Monday, September 13, 2010

அமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..

 

நம்ம ஊர் அரசியல்வாதிகளும் , அரசியல்வாதிகளின் குணங்களை கொண்ட அறிவுஜீவிகளும், அவ்வப்போது தாம் மனதளவில் ஒரு முஸ்லிம் என உதார் விடுவது வழக்கம்.

முஸ்லிம் மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்கள் எதுவும் தெரியாமல் சும்மா ஒரு முற்போக்கு முத்திரைக்காகத்தான் இந்த உதார்.

கோடம்பாக்கத்தில் ஒரு இஸ்லாமியர் கடையில் ஒரு மருந்து வாங்கினேன் ( அது ஒரு நாட்டு மருந்து கடை ) .. ஒரு வாரம் கழித்து இன்னொன்று வாங்க வேண்டி இருந்தது… அதே கடைக்கு சென்றேன்.

கடைக்கார  இஸ்லாமிய பெரியவர் என்னை சரியாக அடையாளம் கண்டு விட்டார்.. ” சார்., போன வாரம் வந்து வாங்கிட்டு போனீங்கல்ல? “ என புன்னகைத்தார்..

நான் அவரை மறந்து விட்டேன் என்பதால் மையமாக புன்னகைத்தேன்.

” போன முறை நூறு ரூபாய் கொடுத்துட்டு , சில்லறை வாங்காம போயிட்டீங்க. நான் உங்களுக்கு அறுபது ரூபாஇ தரணும்.. தனியா எடுத்து வச்சுருக்றேன் “ என்றபடி கொடுத்தார்..

அவர் நினைவு வைத்து தருவது ஆச்சரியமாக இருந்த்து..

” ஒரு முஸ்லிம் யார் காசுக்கும் ஆசைப்பட மாட்டான். ஒரு வேளை இன்னிக்கு நீங்க வரலைனா, இந்த காசை வேற தர்ம வழிக்கு கொடுத்து இருப்பேன்” என்றார்..

அதன் பின் எனக்கு தேவையானதை வாங்கிவிட்டு வந்தேன்.. இது சிறிய உதாரணம்..  

நம்ம உதார் அரசியல்வாதிகள், தாம் மனதளவில் முஸ்லிம் என உதார் விடுவதன் மூலம் முஸ்லீம் மதத்துக்கு பெருமை என நினைக்கிறார்கள்.. தான் ஒரு முஸ்லிம் என சொல்லிக்கொள்ள வேண்டுமானால் எந்த அளவு தகுதி தேவை என அவர்களுக்கு புரியவில்லை…

 

ஆனால் முஸ்லிம் என சொல்லிக்கொண்டால் மைனாரிட்டி ஓட்டு கிடைக்கும் என்பது இவர்கள் கணக்கு. முற்போக்கு முகமூடி கிடைக்கும் என்பது அறிவுஜீவிகள் கணக்கு,

 

நம்ம ஊரில் இப்படி என்றால் அமெரிக்காவில் வேறுவிதமான கணக்குகள்..

ஒபாமா கிறிஸ்தவரா , முஸ்லிமா என அங்கே பஞ்சாயத்து.. ஒரு நல்ல கிறிஸ்தவ்ராக இருந்தாலும் நல்லதுதான் . நல்ல முஸ்லிமாக இருந்தாலும் நல்லதுதான்..

ஆனால் முஸ்லிமாக இருப்பது தவறு என்ற கோனத்தில், அவர்  ஒரு முஸ்லிம் என குற்றம் சாட்டுவது போல சிலர் ஆரம்பித்துள்ளனர்..

முதலில் இதை கண்டு கொள்ளாத வெள்ளை மாளிகை , இது பெரிய பிரச்சினையாக ஆவதை உணர்ந்து திடுக்கிட்டது..

அங்கு நடந்த ஒரு கருத்து கணிப்பு, 20 % அமெரிக்கர்கள் ஒபாமா ஒரு முஸ்லிம் என நினைப்பதாக சொல்லி இருக்கின்றனர்..

அவர் தந்தை முஸ்லிம்…  போரக் ஹுசேன் ஒபாமா என்பது அவர் முழு பெயர்.. எனவே ஒபாமா ஒரு முஸ்லிம் என்று சிலர் கூற ஆரம்பித்துல்லனர்..

அது பழைய கதை..இப்போது அவர் பெயரில் ஹுசேன் இல்லை என்கின்ரனர் சிலர்

“ அவர் ஒரு கிறிஸ்த்வர்.. தினமும் கிறிஸ்தவ முரைப்படி பிரேயர் செய்கிறார் “ என விளக்கம் அளிதுள்ளார் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்..

 

ஆனால் இதெல்லாம் தனி மனித விவகாரம்.. எல்லா மதமும் அதனளவில் சிறந்தவைதான்.

நானெல்லாம் தினமும் பைபிள் படிக்கிறேன். இஸ்லாமிய நூல்களிலும் ஆர்வம் உண்டு…  இந்து மத தத்துவங்களிலும் ஈடுபாடு உண்டு.. ( பெரியார் சொல்வதிலும் ஈர்ப்பு உண்டு )

எதாவது ஒன்றயாவது உருப்படியாக கடைபிடித்தால் கூட பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது.

முன்னாள் அத்பர் புஷ் அதிகாரபூர்வமாக கிறிஸ்தவர் .,.. ஆனால் அவர் கிறிஸ்தவ நெறிமுறைகள் படி நடந்தாரா என்பது கேள்விகுறிதான்..

 

உலகில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே மதம்தான்…  அதிகாரம் என்ற மதம்…

4 comments:

 1. //உலகில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே மதம்தான்… அதிகாரம் என்ற மதம்…// True!

  ReplyDelete
 2. பிடித்த மதத்தைப் பின்பற்றும் வரை பிரச்சினையில்லி மனிதனுக்கு... 'மதம்' பிடிக்கும்போதுதான் எல்லாமே ஆரம்பிக்கின்றது... என்ன செய்ய?

  ReplyDelete
 3. அவர் முஸ்ல்மாக இருந்தால் என்னா அல்லது கிறிஸ்துவராக இருந்தால் என்ன... அவரது செயல்பாடுகள் தான் அவரை திர்மானிக்கின்றன

  ReplyDelete
 4. //ஒரு நல்ல கிறிஸ்தவ்ராக இருந்தாலும் நல்லதுதான் . நல்ல முஸ்லிமாக இருந்தாலும் நல்லதுதான்..//

  எப்போதுமே ஒரு நல்ல இந்து , நல்ல கிறிஸ்தவர், நல்ல முஸ்லிம் தான் சண்டை இட்டு கொள்வார்கள் ......
  மதமே தேவை அற்ற ஓன்று தான் தல ...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா