Wednesday, January 23, 2013

விஸ்வரூபத்துக்கு தடை- கண்ணியம் தவறாமல் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்


  ஒரு பெரிய பிரச்சினையை , அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் தடுத்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

  விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் அச்சம் அடைந்தது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. நல்லிணக்கம் , அமைதியை விரும்பும் நடு நிலையாளர்களும் அச்சம் அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த படம் இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ப்டம் பார்த்தவர்களில் ஒருவரான  உயர்திரு .ஜவாஹிருல்லா கூறுகையில் இந்த படம் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறினார்.


  • இஸ்லாமியர்கள் தம் உயிர் என போற்றும் குர் ஆன் , பயங்கரவாதிகளின் கையேடாக சித்திரிக்கப்பட்டுள்ளது
  • சர்வதேச  பயங்கரவாதி முல்லா உமர் , தமிழ் நாட்டில் ஓர் ஆண்டுகள் தங்கி இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.
  • 12 வயதேயான இஸ்லாமிய சிறுவன் ஆயுத அறிவு பெற்றுள்ளதாக காட்டப்பட்டு, சின்ன வயதில் இருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக காட்டப்படுகிறது.
  • மாமன் , மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள் , அமைதியை கெடுத்து விடும். 
  • முழுக்க முழுக்க பிரச்சார நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் வரலாற்ற்றில் இப்படி ஒரு பிரச்சாரப்படம் வ்ந்தது இல்லை

இவ்வாறு அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார்.


இந்த நிலையில்தான் , நடு நிலையாளர்கள் அச்சம் அடைந்தனர். தேவையில்லாமல் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற பீதி ஏற்பட்டது. போராட்டங்கள் , ஊர்வலங்கள் போன்றவற்றால் , அமைதி கெடுவதுடன் , படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுமே என நினைத்தனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் மிகவும் கட்டுப்பாடுடனும் , கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக ஏதும் பேசவில்லை..யாராவது தவறாக பேசினால் , மற்றவர்களுக்கு முன்பு நாங்களே கண்டிப்போம் என கடுமையாக எச்சரித்தனர்.

உயிரைக்கொடுத்தாவது படத்தை தடுப்போம் என அறிவித்த இஸ்லாமிய தலைவர்கள் , வன்முறையை நாடாமல் சட்டத்தை மதித்து செயல்பட்டதில்தான் , தம் முத்திரையை பதித்து விட்டார்கள்.

ஜன நாயக் முறைப்படி எதிர்ப்பை தெரிவித்த கையோடு , கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதன் விளைவாக படத்துக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே , அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.

ஜாதி பலம் , பண பலம் , ஆள் பலம் , சினிமா கவர்ச்சி என அனைத்தையும் மீறி அவர்கள் பெற்றி பெற்றாலும் , அவர்கள் கமலுக்காக பிரார்த்தனை செய்யவே விரும்புகிறார்கள்..

தவறான  எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம் என்பதே அவர்களின் செய்தி.
17 comments:

  1. மிக்க நன்றி ஆனந்த்..புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

    ReplyDelete
  2. அருமையான புரிதல்...

    வலுவான இஸ்லாமிய அமைப்புகள் ஒத்த கருத்தில் இருந்தன... அவர்களுக்கும் நன்றி...


    உங்களுக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  3. //தவறான எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம் என்பதே அவர்களின் செய்தி.//

    சகோ ஆனந்த். சரியான புரிதலே இது. எம் சமூகத்தை இழிவு செய்பவர்களை நாங்களும் இழிவு செய்தால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. ஆனால் அதே நேரம் எங்களை கிள்ளுக்கீரையாகவும் நினைத்து விடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்க விரும்புகிறோம். அதில் மிக ஒற்றுமையாகவும் உள்ளோம். இதற்கென ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த Mr.கமலஹாசனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

    தங்களின் நடுநிலை பதிவுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்,
    தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு ஒரே நாளில் கிடைத்த உடனடி பரிசு இதுதான்..!

    ஒரேநாளில்
    ஒரு கோரிக்கையை ஆரம்பித்து
    ஒரே அலைவரிசையாக
    ஒரே குரலில் எல்லாரும் ஓங்கி ஒலித்து
    ஒற்றுமையாக அனைவரும் கைகோர்த்து நின்றதால்,
    ஒப்பற்ற வெற்றியை சட்டப்படி அடைந்து காட்ட முடிந்து இருக்கிறது..!
    மாஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  5. தக்க சமயத்தில்
    தகுந்த நடவடிக்கையை
    தப்பாது எடுத்த
    தமிழக அரசுக்கு
    தன்மையான நன்றிகள் பல இன்முகத்தோடு
    தனித்துவ 'விஸ்வரூபங்கள்' எடுக்கின்றன.
    Hats off Ms.Jey...!

    ReplyDelete
  6. சகோ.ஆனந்த்,
    பதிவில் ஆழ்ந்த புரிதல்,
    சொற்களில் தெளிந்த கருத்து.
    மத நல்லிணக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!
    உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. You are just wonderful brother !!!

    ReplyDelete
  8. அடிப்படை மனித உரிமை அடியோடு அழிக்கப்பட்டு விட்டது,
    கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது,
    "யாதார்த்த வாதி வெகுசன விரோதி" என்ற நியதி நிரூபிக்கப்பட்டு விட்டது.

    ReplyDelete
  9. சலாம் சகோ !

    உண்மையான நடுநிலை பதிவு..! உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்..!

    விஸ்வரூபம் தடையும் சில மக்களின் மன உணர்வுகளும் :

    இந்நேரத்தில் சில மக்களின் மன உணர்வுகளை இங்கு பார்ப்போம்..விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததற்கு மூன்று தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வரும்..

    ஒன்று இஸ்லாமோபோபியா பிடித்தவர்கள்..நேற்று வரை படமே ஓடாது நீங்கள் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள் என்று எகத்தாளமிட்ட கூட்டம் இன்று ஆதரவாம்..காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு மட்டும் தான் ..அதனால் இவர்களை பற்றி பேச தேவை இல்லை..

    இரண்டாவது ஒரு கூட்டம் நடுநிலை பேசிக்கொண்டு உண்டு..அவர்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் கமலுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கண்டு அவர்மேல் பரிதாபம் கொண்ட கூட்டம்..இவர்கள் பற்றியும் பேச தேவை இல்லை..!

    மூன்றாவது கமல் ரசிகர்கள்..ஆம் இவர்களுக்காக தான் முஸ்லிம்களின் விளக்கம் அமையவேண்டும்..இங்கு இவர்கள் இஸ்லாமியர்கள் மேல் தவறான எண்ணம் கொள்ள வாய்ப்பு உள்ளது ..ஏனெனில் பல பிரச்சனைகளை கடந்து ஒரு வழியாக திரைக்கு வர தயாரான நேரத்தில் இப்படி நடந்திருப்பது அவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்..ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு ! இதற்க்கு முந்தைய ஹே ராம்,உன்னை போல் ஒருவன் படங்களில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியது அவர் அறியாததா..? சினிமா என்பது இன்னைக்கு திட்டம் போட்டு நாளைக்கு முடிப்பது அல்லவே..! பலநாள் திட்டம் போட்டு தான் எடுப்பது..கமலின் மனதில் எவ்வளவு நஞ்சு இருந்திருந்தால் இப்படி ஒரு கேவலமான கதையை கையாண்டிருப்பார்.(என்னென்ன தவறுகள் என்பதை பல தளங்களில் காண முடிகிறது.) ஏற்கனவே துப்பாக்கி எனும் படத்திற்கு எதிர்ப்பு வந்ததே அப்போதே சுதாரித்திருக்க வேண்டாமா..? எல்லாமே கமல் தவறுதான் !

    இங்கு முஸ்லிம்கள் மேல் காட்டம் கொள்வோர் கவனத்திற்கு ,இவ்வளவு நாள் கமல் படத்தை திரையிட்டு அதனால் லாபம் அடைந்தும் இருந்திருக்கலாம்.அப்படி பட்ட திரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..?எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா.? சாதாரண பணம் விசயத்திலேயே கமலின் பங்காளிகள் அவருக்கு வில்லன்களாக ஆன போது , எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை..முஸ்லிம்கள் உணர்வுகளை புண்படுத்த முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டுமா.?

    சினிமா எடுப்பவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் படம் எடுத்து சம்பாதித்து வாழ்ந்துட்டு போகட்டுமே..! யார் கேட்க போகிறார்.? ஆனால் அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்திய உள்ளங்கள் அமைதி அடையவே முடியாது..!

    நன்றி !!

    ReplyDelete
  10. இந்தியாவில் மட்டும் தான் ரிலீஸ் இல்லை. உலகம் முழுக்க நாளைக்கு ரிலீஸ்.
    தமிழனுக்கு திருட்டு dvd ல் விஸ்வரூபம் பார்க்க வேண்டும் என்ற தலைவிதி என்ன செய்வது.
    நான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.
    வந்து கதை சொல்கின்றேன்
    அமேரிக்கா, கனடாவில் ரிலீஸ்

    ReplyDelete
  11. மனநோயாளி எங்கே எனது பின்னூட்டம்
    மனநோயாளி எங்கே எனது பின்னூட்டம்
    மனநோயாளி எங்கே எனது பின்னூட்டம்
    மனநோயாளி எங்கே எனது பின்னூட்டம்

    ReplyDelete
  12. முஸ்லிம்களின் முயற்சிக்கு கிடைத்தா விஸ்வரூப வெற்றி?

    ReplyDelete
  13. முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

    இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"

    போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.

    உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.

    இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை.

    தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள்.

    ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)
    இப்போது விசயத்துக்கு வருவோம்.
    விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
    இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.
    அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.

    சொடுக்கி படிக்கவும் >>>>> முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
    .

    ReplyDelete
  14. Great, keep it up. Hope u all seen how forign hostages getting killed in TV and what they do just before that ... enjoy

    ReplyDelete
  15. http://www.tamilleader.in/Content.aspx?ArticleId=3233&CategoryId=3#.UQIggPLm7EQ

    ReplyDelete
  16. I am just out of the movie. Hope you know the Vadivelu's 1st movie song :)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா