Friday, October 11, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - அண்ணா காலத்து வெர்ஷன்


  நான் அண்ணா அவர்களின் எழுத்துகளுக்கு தீவிர ரசிகன்.. அவர் எழுதிய பெரும்பாலான நூல்களை படித்து இருக்கிறேன். அவற்றில் இருக்கும் தமிழ் ஆளுமை, விஷய ஞானம் , வாதத்திறமை நம்மை அசர வைக்கும். எதிர் கட்சியினரை அரசியல் காரணங்களுக்காக திட்டினாலும், தனிப்பட்ட


முறையில் அவரது பண்பாட்டை பல
ர் பதிவு செய்து இருக்கின்றனர்.

அந்த அளவுக்கு ரசிகனாக இருந்தாலும், அவர் படங்களை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை... அன்பே சிவம் படம் வரை பயன்படுத்தப்பட்டு வரும் டெம்ப்ளேட்- ஜமீந்தார் மகளை ஏழை காதலித்து , சமூக மாற்றத்துக்காக பாடுபடும் யுக்தி- எனக்கு அலுத்துப்போய் விட்டதே காரணம்.

இந்த நிலையில் ஓர் இரவு படம் தமிழ் ஸ்டுடியோ சார்பில் திரையிடப்பட்டபோது எனக்கு படம் பார்க்க ஆர்வம் இல்லை. ஆனால் அண்ணா வசனத்தை ரசித்து விட்டு வரலாம் என்பதற்காக படம் பார்க்க சென்றேன்.

சென்றவனுக்கு படம் இனிமையா அதிர்ச்சியை அளித்தது..திராவிட இயக்க கொள்கைகளை விட்டுக்கொடுக்காத படம் என்றாலும் , இது பிரச்சாரப்படம் அல்ல. ஒரு நல்ல எண்டர்டெய்னர்....சமூக கருத்துகளை விட்டு விடாத எண்டர்டெய்னர்..

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் பாணியில் ஒரே இரவில் நடப்பதாக அண்ணா படைத்த கதை இது.

 நள்ளிரவு நேரம். ஓநாய் ஒன்று ஒரு வீட்டுக்கு வேட்டையாட திருட்டுத்தனமாக வருகிறது. வந்த இடத்தில் அதற்கு சில விஷயங்கள் தெரிய வருகின்றன. அந்த வீட்டில் இருக்கும் ஆடுகளை ஒரு புலி வேட்டையாடத்துடிப்பது தெரிய வருகிறது.. அந்த புலிக்கும் அந்த ஆடுகளுக்கும் இருக்கும் சம்பந்தம்.. ஒனாய்க்கும் அந்த ஆடுகளுக்கும் இருக்கும் உறவு. ஓநாயாக மாறிய காரணம் என்பதெல்லாம் அழகு தமிழில் சொல்லப்படுகின்றன.

கதை நடப்பது ஒரே இரவில்...மற்ற சம்பவங்கள் எல்லாம் ஃப்ளாஷ்பேக்கில் வருவதாக அண்ணா திட்டம் இட்டு  இருந்தார்.
அதை அப்படியே எடுத்து இருந்தால் , உலகப்பட வரிசையில் இடம் பெற்று இருக்கும். ஆனால் அந்த கால ரசிகர்களுக்கு அது செட் ஆகாது என நினைத்து திரைக்கதையை மாற்றி விட்டார்கள். ஃப்ள்ஷ் பேக் குறைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சிகள் லீனியராக சொல்லப்படுகின்றன... அந்த இரவுக்காட்சி கடைசியில் வருகிறது..

கருணாகரன் என்ற பணக்காரர் சொர்ணம் என்ற ஏழைப்பெண்ணை காதலிக்கிறார். ஆனால் ஜாதி பிரச்சனையால் அவளை திருமணம் செய்ய முடியவில்லை. கர்ப்பம் ஆக்கி விட்டு கைவிட்டு விட்டு , இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

காலங்கள் ஓடுகின்றன.. அவர் மனைவி இறந்து விட்டு , தன் மகளை இவரே வளர்த்து ஆளாக்குகிறார். அவள் டாக்டர் ஒருவனை காதலிக்கிறாள்.

கருணாகரனை வில்லன் ( பாலையா ) என்னவோ சொல்லி ப்ளாக் மெயில் செய்து பணம் பறிக்கிறான். ஒரு கட்டத்தில் அவரது மகளையே கேட்கிறான்.

டாக்டரை அழைத்து பிளாஷ்பேக் சொல்லி அவனை விலகிக்கொள்ள சொல்கிறார். தன் மனைவி எப்படி இறந்தாள் , அவன் ஏன் மிரட்டுகிறான் என்பதை எல்லாம் சொல்கிறார்.

அப்போதுதான் இரவுக்காட்சி வருகிறது.. தன் அன்னையின் உயிரைக்காப்பாற்ற தேவையான பணம் சம்பாதிக்க திருடும் பொருட்டு , அந்த வீட்டுக்கு வருகிறான் ஒரு திருடன்.. அங்கே தற்கொலைக்கு தயாராகும் பெண்ணை பார்க்கிறான். அவளுக்கு உதவுகிறான். அப்போது அங்கு வரும் டாக்டர் காதலன் இதைப்பார்த்து சந்தேகம் அடைகிறான்.

கடைசியில் அந்த திருடன், சொர்ணா+ கருணாகரனின் மகன் என்பது தெரிய வருகிறது... அந்த திருடனும் , டாக்டரும் கை கோர்த்து வில்லனை வீழ்த்துகின்றனர்..

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் ஏராளம்.

வில்லனை ( பாலையா) மணக்க விரும்பாத கதா நாயகி (லலிதா ), திருடனிடம் ( கே ஆர் ராமசாமி_ உதவி கேட்கிறாள்..சற்று நேரத்தில் அந்த வில்லன் வருவான்..அப்போது அந்த திருடன் காதல் மொழி பேசி ரகசிய காதலன் போல நடிக்க வேண்டும். வருபவன் டென்ஷன் ஆனால் , அவனை அடித்து துரத்த வேண்டும் , அவளது போலியான எதிர்ப்பை மீறி என்பது அவள் திட்டம். திருடன் ஒப்புக்கொள்கிறான்.

யாரோ வரும் சத்தம் கேட்டு காதல் மொழி பேச ஆரம்பிக்கிறான்..ஒரு ட்விஸ்ட்,,, வந்தவன் வில்லன் அல்ல...டாக்டர் காதலன்.( நாகேஸ்வர ராவ்) . அதற்கு பின் நடக்கும் கலாட்டாக்களை நீங்களே யூகிக்க முடியும்..

ஆனால் இப்படி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக ஆக்கி விடாமல், சமூக கருத்துகளை ஆங்காங்கு சொல்லி இருப்பது அண்ணாவின் மேதமை...

துன்பம் நேர்கையில் , அய்யா சாமி அய்யா வாய்யா, ராய்யா, யூ கம் ஐயாஎன்ற இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றன.. ஒன்றுக்கு இரண்டு காமெடியன்கள்... புண்படுத்தாத காமெடி..’

ஆரம்ப காட்சியில் வரும் சரோஜா செம அழகு...

குற்றவாளி யார்? சத்திய சோதனை என ஆங்காங்கு புத்தகங்கள் மூலம் காட்சியை விளக்குவது அழகு,


இயக்கம் ப நீலகண்டன்.

அண்ணா ஒரே இரவில் வசனங்கள் எழுதினாராம்...சோ ஸ்வீட்


மாளிகை வேண்டாம், மாட்டுக் கொட்டகை போதும்.
பட்டுப் பீதாம்பரம் வேண்டாம்; கட்டத் துணி இருந்தால் போதும்.
ஆபரணங்கள் வேண்டாம்; அன்பு காட்டினால் போதும்.

ஆம்..அவளுக்கு துரோகம் செய்தேன்..அப்போதும் என் பெயர் ”கருணா”கரன் தான்..

அவனைக்கொள்ள ஆயுதன் எதற்கு , ( கைகளை சுட்டிக்காட்டி ) இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிளே போதுமே

லா பாயிண்ட் பேசறத விட்டுட்டு , லவ் பாயிண்ட்  பேசிப்பாருங்க...


இப்படி படம் முழுக்க ரசிக்கலாம்... படம் முழுக்க பின்னணி இசை இருப்பதை நாம் சிலாகிக்கிறோம்.  இப்படி செய்து செய்து தமிழ் படங்களில் யாதர்த்தமான ஒலிகளே இல்லாமல் போய் விட்டது.

இந்த படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பின்னணி இசை உள்ளது..

ஓர் இரவு - ஒரே ஒரு முறையேனும் பார்த்தே ஆக வேண்டிய படம்

5 comments:

  1. இந்தப் படத்தை நான் டிவி யில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே எனக்கு பிடித்திருந்தது. பராசக்திக்கு(52) முன்பே ஒரு சமூக கதைக்களத்தை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட படம் இது(51). பெரும்பான்மையான கருப்பு வெள்ளை படங்களில் பின்னணி இசை தேவையான இடங்களில் மட்டுமே இருக்கும்.அதன் பிறகு ஹிந்திப் படங்களின் பாதிப்பில் எல்லா வாத்தியங்களும் எல்லா காட்சிகளிலும் அலற ஆரம்பித்தன. இந்த டிரெண்ட் இன்றுவரை நீடிக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இரவுக்கே உரித்தான சப்தங்களை இளையராஜாவின் வயலின் விழுங்கிவிட்டது என்ற உங்கள் கருத்துக்கு அப்போதே ஒரு சபாஷ் போட எண்ணியிருந்தேன். சரியான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மை... நான் கருப்பு வெள்ளை படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை.. இனி தேடி தேடி பார்க்க இருக்கிறேன்

      Delete
  2. மிக அருமையான பதிவு. அண்ணாதுரை மிகச் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், கதாசிரியர், வசன கர்த்தா, அரசியல்வாதி, பேராசிரியர் சொல்லிக் கொண்டே போகலாம். அவரது சாயலைப் பின்பற்றியே கருணாநிதியும், பெயரைச் சொல்லியே எம்ஜிஆரும் அரசியலில் ஜெயிக்க முடிந்தது. அண்ணாவின் ஓர் இரவு நாடகம் பல மேடை கண்ட உன்னத நாடகம். திரையில் சில மாற்றம் கண்டு வெளியானது. நவீன உலகத் தரத்திலான படைப்பின் அம்சத்தை ஓர் இரவு உள்ளடக்கியிருந்தது. இத் திரைப்படம் வெளியான ஆண்டு 1951. நம்ப முடிகின்றதா!

    இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டுத்தான், "தமிழ்நாட்டு பெர்னாட்ஷா" என்று அண்ணாவை "கல்கி" புகழ்ந்தார். "ஓர் இரவு" படத்துக்கு ஒரே இரவில் 300 பக்க வசனம்! அண்ணா எழுதிக் கொடுத்தார். நாடகம் பெற்ற வெற்றி போல படம் ஓடவில்லை, காரணம் ஏவிஎம் நிறுவனம் கதையில் செய்த மாற்றங்களே. இன்று இப் படத்தை அதன் நாடக கதைப் பாங்கிலே ரீமேக்கினால் கூட வெற்றியடையக் கூடும்.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள்.. கல்கியின் பாராட்டு கொஞ்சம் ஓவரோ என்றுதான் நினைத்து வந்தேன்... ஆனால் படம் பார்த்த பின்புதான் அண்ணா அவர்கள் அந்த புகழ்ச்சிக்கு முற்றிலும் தகுதியானவர் என்பது புரிந்தது... நீங்கள் சொல்வது போல அண்ணாவின் கதையை அவர் கதை பாங்கிலேயே இன்றும் படம் எடுக்கலாம்...

      Delete
  3. தயவு செய்து நீங்க படம் பற்றி விமர்சனம் எதுவும் எழுதாதிர்கள்.உங்களுக்கு சினிமா சம்பந்த்தமான எந்த்த அறிவும் சத்தியமாக தெறிய போறது இல்லை... நீங்கள்ளாம் படம் பாத்துட்டு அந்த கதைய மட்டும் சொல்லிட்டு போங்க. தயவு செய்து படம் பற்றி விமர்சனம் எழுதாதிர்கள்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா