Saturday, April 6, 2019

குலக்கல்வி தமிழ் - ராஜாஜி


ஏழைகளும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் நேர நெகிழ்வுத்தன்மையுடன் பள்ளிகளை நடத்த உத்தரவிட்டார் ராஜாஜி... அந்த காலத்தில் பலர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்.. சிறுவர்கள் வீட்டில் பெற்றோர் வேலைகளுக்கு உதவியாக இருக்கட்டுமே என நினைப்பார்கள்

சரி... தாராளமாக அதை தொடருங்கள்.. அதோடு பள்ளிகளுக்கும் அனுப்புங்கள்..அதற்கேற்ப பள்ளி நேரம் இருக்கும் என சொல்லி அவர்களையும் பள்ளிகளுக்கு வரவழைத்தார் ராஜாஜி... பெற்றோர் தொழிலையே குழந்தைகள் செய்ய வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது.. ஆனாலும் இதை குலக்கல்வி என கொச்சைப்படுத்தினர்... கல்வி புரட்சி ஏற்படுத்திய தலைவரை இப்படி நன்றி கெட்ட தனமாக விமர்சித்ததற்கு பலனாகத்தான் இன்று நம் தகுதிக்கேற்ப தலைவர்களை இயற்கை கொடுத்துள்ளது

தமிழ் மீது ராஜாஜி கொண்ட பற்றுக்கு ஓர் உதாரணம்
வங்காள கவர்னராக, ராஜாஜி, 1947-ல் பதவி ஏற்றபோது, அந்த வரவேற்பு விழாவி்ல் சின்ன அண்ணாமலையை    பேச வைத்தனர். நான் தயங்கிய போது, ராஜாஜி, 'சும்மா தமிழிலேயே பேசுங்க... தி.கே.சி., ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்...' என்றார். 

சரி என ஒப்புக்கொண்டு , சின்ன அண்ணாமலை மைக் அருகே சென்றபோது , ஒரு நிமிடம் என சொன்ன ராஜாஜி , சின்ன அண்ணாமலை கழுத்தில் மாலை அணிவித்தார்...கூட்டத்தாரின் கரகோஷம் அடங்க சற்று நேரம் ஆனது

பிறகு பேச ஆரம்பித்தார்...ராமனுடைய ஆண்மையும், கிருஷ்ணருடைய ராஜதந்திரமும், புத்தருடைய துாய்மையும், சிபி சக்கரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மத பக்தி மற்றும் வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து உருவெடுத்து வந்திருப்பவர், ராஜாஜி. 
'ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்கு புத்துயிர் உண்டாயிற்று. விபின் சந்திரபால், சென்னைக்கு வந்து ஆறு சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், தமிழகத்தில் தேச பக்தியை ஊட்டினார். சித்தரஞ்சன் தாஸ், நாடு முழுவதும் கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன் ராய், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நேதாஜி முதலானவர்களால் தமிழகத்துக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் வங்காளத்தில் பிறந்தவர்கள். அப்பேர்பட்ட வங்காளத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம், செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். 
'ஆனால், அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக, எங்கள் ராஜாஜியை, உங்களுக்கு கவர்னராக கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய, இந்த வங்காளம் நுாறு ஆண்டு காலம் தவம் செய்திருக்க வேண்டும்...' என்று அவர் கூறியபோது, சபையினரிடையே, 'ராஜாஜிக்கு ஜே...' என்ற கோஷம் விண்ணைப் பிளந்ததுவிழா முடிந்ததும் சின்ன அண்ணாமலை ராஜாஜியிடம் கேட்டார்... என்னை ஏன் பேச சொன்னீர்கள்  .டிகேசி பேசினால் போதாதா?

ராஜாஜி சொன்னார்...

அவர் ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது.. வங்காளிகள் நம் தமிழையும் கேட்கட்டுமே என்பதற்காகத்தான் உங்களை தமிழில் பேச வைத்தேன்...உங்களை யாரோ சாதாரணமான ஒருவர் என அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களுக்கு மாலை அணிவித்தேன்.. கவர்னரே மாலை அணிவிக்கும் அளவுக்கு பெரிய ஆள் என அவர்கள் உணர்ந்து சிரத்தையாக கேட்பார்கள் அல்லவா என்றார் ராஜாஜி

இந்த மதியூகமும் தமிழ்ப்பற்றும்தான் ராஜாஜி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா