Saturday, December 31, 2011

படிக்காமலேயே புத்தக விமர்சனமா?- பொறுக்கி மொழியில் வெறுப்பை கக்கிய “எழுத்தாளர்”

ஒரு சிறுவன் இருந்தான். நன்றாக படிக்க கூடியவன். ஆனால் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்து பார்த்து விட்டு மன நோயாளியானான். ரோட்டில் செல்பவர்களுடன் வம்பு சண்டை போடுவது அவன் இயல்பாகிவிட்டது .

சிலர் பொறுமை இழந்து அவனை தாக்கியதன் விளைவாக , படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

பேச்சு மூச்சில்லாமல் கிடந்த அவனை நினைத்து அவன் தாயார் கவலைப்பட்டு வந்தார். நெடு நாட்களுக்கு கழித்து அவனுக்கு லேசாக நினைவு திரும்பியது. அவன் பேச்சை கேட்க அவன் தாயாரும் மற்றவர்களும் ஆவலாக காத்து இருந்தனர்.

கண் விழித்த அவன் , தன் தாயை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.
“ அம்மா..  அப்பா எப்ப சாவாரு ?”

கேட்ட அனைவரும் திடுக்கிட்டு போனார்கள். இதற்கு இவன் பேசாமலேயே இருந்திருக்கலாமே என வருந்தினார்கள்..

************************************************************

எண்பதுகளில் கதை எழுத ஆரம்பித்து 90கள் வரை எழுத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இருந்து , அதற்கு மேல் இலக்கியம் தனக்கு ஒத்து வராது என ஒதுங்கி போனவர் விமலாதித்த மாமல்லன் என்ற எழுத்தாளர்.

உருப்படாத கதைகளை எழுதி வந்தாலும் , அவரையும் மீறி ஓரிரு  நல்ல கதைகள் அவர் பெயரில் வந்து இருப்பதை மறுக்க இயலாது. மலத்தில் சோற்றை பொறுக்குவது போல , அந்த ஓரிரு நல்ல கதைகளை நம்பி , அவரது சிறுகதை தொகுப்பு வெளியிட்டார்கள். அதுவும் பத்தோடு பதினொன்றாக மற்றவர்கள் புத்தகங்களுடன் இவர் புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால் , அவர் புத்தகதோடு வெளியான பல புத்தகங்கள் புதியவர்களால் எழுதப்பட்டவை. அவை எல்லாம் அபாரமான விற்பனை ஆகின . ஆனால் முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இருக்கும் இவர் புத்தகம் ஒன்று கூட விற்கவில்லை..

இனி மேல் கதை எழுதி பெயர் வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர் விபரீதமான வழியை பின்பற்ற ஆரம்பித்தார். அனைவரையும் கேவலமாக திட்ட ஆரம்பித்தார்.

ரோட்டில் நின்று சத்தம் போட்டு ரகளை செய்பவனுக்கு ஒரு வித “ புகழ் ஒளி “ கிடைக்கும் அல்லவா  ? அது போன்ற ”புகழ் ஒளிதான் ”இவரின் இலக்கு .

இதற்கு ஏற்ப பொறுக்கி மொழி ஒன்றை தனக்காக ஏற்படுத்தி கொண்டார் இவர். பொறுக்கி உரை நடை என கூகுளில் சர்ச் செய்தால் இவர் பெயர்தான் வரும். 

எந்த சர்ச்சையில் சிக்காத எஸ் ராமகிருஷ்ணனை கூட இவர் விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரயும் திட்டுவதையே தன் பாணியாக உருவாக்கினார்.

அவரை இலக்கிய உலகம் காமெடி பீசாக இன்றைய  இளம் வாசகர்கள் நினைத்த நிலையில், அவரது சிறுகதை ஒன்றை சாரு நிவேதிதா தன் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் மாமல்லன் சிறுகதைகூட எழுதுவார் என்பதே பலருக்கு தெரிய வந்தது. அதுவரை அவரை வெறும் இலக்கிய சண்டியர் என்றே நினைத்து வந்தனர்.

 ஒரு உதாவாக்கரைக்கு ஏன் விளம்பரம் கொடுக்கிறீர்கள் என சில நண்பர்கள் சொன்னதை சாரு கேட்கவில்லை


ஆனால் இதில் ஒரு காமெடி நடந்தேறியது. அது தான் எழுதிய கதை என்பதையே மறந்து விட்டு, அதை ஆபாசமாக விமர்சித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுத முனைந்தார். நண்பர்கள் சிலர் தலையிட்டு அதை தடுத்தனர்.

ஆனால் அவர் ஃபார்முலா அனைவருக்கும் தெரிந்து விட்டதால் , அவர் ரகளைக்கு வரவேற்பு குறைந்தது. யோசித்த அவர் இப்போதைய ஹாட் நாவலான எக்ஸைலை கண்டபடி திட்டி , தனக்கே உரிய பொறுக்கி மொழியில் ஒரு விமர்சனம் எழுதினார். அதீத போதையில், தான் அந்த நாவலை படிக்காமல் விமர்சனம் எழுதியதையும் உளறித்தொலைத்து விட்டார்.

சற்று ஆழ்ந்த்து படித்திருந்தால் , காமத்திலிருந்து கடவுளுக்கு , ஆன்மீகம் , உண்மையான நாத்திக்கம் , பெண் அடிமைத்தனம் என எண்ணற்ற விஷ்யங்களை பார்த்து இருக்கலாம். ஆனால் அவதூறு போதையில் இதையெல்லாம் விட்டு விட்டார் அவர்

விமர்சனம் என்பது வரவேற்கத்தக்கதே.. படியுங்கள், பிடித்தால் பாராட்டுங்கள். பிடிக்காவிட்டால் கிழி கிழி என கிழியுங்கள் என்ற சொன்ன பின்பும், அறிவு நாணயம் இன்றி, படிக்காமலேயே நாவல் விமர்சனம் எழுதிய அவரைத்தான் இந்த வருடத்தின் இலக்கிய காமெடி பீசாக இலக்கிய உலகத்தினர் நினைக்கிறார்கள்.

அவர் எப்படியோபோகட்டும். இவர் போன்ற காமெடியன்களால் , நல்ல எழுத்து வருவது தடைபட்டு விடக்கூடாதே என்பதுதான் வாசகர்களின் கவலை



20 comments:

  1. எஸ்ராவுக்கு நீங்கள் செய்தது போல் இதில் எனக்கு உங்கள் மேல் வருத்தமில்லை. அவரது ஸ்டைலிலேயே பதிலளித்திருக்கிறீர்கள்.
    அவரும் சாருவின் மூன்று காதல்கள் போன்ற கட்டுரைகளையெல்லாம் சிலாகித்தே இருக்கிறார். சென்ற வருடத்தில் நான் படித்த சிறுகதைகளிலேயே சிறந்ததென கருதும் “கப்டன்” ஐயும் அவர் பாராட்டியே இருந்தார்.
    ஆனால் எல்லோரும் சாருவை பாராட்ட மட்டுமே என்ர உங்கள் வாதம்தான் புரிகிறதேயில்லை.

    ReplyDelete
  2. மாட்டுனீங்க பாஸ் ட்வீட்டர்ல அவரு அர்ச்சனைய ஆரம்பிச்சிட்டார்

    ReplyDelete
  3. சாருவின் எழுத்தை அனைவரும் பாராட்ட வேண்டும் என சொல்லவில்லை . படித்து விட்டு பாராட்டினாலும் , திட்டினாலும் ஏற்க வேண்டியதுதான் . படிக்காமலேயே விமர்சிப்பதைதான் கண்டிக்க வேண்டியிருக்கிறது

    ReplyDelete
  4. அவரே தன்னை அடையாளம் காட்டி கொள்வது நல்லதுதானே

    ReplyDelete
  5. இப்படிகூட ஆட்கள் இருக்காங்களா? படித்து பார்க்காமலே விமரிசனம் எப்படி சரி வரும்?
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. 1500 ரூபாய் எழுத்தாளரையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்கிறீர்கள் பாஸ் :-)

    ReplyDelete
  7. அவர் ஏன் படிக்க முடியவில்லை என்பதற்கு சரியாய் காரணத்தை எழுதி இருக்கிறார் .....அப்புறம் exile ஹாட் novel ah ? செம காமெடி சார் நீங்க..........அப்புறம் வாசகர்கள், இலக்கிய உலகம் இது எல்லாம் நீங்க மட்டுமா சார்? வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரு நாங்க எல்லாம் பெரிய ரவுடி ன்னு அது மாதிரி யா சார் இது?

    ReplyDelete
  8. தன்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்கிறார் 1500 எழுத்தாளர். அப்படியெனில் லஞ்சம் கொடுப்பவன் இவரை விலைக்கு வாங்கியதாகாதா?

    லஞ்சம் வாங்கறவன், தொடர்புகளை உபயோகப்படுத்தி பதவி உயர்வு வாங்கறவனெல்லாம் இலக்கிய விமர்சகனா பாஸ் :-)

    ReplyDelete
  9. அவர்தான் தெளிவா பக்கம் வாரியா போட்ருக்காரே.. முதல் 30 பக்கங்களிலேயே நாவல் தோற்று விடுகிறது. நீங்கள் எந்த புத்தகத்தையும் பாதியில் வைத்ததில்லையா? எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் கூட நாவலை மாத்திரமே விமர்சிக்கின்றனார். நீங்கதான் தனிமனித விமர்சனத்தில் இறங்குகிறீர்கள். பேனாவில் மலம் ஊற்றி எழுதுகிறீர்கள். # ஏதேனும் ஒரு செக்ஸ்வகை, எழுத்தாளனின் அவல நிலை, பக்தி கலக்கினால் சாரு காபி வந்துவிடுகிறது. பட் எக்ஸைல் காபி ரொம்ப ஆறி விட்டது.

    ReplyDelete
  10. நீங்கள் எந்த புத்தகத்தையும் பாதியில் வைத்ததில்லையா? "

    டால்ஸ்டாயின் ”போரும் அமைதியும்” நாவலை என்னால் படிக்க இயலவில்லை.. காரணம் அது சக்திக்கு மீறிய பெரிய புத்தகம். அதௌ புரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இல்லை என நேர்மையாக ஒப்புக்கொண்டு விலகி விட்டேன். படிக்க இயலாத , படிக்காத ஒரு நாவலை விமர்சிக்க மாட்டேன்,

    ReplyDelete
  11. படிச்சிட்டு எழுதுரவரையும் திட்டுறீங்க, படிக்க முடியலைன்னு எழுதுரவரையும் திட்டுறீங்க. எப்பிடி சார் இப்படி கூச்சமே இல்லாம jaalra தட்ட முடியுது உங்களால. உங்க சாரு எழுதாத பொருக்கி மொழியா? என்னா பாஸ் நீங்க, நீங்க பாட்டுக்கு கூச்சமே இல்லாம எழுதுறீங்க, ஆனால் படிக்குற
    எங்களுக்கு தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு.

    ReplyDelete
  12. உங்களது நேர்மை கவலைக்கிடமாக ஐ சி யூ வில் துவைத்து காயத்தோடு படுத்த படுக்கையாக மாமல்லன் தளத்தில் கிடக்கிறது..... இனிமேலும் நீங்கள் பதிவு எழுத வேண்டுமா ?

    ReplyDelete
  13. என்ன சாரு, கட்டுரை மட்டும் தான் பிச்சைக்காரன் ங்கற பேர்ல எழுதறீங்களா இல்ல கமெண்டுகளும் சேத்து தானா.
    -சாவுநிரேதிதா

    ReplyDelete
  14. மிஷ்கினை கொண்டாடிய இவர், மிஷ்கின் தன்னுடைய புத்தகத்தை பாராட்டவில்லை என்பதற்காக 30 பதிவுகள்
    போட்டு திட்டினார்.

    கடவுள் (இவருக்கு) நித்தியானந்தா கையும் களவுமாக மாட்டியவுடன் "சரசம் சாமியார் சல்லாபம்" என்று புத்தகம் வெளியிட்டார்.

    61 வயது ரஜினி 37 வயது ஐஸ்வர்யாவை காதலிப்பது "ஆபாசம்" என்று நிஜமில்லாத ஒன்றை (எந்திரன் திரைப்படம்) விமர்சித்தார்.

    உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு "ஆபாசம்" என்று பெயர் சூட்டும் இவர், தான் ஒரு சிக்கலில் மாட்டியவுடன், விளக்கமளிக்காவிட்டாலும் பரவாயில்லை, இது சம்பந்தமாக இவருடைய அடிபொடிகள் வெளியிடும் நக்கல் பதிவுகளை வெளியிடுகிறார், சந்தேகம் இவர்மீதுதான் திரும்புகிறது. ஒரு பெண்ணுடன் chat விவகாரத்தில் சிக்கிய விஷயத்தில் நீங்கள் மட்டும்தான் 'சதி' என்று சொல்கிறீர்கள். இதற்கு விடை அவர் நாவலில்கூட இல்லை.

    சாருவுக்கு L R ஈஸ்வரியின் குரல் பிடிக்காது. காலம் போன போக்கில் L R ஈஸ்வரி பாடிய 'கலாசலா' அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஏனென்றால் 'கலாசலா' வாலி எழுதிய பாடல். கடந்த வருடம் 'நந்தலாலா' எப்படி பிடித்ததோ அதே காரணம். நல்லவேளை நாவல் பத்தி வாலி எதுவும் பேசவில்லை, தப்பித்து விட்டார்.

    ஏன் சார், இதெல்லாம் புரியாத அளவுக்கு மக்கள் என்ன முட்டாள்களா, சாரு என்னும் மாயையில் இருந்து வெளியே வாருங்கள் நண்பரே!

    இவர் புத்தகம் படித்து இருக்கிறீர்களா, என்று உடனே கேள்வி எழுப்பாதீர்கள், படித்து இருக்கிறேன்.

    ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பரே, தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் மற்றவர்கள் தவறு செய்தால் மட்டும் "ஆபாசம்" என்று திட்டும் இவர், ஒரு தவறில் தான் மறைமுகமாக சம்பந்தப்பட்டால்கூட ஒத்துக்கொள்ள மறுப்பதுதான் மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது.

    தமிழ் சினிமா ரசிகர்களின் Hero Worship மனோபாவத்தை விமர்சிக்கும் இவர், அதே மனோபாவத்தை தன்னுடைய ரசிகர்களுக்கு ஏற்படுத்த முனைகிறார். அதற்கு "நான் ரொம்ப நல்லவன்" வேஷம் தேவைப்படுகிறது.

    சாறு ஒரு வித்தியாசமான படைப்பாளி, தமிழ் உலகம் அறியாத புது விஷயங்களை எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார். மற்றபடி நம்மைப்போல் விருப்பு வெறுப்பு உள்ள மனிதர்.

    அவர் வாழும் காலத்தில் நானெல்லாம் வாழ்கிறேன் என்பதே பெருமை என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக்கொண்டு இருப்பது மிகவும் மிகையான விஷயம்.

    இறுதியாக, நண்பரே, படைப்புகளை மட்டும் ரசியுங்கள்!

    ReplyDelete
  15. சாரு மட்டும் தன்னால் ஜெ.மோ. எழுத்துகளைப் படிக்க முடியவில்லை என்று சொல்லலாம், மற்றவர்கள் அதையே இவரைப் பற்றிச் சொல்லக்கூடாதா?

    ReplyDelete
  16. இப்படியும் இருப்பார்களா?

    ReplyDelete
  17. Mr.Pichaikaran, You have been appropriately countered in the following link:
    http://www.maamallan.com/2012/01/blog-post.html

    ReplyDelete
  18. "தன்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்கிறார் 1500 எழுத்தாளர். அப்படியெனில் லஞ்சம் கொடுப்பவன் இவரை விலைக்கு வாங்கியதாகாதா?"

    What is this 1500? Pl explain.

    ReplyDelete
  19. Boss.. i am also reading exile.crossed 150 pages..but didnt find anything new or exciting so far.. pothum build ups !

    ReplyDelete
  20. மாமல்லன் எழுதுறது பொறுக்கி மொழினா, உங்க குரு நாதர் எழுதறது எந்த மொழிங்க????? காமெடி பண்றத நிறுத்திட்டு போய் வேல வெட்டிய பாருங்க!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா