Thursday, September 9, 2010

நாலும் தெரிந்தவன்

பெரிய தாடியும் மீசையுமாக வீட்டு கதவை தட்டுபவனை குழப்பத்தோடு பார்த்தார் பரமசிவம்.

” என்ன அங்கிள் அப்படி பார்க்குறீங்க, நாந்தான் தேவசகாயம். உங்க அருந்தவ செல்வனோட நண்பன் “

“அட ஆமா.. என் நண்பன் அங்கு இரண்டு நாள் தங்குவான். வேண்டும் உதவிகளை செய்க “னு மெயில் அனுப்பிச்சுட்டு போன்லயும் சொன்னானே !!

“ வாப்பா..” உள்ளெ அழைத்தார்.

டி வி யில் ஆழ்ந்திருந்த மனைவி குஜலாம்பாள் தாடியை பார்த்து சற்று மிரண்டாள்.

“ நம்ம பையனோட பிரண்டு டீ.. காப்பி போட்டு கொண்டு வா “

“ ஆண்டி காபி சூப்பரா இருக்குமாமே .. தினேஷ் அடிக்கடி சொல்லுவான் “

” காப்பி மட்டும் இல்ல… பிரியாணியும் சூப்பரா பண்ணுவா.. ஆமா , நீங்க நான் வெஜ் சாப்பிடிவீங்களா ? “

இதற்குள் பக்கத்து வீட்டு பத்மனாபன் பேப்பர் வாங்க உள்ளே வந்தார். தாடியை பார்த்து , யாரது என குழம்பினார்.

’ உட்கருப்பா பத்மா,, நமக்கு வேண்டிய பையந்தான் “

சபையை கூட்டி பேசினால் திருப்தி பரமசிவத்துக்கு.

” சார்.. பாம்பு முதல் பறவை வரை எல்லாம் சாப்பிட்டு இருக்கேன் “

“ பார்த்தா சாமியார் மாதிரி இருக்கியே , அதான் கேட்டேன் “

 

” சார்.. இப்படி இருப்பதுதான் இயல்பு.. என் ஆய்வு கட்டுரை வெளிவந்ததும் எல்லோரும் தாடி மீசை, நகம் எல்லாம் பெருசா வளர்க்க போறாங்க.. வெய்ட் அண்ட் சீ “

அதற்குள் காப்பி வந்து விட மூவரும் காபியை உறிஞ்சினார்கள்.

 

” என்ன ஆய்வு ? “ பத்து ஆர்வமாக கேட்டார். எதையும் தூண்டி துரிவி கேட்பது அவர் இயல்பு. தெரிந்து கொள்வதற்காக அல்ல.. குறை காண.. தன் மகனுக்கு பெண் பார்க்க, பத்துவை அழைத்து சென்று பரம்சிவம் பட்ட பாடு தனி கதை.

 

“ சார் .. உங்க மனசுக்கு தோணுகிற ஏதாவது ஒரு பொருள் பேரு சொல்லுங்க” தாடியை தடவியபடி கேட்டான் தேவசகாயம்..

ஏன் கேட்கிறான். சரி இனிப்பாக சொல்லலாம் “ லட்டு “

“ குட்.. லட்டை பார்க்க முடியும். முகர்ந்து பார்த்து கெட்டு போய் இருந்தால் கண்டு பிடிக்கலாம். அதன் வடிவை கண்டு ரசிக்கலாம். அதன் சுவையை உணரலாம். அது கீழே விழுந்தால் அந்த சத்தம் கேட்கலாம்.அதை தொட்டு பார்த்து ரசிப்பதுடம் நின்று விடலாம், சர்க்கரை நோய் இருந்தால்.  அதாவது பார்த்தல், கேட்டல், உணர்தல், முகர்தல், சுவை என்ற சில விஷயங்களுக்குள் உலகில் இருக்கும் எல்லா விஷயங்களையும் அடக்கி விடலாம் . இல்லையா ? “

இதில் அடங்காத பொருள் ஏதேனும் பொருள் இருக்கிறதா என யோசித்து , பின் யோசனையை கைவிட்டனர் இருவரும்.

”  நான் என்ன சொல்கிறேன் என்றால், இதற்குள் அடங்காத பொருட்களும் இருக்க கூடும்.. ஆனால் அதை உணரும் திறன் நம் புலன்களுக்கு இல்லை. ”

“ அதெப்படி சொல்ல முடியும்? அப்படி இருந்தாலும் நம்மை பொருத்தவரை அது இல்லைதானே.. “

“ இல்லை.. பூகம்பம் போன்றவற்றை மிருகங்கள் முன் கூட்டியே அறிந்து விடுகின்றன.. அதை உணரும் தன்மை நம்க்கு இருந்தது. கால போக்கில் இழந்து விட்டோம்..  மிருகங்களுக்கும் நமக்கும் ஒரே புலன்கள் இருந்தும் ஏன் இந்த இழப்பு ? யோசித்தீர்களா? “

 

“ தெரியலையே ? “ பரிதாபமாக சொன்னார் பத்து.. அதை விட பரிதாபமாக பார்த்தார் பரமசிவம்..

” ஆண்டி.. இன்னும் 10 நிமிஷத்துல மழை வரபோகுது.. வெளியே காயும் துணியை உள்ளே எடுத்து போடுங்க…  என்ன வித்தியாசம் என்றால், மிருகங்கள் நகம் வெட்டுவதோ , முடி வெட்டுவதோ இல்லை.. சித்தர்களும் அப்படித்தான்.. ஆக முடி, நகம் என்பது இறந்த செல்கள் அல்ல. அவையும் ஓர் உறுப்புதான்.. இந்த அதிர்சிகரமான உண்மையைத்தான் நான் ஆய்ந்து கண்டுபிடித்து இருக்கிறேன் “

 

அவன் சொல்லி முடிப்பதற்குள் , மழை பொழிய ஆரம்பித்தது.. ஆச்சரயமாக அவனை பார்த்தனர் இருவரும்..

” இதை தவிர நமக்குள் பல புலன்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம்.. அதையும் கண்டு பிடிப்பதுதான் என் ஆய்வு. முடி, நகம் என்பதும் ஒரு புலந்தான்.. ஒரு விஷயம் நடக்கப்போவது, ஈதர்கள் மூலம் காற்றில் தகவலாக பரவும். இதை கண்ணால் பார்க்க முடியாது, கேட்க முடியாது.,, எந்த கருவியும் உணர முடியாது… ஆனால் முடி, நகம் மூலம் அந்த தகவலை படிக்க முடியும்.. சுனாமி வரப்போவதை நான் முன் கூட்டியே உணர்ந்து எச்சரித்தேன். கேட்பாரில்லை “

அரசுக்கு எழுதிய கடிததை காட்டினான்…

 

“ இந்த டெக்னிக்கை பயன் படுத்திதான் , சாமியார்கள் ஆருடம் சொல்கிறார்கள்.. எல்லாம் இதன் மகிமை “ முடியை தொட்டு காட்டி புன்னகைத்தான்..

 

” மழை வருவதை சொன்ன.. ஓ கே.. வேற ஏதவது சொல்லு .. பார்க்கலாம் “

தலையை ஆட்டியபடி, கண்களை மூடிக்கொண்டான்..  இரண்டு நிமிடங்கள்..

” இப்ப இந்த வீட்ல இருக்கறவங்கள்ள ஒருவர் இன்று மாலைக்குள் இறந்து விடுவார் “

 

தற்செய்லாக அந்த பக்கம் வந்த குஜலாம்பாள் திடுக்கிட்டாள். சும்மா வாய வச்சுக்கிட்டு இருக்காம ஆருடம் கேட்டு இப்படி வாக்கி கட்டிக்கணுமா என்பது போல கணவனை முரைத்தாள்..

” நான் இந்த வீட்டை சேர்ந்தவன் இல்லையே “ அசர்ந்தப்பமாக கேட்டார் பத்து..

“ இப்ப இங்கே தானே இருக்கீங்க.. சோ நீங்களாகவும் இருக்கலாம் .. ஒரு வேளை இங்கு இருக்கும் ஏதேனும் வளர்ப்பு பிராணியாகவும் இருக்கலாம்.. சரி அன்கிள் .. நான் குளிச்சுட்டு யுனிவர்சிட்டி போய் வந்துட்றேன்.. சாய்ங்காலம் பேசலாம் “

**********************************************************************************

ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி மாதிரி பம்மி போய் உட்கார்ந்து இருந்த பரமசிவத்துக்கு ஐடியா தோன்றியது.

“ இங்கே வாடி.. இன்னிக்கு கோழி அடிச்சி பிரியாணி செய்.. நம்ம கோழி சாவதைத்தான் அவன் ஆருடமா சொன்ன மாதிரி கணக்கு ஆயிடும் .. “ வெற்றி சிரிப்பு சிரித்தார்..

இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்போதே கிளம்பிவிட்டார் பத்து..

இவருக்குத்தான் வெளியே தலைகாட்ட பயமாக இருந்தது..

” பேசாம கோழியை தின்னுட்டு , குப்புற அடிச்சி படுத்துற வேண்டியதுதான் “

கதவை யாரோ படபடவென தட்டினார்கள்.. ஏதோ எமர்ஜன்சி.. பத்துவுக்கு பாலா?

கதவை திறந்தார்.. வெளியே…………    பத்து தான்..

முகத்தில் கலவரம்..

“ டேய்..  கடைவீதில ஆக்சிடண்ட்.. தேவசகாயம் ஸ்பாட் அவுட் “

அதிர்ந்தார் பரமசிவம்..

“ என்னவோ நம்மகிட்ட இல்லாத புலனறிவு அவன்கிட்ட இருக்குனு கதை சொன்னான்… பிரேக் பிடிக்காத லாரி வேகமா வந்தது…  அவன் செல் போன் ல பிசியா இருந்ததால அவன் கண்ணும் அதை பார்க்கல.. காதும் ஜனங்க கத்துறதை கேட்கல.. என் புலன்கள் சரியா வேலை செஞ்சதால நான் தப்பினேன்..

இருக்றதை யூஸ் பண்ண தெரியாம , புதுசா ஒண்ணுக்கு ஆசைப்பட்டா எப்படிடா ?

3 comments:

  1. “ என்னவோ நம்மகிட்ட இல்லாத புலனறிவு அவன்கிட்ட இருக்குனு கதை சொன்னான்… பிரேக் பிடிக்காத லாரி வேகமா வந்தது… அவன் செல் போன் ல பிசியா இருந்ததால அவன் கண்ணும் அதை பார்க்கல.. காதும் ஜனங்க கத்துறதை கேட்கல.. என் புலன்கள் சரியா வேலை செஞ்சதால நான் தப்பினேன்..

    ......சரியான "வாக்கு" !!!

    ReplyDelete
  2. இருக்றதை யூஸ் பண்ண தெரியாம , புதுசா ஒண்ணுக்கு ஆசைப்பட்டா எப்படிடா ?

    arumai...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா