Friday, October 18, 2013

காலம் கடந்து நிற்கும் ஒரு கலைஞனின் உன்னத திரைப்படம்


 எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். அவற்றில் சில படங்களை நம்மால் என்றும் மறக்க முடியாது.. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.

ரசிக்க கற்க இந்த படத்தில் ஏராளமான விஷயங்கள் உண்டு.






இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ முக்கியமான நூறு படங்களை திரையிடும் செய்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தது.. ஆர்வமாக திரையிடப்படும் பட்டியலை பார்த்தேன்.

அந்த பட்டியலில் நான் பார்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை குறித்து வைத்தேன். தவிர்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இட்டேன். அப்படி சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இடப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.
இதை தவிர்க்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள். படத்தலைப்பு சோகப்படம் என்று சொல்கிறது. பழைய கால சோகப்படம் என்றால் நம் மனதில் ஒரு பிம்பம் எழுமே.. சோகமயமான பாடல்கள் , அழுது வடியும் கதாபாத்திரங்கள் , நீள நீளமான வசனங்கள் என்ற டெம்ப்ளேட்டை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்.
இன்னொரு காரணம் படத்தின் நாயகன் நாகையா. இவரைப்பற்றி அந்த காலத்தில் என் சித்தப்பா ஒருவர்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவர் பெயர்தாண்டா நாகையா.. எல்லா படத்திலும் வருவார். ரத்தம் கக்கி இருமி இருமி சாவார்.. என்றார். அவர் சொன்னது போலவே , நான் பார்த்த எல்லா படங்களிலும் கொஞ்ச நேரம் வந்து , இருமி விட்டு இறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். முழு படத்திலும் இருமிக்கொண்டு இருக்கப்போகிறாரா என்ற சந்தேகம் இந்த படத்துக்கு அல்ல...இந்த படம் திரையிடப்படும் கோடம்பாக்கம் இருக்கும் திசைக்கே போகக்கூடாது என்று எண்ண வைத்தது.
இந்த எண்ணத்தை மாற்றி அமைத்தது சில நாட்களுக்கு முன் பார்த்த மர்ம யோகி திரைப்படம். இயக்கம் கே ராம்னாத்... ஆங்கிலப்படம் போல எடுத்து இருப்பார். செருக்களத்தூர் சாமாவின் நடிப்பும் அந்த படத்தில் இயல்பாக இருந்தது. எனவே ரிஸ்க் எடுக்க துணிந்தேன்.



2 comments:

  1. நண்பரே,
    அவனவன் இன்று காலை பத்து மணிக்கு பார்த்த படத்துக்கு பதினோரு மணிக்கே விமர்சனம் எழுதும் யுகத்தில் நீங்கள் 1950 இல் வந்த ஒரு படத்தை இவ்வளவு விரிவாக சிலாகித்து அலசியிருப்பது பாராட்டுக்குரியது. கருப்பு வெள்ளை படங்களை விரும்பிப் பார்ப்பதே ஒரு அனுபவம்தான். நம்மிடம் அந்த காலத்திலேயே பல மேதைகள் இருந்ததை இப்போது பலர் வாய்ப்புகள் இருந்தும் அறிவதில்லை. இந்தப் படத்தை நான் முழுவதும் பார்த்ததில்லை. என் தந்தை இந்தப் படத்தை பார்க்கும் படி என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. இப்போதுதான் புரிகிறது ஏனென்று. 50, 51 இல் தமிழில் சமூக கதைக்களம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தன. 52 இல் பராசக்தி என்ற வசனங்கள் ஆட்சி செய்த படம் வந்ததும் இயல்பான படங்கள் வருவது தடை பட்டுப் போனது ஒரு துரதிஷ்டமே. பராசக்தியின் வெற்றி நாடகத்தனமான படங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது என்பது உண்மை. இதே போல 54 இல் வந்த அந்த நாள் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். தமிழ் சினிமாவின் மைல் கல் அந்தப் படம்.
    இசையைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது சரியானது. தேவையான இடங்களில் இசை இருக்கும் வண்ணமே அப்போது படங்கள் வந்தனஅவனா இவன் என்ற எஸ் பாலச்சந்தர் படத்தின் சிறப்பே அதன் அபாரமான பின்னணி இசைதான். இது தெரியாத ஒரு கூட்டம் இசை என்றால் இவர்தான் அவர்தான் என்று இணையத்தில் கும்மியடித்துக்கொண்டிருக்கிறது. ரசித்துப் படித்தேன். மீண்டும் எழுதவும் பல பழைய படங்களைப் பற்றி.

    ReplyDelete
  2. உங்கள் தந்தை சொன்னபோதே பார்த்து இருந்தால் , அவர் இன்னும் அதிகமான விஷ்யங்களை உங்களுக்கு சொல்லி இருப்பார்.மிஸ் செய்து விட்டீர்கள்... வசனம் , இசை குறித்த உங்கள் கருத்துகளுட்ன் முழுக்க உடன்படுகிறேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா