Tuesday, January 17, 2012

கட்டை விரல் கிண்டல்-மனுஷ் மன நோயாளியா ? வசுமித்ர வுடன் ஓர் உரையாடல்

அந்த காலத்தில் கஷ்டப்பட்டு, இலக்கியம் வளர்த்தோம். இன்றோ ஜெயமோகன் வருகைக்கு பின், இலக்கியம் கமர்ஷியல் ஆகி விட்டது என சாரு வேதனையுடன் ஒருமுறை சொன்னார். அது உண்மைதான்.  இலக்கியத்தின் மீதான passion இன்று இல்லை.

புத்தககண்காட்சியில் சென்ற முறையைவிட கூட்டம் குறைவானதற்கு காரணம் இதுதான். 
கமர்ஷியல் எழுத்து கூடாது என்பது என் கருத்து அன்று, நான் எல்லாவற்றையும் படிப்பவன்., ஆனால் எல்லா ஸ்டால்களிலுமே கமர்ஷியல் ரைட்டிங் மட்டுமே இருந்தால் என்ன செய்வது?

எந்த ஸ்டாலில் பார்த்தாலும் அதே சுஜாதா , அதே பொன்னியின் சொல்வன்., சுய முன்னேற்றம் , சமையல் குறிப்பு... ம்ம்.. என்ன செய்வது.

உயிர்மை போன்ற “இலக்கிய “ ( ? ! ) இதழ்கள் இப்படி ஆகிவிட்டாலும், சித்தாந்த அடிப்படையில் செயல்படும் பதிப்பகங்கள் சற்று ஆறுதல் அளித்தன. எதிர்பாராத நல்ல புதையல்கள் அங்கு ஏராளம் கிடைத்தன. 

ஸ்டால்களில் இருந்த கூட்டத்தைவிட , கேண்டீனிலும் வெளியிலும்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கம்போல கழிப்பறை வசதி சரியில்லை. மக்கள் ஆங்காங்கு நீர்பாசனம் செய்து கொண்டு இருந்தனர். 

இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க விரும்பியே சாரு உள்ளிட்ட பலர் புத்தக விழாவிற்கு  வரவில்லை. ( இரண்டு நாட்கள் மட்டும் சாரு வந்தார் ) 

சாரு கலந்து கொண்ட வாசகர் சந்திப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . நின்று கொண்டே பலர் அவர் பேச்சை கேட்டனர். தினம் தோறும் அவர் வந்து இருந்தால் , நன்றாக இருந்து இருக்கும்.

இந்த நிலையில் , வழக்கம்போல துரோகபுத்திரன் தன் வேலையை ஆரம்பித்தார். தற்செயலாக நடந்த சண்டையை வக்கிரமாக ரிப்போர்ட் செய்தாரா அல்லது அவ்ரே வன்முறையை தூண்டினாரா என்பது போகபோகத்தெரியும்.

ஆனால் மனுஷ் தரப்பின் மிரட்டலுக்கோ, ஆசை வார்த்தைகளுக்கோ மயங்காத வசுமித்ர போற்றுதலுக்கு உரியவர் என்ற முறையில் அவருக்கு மலர்ச்செண்டு அளித்து என் மரியாதையை தெரிவித்து கொண்டேன்.

ஸ்டாலில் பல வேலைகள் , மற்ற வேலைகள் என இருந்தாலும் எனக்கு நேரம் ஒதுக்கி பேசினார். அதைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். இப்போது சுருக்கமாக..

*********************************************************

தெரிந்தவர்களை திடீரென மறந்து விட்டு, யாரென்ரே தெரியவில்லை என மனுஷ் சொல்கிறாரே? அவருக்கு மனரீதியாக ஏதாவது கோளாறா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அவருக்கு இலக்கியத்தை விட வியாபாரம் முக்கியாமாகி விட்டது , அதனால்தான் அபப்டி நடந்து கொள்கிரார். தன் நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

மனுஷ் வரலாற்றை பார்த்தால் அவர் யாருக்குமே உண்மையாக இருப்பதில்லையே... 

அவர் தனக்கே உண்மையாக இருப்பதில்லை

ஒரு காலத்தில் ஓரிரண்டு நல்ல கவிதைகள் எழுதிய அவர் ஏன் வீழ்ச்சி அடைந்தார்?

பிரான்ட் நேம் ஒன்று கிடைத்ததும் கவிதைகள் எழுவதை நிறுத்தி விட்டு, பின்னட்டை குறிப்புகளையே கவிதைகள் என்ற பெயரில் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டார். மற்றவர்களையும் அப்படியே எழுத சொல்லி டார்ச்சர் செய்கிறார். 


நீ
எனக்கு 
எவ்வளவு முக்கியம் தெரியுமா
பாம்புக்கு


எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம்.

என பத்தாங்கிளாஸ் பையன் எழுதும் கவிதையை , தேவதச்சன் பெயரில் பிரசுரிக்கிறார். இப்படி சொல்வதால் பத்தாங்கிளாஸ் பையன்கள் கோபிக்க கூடாது. வாசிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், அவர்க்ள் கவிதை இதை விட நன்றாகவே இருக்கும்.

அறம் தரிசனம் எல்லையற்ற கவித்துவம் என்றெல்லாம் உதார் விடுகிறார்.

ஓர் உதாரணம்.

ஒரு பின்னட்டை குறிப்பு..


கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்து கொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன இவரின் கவிதைகள். இச்சைகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.



இதை ஒட்டி வெட்டினால் , கவிதை தயார்... 

கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்....

கீழே ஏதாவது ஒரு பிரபல கவிஞர் பெயரை போட்டு விட்டால் , அதுதான் இலக்கியம்.


அவரது இந்த போலித்தனத்தைதான் கண்டிக்கிறேன் . மற்றபடி அவர் நண்பர்தான். நாளை நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால் , பிடிக்காவிட்டால் திட்டத்தான் செய்வேன். நன்றாக இருந்தால்தானே பாராட்ட முடியும்

கட்டை விரலை கடித்து துப்பியதாக மனுஷ் அவதூறு செய்கிறாரே..

என்ன நடந்தது என அவர் நேரடியாகவே கேட்டு அறிந்து இருக்க முடியும். ஆனால் கிசுகிசு பாணியில் அவதூறு செய்கிறார். சிலர் அவருக்கு ஆதரவு அளிக்க்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லிதரப்போகிறார்கள். அவர்கள் குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது 



அடுத்து என்ன சதி செய்யலாம் - ஆழ்ந்த சிந்தனை 

 நீர் பாசனம் 

இப்படித்தான் பொது இடத்தில் நடந்துக்கணும்- இளைய சமுதாயத்துக்கு பயிற்சி




படிக்கவேண்டிய புத்தகங்களில் ஒன்று
ஆள் இல்லாத கடையில் டீயா ?
ஸ்டாலை விட வெளியில்தான் கூட்டம் அதிகம் 

எல்லா கூட்டமும் கேண்டீனில்


கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்.... யே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யோக வெளியைஅவை உருவாக்கிக் கொள்கின்றன.


இந்தப் பின்னட்டையை வெட்டி ஒட்டினால் நாம் கண்டடைகிற வரிகளை கூசாமல் கவிதை அதுவும் தத்துவச் சரடோடும் கவிதைகள் எனச் சொல்லலாம்.


கண்ணாடியில் நகரும் பிம்பங்கள்
இருந்தும் இல்லாததுமாய்

உறவுகள் நிழல்களை பின் தொடர்கின்றன

இச்சை கனவு
நிராசைகளுக்கிடையே
எண்ணற்ற கேள்விகள்....
***********************************************


Monday, January 16, 2012

பெரியாரை படியுங்கள் - சாரு முழக்கம்

பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். ஆனால் இப்படி ஓர் எண்ணத்தை நம் மனதில் பதித்து வைத்து இருப்பது ஒரு வரலாற்று மோசடி என்றே சொல்ல வேண்டும்.

பெரியார் பல தளங்களில் இயங்கி இருக்கிறார் , அதில் ஒன்றுதான் கடவுள் மறுப்பு. கடவுள் மறுப்பை மட்டுமே அவர் முழு நேரமாக செய்யவில்லை.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல அவர் கவலை. கடவுள் பெயரை சொல்லி சிலர் சுரண்டப்படுகிறார்களே என்பதே அவர் கவலை.

 பெண் அடிமைத்தனம் குறித்தும் பெண் விடுதலை குறித்தும் அவர் கருத்துகளை இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்,.. அந்த காலத்திலேயே எவ்வளவு அட்வான்ஸ்டாக சிந்தித்து இருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கும்..

ஆனால் அவரை நாத்திகவாதி என்ற சிறிய வளையத்தில் சிக்க வைத்து , அவரது மற்ற சேவைகளை மறைத்து விட்டார்கள். அதன் விளைவை இப்போது பார்க்கிறோம்.

எவ்வளவுதான் படித்தாலும், சம்பாதித்தாலும் பெண்ணடிமைத்தனம் இன்னும் ஒழியவில்லை.

விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு கலந்து கொள்கிறார் என்ப்தற்காக அதை ஆவலுடன் பார்த்தேன். முதல் ஒளிபரப்பில் பார்க்காததால் இன்று பார்த்தேன் .

அதி பேசிய சிலரின் ஆணாதிக்க பேச்சுக்களை பார்த்து ஓர் ஆணாகிய எனக்கே அருவறுப்பாக இருந்தது.. பெரியாரை மறந்ததால் வந்த வினை என நினைத்து கொண்டேன்

கடைசியில் சாரு பேசினார். வழக்கமாக அமைதியாக பேசும் அவர் சற்று ஆவேசமாகவே பேசினார்.

” இந்தியா பல ஆண்டுகள் பின் தங்கி உள்ளது,  ஐரோப்பிய நாடுகளில் இரவு நேரங்களில் கூட பெண்கள் தைரியமாக நடமாட முடியும். இந்தியாவில் அந்த நிலை இல்லை.


இந்தியாவில் பெண்ணடிமைத்தனம் நிலவ பெண்களும் காரணம். அம்மாக்கள் தங்கள் பையன்களை சரியாக வளர்ப்பதில்லை. வீட்டு வேலைகள் செய்ய பழ்க்குவதில்லை
வீட்டில் பையன்கள் காஃபியை சிந்தி விட்டால், சகோதரிகளோ, அம்மாவோதான் க்ளீன் செய்ய வேண்டி இருக்கிறது.
என் வீட்டில், நான் தான் பாத்திரங்களை கழுவுகிறேன். மனைவிக்கு உதவுகிறேன். 


மனைவியிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ நீங்கள் அவர்களுக்கு அதை செய்யுங்கள்.. பெரியார் , பாரதியாரை படியுங்கள்.. பெரியார் நிறைய சொல்லி இருக்கிறார். பெண்கள் தலை முடியை ஷார்ட்டாக வைத்து கொள்ள வேண்டும் என அன்றே சொன்னார். ஏராளமாக சொல்லி இருக்கிறார். கலாச்சாரம் என்பதெல்லாம் , நம் வசதிக்காக செய்து கொள்வதுதான் “ 


சாரு பேசியதை அனைவரும் பிரமிப்புடன் கேட்டார்கள்.. பெரியார் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை.. பாரதி வாழ்ந்த காலத்தில் வாழவில்லை .. ஆனால் சாரு வாழும் காலத்தில் வாழ்கிறோம். இது நமக்கு பெரிய பெருமை  

Saturday, January 14, 2012

உயிர்மை பாணியில் உருப்படாத கவிதை- பொங்கல் ஸ்பெஷல்


கவிதை என்பது மொழியின் உன்னத வடிவம். ஆனால் உயிர்மை போன்ற அரசியல் பத்திரிகைகள் கவிதையை மலினமாக்கி வருகின்றன..

கற்றறிந்தோர் உயிர்மை பாணி கவிதைகளை ஆபாசம் என நினைத்தாலும் , ஒரு சில நடுத்தர வர்க்கத்தினர் அந்த வகை கவிதைகள் மீது ஒரு வித ஈர்ப்பு கொண்டுள்ளன்ர். இந்த மாதிரி கவிதை தமிழில் மட்டும்தான வர முடியும். சூப்பர் என்றெல்லாம் உருகுகின்றனர்... உலகுக்கே தமிழ் நாடுதான் வழிகாட்டுகிறது என்ற அவர்கள் பிரமையை கலைக்க விரும்பவில்லை..

ஆனால் அவர்கள் நலன் கருதியும். பொது நலன் கருதியும், உயிர்மை பாணி பொங்கல் கவிதையை பிரசுரம் செய்வதில்   , பிச்சைக்காரன் டாட் காம் பெருமைப்படுகிறது

*******************************************************

                     சூன்ய பாழ் வெளியில் ஒரு பொங்கல் 

                                                எப்பொழுது எழுவாள்
                                                எப்பொழுது தொழுவாள்                                                 
எப்பொழுது சொல்வாள்
எப்பொழுது பேசுவாள்
எப்பொழுது ஏசுவாள்
எப்பொழுது நினைப்பாள்
எப்பொழுது ஏங்குவாள்
எப்பொழுது தூங்குவாள்
எப்பொழுது இமைப்பாள்
எப்ப்பொழுது அழுவாள்
எப்பொழுது

இந்த சின்ன
எப்பொழுதில்
அவள் என்ன செய்வாள்

நிதானமாக
அவ்வளவு அன்பாக
அவ்வளவு மகிழ்ச்சியாக
அவ்வளவு இறுக்கமாக

ஒரு துயர் நிறைந்த பானையில்
தண்ணீரை அன்று
தன் கண்ணீரை நிரப்புவாள்
பச்சரியை அன்று
தன் பரிதவிப்பை நிரப்புவாள்

அவ்வளவு மௌனமாக
அவ்வளவு இதமாக
அவ்வளவு
சோகத்தோடு
பிரிந்த போது
காதலன் இட்ட முத்தத்தை நினைத்தவாறே
அவள் எப்பொழுது சுவைத்து உண்டு முடிப்பாள்
பொங்கலை
கண்ணீரை
சோகத்தை
தன் காதலை
அவளை.


                                                                          - விளாடிமிர் டிரான்ஸ்கி , ரஷ்ய க்விதை

Friday, January 13, 2012

கட்டை விரலை கடித்து துப்பினாரா?- புத்தக விழா அடிதடியும் , மனுஷின் சின்னத்தனமும்

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை கனிமொழியை உலக மகா கவி என அவர் பின் வாலாட்டிய படி சென்று கொண்டு இருந்தார் பெருங்கவிஞர் மனுஷ்.  அரசி கவிதை எழுதி ஜெயலலிதாவை நக்கல் அடித்தார்.

இன்று காலம் மாறிய நிலையில், திமுகவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளார். அவ்வப்போது சமரசம் செய்து கொண்டு வயிறு வளர்க்கும் இவர் போன்றவர்களை , நம் நடுத்தர வர்க்கம் புத்திசாலி என மெச்சுகிறது.

 ஆனால் தமது நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்களை , இளிச்சவாயர்கள் என்றுதான் இந்த நடுத்தர வர்க்கம் மதிப்பிடுகிறது..


புத்தக கணகாட்சியில், கவிஞர்கள் சங்கர் ராம சுப்ரமணியனுக்கும் , வசுமித்திரவுக்கும் இடையே தேவ தச்சன் எழுத்து குறித்து கருத்து மோதல் ஏற்பட்டது.

ஷேக்ஸ்பியர் பெரிய கவிஞர் என நாம் நினைக்கிறோம். யாராவது அவர் நல்ல கவிஞர் இல்லை என்றால் , சரி சொல்லி விட்டு போ என விட்டு விடுவோம். ஆனால் தமது கவிதை மேல் உயிராக இருப்பவர்கள் இப்படி மேம்போக்காக நடந்து கொள்ள மாட்டார்கள்.

அந்த வகையில், தேவ தச்சன் மீதான விவாதம் சற்று எல்லை மீறி கைகலப்பில் முடிந்தது..


இதை என்னவோ குழாயடி சண்டை போல மனுஷ் நக்கலடித்து இருக்கிறார்.

கவிதைக்காக, தமிழுக்காக சண்டையிட்ட அவர்களை போற்ற வேண்டுமே தவிர தூற்றுவதில் அர்த்தம் இல்லை.

பொது இடத்தில் சண்டை போடுவது தவ்று என்றாலும், தமிழுக்காக சண்டையிட்ட அவர்களை போற்றுவது நம் கடமை..

கட்டை விரலை கடித்து துப்பியதாக சின்னத்தனமாக மனுஷ் பிரச்சாரம் செய்கிறார் .. அது தவறானது ,, பொய்யானது ,, அற்பத்தனமானது...

சில பதிவர்கள் விபரம் புரியாமல் இந்த விவகாரத்தை நக்கலடிப்பது வேறு.. ஆனால் மனுஷ் நக்கலடிப்பது விஷமத்தனமானது.. முன் விரோதத்தை அடிப்படையாக கொண்டது

"இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன்."


என்று எழுதி இருக்கிறார்..
அதாவது வசுமித்ரா என்பவர் யாரென்றே தனக்கு தெரியாதது போல நாடகம் ஆடுகிறார்..


இந்த வசுமித்ர அந்த காலத்தில் உயிர்மையில் ஏராளமாக எழுதி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனுஷின் கேவலமான புத்தி தெரிய வந்ததும், மனுஷின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு , உயிர்மையை விட்டு வெளியேறினார் என்பது வரலாறு.


இப்போது சங்கருக்கு போன் செயததாக சொல்கிறாரே.. இதே சங்கரையும் தனக்கு யாரென்றே தெரியாது என்றவர்தான் இந்த மனுஷ்..


ஆக இவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை...


காலச்சுவட்டு, கனி மொழி, , சாரு என இவர் துரோகப்ப்ட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..


ஒரு சம்பவத்தை , பொய் கலந்து , ஒரு நான்காம் தர செய்தி தாள் போன்று ரிப்போர்ட் செய்யும் அவசியம் அவருக்கு ஏன் வந்தது?


கட்டை விரலை கடித்தாரே, வேறு எதையும் கடிக்கவில்லையா.. என்றெல்லாம் நரகல் நடையில் எழுத வேண்டிய அளவுக்கு மனதில் ஏன் அவ்வளவு வக்கிரம்? 


இதை எல்லாம் பார்த்தால், படிப்பு என்பதன் அர்த்தம் என்ன , புத்தகங்களின் பயன் என்ன என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.  




Thursday, January 12, 2012

காஃப்காவின் கலக்கல் கதை - எளிய வடிவில் உங்களுக்காக

காஃப்காவின் சிறுகதைகளைப் படிப்பது ஓர் அலாதி அனுபவம். ஓர் அறிமுகம் என்ற அளவில் கீழ்கண்ட கதையை படிக்கவும். பிடித்து இருந்தால் , ஆர்வம் ஏற்பட்டால் அதிகாரபூர்வ வெர்ஷனை படியுங்கள் .

பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் , இதன் உட்கருத்து அபாரமானது..

********************************************************
                             குழப்பமே வாழ்க்கை - காஃப்கா 


இது பொதுவான அனுபவம்தான் . அன்றாட வாழ்வில் ஏற்படும் குழப்பங்களால் இது ஏற்படுகிறது.
என்பவனுக்கு என்பவனுடன் ஒரு வேலை இருந்தது.  வேலையின் முதல் கட்ட பணிகளை முடிக்க ஆ வின் ஊருக்கு சென்றான்.  பத்தே நிமிடங்களில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பினான். விரைவாக வேலை முடித்ததை பெருமையாக் தன் வீட்டில் தம்பட்டம் அடித்து கொண்டான்

வேலையின் இறுதி கட்ட பணிகளை முடிக்கும் பொருட்டு அடுத்த நாள் கிளம்பினான். நேரம் அதிகமாக கூடும் என கணித்து அதி காலையிலேயே கிளம்பினான். ஆனாலும் ஏதோ சில காரணங்களால் , அந்த ஊரை சென்று அடைவதற்கு பத்து பணி நேரம் ஆனது.

களைப்படைந்த நிலையில் அந்த ஊரை சென்று அடைந்தபோது, அங்கு இல்லை. வுக்காக காத்து இருந்த அலுத்து போய் , அரை மணி நேரம் முன்புதான் அங்கிருந்து கிளம்பி வின் ஊருக்கு போய் விட்டதாக சொன்னார்கள். சாலையில் இருவரும் ஒருவரை  ஒருவர் கடந்து சென்றிருக்க முடியும்.
காத்திருந்து பார்க்குமாறு சொன்னார்கள். ஆனால் அவசர வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.விரைவாக தன் ஊரை அடைந்தான்.
அ கிளம்பி சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்ததாக சொன்னார்கள். உண்மையில்   கிளம்பி செல்லும்போதே ஆ அவனை பார்த்து விட்டான். ஆனால் கிளம்பி செல்லும் அவசரத்தில் அவனை பார்க்கவில்லை.

இப்படி ஒரு வினோதமான வகையில் செயல்பட்டாலும், பொறுமையாக அங்கு காத்து இருந்தான். அவ்வப்போது பொறுமை இழந்து இன்னும் வரவில்லையா என்று கேட்ட போதிலும், அங்கிருந்து சென்று விடாமல் வின் அறையிலேயே காத்து இருந்தான்.

ஒருவழியாக வை பார்க்க போகிறோம் , அனைத்தையும் விளக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் மாடியில் இருந்த தன் அறைக்கு பாய்ந்து சென்றான் அ..

கிட்டத்தட்ட மாடியை அடைந்த நிலையில், தடுக்கி விழுந்தான். கத்த கூட முடியாத நிலையில் சுருண்டு விழுந்தான். அவன் காதில் கோபத்துடன் படி இறங்கி அங்கிருந்து வெளியேறும்  சத்தம் கேட்டது..

*************************************************



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா