Friday, September 3, 2010

கொலை செய்தால் ஊக்க தொகையா? - மனிதாபிமானிகளின் ஓவர் பாசம்

தூக்கு தண்டனை சரியா , தவறா என்பது அவ்வப்போது தலை காட்டும் விவாதம்தான்...

இருதரப்பு வாதங்களையும் கேட்டால், இருவர் சொல்லுவதும் சரி போலவே தோன்றும்.. நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது..
ஆனால், தூக்கு தண்டனை தவறு என்று சொல்பவர்களின் வாதம் வடிவேலுவின் காமடியையும் மிஞ்சும்படி இருக்கும்.. ஆனால் நாம் ,பிரச்சினையின் சீரியஸ்னசை கவனத்தில் கொண்டு இந்த வாதத்தில் இருக்கும் சிரிப்பை கவனிப்பதில்லை...

இந்த மனிதாபிமானிகளின் நகைச்சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்..

1 ஒருவர் சமுகத்தில் இருக்கும் ஒருவரை கொல்வதால், சமுகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது... அந்த இழப்பை நிவர்த்தி செய்ய பார்க்காமல், சமுகத்துக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும்படி அவரையும் அரசே கொல்வது என்ன லாஜிக் ? ஒரு இழப்பு என்பது , இரண்டு இழப்பாக மாறுவதுதான் நாம் காணும் பலன்..

சூப்பர் வாதம் ... பேசாமல் கொலையாளிக்கு நஷ்ட ஈடு கொடுத்து , விடுதலை செய்து விடலாமா?

2 தூக்கு தண்டனை கொடுப்பதால் , இனி கொலையே நடக்காதா? கொலை என்பது நடக்கத்தான் செய்யும்...தூக்கு அதை நிறுத்தாது...

சிறைதண்டனை என்பது திருட்டை தடுக்காதுதான்.. பேசாமல் சிறை அனைத்தையும் திரை அரங்காக மாற்றி விடலாமா...

3 கொலை செய்யும் அளவுக்கு ஒருவர் துணிகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருப்பார் .. ? அவருக்கு மேலும் கஷ்டம் கொடுப்பதுதான் தூக்கு தண்டனை..

ஆமாமா.. இனிமேல் கொலையாளிகளுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு வழங்கப்பட்டு, ஊக்க தொகையும் வழங்கப்பட வேண்டும்...

4 தூக்கு தண்டனை கூடாது என மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார்..

ஆமா.. நாங்க அவர் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டோம்... இது ஒண்ணுதான் பாக்கி,,,இதையும் கேட்டு காந்தியின் சிஷ்யர்கள் ஆக போறோம்..

5 மரண தண்டனை என்பது தண்டனை ஏ அல்ல.. அது உலகம் என்ற சிறையில் இருந்து கொடுக்கப்படும் விடுதலைதான்... ஒரு கொலையாளிக்கு தண்டனை வழங்காமல் , விடுதலை வழங்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது ??

அருமை..அருமை.. இனிமே நாட்டுக்கு நல்லது செய்பவர்கள், அப்பாவிகள், நல்லவர்கள் , கல்லூரி மாணவிகள், பெண்கள் எல்லோருக்கும் இது போன்ற " விடுதலை " அளிக்கவும், கொலையாளிகள் இந்த உலகம் எனும் சிறையில் இருந்து கஷ்டப்படவும் தேவையான சட்ட திருத்தம் செய்ய வேண்டும்...

6 கொலைக்கு கொலை என அரசே இறங்குவது மிருகத்தனம் அல்லவா.. ? அவர்களை திருத்தி நல்வழி படுதுவதுதானே அரசின் வேலை..?


பஸ்ஸில் டிக்கர்ட் எடுக்காமல் அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தினால், பதிலுக்கு அபராதம் போட்டு பண இழப்பு ஏற்படுத்தலாமா? அருமை...

******************************************************************************

மனித உயிர் மதிப்பு வாய்ந்தது... எனவே யாராக இருந்தாலும் மனித நேயம் முக்கியம்தான்... ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் நிலையையும் , என் இறந்தோம் என தெரியாமலேயே இறந்தவர்கள் நிலையையும் கொஞ்சம் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும்.. வெறும் அறிவு பூர்வ விவாதங்கள் உதாவாது...

உண்மையான மனித நேயம் , உலகில் மறைந்து வருகிறதோ என தோன்றுகிறது...

2 comments:

  1. ஆமா ..தூக்கு தண்டனை ...தூக்கு தண்டனை -நு சொல்லராங்களே...என்னத்த தூக்கணும் .....
    இல்ல ..எதையாவது தூக்கு-நா தண்டனையா ?
    யாரவது இந்த அப்பாவியோட சந்தேகத்த தீர்த்து வைக்க முடியுமா ?

    ReplyDelete
  2. நாம் நிறைய ஒத்துப் போகிறோம்.

    http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.html

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா