில் மிக சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன . ஈரான் போன்ற நாடுகளிலும்கூட. அரேபிய   இலக்கியம் செழிப்பாக இருக்கிறது. ஐரோப்பிய இலக்கியம் , லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை எல்லாம் கடந்து சென்று விட்டது. ஃபிரான்ஸில் எல்லாம் , கூட்டமான ரயில் வண்டிகளில் கூட ஆயிரம் பக்க புத்தகங்களை படித்து கொண்டு செல்வதை பார்க்க முடியும்.  நம் நாட்டில் வாசிப்பு மிக குறைவு.

    நம் நாட்டில் இலக்கியம் தெரியவில்லை என வருத்தப்படுகிறீர்களே..தமிழே தெரியவில்லை என்ற நிலை உருவாகி வருகிறதே..

        உருவாகி வரவில்லை..ஏற்கனவே உருவாகி விட்டது . பல பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம். தமிழ் பேசினால் அவமானம் என்ற மோசமான நிலையை உருவாக்கி வருகிறார்கள். இலக்கியம் தெரியாது என்பது கூட கொடூரம் அல்ல. டாஸ்மாக்கும் , தமிழ் தெரியாது என்ற நிலையும்தான் அபாயகரமானது.


      அதிகாரத்தை எப்போதும் எதிர்த்து வருகிறீர்கள். ஆனால் எழுத்தாளர்களிலேயே பலர் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முனைகிறார்கள் . வாசகர் சந்திப்புக்கு வருபவர்கள் குடிக்க கூடாது. அதிகாலையில் எழ வேண்டும். ஒழுக்கலாறு ஓம்பல் வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார்கள்.  எனவே படிப்பால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறதே?

     என் எழுத்து எப்போதுமே அதிகாரத்துக்கு எதிரானது. அதிகாரம் என்பது அரசாங்கம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.  நம் ஒவ்வொரிடமும் பயங்கரமான அதிகார வெறி இருக்கிறது. ஒரு தந்தையாக நம் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். கணவனாக மனைவியை அடக்கி ஆள்அ நினைக்கிறோம். எழுத்தாளனாக வாசகர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். இப்படி அனைத்து அதிகாரத்தையும் ஒழித்து விட்டு , சமதுவமாக வாழ வேண்டும் என்பதே என் எழுத்துகளின் அண்டர் கரண்ட். அப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் ஒன்று, ஃப்ரீடம் என வரும்போது இன்னொன்றும் இருக்க வேண்டும் . ரெஸ்பான்சிபிலிட்டி. பொறுப்பு இல்லாத ஃப்ரீடம் மிகவும் பயங்கரமாக போய் விடும். அந்த ஃப்ரீடத்தை நான் சொல்லவே இல்லை. உங்கள் சுதந்திரம் மற்றவர்களை கஷ்டப்படுத்த கூடாது. 
   
       ரயிலில் கத்தி பேசுவது, சாலை விதிகளை மதிக்காத்தது போன்றவற்றை நாம் பொருட்படுத்துவதில்லை. தனி மனித ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டுமே என நம் ஊரில் நினைக்கிறார்களே? 
        என் எழுத்து வாழ்க்கையில் நாம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதே இல்லை. இதைத்தான் ஒழுக்கம் என்கிறேன். ஒரு காலத்தில் பல தார மணம் , பால்ய விவாகம் போன்றவை இயல்பாக இருந்தது. இன்று அவை ஒழுக்கம் கெட்ட செயல். இதெல்லாம் மாறக்கூடியது. தேசத்துக்கு தேசம் இந்த ஒழுக்க விதிகள் மாறும்.
     ஆனால் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத நேர்மை , மற்றவர்களை துன்புறுத்தாமை போன்றவைகளை நான் ஒழுக்கம் என நினக்கிறேன்.   உயிர்மையில் நான் எழுதிய கறாரான சினிமா விமர்சனங்களால் , பல எதிரிகளை சம்பாதித்தேன். நேர்மைக்கு எனக்கு கிடைத்த பரிசு வறுமை. ஆனாலும் நேர்மையாக வாழ்கிறேன். இதுதான் ஒழுக்கம்.


     வாழ்க்கையை கொண்டாடுதல் , ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தல் போன்ற மன நிலை உங்களுக்கு எப்படி வந்தது ?
       தெரியவில்லை ,. எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்லலாம். இலக்கியம் நிறைய படித்தால் இப்படி ஆகலாமோ என தோன்றுகிறது. ஆனால் படித்தும் பயங்கரவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். படிப்பையே ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். படிப்பை knowledge ஆக எடுத்து கொள்கிறீர்களா . wisdom ஆக எடுத்து கொள்கிறீர்களா என்பதே முக்கியம். நான் விஸ்டமாக எடுத்து கொண்டேன். அதனால்தான் விஸ்டத்துடன் இருக்கிறேன். நீங்கள் டெக்னிக்கலாக , அறிவு பூர்வமாக படித்தால் உங்கள் படிப்பு ஆயுதமாகி விடும் , மற்றவர்களை அதிகாரம் செய்ய முனைந்து விடுவீர்கள்.

     படித்தே ஆக வேண்டிய புத்தகம் என ஒரு புத்தகத்தை அடிக்கடி சொல்வீர்கள் ..அதைப்பற்றி ?


         Zorba the greek என்ற கஸான்காகிஸின் நாவலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தால் கூட போதும். படிக்கலாம், அனைவரும் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை படித்தால் உங்கள் வாழ்வே மாறி விடும்.

        பார்த்தே ஆக வேண்டிய சினிமா ?

          கிம் கி டுக்கின் , ஸ்பிரிங் சம்மர் ஆட்டம் என்ற படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் , இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  உங்களை ஒரு ஞானி ஆக்கும் ஸ்டஃப் படத்தில் உண்டு.


******************************************************

         பின் குறிப்பு - இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் வீடீயோ வடிவம் விரைவில் வெளியிடப்படும். 


               





















டு






























13 comments:

  1. பிச்சைக்காரன் எனக்குப்பிடித்த கேள்வி, ரயிலில் கத்திப்பேசுவது, சாலைவிதிமுறைகளை பின்பற்றாதது போன்றவற்றையெல்லாம் விட்டு, செக்ஸ்’ஐ மட்டும் தனி மனித ஒழுக்கக்கேடாக சித்தரிப்பது...

    பதில்கள் எல்லாம் அற்புதம்.

    ReplyDelete
  2. அன்பரே,

    ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் சொல்கிறேன். இன்னும் உங்களிடத்தில் சிவாஜி - எம்.ஜி.ஆர் என்ற பிரிவினை கொண்ட பாமர சினிமா ரசிகர்களது மனோநிலை உள்ளது. சாருவுக்கு ரசிகனாக இருப்பதாலேயே ஜெயமோகனை தேவையே இல்லாமல் இழுத்துவிடவேண்டும் என்ற உங்களது மன அரிப்பு சற்று அசூயை அளிப்பது. அதிலும் நேரடியாக கேட்க இயலாமல் தினமலர் வாரமலர் போன்று எதற்கு பூடகம் ?

    அந்த ஜெயமோகனை பற்றின கேள்விக்கும் அடுத்த கேள்விக்கும் இடையேயான உங்களது முரண்பாடு உங்கள் சிந்தனைக்கு எட்டியதா ?

    ReplyDelete
  3. @ விஜி... நன்றி...

    ReplyDelete
  4. @ராஜா ,,, நன்றி நண்பரே

    ReplyDelete
  5. @ முத்து மிரட்டொயோ அதிகாரத்தைகாட்டியோ ஒழுக்கத்தை கொண்டு வந்து விட இயலாது .. திருட மாட்டேன் என எழுதி கொடுத்தால்தான் , என் வாசகர் கூட்டத்திற்கு வர முடியும் என சில எழுத்தாளர்கள் கண்டிஷன் போடுவது , வாசகனை அவமதிப்பதாக நடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்... அது வேறு.. நாமாகவே பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது வேறு

    ReplyDelete
  6. The movie name is Spring,

    Summer, Fall, Winter... and Spring

    and not ஸ்பிரிங் சம்மர் ஆட்டம்

    :)

    ReplyDelete
  7. //நம் ஒவ்வொரிடமும் பயங்கரமான அதிகார வெறி இருக்கிறது. ஒரு தந்தையாக நம் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். கணவனாக மனைவியை அடக்கி ஆள்அ நினைக்கிறோம். எழுத்தாளனாக வாசகர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம்.///

    தாங்க முடியலை.. பிச்சைக்காரரே,

    "சலவைக் குறிப்பும் கவிதையும்…"

    சமீபத்தில் சாரு எழுதிய மேற்க்கண்ட பதிவில் என்ன சொல்ல வருகிறார்?... நான் சலவைக்கு போட்டதும், பாத்ரூம் போனதும் "கவிதை தான், பிக்சன் தான்" என்று அளக்கிறார்.. நான் எழுதுவது தான் எழுத்து... பிளாக்கில் இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவது தான் நாவல்... முடிந்தால் படி... இல்லைனா மூடிட்டு போ..

    இதற்கு என்ன பெயர்?... இந்த அதிகாரத்தை என்ன சொல்வார்கள்?....

    இதப்போல் அவருடைய பதிவில் இருந்து ஆயிரம் என்னால் எடுத்து போட முடியும்..

    என்னவோ போங்கள்!!!!! உங்களை பார்த்தால் 23‍ம் புலிக்கேசியில் வரும் இரண்டு புலவர்களின் ஞாபகம் தான் வருகிறது..... :)))))))

    ReplyDelete
  8. மேலே நான் எழுதிய பின்னூட்டமாவது வெளிவருமா?....

    ReplyDelete
  9. @ நாடோடி . என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் படிக்க தேவையில்லை என்று சொல்வது அதிகாரமா ?

    ReplyDelete
  10. இப்படி ஒரே வரியில் கேள்வியை முடிக்க கூடாது?... அந்த கேள்விக்கான விளக்கமும் வைக்க வேண்டும்.. அதுதான் சரியான‌ விவாதமாக இருக்கும்..

    சரி.. சாரு அவர்களின் தொழில் என்ன?.. இதற்கு பதில் அவரே தன்னுடைய‌ வாயால் பலமுறை உதிர்த்திருக்கிறார்... என் உடல், உயிர் எல்லாம் "எழுத்து.. எழுத்து" என்று.. அப்படியென்றால் இவர் ஒரு "எழுத்தாளர்"

    எழுத்தாளர்களை படிப்பவர்களுக்கு பெயர் என்ன?.... "வாசகர்கள்" என்று சொல்லுவர்கள் என்று நினைக்கிறேன்...

    "எழுத்தாளர்" "வாசகர்" இவர்கள் இருவருக்கும் உள்ள உறவுமுறை என்ன?..

    இந்த உறவுமுறையில் எவர் ஒருவர் தனது பலத்தால் "ஆள" நினைத்தால் அதை என்ன சொல்லுவது?... அதற்கு பெயர் என்ன?...

    ReplyDelete
  11. @ நாடோடி... நடைமுறையில், சாருவின் புத்தகங்கள் எதையும் படிக்காதவர்களே , தங்களை வாசகர்கள் என சொல்லி கொண்டு அவரை விமர்சிக்கிறார்கள்

    ReplyDelete
  12. விளக்கம் சொல்லாமலும், ஊகத்தின் அடிப்படையில் போதுவாக பேசுவதும் படித்தவர்களுக்கு அழகல்ல... நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. சரி பரவாயில்லை.. :)

    மேலே நான் "எனது பின்னூட்டம் மூலம் சாரு அதிகாரம் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறேன்"

    உங்களுடைய பின்னூட்டத்தில் அதைப்பற்றிய‌ கருத்து ஏதும் இல்லை.. அப்படியானால் சாரு வாசகர்களை அதிகாரம் செய்கிறார் என்பதை ஒத்து கொள்கிறீர்களா?....

    என்னுடைய முதல் பின்னூட்டத்தில் நான் சொல்ல வந்தது "சாருவின் முகமூடிகளை" சொல்வது ஒன்று, எழுதுவது ஒன்று, செயல் இன்னொன்று..
    அதை பற்றியும் நீங்கள் வாயை திறக்கவில்லை... சரிவிடுங்கள்..

    இப்போது புதிதாக ஒன்றை சொல்லுகிறீர்கள், அதற்கும் நான் விளக்கம் வைக்கிறேன்..

    @பார்வையாளன் said...
    //நடைமுறையில், சாருவின் புத்தகங்கள் எதையும் படிக்காதவர்களே , தங்களை வாசகர்கள் என சொல்லி கொண்டு அவரை விமர்சிக்கிறார்கள்//

    ஒருவருடைய எழுத்தை படிக்காமல் கண்டிப்பாக‌ எவரும் விமர்சனம் செய்ய முடியாது நண்பரே... அப்படியே விமர்சனம் செய்தால் உங்களை போன்றவர்கள் அவரை கசக்கி தோரணம் கட்டிட மாட்டீர்கள்.. :)

    மேலே நான் சொல்வதற்கு ஒரு உதாரணமும் வைக்கிறேன்..

    //நான் எழுதும் நாவலில் இணையத்தில் நான் எழுதியவற்றையெல்லாம் தொகுத்துப் போட்டு விடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.//

    இதில் குற்றம் சாட்டியவர் அதாவது விமர்சனம் செய்தவர் கண்டிப்பாக சாருவின் இணைய எழுத்தையும், நாவலையும் படித்திருக்கிறார், இல்லையென்றால் அவரால் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியாது.. சரி தானே!!!

    இவருடைய குற்றச்சாட்டு சரியா?... தவறா?.. என்று பார்த்தால் அதுவும் சரியாக இருக்கிறது என்று சாரு கீழே சொல்வதில் இருந்து புரிகிறது..

    //அப்படித்தான் போடுவேன். இணையத்தில் எழுதுவதும் காகிதத்தில் நாவல் எழுதப் போகிறேன் என்று உட்கார்ந்து எழுதுவதும் எனக்கு ஒன்றுதான்.//

    இதன் மூலம் சாருவை விமர்சிப்பவர்கள் பற்றிய உங்கள் புரிதல் தவறு என்றாகிறது..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா