Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Saturday, June 1, 2019

பெருந்தன்மையில் போட்டு போட்ட எம்ஜிஆர் , கண்ணதாசன்

அறிமுக நடிகர்களை வைத்து காதலிக்க  நேரமில்லை போன்ற ஹிட்களை கொடுத்தவர் ஸ்ரீதர்


சில பிரச்சனைகளால் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கினார்

அவருக்கு கால்ஷீட் கொடுத்து உதவ முன்வந்தார் மக்கள் திலகம்

இதற்கிடையே கண்ணதாசனிடம் பாடல்கள் எழுதச்சொல்லி வாங்கி வைத்திருந்தார் ஸ்ரீதர்

விழியே கதை எழுது பாடலை எழுதிக்கொடுத்தார் கண்ணதாசன்

இன்னொரு பாடலின் ஆரம்ப வரிகள் மட்டும் எழுதினார்

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

 மிச்சத்தை பிறகு எழுதுவதாக சொல்லி சென்று விட்டார்


சிலர் ஸ்ரீதரிடம் சென்று , கண்ணதாசனுக்கு எம் ஜி ஆருக்கும் ஆகாது... எனவே இந்த பாடல்கள் வேண்டாம்.. எம் ஜீ ஆர் கோபித்துக்கொள்வார் என்றார்கள்

இயக்குனருக்கோ பாடலை இழக்க மனமில்லை.. கண்ணதாசனிடமே சென்று கேட்டார்

மிச்சப்பாடல்களை வாலியை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்

இந்த பாடல்களுமே வாலி பெயரிலே வரட்டும் என பெருந்தன்மையாக சொல்லி விட்டார் கண்ணதாசன்

பாடல்களைக்கேட்டார் எம் ஜி ஆர்

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்

யார் எழுதியது என்றார்

வாலி என்றார்கள்

புன்னகைத்த  எம் ஜி ஆர் சொன்னார்

இல்லை.. இது கண்ணதாசன் பாணி பாடல் என்றார்

ஆம் ,மன்னித்து விடுங்கள் என்றார் இயக்குனர்


எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாகத்தான் பிரச்சனை

அவர் பாடல்களுக்கு நான் ரசிகன்,., இந்த பாடல் அவர் பெயரிலேயே வரட்டும் என்றார் எம் ஜி ஆர்

படத்தில் கண்ணதாசன் பெயர் வரும்.. ஆனால் இசைப்பேழைகளில் வாலி பெயரில்தான் பாடல் வந்தது

 

Sunday, April 14, 2019

புத்தாண்டில் ஓர் அழகான பாடல்

சின்ன வயதில் தீபாவளி , பொங்கல் கொண்டாடுவோம்

தமிழ்ப் புத்தாண்டு என ஒன்று வருவதும் தெரியாது..போவதும் தெரியாது

ஆனால் இன்று ஊரே மகிழ்ச்சியாக இதை கொண்டாடுகிறது... ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்...  பத்திரிக்கைகளில் சிறப்பு மலர்கள்

அரசியல்வியாதிக்ளின் பப்ளிசிட்டி ஸ்டண்ட் காரணமாக அவர்கள் செய்ய முனைந்த எதிர்மறை விஷ்யம் இப்படி ஒரு விளைவ ஏற்படுத்தியுள்ளது

பிரமாண்டமான இயற்கையின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்கள் தான் நாம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது

சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒரு பழைய பாடல் ஒளிபரப்பானது

படித்தால் மட்டும் போதுமா பட பாடல்.. படம் பார்த்து இருக்கிறேன்.. பாடல்களை ரசித்துள்ளேன்.. ஆனால் கண்ணதாசனின் இந்த் பாடலை இன்றுதான் ஆழ்ந்து ரசித்தேன்

 நாயகன் பாடாத பாடல் என்பதால் முன்பு கவனிக்கவில்லை

இப்போது கவனிக்கையில் பட எல்லைகளை தாண்டி விஸ்வரூபம் எடுக்கும் பாடல் என புர்ந்தது

மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் வி , ராமமூர்த்தி இசை.. கண்ணதாசன் பாடல்... பிபீ ஸ்ரீனிவாஸ், ஏ எல் ராகவன் , வெங்கடேஷ் ஆகியோரின் இனிமையான குரலில் வித்தியாசமான மெட்டு... 

பாடலை இதை சொடுக்கினால் பார்க்கலாம்  



கோமாளி கோமாளி கோமாளி
காலம் செய்த கோமாளித் தனத்தில் உலகம் பிறந்தது ஐயா
உலகம் செய்த கோமாளித் தனத்தில் உள்ளம் பிறந்தது
உள்ளம் செய்த கோமாளித் தனத்தில் காதல் பிறந்தது
காதல் செய்த கோமாளித் தனத்தில் ஜோடி சேர்ந்தது
அழுகிற கூட்டம் வாழ்கிற இடத்தில்
சிரிப்பவன் கோமாளி
அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால்
அறிஞனும் கோமாளி
படித்ததை எல்லாம் பயன் படுத்தாதவன்
முதல் தரக் கோமாளி
ரொம்ப படித்தவன் போலே நடிப்பவன் உலகில்
என்னாளும் கோமாளி
காசுக்கும் பணத்துக்கும் ஆசை இல்லாமல்
வாழ்பவன் கோமாளி
வரும் காலத்தை கையில் பிடித்துக் கொள்ளாமல்
அலைபவன் கோமாளி
ஆசையில்லாமல் திருமணம் செய்து 
துடிப்பவன் கோமாளி
தினம் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெறுபவன்
என்னாளும் கோமாளி

Thursday, April 11, 2019

பெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்



ஒருவரை எப்படி அழைக்கிறோம் என்பதில் அவர் மீதான நம் பார்வை தெரியும்

உதாரணமாக ரஜினி இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்

ஒரு முறை ஒரு பாடலை எழுத கவிஞரை அழைத்து வா என்றார் இளையராஜா

கவிஞர்னு சொன்னா எப்படி.. எந்த கவிஞர்னு சொல்லுங்கய்யா என கேட்டார் உதவியாளர்

யோவ் கவிஞர்னு நான் சொன்னா அது கண்ணதாசனைத்தான் குறிக்கும் என்றார் ராஜா..

கண்ணதாசன் எம் ஜி ஆரை ஆண்டவனே என அழைப்பார்... எம் ஜி ஆரும் இவரை ஆண்டவனே என்றுதான் அழைப்பார்

கண்ணதாசன் அண்ணாவின் மீதான அன்பு காரணமாக தன் மகனுக்கு அண்ணாதுரை என பெயரிட்டார்

ஒரு முறை அண்ணா கவிஞர் இல்லம் வந்து பேசிக்கொண்டு இருந்தார்


அப்போது சிறுவன் அண்ணாதுரை அழுது அடம்பிடித்துக்கொண்டு இருந்தார்

“ டேய் அண்ணாதுரை,,,பேசாம இருக்கியா. இல்லை அடிவாங்கப்போறியா என சத்தம் போட்டார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , என்னை திட்டுவதற்கு நல்ல வழியை கண்டு பிடித்து இருக்கிறாயே..  என்றார்

அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. என பதறினார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன என்றார் ..

ஆனாலும் அன்று முதல் தன் பையனை துரை என அழைக்கலானார் கவிஞர்... ஒரு போதும் அண்ணாதுரை என அழைக்கவில்லை

Friday, November 9, 2018

குடியின் கேடு- கண்ணதாசன் வாழ்வில் ருசிகரம்


மாபெரும் கூட்டம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது.. பெரிய தலைவர்கள் , வி ஐ பிகள்,. திரை உலக பிரபலங்கள் குழுமி இருந்தனர்

ஆனால் நிகழ்ச்சி தொடங்கவில்லை.. கண்ணதாசன் வந்துதான் துவக்க உரை ஆற்ற வேண்டும் என்பதால் காத்திருந்தனர்..

அனைவருக்கும் டென்ஷன்   கோபம்

இரண்டு மணி நேரங்கள் தாமதமாக அவர் வந்தார்

வந்ததும் மன்னிப்பு கேட்டார்

- நண்பர்கள்.. இவ்வளை மக்களை  பெரியோர்களை காத்திருக்க செய்தது மாபெரும் தவறு .. மன்னித்து விடுங்கள்.. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காரணம் குடிதான்.. நேற்று இரவு முழுக்க குடி.. அதனால்தான் தாமதம்.. மதுவின் தீமைக்க்கு நானே ஓர் உதாரணம் என்பதை கண்கூடாக பார்த்து விட்டீர்கள்

தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள்... நானும் குடிக்க மாட்டேன் என்றார்

அனைவரும் கைதட்டினர்

- ஆனால் ஒன்று.. இப்போது நான் துவக்க உரை ஆற்ற வேண்டும்.. கொஞ்சம் சரக்கு உள்ளே போனால்தான் என்னால் பேச முடியும்.. தயவு செய்து இன்று மட்டும் குடித்துக் கொள்கிறேன்.. நாளை முதல் குடிக்க மாட்டேன் என்றார்

கூட்டத்தில் பயங்கர சிரிப்பு கைதட்டல்


அதன் பின் லேசாக சரக்கு அடித்து விட்டு , அதன் பின் சிறப்பாக பேசினார்

பிரச்சினைகளுக்கு தீர்வு யாதென கேட்டேன் - பிரசுரம் ஆகாத கண்ணதாசன் கவிதை



 கேவலமான சாலைகளுக்கு

தீர்வு யாதெனக் கேட்டேன்

ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு

அபராதம் போடுவோம் என்றார்

அரசாங்க பிரதிநிதி

ஆலைகள் , புகை என சுற்றுச்சூழல்

சீர்கேடுகளுக்கு தீர்வு என்ன என்றேன்

தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும்

குழந்தைகளை சிறை வைப்போம் என்றார் அரசு அதிகாரி

வேலை இல்லா திண்டாடத்துக்கு தீர்வு கேட்டேன்

வேலை இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்க

யோசிக்கிறோம் என்றார் அவர்


பிளாஸ்டிக் குப்பை மலைகளை

எப்படி சமாளிப்பீர்கள் என கேட்டேன்

பிளாஸ்டிக் பையில் பொருட்கள் வாங்க

கூடுதல் கட்டணத்தை உங்கள் மீது திணிப்போம் என்றார் அவர்

தக்காளி... எல்லா பிரச்சனைகளுக்கு பலி ஆடுகள் நாங்கள் என்றால்

அரசு என ஒன்று எதற்கு என கேட்டேன்

அரசாங்க பிரதி நிதி அருகே வந்து ரகசியமாய் சொன்னார்..


அந்த பிரச்சனைகளை உருவக்குவதற்கு ஆள் வேண்டாமா

அவற்றை உருவாக்குவதே நாங்கள்தானே 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா