Tuesday, December 13, 2011

கூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார "வேலைக்கு" ஆள் எடுக்க சொன்னவரின் விபரீத விமர்சனம்


    ஒரு காலத்தில் கவிஞர்கள் என்றால் கவிதை நினைவுக்கு வந்தது. இன்றைய நிலையில் கவிஞர்கள் என்றால் , குறுக்கு புத்தியும் துரோகமும்தான் நினைவுக்கு வருகிறது.

சாருவிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் அவருக்கு நடிக்க தெரியாது. போலியாக புகழ தெரியாது.  மேடையிலேயே ஒரு முறை புத்தகத்தை கிழித்து எறிந்ததை மறந்து இருக்க மாட்டீர்கள் . யாருக்கு ஆதரவாக , யாருடைய இழிவை நீக்க அதை செய்தாரோ , யாரை காப்பாற்ற ப்ல எதிர்ப்புகளை சந்தித்தாரோ,  அந்த நபரே பிற்காலத்தில் துரோகியாக மாறினார்.
ஓசியில் கட்டுரை எழுதி கொடுத்து அந்த கவிஞரின் பத்திரிகை வளர உதவிய சாருவுக்கு அவர் சமீபத்தில் நன்றியை பின் வருமாறு காட்டினார்.
சாருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் . அறிவில் சிறந்த அவர் , புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால்  , வாசகர்களுக்கு பயனுள்ளாதாக அமையும் என கருதி அவரை அழைத்தார், அந்த எழுத்தாளருக்கும் சாருவை மிகவும் பிடிக்கும்,. தேகம் விழாவில் அவர் பேசியது இன்றும் விரும்பி கேட்கப்படுகிறது , படிக்கபடுகிறது .

எனவே அவர் விழாவிற்கு வருகிறேன் என ஆர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த கவிஞர் , எழுத்தாளருக்கு டார்ச்சர் கொடுத்து விழாவிற்கு போக முடியாமல் செய்தார் . சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன ? விழா சிறப்பாக நடந்தது.
இப்போது நான் சொல்ல வருவது அந்த சம்பவத்தை பற்றி அன்று.

      விஷயத்துக்குள் போகும் முன்பு ஒரு   ஃபிளேஷ் பேக்.

********************************************************

அந்த காலத்தில் தமிழகத்தில்  தேவதாசி என்ற முறை இருந்தது. சில விளிம்பு நிலை குடும்பங்களில் சிறிய வயதிலேயே பெண்களை ( சிறுமிகளை )  வீட்டில் இருந்து பிரித்து, கோயில் சொத்தாக ( ? ! ) ஆக்கி விடுவார்கள்.அதாவது அவர்கள் ஊரின் பொதுச்சொத்து. தேவர் அடியார் என்பது அவ்ர்கள் பெயர் . அந்த பெயர்தான் திரிந்து இன்று வேறு பெயரில் வழங்கப்படுகிறது.

இப்படி ஒரு அநியாயம் , அனீதி சில குடும்பங்களுக்கு இழைக்கப்படுவதை நிறுத்த பல பெரியவர்கள் போராடினார்கள். பெரியார் இதில் தீவிரமாக இருந்தார். குடியரசு இதழில் எழுதியுள்ள்ளார்.

இந்த பெரும் போராட்டத்துக்கு பின், சட்டசபையில் தேவதாசி முறை ஒழிப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பழமைவாதிகள் தேவதாசி முறையை ஒழிக்க கூடாது என்றனர். அவர்களின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆவேசமாக பேசினார் “ தேவதாசி முறை ஒழிந்தால் , பாலுணர்வுக்கு வடிகால் இல்லாமல் போய் விடும். எனவே ஊரில் கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்கள் பெருகும். தேவதாசி முறை என்பது பாலியல் குற்றங்களை தடுக்கும் பெரும் சேவையாகும் . எனவே இந்த முறை தொடர வேண்டும் . தேவதாசிகளாக பணியாற்றினால் மோட்சம் கிடைக்கும்  “ என்றார்.

    தேவதாசி ஒழிப்புக்கு போராடிய முத்து லட்சுமி எழுந்தார். அய்யரின் கண்களை பார்த்து சொன்னார் “ எங்கள் இனப்பெண்கள் இத்தனை நாள் மோட்சம் பெற்றது போதும். இனி உங்கள் இனப்பெண்களை இந்த சேவைக்கு அனுப்பலாமே “

கேட்டதும் அய்யர் வாய் பேசாமல் அம்ர்ந்தார்.

அய்யரை வாயடைக்க செய்வதற்காக அப்படி சொன்னாரே தவிர, எந்த இனப் பெண்களாக இருந்தாலும் தேவதாசி முறையில் ஈடுபடக்கூடாது என்பதே அவர் நிலைப்பாடு.

இப்படி பல நல்லவர்கள் போராடித்தான் தேவதாசி முறையை ஒழித்தனர். அதன் பலனாக பெண்கள் இன்று நல்ல நிலைக்கு வந்த்துள்ளனர்.  நல்ல பணிகளுக்கு செல்கின்றனர்..ஆண்களை மிஞ்சி பல துறைகளில் வளர்ந்து வருகின்றனர்
***********************************

     ஓர் இளம் கவிஞர் சாருவை தன கவிதை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தார்.

சாரு பொதுவாக , மிகவும் யோசித்துதான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். ஆனால் அழைத்தவர் இளைஞர், அறிமுகமானவர் என்பதால் ஒப்புக்கொண்டார். கவிஞர் புத்தகத்தை கொடுத்து விட்டு சென்றார்

அந்த புத்தகத்தை படிக்க தொடங்கியதும் சாருவின்  முகம் மாறியது.  புதிய கவிஞர் என்பதால், கவிதைகள் கத்துக்குட்டித்தனமாகத்தானே இருக்கும் , இதில் கோபப்பட என்ன இருக்கிறது  என அவர் அருகில் இருந்த நண்பர்களுக்கு புரியவில்லை.

அவர் நெருங்கிய நண்பர் அந்த புத்தகத்தை படித்து பார்த்தார், பார்த்ததுமே சாருவின் கோபத்துக்கு காரணம் புரிந்தது.

கவிதை அழகுணர்ச்சியோ, மொழி நயமோ, தரமோ இல்லாமல் இருந்தது பிரச்சினை அல்ல, கவிதைக்கு பின் இருந்த அருவருப்பான கேவலமான சிந்தனையே ( perversion ) , அவர் முக மாற்றத்துக்கு காரணம்..

    பாலியல் தொழில் தள்ளப்பட்டுள்ள அப்பாவி பெண்கள் ஏராளம். இந்த பரிதாபத்துக்குரிய பெண்கள் உடல் சுகத்துக்காகவோ, ஆடம்பர வாழ்வுக்காகவோ இதில் ஈடுபடுவதில்லை. அவ்ர்கள் விருப்பம் இன்றி இதில் தள்ளப்படுபவர்களே அதிகம்..

இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் , தன் கருத்தை அள்ளி வீசி இருந்தார் கவிஞர்...

            விபசாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், இதை ஒரு தொழிலாக அங்கீகரித்து , மேலும் பல பெண்களை இந்த தொழில் சேர்த்தால், ஊரில் பாலியல் குற்றங்கள் குறையும், பணிக்கு சென்று சிரித்து பேசும் பெண்கள் எல்லாம் ஒரு வகையில் விபச்சாரம் செய்கிறார்கள் என்றெல்லாம் பெண்மையை கேவலப்படுத்தி இருந்தார் அவர்.

அந்த ஆபாச ஆணாதிக்க சிந்தனை களஞ்சியத்தில் இருந்து , ஓரளவு பிரசுரிக்க தகுந்த சில உங்கள் பார்வைக்கு..

 • இன்றைய தேதியில் இங்கே
  எவளுக்கும் சாத்தியமில்லை -
  பெய்யெனப் பெய்யும் மழை
 • மதிப்பெண் வாங்கப் பேராசிரியரிடத்தோ
  பேரம் பேசுகையில் கடைக்காரனிடத்தோ
  வட்டி வாங்கவரும் கடன்காரனிடத்தோ
  லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியிடத்தோ
  நீண்ட வரிசையில் முன் நிற்பவனிடத்தோ
  பல்லிளித்துக் குழைந்து நின்றிருக்கக்கூடும்
  உம் வீட்டுப்பெண்டிர் – அதன் பெயர் என்ன?
 • வேசிகளை யொழிக்குமொரு
  கலாசாரத்தில் கணிசமாகும் -
  கற்பழிப்பும் கள்ளத்தொடர்பும்.
கற்பழிப்பை குறைக்க வேண்டுமானால், பல பெண்களை வேசிகளாக்க வேண்டும், இந்த தொழில் தள்ளப்பட்டவர்களை மீட்க கூடாது, மாறாக அவர்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பது போன்ற இந்த வரிகளை படித்து , நண்பர்கள் ஆவேசப்பட்டனர். ஒரு நோய்மையான மனதில் ( sick mind) இருந்து தோன்றிய  இந்த கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சாருவின் தகுதிக்கு தகாது என நினைத்தனர். 

சாரு இந்த ஆபாச புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விட்டால், பிரச்சினை ஆகி விடுமே என்ற அக்கறையில், இதில் நீங்கள் கலந்து கொள்ள கூடாது என உரிமையுடன் வற்புறுத்தினர்.


நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி , சாரு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால், அதற்கு காரணம் ஓர் இளைஞனை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான்.

அவர் கலந்து கொண்டதே , அந்த நிகழ்ச்சிக்கு பரவலான கவனத்தை பெற்று தந்தது . ஆனால் போலியாக பாராட்டவும் விரும்பவில்லை.. ம்னதில் இருந்த குமுறல்களை கொட்டி தீர்க்கவும் இல்லை. 

பொதுவான சில விஷ்யங்களைப்பற்றி மட்டும் பேசினார். அந்த பேச்சு சிறப்பாக அமைந்தது. ஆனாலும் அந்த கவிஞருக்கு ஏமாற்றம்.

பாரதிக்கு அப்புறம் இவர்தான் சிறந்த கவிஞர் என்றெல்லாம் பாராட்டுவார் என எதிர்பார்த்த அவருக்கு அப்படி நடக்காதது வருத்தமே.. இப்படி பாராட்டுவதற்கென இன்னொருவர் இருப்பது அவருக்கு தெரியவில்லை. இந்த ஆபாசத்தை பாராட்ட முடியாது என சொல்லி விட்டுத்தான் மேடைக்கு வந்தார் சாரு. அப்படி இருந்தும் அந்த கவிஞருக்கு ஏமாற்றம்.

 அதில் இருந்து சாரு மீது குரோதத்துடன் இருந்து வந்தார் அவர். இந்த நிலையில் எக்சைல் வெளியானது.

    ஒரு எண்டர்டெய்னர் போன்ற விறுவிறுப்பான நடையுடன் , ஓர் இலக்கிய படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் பக்கம் முதல் , கடைசி பக்கம் வரை தொய்வே இல்லாத நாவல். ஆன்மீகம் , கலை, சினிமா , இசை, காமம் , காதல் என அது தொடும் எல்லைகள் ஏராளம். ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு உணர்வை தரும் மாஸ்டர் பீசாக இருப்பதால்தான், மதன்  , இந்திரா பார்த்த சாரதி, வாலி போன்றோர் இதை உலகத்தரம் மிக்கது என்றனர்.


 அதற்காக எல்லோரும் இதை பாராட்ட வேண்டும் என்பதில்லை . தாராளமாக விமர்சிக்கலாம். 

 நண்பரும், பத்திரிக்கையாளரும் , பதிவருமான லக்கிலுக் யுவகிருஷ்ணா தேகம் நாவல் தன்க்கு பிடிக்கவில்லை என விமர்சித்தார். அதற்காக அவர் மீது எந்த கோபமும் இல்லை. ஏனென்றால் அவர் விமர்சனத்தில் நேர்மை இருந்தது. தன்க்கு தோன்றுவதை வேறு உள் நோக்கம் ஏதுமன்றி கூறினார். அதை ரசிக்கும்படியும் கூறினார். அவர் கருத்தை ஏற்கவில்லை என்றாலும், அந்த விமர்சன கட்டுரை நன்றாக இருப்பதை அன்றே போன் செய்து பாராட்டினேன். 

இப்போது கூட சாருவின் ஆன்மீக நிலைப்பாடு தன்க்கு பிடிக்கவில்லை என லக்கி வெளிப்படையாக சொல்லி வருகிறார். தாராளமாக சொல்லலாம். இப்படி சொல்வது அவர் மீதான மதிப்பை கூட்டுகிறதே தவிர குறைக்கவில்லை.

மீண்டும் சொல்கிறேன். எதிர் கருத்து கூடாது என்பதல்ல.. எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்.. சுவையாக சொல்லுங்கள் . வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள்.

உதாரணமாக நானும் கடவுளும் என்ற சாருவின் நூலை படித்தேன். மிகவும் பிடித்து இருந்தது,

இதற்கு எதிராக நாத்திகவாதி என்ன எதிர் வினை ஆற்றுவார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. லக்கி யுவாவுக்கு , புத்தகம் அனுப்பி அவர் விமர்சனம் வாங்கி வெளியிட இருக்கிறேன். அதாவது எதிர் கருத்து என்ன தெரிந்து கொள்ள அந்த அளவுக்கு ஆவலாக இருக்கிறேன். 

ஆக எதிர் கருத்து சொல்வது தவறல்ல. எதிர் கருத்து சொல்பவர்கள் எதிரிகளும் அல்லர்.

ஆனால் உள் நோக்கத்துடன் சகதியை வீசி எரிவது விமர்சனம் என்ற பிரிவில் வராது. அது அவதூறு எனற பிரிவில் வரும். 

நல்ல ஒரு விஷ்யம் வரும்போது, இப்படி அதை களங்கப்படுத்தினால் நாளை யாருமே நல்ல விஷ்யம் படைக்க முன் வர மாட்டார்கள் என்பதால்தான், இந்த அவதூறுக்கான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

 வலைப்பூ என்பது சொந்த வீடு போன்றது. அங்கு வாந்தி எடுத்து வைத்தால், கண்டு கொள்ளாமல் சென்று விடலாம். ஆனால் தமிழ் பேப்பர் போன்ற இணைய தளங்கள் , அனைவருக்கும் பொதுவான பூங்கா போன்றவை. அங்கு வாந்தி எடுத்தால், எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும்..

     இது போன்ற அவதூறுகளால் , ஒரு புத்தகத்தின் வெற்றியை தடுக்க முடியாதுதான். ஆனால் அடுத்த தலை முறை படைப்பாளிகளை இது போன்ற அவதூறுகள் பாதிக்கும். இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி எழுதித்தான் ஆக வேண்டுமா என்ற மனச்சோர்வு அடுத்த தலை முறை எழுத்தாளர்களுக்கு வந்தால் , அது தமிழுக்கு நல்லதல்ல. என்ன கஷ்டப்பட்டாலும் , எழுதுக்கொண்டே இருப்பேன் என்ற சாரு போன்றவர்களின் பிடிவாதம் , இனி வரக்கூடியவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே..

எனவே நல்ல விஷ்யம் இழிவு படுத்தப்படும்போது, ஆதரவுக்குரல் எழுப்புவது தார்மீக கடமை. இப்படி எழுப்புவது எழுத்தாளனை காக்கவோ, அந்த படைப்பை காக்கவோ அல்ல..  ஆக்க்பூர்வமான படைப்புகளுக்கும் ஆதரவாளர்கள் என்றும் இருப்பார்கள் என்பதை வெளிக்காட்டும் முயற்சியே இது.

இதை விமர்சனம் என சொல்லாமல் ஏன் அவதூறு என்கிறேன்? ஏன் உள் நோக்கம் கொண்ட கட்டுரை என்கிறேன் ?

அந்த விமர்சனத்தின் சில வரிகளை பாருங்கள்

 •  ”அவரது கடைசி நாவலான தேகம் படித்த பின் அவர் மீதான நம்பிக்கை கிழவன் குறி போல் சுத்தமாகப் படுத்து விட்டது. ஆனாலும் விதி அப்படி சும்மா விடுமா?”

 • ” கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் சாரு அரைத்து வரும் அதே பழைய புளித்த மாவு ”

 • “ ‘இது ( எக்சைல் ) என்ன மயிரு மாதிரி?’ என்று தோன்றும். ”

 • “ எக்ஸைல் நாவலைப் படித்ததிலிருந்து மதுமிதா இரவில் தூங்கும் போதெல்லாம் ”Oh Shit” என்று இடைவெளியே இல்லாமல் சொல்லி அரற்றிக் கொண்டிருந்தாள்.”

 • ” இப்படி ஒன்றுக்கும் மற்றதற்கும் எவ்வகையிலும் சம்பந்தமற்ற‌ விஷயங்களின் சுவாரஸ்யமற்ற குழப்பக் கலவைதான் இந்த‌ எக்ஸைல் நாவல்.”

 • குமுதம் வார இதழ், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், குமுதம் தீராநதி ஆகிய ஒவ்வொன்றிலும் சில பக்கங்களைக் கிழித்தெடுத்து சீட்டுக்கட்டு போல் கலக்கியெடுத்து அச்சுக்கனுப்பி நாவலாக்கி விட்டார்களோ எனத்தோன்றுகிற‌து.

மேற்கண்ட வரிகளை  நடு நிலையான ஓர் ஆள் எழுதவே முடியாது. எக்சைல் சொல்லும் கருத்துக்கள் குறித்தும், பேசு பொருள் குறித்தும் , அபிப்ராய பேதங்கள் இருக்கலாமே தவிர , சுவாரஸ்யமற்ற கலவை என சொல்லவே முடியாது.
 மேலும் அவர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளைப்பாருங்கள். எந்த அளவுக்கு வெறுப்பு மண்டி கிடக்கிறது.ஓர் எதிரி இப்படி எழுதி இருந்தால் புரிந்து கொள்ள இயலும். நேற்று வரை நண்பராக இருந்தவர் ஏன் இப்படி எழுதுகிறார்? 

 • இருபது ஆண்டுகளாக சாரு அரைத்த மாவையே அரைக்கிறார் என்றால் , ஏன் இந்த ஆண்டு வரை அவர் நூல்களை படிக்கிறார்?

 • தேகம்  நாவலில் சாரு மீதான நம்பிக்கை போய் விட்டால் , மீண்டும் ஏன் எக்சைலை படிக்கிறார்?
 • எக்சைல் ம** மாதிரி இருக்கிறது என்றால் , அதன் வடிவமும் , அதன் கேரக்டர்களும் எப்படி மனதில் நிற்கின்றன? எக்சைல் வடிவ  பாணியில் விமர்சனம் எழுதி இருக்கிறாரே ?
 • பகடி என்பது ஒரு எழுத்தின் , செயலின்  சாரத்தை உள்வாங்கி அதை தன் பாணியில் கிண்டல் செய்வது . ( உ.ம் எக்சைலின் 66 , 67 பக்கங்கள் ) ஒருவர் எழுத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து , சில வார்த்தைகளை மாற்றி போடுவது பகடி அல்ல.. காப்பி.. அதாவது சாரு போல எழுத முயன்று , முடியாததால் இப்படி பிதற்றுகிறாரா?
 • ”சீட்டுக்கட்டு போல் கலக்கியெடுத்து அச்சுக்கனுப்பி நாவலாக்கி விட்டார்களோ எனத்தோன்றுகிற‌து” பின் நவீனத்துவ எழுத்து எப்படி இருக்க வேண்டும் என தெரியாவிட்டால் பரவாயில்லை. எக்சைலிலேயே குறிப்பு இருக்கிறதே..படித்தாரா? படித்து இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டார். படிக்காவிட்டால், விமர்சனமே எழுதி இருக்க கூடாதுஇவ்வளவு விரிவாக நான் எழுத என்ன காரணம்?

ஒரு எதிர் விமர்சனத்தால் புத்தக விற்பனை படுத்து விடப்போவதில்லை..

உண்மை நிலையை , இலக்கிய வட்டாரத்துக்கு வெளியே இருக்கும் ,வாசிப்பு பழ்க்கம் கொண்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இதை எழுதினேன்.

சாருவிடம் சிலவ்ற்றை எதிர் பார்க்கிறார்கள்.. அது தார்மீக நெறிகளுக்கு புறம்பாக இருப்பின் சாரு அதை மறுத்து விடுகிறார். இந்த ஏமாற்றத்தில் அவதூறுகளை கிளப்புகிறார்கள்.

அதில் ஒரு கேஸ் ஸ்டடியாகத்தான் இந்த விவகாரத்தில் இருக்கும் பின்னணி சமாச்சாரங்களை விளக்கினேன்.

இது போலத்தான் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன.

இந்த நண்பர் சும்மா எழுவதோடு நிறுத்தினார். இவருக்கு முன்னோடியான இன்னொரு கவிஞர் சொல்லவொண்ணா பிரச்சினைகளை சதி வேலைகள் மூலம் செய்தார்.

இரண்டுக்கும் மோட்டிவ் என்பது ஒன்றுதான் .Perversion + jealousy   = Poisonous thoughts 

27 comments:

 1. முன்பு ஒருமுறை சாரு தனது தளத்தில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் ஒரு பழைய ஆங்கிலக் கட்டுரைக்கு சுட்டி கொடுத்து, யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நலம் என்று சொன்னார். உடனே இந்த சரவண கார்த்திகேயன் அதை மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று கடித்துக் குதறியிருந்தார். (உதாரணமாக, parliamentary forces என்றால் 'பாராளுமன்ற சக்திகள்' (!) Gandhi understood it partly because he was... என்றால் 'காந்தி அதைப் பகுதிகளாகத்தான் புரிந்துகொண்டார், ஏனென்றால்' (!) இவை வெறும் சாம்பிள்தான்)

  அதை நான் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியபோது அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது! எனக்கு 'சினேக பாவம்' இல்லையாம்!!

  ஆஃப்டர் ஆல் ஒரு மொழிபெயர்ப்பு...அதில் யாருமே ஒத்துக்கொள்ளக் கூடிய பிழைகளை மட்டுமே குறிப்பிட்டதற்கே அவருக்கு மட்டும் அப்படிக் கோபம் வந்ததே, ஒரு எழுத்தாளர் ஒரு வருடம் கடும் உழைப்பைச் செலுத்திப் படைத்த ஒரு நாவலை இவர் எப்படிக் கிழிக்கிறார் பாருங்கள்? இதில் 'சினேக பாவம்' பொங்கி வழிகிறது, பாருங்கள்!

  சரவணன்.

  ReplyDelete
 2. அட்டா, ஸ்பெல் செக்கர் காலை வாரிவிட்டதே! Paramilitary forces (துணை இராணுவப்படைகள்) என்பதையே சரவண கர்த்திகேயன் 'பாராளுமன்ற சக்திகள்' என்று குதறியிருந்தர். திருத்திக்கொள்க.

  சரவணன்

  ReplyDelete
 3. வம்பு தும்புக்காக வாய் நம நமக்கிறது. விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எழுத்தாளரை கவிஞர் தடுத்த புராணத்தை இன்னும் சற்று விளக்கமாக விளம்பலாமே.

  ReplyDelete
 4. சரி விமர்சனத்துக்கு பதில் எழுதாமல் எழுதியவர் பற்றிய பேசுவது மட்டும் ஞாயம் ஆகுமா?

  ReplyDelete
 5. Mr. Pichaikkaran, i see this manapakkuvam from you only here, this day , this moment...but not when i was in ur vasagar vattam.Love,Gayathri Karthik.

  ReplyDelete
 6. நான் இங்கு சில விசயங்கள் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். விமர்சனம் யார் வேண்டுமானுலும் செய்யலாமே!அந்த நாவல் ஒருவருக்கு பிடித்திருப்பதற்கும் பிடிகாததர்க்கும் பல கரணங்கள் இருக்கலாம். அதற்க்கு யார் என்ன செய்ய முடியும்?. இங்கு ரைட்டர் ? சி எஸ் கே எக்சில் நாவல் பிடிக்கவில்லை. அதனால் என்ன?. எனக்கு எக்சில் பிடித்திருக்கிறது. அதனாலும் என்ன?.

  ஆனால் ஒன்று . எனக்கு தெரிந்த பையன் ஒருவன் இருக்கிறான். அவன் வயது 6. ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். நான் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ''இதுவரை வந்த தமிழ் சினிமா பாடல் காட்ச்சியிலேயே (பாடலின் இனிமை,மற்றும் காட்சி படுதலில்) முதலிடம் வகிப்பது குணா படத்தில் வரும் ''கண்மணி அன்புடன் ''என்ற பாடல் தான் சிறந்தது'' என்று சொன்னேன். ஆனால் நண்பரோ''இல்லை இல்லை, ஆவாரம் பூ படத்தில் வரும் ''சாமிகிட்ட சொல்லி வச்சு'' என்ற பாடலுக்கு தான் முதலிடம்'' என்று சொன்னார் . நான் '' கிடையாது அதற்கு இரண்டாம் இடம் தான் கொடுக்க முடியும் ''என்று சொன்னேன். பக்கத்திலிருந்த அந்த ஆறு வயது பையன் சொன்னான் '' நீங்கள் சொல்வதெலாம் தவறு.
  விஜய் படத்தில் வரும் ''நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவை இல்லை"" என்ற பாடல் தான் சிறந்தது என்றான்.

  எனக்கு அந்த ஆறு வயது சிறுவனுக்கும் , ரைட்டர் ? சி எஸ் கே வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இந்த ரைட்டர்? சி எஸ் கே வின் சினிமா விமர்சனங்களை படித்தால் அப்படித்தானே நினைக்க தோன்றுகிறது.

  ReplyDelete
 7. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை ஒழிப்புகாக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதை குறிப்பட விரும்புகிறேன்.
  tharmini

  ReplyDelete
 8. //சாருவிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் அவருக்கு நடிக்க தெரியாது. போலியாக புகழ தெரியாது. //
  எழுத்தாளர் CSK க்கும் இதுதான் problem சார்.

  ReplyDelete
 9. writer CSKஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார் அதை பற்றி பேசாமல் அவரை பற்றியும் அவர் படைப்பை பற்றியும் பேசுவது என்ன நியாயம்?

  ReplyDelete
 10. அதை நான் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியபோது அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது! எனக்கு 'சினேக பாவம்' இல்லையாம்!!"

  ஹா ஹா

  ReplyDelete
 11. சரி விமர்சனத்துக்கு பதில் எழுதாமல் எழுதியவர் பற்றிய பேசுவது மட்டும் ஞாயம் ஆகுமா?"

  அவர் நாவலைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே.. பிறகு எப்படி பதில் எழுதுவது?

  ReplyDelete
 12. writer CSKஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார் அதை பற்றி பேசாமல் அவரை பற்றியும் அவர் படைப்பை பற்றியும் பேசுவது என்ன நியாயம்?"

  அவர் நாவலைப்பற்றியோ, பாத்திரப்படைப்புகள் குறித்தோ எதுவும் பேசவில்லை. பேசி இருந்தால் விவாதித்திருக்க முடியும்

  ReplyDelete
 13. Excellent novel... charu is great....

  ReplyDelete
 14. அந்த ஆபாச ஆணாதிக்க சிந்தனை//
  .
  .
  சீரோ டிக்ரியில் இருப்பது என்ன?பக்தி சிந்தனையா?

  ReplyDelete
 15. உங்கள் பாத்தா பாவமா இருக்கு!சி.எஸ் கே ஏன் ஜூனியர் (கல்லூரியில்)அவனை பற்றி எனக்கு தெரியும்!அவனது நண்பர்களுக்கு தெரியும்!அதனால் இந்த வெட்டி வேலையை விட்டுட்டு நீங்க எதுனா உருப்படியா எழுத ட்ரை பண்ணலாம்!

  ReplyDelete
 16. போடா அல்லக்கை முண்டமே!

  ReplyDelete
 17. I second பார்வையாளன்'s view
  - ROhan

  ReplyDelete
 18. ங்கொய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறாருயா.
  -சாவுநிரேதிதா

  ReplyDelete
 19. Exile - Waste of Money and Time

  ReplyDelete
 20. முத்துலட்சுமியின் போராட்டத்திற்கு பின்னர், தமிழகத்தில் தேவதாசிகளே இல்லாமல் போய்விட்டனர். ஹஹஹஹா.

  ReplyDelete
 21. விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று சாருவின் வாசகன் பாடம் எடுக்கவே கூடாது. சாரு இதுவரை எழுதிய விமர்சனங்களில் பெரும்பாலானவை மகா மட்டமான நமைச்சலினால் உருவானவை. தமிழின் முதல் படம் என்று அவரால் புகழப்பட்ட நந்தலாலா மறுவாரமே ‘டப்பிங் படமாகிறது’.உலகக் கவிஞர் எனப் புகழப்பட்டவர் பின்லேடனின் சாவிலிருந்து மீள முடியாமல் தவிப்பதாகக் கண்டுபிடித்துச் சொல்கிறார். தனக்குக் காரியம் சாதித்துக்கொள்வதற்க்காக நாயினும் கீழாக சென்று புகழ்வதும்,காரியம் முடிந்ததும் மகாத்மா ஆகிவிடுவதும் சாருவின் தொழில் தந்திரம்.
  தேகம் வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கையை நாக்கூசாமல் ஆயிரத்துக்கு மேல் எனப் பொய்சொல்லவும், எக்சைலுக்கும் அப்படி கூட்டிச் சொல்லவும் கொஞ்சம் கூட கூச்சவுணர்வே இல்லை. சாருவைப் பொறுத்தவரை ஒரு மகா மட்டமான சூழல்வாதி. டாக்டர் உங்களுக்கு இன்ன நோய் இருப்பதாகக் கூறினால் கோபப் படுவீர்களா என்று கேட்ட சாரு அவரது நோய்மையைச் சுட்டிக்காட்டும் போது மனநோயில் கொதிக்கிறார்.

  ReplyDelete
 22. "டாக்டர் உங்களுக்கு இன்ன நோய் இருப்பதாகக் கூறினால் கோபப் படுவீர்களா என்று கேட்ட சாரு "

  நோயைப் பற்றி எதுவும் சொல்லாமல், நோயாளியை அவதூறு செய்வதைத்தான் தவறு என்கிறோம். எத்தனையோ பேர் விமர்சிக்கிறார்கள். அதை எல்லாம் நான் கண்டிக்கவில்லையே.. இந்த நபர் விமர்சன எல்லையை தாண்டி அவதூறில் இறங்கியதுதான் பிரச்சினை

  ReplyDelete
 23. அருமையான பதிவு. ரசித்து உள்வாங்கினேன். குறிப்பா இந்த இடத்தில் //இது போன்ற அவதூறுகளால் , ஒரு புத்தகத்தின் வெற்றியை தடுக்க முடியாதுதான். ஆனால் அடுத்த தலை முறை படைப்பாளிகளை இது போன்ற அவதூறுகள் பாதிக்கும். இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி எழுதித்தான் ஆக வேண்டுமா என்ற மனச்சோர்வு அடுத்த தலை முறை எழுத்தாளர்களுக்கு வந்தால் , அது தமிழுக்கு நல்லதல்ல. என்ன கஷ்டப்பட்டாலும் , எழுதுக்கொண்டே இருப்பேன் என்ற சாரு போன்றவர்களின் பிடிவாதம் , இனி வரக்கூடியவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே../// வாழ்த்துகள்

  ReplyDelete
 24. மற்றும் ஒரு அவதூறு http://www.maamallan.com/2011/12/blog-post_30.html

  ReplyDelete
 25. உடனே மாமல்லனை திட்டி போடுங்க ஒரு பதிவு

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா