Tuesday, January 12, 2016

கவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்


பெண் எழுத்தாளர்கள் கதை பொதுவாக இரு துருவங்களில் ஒன்றில் இருக்கும்..பெண்ணியம் , புரட்சி என்ற துருவம் ஒன்று..குடும்பக்கதை என்ற துருவம் மற்றொன்று... அதுவும் இல்லாவிட்டால் ஆண் எழுத்தாளர்களை ஃபேக் செய்ய முனையும் கதைகள் இன்னொரு வகை..

கவிதா சொர்ணவல்லியை பொருத்தவரை அவர் சில கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்... எனவே அவர் கதைகள் ஏதேனும் இசங்கள் சார்ந்தோ , பெண் விடுதலை சார்ந்தோ இருக்கும் என நினைத்தேன்.. அப்படி எழுதும் ஆழ்ந்த அறிவும் தகுதியும் கொண்டவர் அவர் என்பதால் அப்படிப்பட்ட கதைகளை எதிர்பார்த்தே அவரது பொசல் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்...இனிய ஏமாற்றம்.. அழகு தமிழில் , இனிய நடையில் , பொதுவான மனித உணர்வுகளைப்பேசும் கதைகள் அவை....

ஒரு  மழைக்கால பேருந்து பயணத்தில்  படித்த அந்த தொகுப்பு மழை அனுபவத்தை மேலும் ரசனை மிக்கதாக மாற்றியது


ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒரு விதம்


காதல் கடந்த ஈர்ப்பை கூறும்  நான் அவன் அது  , கிராமத்து கடவுள்களை பற்றிகூறும் விலகிபோகும் கடவுள்கள் , இந்த தொகுப்பில் பலரது ஃபேவரைட் கதையான கதவின் வெளியே மற்றொரு காதல் , தாய் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் அம்மாவின் பெயர் , காதலின் கதகதப்பை உணர வைக்கும் எங்கிருந்தோ வந்தான் ,  நவீன வாழ்வியல் சூழலில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் காதலை சொல்லும் மழையானவன் , சற்றே பூடகமான கதை அம்சம் கொண்ட யட்சி ஆட்டம் , இலக்கிய ரீதியாக கச்சிதமான எழுத்து நடையைக்கொண்ட பச்சை பாம்புக்காரி , அமானுஷ்யமாக தொடங்கி நெகிழ்ச்சியாக முடியும் டிசம்பர் பூ என ஒவ்வொரு கதையும் மனதில் தென்றலின் குளுமையை வீசிச்செல்கிறது

கதையின் கடைசி வரிகளை அழுத்தமாக அமைப்பது , கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் அறிமுகம் செய்வது , கதையின் மன நிலையை ஆரம்பத்திலேயே மனதில் கொண்டு வருவது , இனிமையான நடை என பாசிட்டிவாக பல விஷ்யங்களை சொல்லலாம்..

ஆனால் குறிப்பிட்ட சூழலில் நடக்கும் கதையில் இன்னும் அதிகமான வட்டார சொற்கள் இடம்பெற்றிருக்கலாம்.. பொது தமிழில் இருப்பது சராசரி வாசகனுக்கு வசதிதான் என்றாலும் , யதார்த்த சூழல் சற்று குறைவதாக தோன்றுகிறது

 கிராமத்து சூழலில் கொஞ்சம் குறை இருந்தாலும் மாடர்ன் சூழலை , தற்கால பெண்ணின் மொழியை கண் முன் நிறுத்துவதில் சற்றும் குறை வைக்கவில்லை

வேறு ஏதாவது சொல்லணுமா என்றான்..

  நீண்ட நாட்களாக நீ கேட்ட  உன் மீதான என்  காதல் பற்றிய கவிதை என் கையில் இருக்கிறது..அதில் உனக்கு பிடித்த போன்சாய் செடிகூட இருக்கிறது என சொல்ல நினைத்து , எதுவும் இல்லை என சொல்லி சிரித்தேன் என்பதில் அந்த உணர்வை துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்...  அவனது தேவ தூத இறகுகள் நீண்டுதான் இருந்தன.. ஆனால் அதன் பட்டு நூல் அறுந்திருந்தது என பொயட்டிக்காக சொல்ல முடிந்திருப்பது அருமை ( எங்கிருந்தோ வந்தான் )

காதல் என்பது எதிர்பார்ப்பற்றது,, நிபந்தனை அற்றது என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... ஆனால் பெண் அப்படி எளிதாக காதல் வயப்பட்டு விட முடியாது.. காதலை பிரகடனப்படுத்தவும் மூடாது,,,உதாரணமாக ஆட்டோகிராப் படம்போல ஒரு பெண் தன் காதல்களை சொல்லிவிட முடியாது... இதை அழகாக அலசி இருக்கும் கதை கதவின் வெளியே மற்றொரு காதல்... ஒருவருடன் பிரச்சனை வந்தால்தான் இன்னொருவருடன் காதல் வரும் என்பது இல்லை... உண்மையில் வெறுப்பு நிறைந்த இதயத்தில் காதல் வரவே வராது... காதல் நிரம்பிய இதயத்தில் காதல் பூத்துக்குலுங்குவதை யாரும் தடுக்க இயலாது என சொல்லும் இந்த கதை ஒரு பெண்ணின் மனதை துல்ல்லியமாக பிரதிபலிக்கும் தமிழ் சிறுகதைகளில் முக்கியமான கதைகளில் ஒன்று

பேசுபொருள் சார்ந்து எனக்கு பிடித்த கதை இது..ஆனால் சொல்லப்பட்ட விதம் காரணமாக எனக்கு பிடித்த கதை பச்சைபாம்புக்காரி

தன் அப்பாச்சியின் சமையல் சுவைக்கு காரணம் அருவாள் மனைதான் என நினைத்து சிறுமியாக இருக்கும்போதே அதைகேட்கிறாள் நாயகி...கைப்பக்குவத்துக்கு காரணம் பச்சைப்பாம்பை கைகளால் உருவதுதான் என்கிறாள் அப்பாச்சி... இதெல்லாம் கிராமத்து நம்பிக்கை என நினைக்கிறோம்.. ஆனால் கடைசியில் அருவா மனை , பச்சைப்பாம்பு ஆகியவை வேறொரு பொருள் கொள்ளும்போது அவை பிரமாண்டம் ஆகின்றன...  பெண்களால் வழிவழியாக காப்பாற்றப்படும் வாஞ்சை  கண் முன் தோற்றம் கொள்கின்றன

அன்பு என்பது வெகுளித்தனமானது..ஆனால் நாம் அதற்கு வெவ்வெறு பெயர்கள் வைத்துள்ளோம்... உண்மையான அன்பு தீங்கு செய்யாது.. அன்பு எதிர்பார்ப்பற்றது....இதை சொல்லும் அற்புதமான கதை நான் , அவன் , அது...


ஆனால் இதையெல்லாம் மீறி பாட்ஷா டைப் கதைதான் அம்மாவின் பெயர்.. அம்மாவின் பெயர் என்னவென்றே தெரியாத ஒரு மகள்... அவள் பெயர் தெரியும்போது எப்பேற்பட்ட பெண்மணி என பிரமித்துப்போகிறாள்... தன் சுயத்தை மறைத்து , சுயத்தை இழந்து வாழும் நம் ஊர் பெண்களை டிராமட்டிக்காக கண் முன் நிறுத்தும் இந்த அம்மாவின் பெயரையே தலைப்பாக வைத்தது மிகவும் பொருத்தமானது... கடைசி வரிகள் மிகவும் அருமை

இதைவிட இன்னொரு கதை எழுதி விட முடியாது என நினைக்கும்போது கடைசியாக ஒரு கதை...  அது தாய் மீது மகள் கொண்ட அன்பு என்றால் இது தாய் மீது மகன் கொண்ட வாஞ்சை...தாய் மகள் அன்பை ஓர் ஆண் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்...ஆனால் மகன் தாய் அன்பை ஒரு பெண் புரிந்துகொள்ள முடியும் என்ற சப் டெக்ஸ்ட் பலரால் மிஸ் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்..



என்ன ஏன் சாக விட்ட” அப்படின்னுதான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அத அவங்க கேக்றதுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன்” என்றான். “கேட்டா என்ன செய்வே” என்றேன் ‘சத்தியமா என் கிட்ட பதில் இல்ல” என்றான் தடவிய டிசம்பர் செடியின் குட்டி முள் கிழித்து என் விரலில் ரத்தம் வடிந்ததை நான் கிருஷ்ணாவிடம் சொல்லி கொள்ளவில்லை.



-----------------------------------------------------

இந்த கதை குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்...



- நண்பா...பொசல் தொகுப்பு எப்படி இருந்துச்சு


வாசித்தேன் நல்லாருந்திச்சி


எந்த அம்சம் உடனடியா ஈர்த்துச்சு


கதைகள் அனைத்தும் first person ல் சொல்லியது பிடித்திருந்தது

உங்க ஃபேவரைட் எது

அவன் அவள் அது. Is really good.

லவ்லி


அம்மா பெயர் is also nice

யட்சி கதை பிடித்திருந்தது


இன்னொரு காதல் கதை என் ஃபேவரைட்..பெண் மனதை துல்லியமா பிரதிபலித்தது...சரி,,,இந்த கதைகளின் மைனஸ் என்ன 



இன்னும் இண்டென்ஸா எழுதிருக்கலாம் still it's good..வட்டார சொற்கள் இன்னும் அதிகம் வந்திருக்கலாம்



ஒருவருடன் காதலில் இருக்கும்போது , இன்னொருவர் மேலும் நேசம் வரலாம் என்று ஒரு பெண் பார்வையிலான கதை எப்படி இருந்துச்சு




அது தீம் நல்லாருக்கு, இன்னும் உள்ளே போயிருக்கலாமோ ந்னு தோனிச்சி.

சூப்பர்...ஆனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு

எனக்கு பிடித்தது நான் அவன் அது..ஆனா தலைப்பு தான் ஏதோ மலையாள படம் போல இருக்கு

ஹாஹா


 incest லவ்

Attraction.

Infatuation

ந்னு எதுவும் புரியாமல் இருக்கும் attraction




நெறய ஆங்கில வார்த்தைகள் வருதே, அது ஒகேவா. எனக்கு பிடித்திருந்தது.

ஆங்கில வார்த்தைகள் இந்த கதை மாந்தருக்கு பொருத்தமாகவே இருந்தது


Yes agreed I liked it too

ஒரு மாடர்ன் பெண் தூய தமிழில் யோசிப்பதாக எழுதினால் செயற்கையாக இருக்கும்


அம்மாவின் பெயர் மனதில் நிற்கும் கதை

அம்மாவை ஓர் ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிய வைத்தது


யட்சி கதை , மாடனும் மோட்சத்தில் வரும் ஒரு கதை போல இருந்தது

யெஸ் just realised that. ஒரு மகன் அம்மா மீது என்னிக்கும் பொறாமை படமாட்டான்ல

எக்சாக்ட்லி


எனக்கு இந்த இடத்தில் அட்லிஸ்ட் இரண்டு observable act சொல்லிருந்தா அந்த இண்டென்ஸ் வந்திரிக்குமோ?

How does that Jeslouse operate

என் மகளுக்கும் என் மனைவிக்கும் என்னை குறித்து ஒரு போட்டி உண்டு




ஒருத்திய குட் ந்னு மகளுக்கு பிடிக்காது . ஏன் காரில் நானும்மனைவியும் பேசினால் கூட மூக்கை நுழைத்து நானும் அம்மா வுக்கு ஈக்வல்னு நிறுவ முயற்சி செய்வாள்


ஆமா... அது இயல்பானது


இது போல ஏதாச்சும் ....எனி ஹவ் கதையின் தீம் அது இல்ல.

தாய்க்கு ஈக்வல் என மகள் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கள் உண்டு... மகளுக்கு ஈக்வல் என் தாய் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கலும் உண்டு


யெஸ் யெஸ்

இதைத்தாண்டியும் அவர்களுக்குள் வாஞ்சை இருக்கிறது என்பதே அவர்கள் உறவை மிகவும் இண்டென்ஸ் ஆக்குகிறது..


யெஸ்

Jealousy need Not be negative or destructive

யெஸ்ஸ்ஸ்ஸ்


It's a unavoidable feel resulting in comparison

ஆமா... தேவதச்சன் வரிகள் நினைவுக்கு வருகின்றன

உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

Wednesday, December 30, 2015

இசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு

கவிஞர் மேத்தாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு ஆழமாக அமைந்திருந்தது.. ஆனால் ஊடகங்கள் உரிய கவனம் கொடுக்கவில்லை..

அவர் பேசியதாவது

 நான் தனிமையில் வாழ விரும்புவவன்.. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சிக்குகூட வர வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் நான் வராவிட்டால் , விருதே வேண்டாம் என மேத்தா உறுதியாக இருந்ததால் , வந்துள்ளேன்..

படங்கள் பார்ப்பதும் இல்லை.புத்தகங்கள் படிப்பதும் இல்லை.  என் கண்ணில் குறைகள் மட்டுமே படும்.. அதை சொன்னால் வருத்தங்கள் ஏற்படும். எனவேதான் இந்த முடிவு.

கற்றதினால் ஆய பயன் என இறைவனை வணங்குவதையே குறள் சொல்கிறது... ஏன் கற்றவனுக்கு சொல்கிறது... கொஞ்சம் படித்து பெரிய ஆள் ஆகி விட்டால் பழசை மறந்து விடுவார்கள்.. கடவுளையும் மறந்து விடுவார்கள்... ஆனால் படிக்காதவன் அவன்பாட்டுக்கு தன் வேலையை செய்தபடி இறைவனை வணங்கிக்கொண்டு இருப்பார்.. படிக்காதவனே மேல் என்பதே இந்த குறள்

அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனை குறிக்கிறது.. ஒலிதான் அனைத்துக்கும் ஆதாரம். அதுதான் இசையாக வெளிப்படுகிறது..

சிந்தனை ஒருபோதும் தெளிவுக்கு அழைத்து செல்லாது. குழப்பம் என்பது சிந்தனையின் ஒரு வடிவம். சிந்தனையற்ற நிலைதான் தெளிவு,

இசையிலும் இறைவன் சன்னிதானத்திலும் சிந்தனை நின்று விடுகிறது...

'இசையின் பயனே இறைவன்தான்' என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்

Tuesday, December 29, 2015

பொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை

ஜெயகாந்தனின் சற்று பெரிய சிறுகதையான கரிக்கோடுகள் தனி நூலாக வந்துள்ளது..இபப்டி சிறு நூல்கள் வருவது ஆரோக்கியமானது...

மூன்று பிரதான பாத்திரங்கள்.. இரு வேலைக்காரர்கள்.. இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு ஃபீல் குட் சிறுகதை இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு நிறைவு ஏற்படும்.

இந்த கதையில் ஒரு காட்சி... இலக்கியவாதியின் கணவனுக்கு , குடும்ப நண்பர் ஒரு கடிதம் எழுதுகிறார்.. ”அவள் எழுத்து தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகிறது..அவளை நிறுத்தினால் நல்லது என்பது என் கருத்து... என் கருத்தையும் நீங்களும் அறியும்பொருட்டு உங்களுக்கு எழுதுகிறேன் ”
இதை படித்த கணவன் , அவள் எழுதவேண்டாம் என தான் நினைப்பதாக சொல்கிறார்.. அவள் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விடுகிறாள்
அவள் தன்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை.. நண்பன் சொன்னதாக சொல்லி அவன் பெயரை கெடுக்க கூடாது என நினைக்கிறான் கணவன்.. தான் சொன்னதாகவே சொல்லி இருக்கலாமே என நினைக்கிறார் நண்பர்...
நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான பிரச்சனை ஒரு சுவை என்றால் , நல்லவர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் சிக்கலானது..
இதை கையாள்வதில் வல்லுனர் ஜெயகாந்தன்

இதில் வரும் பாத்திரங்கள் அனைத்துக்கும் வயது ஐம்பது பிளஸ்.. ஆனாலும் கதை முழுதும் இளமை கொண்ட்டாட்டம்...

ஓய் மாதவராவ்.. நீர் காதலித்திருக்கிறீரா என கேட்டேன்
இல்லை .. நீங்கள் கேட்கிற அர்த்த்ததில் காதலித்தது இல்லை என்றான்
அவன் சொன்ன தோரணை நான் என்ன பொருளில் கேட்கிறேன் என்பதை பிசிறில்லாமல் புரிந்து கொண்ட தெளிவுடன் ஒலித்தது

சில வெள்ளைக்கோடுகளும் கறுப்புக்கோடுகளும் மனிதனை இளமையாகவும் காட்டும் , முதுமையாகவும் காட்டும். கோடுகளை எங்கே வரைகிறோம் என்பதை பொருத்தது அது

காலம் வரைகிற கரிக்கோடுகளை மாற்ற முடியாது. மனிதன் வரைகிற கோடுகளை மாற்றலாம்

ஓர் போட்டோகிராஃபர். அவரது மனைவி இலக்கியவாதி. அவளது இலக்கிய தீவிரத்தை ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதால் அவள் எழுதுவதை சற்று நிறுத்த வேண்டும் என அவரது நண்பர் ஆலோசனை சொல்கிறார்..இதன் விளைவாக மனைவி பிரிந்து போய் விடுகிறாள்.. கடைசியில் மனம் மாறி தான் கோபமாக எழுதிய கடிதத்தின் கோபமான வரிகளை கரிக்கோடுகளால் அழித்து விடுகிறாள்..

கரிக்கோடு கதையின் ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் எடுப்பது இந்த கதையின் சிறப்பம்சம்,

ஆழமான கரு , அதிர்ச்சியூட்டும் கிளைமேக்ஸ் என்றில்லாமல் ஒருவர் கோணத்தில் எழுதப்பட்ட சுகமான நடையில் எளிமையான கதை.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் எழுத வந்தவர்கள் , ஜர்னலிசம் எனும் கிருமியால் அழிந்து விடுகின்றனர் என முன்னுரையில் சொல்லும் ஜெகே , அந்த கோபத்தை கதை முழுதும் பரவ விட்டுள்ளார்.. நிருபர்கள் அடிக்கடி வாங்கி கட்டிக்கொள்ளும் சம கால சூழலில் இந்த கதை பொருத்தமாக இருக்கிறது..

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்..

வெளியீடு - மீனாட்சி புத்தக நிலையம்

விலை  ரூ 30

Wednesday, December 23, 2015

24-12-2015 இசை - சென்னையில் இன்று

24-12-2015 இசை நிகழ்ச்சிகள் பின்வருமாறு’’


பிரம்ம ஞான சபா

1 மதியம்  - வம்ஷி கிருஷ்ணன் பாடல்

2-15             - கோகுலகிருஷ்ணன்  பாடல்

4 மாலை   - அக்கரை சகோதரிகள்  பாடல்

7                    -  கௌரி ராம நாராயணன்  நடனம்


லக்‌ஷ்மண் ஸ்ருதி

காலை  9    - ரித்விக் ராஜா   பாடல்

10.30             - ப்ரசன்னா - கிட்டார்

மதியம் 1   - மீனாக்‌ஷி  ராகவன் - பரதம்

2.45             - ரேவதி க்ருஷ்ணா   - வீணை

4.45             - சௌம்யா  - பாடல்

7.30             - விஜய் பிரகாஷ் பாடல்



முத்ரா

மாலை 6.15     கத்ரி கோபால் நாத் சாக்சபோன்

 நாத இன்பம்

மாலை 4 - ஜயந்த் - புல்லாங்குழல்

 நாரத கான சபா

காலை 8.15     திருவாரூர் சாமி நாதன் - புல்லாங்குழல்

10                     சிக்கில் சந்திர சேகர் - புல்லாங்குழல்

12.15                 சாரதா கணேஷ்        - பாடல்

1.45                ராகவேந்திரா  - பாடல்

1,45      ஸ்ரீஷா    சஷாங் க்     - பரதம்

4           சஞ்சய் சுப்ரமணியன்  - பாடல்



Sunday, December 20, 2015

கேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனும் - ஒப்பீடு

இடம் பொருள் தெரியாமல் கத்துக்குட்டித்தனமாக கேள்வி கேட்பவர்கள் பரபரப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்... ஆனால் ஒரு நல்ல ஊடகம் பரபரப்பை மட்டும் நம்பி செயல்படாது.. பரபரப்பு என்பது ரொம்ப நாள் நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும்..
கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சி , இணையத்தில் இருந்து விலகி அதிகம் வானொலிதான் கேட்கிறேன்..அதில் ஹலோ எஃப் எம்மில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது...
இதில் கலந்து கொண்டவர் கமல்ஹாசன்..
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதை கவனியுங்கள்
எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெற்றால்தான் பிள்ளையா என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது... கமல்ஹாசனும் , ஹலோ எஃப் எம்மும் இணைந்து இதை வழி நடத்துகிறார்கள்...
சிறுவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் வருகிறது என்றால் , அவர்களது பெற்றோர்கள் மூலம் பிறக்கும்போதே வந்து விடுகிறது...
அப்படி பாதிக்கப்பட்டோருடன் கமல் பேசுவதை கவனியுங்கள்.. அந்த பண்பை பாருங்கள்
--------------
வணக்கம்மா... என் பேரு கமல்ஹாசன்... உங்களைப்பத்தி சொல்லுங்க

அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தன்னை அறிமுகம் செய்தபின்பே பேசும் நாகரிகம்...அது மட்டும் அல்லாமல் , ஒரு செலிப்ரிட்டியாக பேசாமல் , ஒரு நண்பன் போல அவர்கள் பிரச்சனையை , அவர் சொல்லாமல் விட்டதைக்கூட நினைவு படுத்தி பேசுகிறார்..

எப்ப கல்யாணம் ஆச்சு

எனக்கு பதினாறு வயசுலயே , முப்பது வயசு ஆளு ஒருவருடன் கல்யாணம்

ரொம்ப வயசு வித்தியாசமா இருக்கே..எப்படி ஒத்துக்கிட்டீங்க

என்னை யாரும் கேட்கல... கடமையை முடிச்சா போதும்னு ரெண்டாம் தாரமா பண்ணி வச்சுட்டாங்க..அவர் மூலமா எனக்கு இந்த நோய் வந்திருச்சு

ஓ..ரெண்டாம் தாரமா...அப்ப இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பாரே...
-------------
அடுத்து சிறுவனுடன் பேசுகிறார்
வணக்கம்,... நான் யாருனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... உங்க பேரு என்னனு சொல்ல வேண்டாம்... அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்...
அவர்கள் அடையாளத்தை சொல்லி பரபரப்பு ஏற்படுத்த விரும்பாத தன்மையை கவனிக்கவும்.. பரபரப்பு வேண்டாம் ..ஒரு எமோஷனல் டச் கொடுப்பதற்காகக்கூட பெயரை பயனபடுத்தலாகாது என நினைக்கிறாரே... அது பெரிய மனம்
------- 

பெற்றால்தான் பிள்ளையா எனும் இந்த அமைப்பு குறித்தி அறிந்து கொள்ள ஹலோ எஃப் எம்மை கேட்கவும்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா