Showing posts with label புரட்சித்தலைவர். Show all posts
Showing posts with label புரட்சித்தலைவர். Show all posts

Saturday, June 1, 2019

பெருந்தன்மையில் போட்டு போட்ட எம்ஜிஆர் , கண்ணதாசன்

அறிமுக நடிகர்களை வைத்து காதலிக்க  நேரமில்லை போன்ற ஹிட்களை கொடுத்தவர் ஸ்ரீதர்


சில பிரச்சனைகளால் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கினார்

அவருக்கு கால்ஷீட் கொடுத்து உதவ முன்வந்தார் மக்கள் திலகம்

இதற்கிடையே கண்ணதாசனிடம் பாடல்கள் எழுதச்சொல்லி வாங்கி வைத்திருந்தார் ஸ்ரீதர்

விழியே கதை எழுது பாடலை எழுதிக்கொடுத்தார் கண்ணதாசன்

இன்னொரு பாடலின் ஆரம்ப வரிகள் மட்டும் எழுதினார்

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

 மிச்சத்தை பிறகு எழுதுவதாக சொல்லி சென்று விட்டார்


சிலர் ஸ்ரீதரிடம் சென்று , கண்ணதாசனுக்கு எம் ஜி ஆருக்கும் ஆகாது... எனவே இந்த பாடல்கள் வேண்டாம்.. எம் ஜீ ஆர் கோபித்துக்கொள்வார் என்றார்கள்

இயக்குனருக்கோ பாடலை இழக்க மனமில்லை.. கண்ணதாசனிடமே சென்று கேட்டார்

மிச்சப்பாடல்களை வாலியை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்

இந்த பாடல்களுமே வாலி பெயரிலே வரட்டும் என பெருந்தன்மையாக சொல்லி விட்டார் கண்ணதாசன்

பாடல்களைக்கேட்டார் எம் ஜி ஆர்

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்

யார் எழுதியது என்றார்

வாலி என்றார்கள்

புன்னகைத்த  எம் ஜி ஆர் சொன்னார்

இல்லை.. இது கண்ணதாசன் பாணி பாடல் என்றார்

ஆம் ,மன்னித்து விடுங்கள் என்றார் இயக்குனர்


எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாகத்தான் பிரச்சனை

அவர் பாடல்களுக்கு நான் ரசிகன்,., இந்த பாடல் அவர் பெயரிலேயே வரட்டும் என்றார் எம் ஜி ஆர்

படத்தில் கண்ணதாசன் பெயர் வரும்.. ஆனால் இசைப்பேழைகளில் வாலி பெயரில்தான் பாடல் வந்தது

 

Wednesday, February 6, 2019

அண்ணாவா பெரியாரா... அம்மாவா அப்பாவா- எம் ஜி ஆர் ருசிகர பதில்கள்



அண்ணாவால் தன் இதயக்கனி என போற்றப்பட்டவர் எம் ஜி ஆர்

1967ல் திமுக வென்றதும் தனக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை , எம் ஜி ஆர்தான் இந்த மாலைக்கு உரியவர் என அவரிடம் அனுப்பியவர் அண்ணா


கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை தமிழகத்துக்கு தந்த அண்ணா குறித்து எம் ஜி ஆர் பல சர்ந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறார்... அதில் ஒன்று இது

------------

உங்களை சிலர் அவதூறாக பேசும்போது என்ன நினைப்பீர்கள்

எம் ஜி ஆர் - இப்போது நான் புகழ் பெற்று இருப்பவன்.. தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவாது தவறிழைத்திருக்கக்கூடும்.. ஆனால் சாப்பாட்டுக்குகூட வழியின்றி தவித்த அந்த  நாட்களில் , யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதபோது  , எங்களை காரமின்றி அவமானப்படுத்தியவர்கள் பலர் உண்டு... வேறு வழியின்றி அவ்ற்றை சகித்துக்கொண்ட அந்த நாட்களை நினைத்து ஆறுதல் அடைவேன்


அம்மா புகழைப்பாடும் நீங்கள் அப்பாவைப் புகழ்வதில்லையே?


எம் ஜி ஆர் . அம்மா என்பதிலேயே அப்பாவும் வந்து விடுகிறாரே.. தந்தை இன்றி தனயன் ஏது... அப்பாவுக்கும் பயந்து நடக்கும் பலர் அம்மாவை மதிப்பதில்லை..எனவேதான் அம்மாவுக்கு முக்கியத்துவம் தருகிறேன்,, ம்ற்றபடி நான் இருவரையுமே வணங்குபவன்



ஆன்மிக படங்களில் ஏன் நடிப்பதில்லை?


தாய்ப்பாசம். பிறர்க்கு உழைத்தல் , தீமையை வெல்லல்.. இவைதான் ஆன்மிகம்,,, அப்படிப்பார்த்தால் என் படங்கள் எல்லாமே ஆன்மிக படங்கள்தான்


சத்துணவு திட்டம் வெற்றி பெறாது ,,,எம் ஜி ஆருக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்கிறாரே கலைஞர்?


எனக்கு பொருளாதாரம் தெரியாது.. நான் படிக்காதவன்,, ஆனால் ஏழைகளின் பசி தெரியும்.. ஏழைகள்தான் என்னை முதல்வராக்கி இருக்கிறார்கள்... அவர்களுக்கு நல்லது செய்வது என் கடமை


பெரியார்.. அண்ணா .,, யார் சிறந்தவர்?


சுய மரியாதை நம் அடிப்படைத் தேவை.. இதை வலியுறுத்தியவர் பெரியார்... அவர் சொன்னதை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அண்ணா.. இருவரும் சிறந்தவர்கள்தான்..அவர்களைப்பற்றி ஆராய்வதை விட அவர்கள் சொன்னபடி நடக்கிறோமா என நம்மை நாமே ஆராய்வதே முக்கியம்

Saturday, November 10, 2018

எம் ஜி ஆர் திரைப்படங்களும் அரசியலும்


சினிமா மூலம் எம் ஜி ஆர் வளர்ந்ததாக நினைத்து பலர் அரசியல் படங்கள் எடுக்கின்றனர்..

ஆனால் இந்த ஃபார்முலா ஒரு போதும் வெற்றி அடைந்ததில்லை.. எம் ஜி ஆரே கூட , தன் படங்களில் அரசியல் விளக்க படங்களாக எடுத்தது கிடையாது..

தன் படங்கள் நன்றாக இருக்க வேண்டும் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது.. அவர் முதல்வராக ஆசைப்பட்டு இருந்தால் , அண்ணா மறைவுக்கு பின் எளிதாக அதை அடைந்திருக்கலாம்.. அவருக்கு சினிமாதான் முக்கியமாக இருந்தது

அவரது ரசிகர்களுக்கு திமுக தொல்லை கொடுக்க ஆரம்பித்தபோது ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கிதான் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

தேர்தலில் வென்ற பின்பும் கூட , படப்பிடிப்பை முடித்த பின்புதான் முதல்வராக பதவியேற்றார்...

முதல்வரான பின்பும்கூட ஒரு படம் நடக்க பேச்சு நடந்தது... விளம்பரங்களும் வெளியாகின.. இசை : இளைய ராஜா...

அந்த அளவுக்கு சினிமாவை காதலித்தார் அவர்

இப்போது பலர் சினிமாவை , அரசியலுக்கான ஒரு விசிட்டிங் கார்டாக நினைக்கின்றனர்

அப்படி நினைத்து எடுக்கப்படும் படங்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை... இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன







Sunday, October 28, 2018

கலைஞர் vs புரட்சித் தலைவர் எலுமிச்சம்பழ யுத்தம் - சுவராஸ்ய ஃபிளாஷ்பேக்


 அண்ணா மறைவுக்குப் பின் யார் முதல்வர் என்ற குழப்பம் ஏற்பட்டது...   திமுகவின் முன்னணி தலைவராக விளங்கிய நாவலரை ஓரம் கட்டி தான் முதல்வராக கலைஞர் முயற்சி செய்து கொண்டிருந்தார்,., பலர் மக்கள் திலகத்தையே முதல்வராக்க விரும்பினர்

இந்த சூழலில் அடிமைப் பெண் படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை , கலைஞர் சந்தித்துப் பேசினார்... பேச்சின் முடிவில் கலைஞரை முதல்வராக்க எம் ஜி ஆர் ஒப்புக்கொண்டார்...

சினிமா புகழ் போதும் என நினைத்ததும் ,  நல்லாட்சி தருவதாக கலைஞர் அளித்த உறுதி மொழியும் எம் ஜி ஆரை இந்த முடிவுக்கு வர வைத்தன

ஆனால் எம் ஜி ஆர் எதிர்பார்த்த நல்லாட்சியாக அந்த ஆட்சி அமையவில்லை... கட்சியினர் எம்ஜி ஆரிடம் முறையிட்டனர்,...     குறிப்பாக எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தினர் கொந்தளிப்பில் இருந்தனர்

  கலைஞர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி , இனி தவறுகள் நடக்காது என் உறுதி அளித்தார்...  திமுகவில் பிரச்சனைகள் வேண்டாம் என எம் ஜி ஆர் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்

சைதை துரைசாமி போன்றோர் , காரில் ஏற இருந்த எம் ஜி ஆரை தடுத்து நிறுத்தி , எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு முக முத்து ரசிகர் மன்றம் அமைக்க தலைமை தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டினர்...  எம் ஜி  ஆர் , பொறுமையாக இருங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்

இது நடந்து சில நாட்களிலேயே எம் ஜி ஆர் கணக்கு கேட்டார்... பெரியார் , அண்ணா போன்றோர் கட்டிக்காத்த திராவிட பாரம்பரியத்துக்கு எதிராக ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்

இதனால் எம் ஜி ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்... தமிழ் நாடே கொந்தளித்தது... எம் ஜி ஆர் படம் ஒட்டப்படாத வாகனங்கள் சாலையில் ஓட முடியாத நிலை ஏற்பட்டது


மக்கள் விரோத எம் எல் ஏக்கள் தம் பதவிகளை ராஜினாமா செய்யக்க்கோரி அந்தந்த பகுதி மக்கள் அவர்களிடம் மனு அளிக்க வேண்டும் என எம் ஜி ஆர் கோரினார்

அதன்படி கலைஞரை சந்திந்த சைதை துரைசாமி மனு அளித்தார். அதை வாங்கிய கலைஞர் , சைதை துரைசாமிக்கு எலுமிச்சம் பழம் அளித்தார்... ஏதோ நினைவுப் பரிசு போல என நினைத்து அவர் வாங்கிக்கொண்டார்

பிறகு பேட்டி அளித்த கலைஞர், எம் ஜி ஆர் ஆதரவாளர்களுக்கு மூளை குழம்பி இருக்கிறது.. அதனால்தான் தலையில் தேய்த்து குளிக்க எலுமிச்சை அளித்தேன் என்றார்... இது தலைப்பு செய்தி ஆனது... எம் ஜி ஆருக்கு இதில் வருத்தம்’

சில நாட்கள் கழித்து , திமுக கூட்டம் ஒன்று சைதையில் நடந்தது

கலைஞர் பேசி முடித்ததும் ஒவ்வொருவராக வரிசையில் நின்று அவருக்கு மாலை அளித்தனர்

சைதை துரைசாமியும் மேடை ஏறினார்.. கலைஞருக்கு எலுமிச்சம்பழ மாலை ஒன்றை அணிவித்தார்...  எம் ஜி ஆரை நீக்கிய உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும்தான் எலுமிச்சம்பழ சிகிச்சை தேவை என்றார்..

மக்கள் ஆதரவை இழந்த கருணா நிதியே ...ராஜினாமா செய் என கோஷம் எழுப்பி விட்டு கிளம்பினார்


அவனை பிடிங்கடா...என கலைஞர் உத்தரவிடவே கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்... உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அதன் பின் எம் ஜி ஆர் தன் நேரடி கவனிப்பில் சைதை துரைசாமியை வைத்துக்கொண்டார்

அதன் பின் , அதிமுக வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததும் , சைதை துரைசாமிக்கு மிரட்டல்கள் குறைந்தன







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா