Sunday, September 19, 2010

வாசித்ததில் நேசித்த ஐந்து ….

 

 

 

1. அந்தThyagaraja-Bhagavathar-reel-2 காலத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜ பாகவதர்..

கடைசிகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்..

கண்பார்வை வேறு பாதிக்கப்பட்டது.. அந்த நிலையில் சத்ய சாய் பாபாவை சந்த்தித்தார்… அவரை ஆசிர்வதித்தார் பாபா..

பாபாவை பார்க்க விரும்பினார் பாகவதர்..  ஆனால் கர்ம விதிப்படி கண்பார்வை இன்றி கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும்..

ஆனாலும் அவர் ஆசையை நிறைவேற்றினார் பாபா..  கண்குளிர பாபாவை தரிசித்தார் பாகவதர்..  அந்த அறையில் இருக்கும் வரை கண் தெளிவாக தெரிந்தது..

வெளியே வந்ததும் மீண்டும் பார்வை போய் விட்டது.. ஆனாலும் சிறிது நேர தரிசனம் பாகவதருக்கு ஆறுதலாகவும் , அபூர்வ நிகழ்வாகவும் அமைந்தது…

sathya-sai-baba

2. தனது குருவிடம் ஆசி வாங்க சென்றார் மன்னர்.. 

குரு மன்னரை பார்த்து பேச ஆரம்பித்தார்..

“ உன் பெற்றோர்கள் இறப்பார்கள்… நீ சாவாய்.. உன் மகன்கள் மரணமடைவார்கள்.. உன் பேரன் , பேத்திகள் சாவார்கள் “

சொல்லிவிட்டு தியானத்தை தொடர்ந்தார்..

மன்னர் மிகவும் வருத்தமடைந்தார்..  ஆசி கேட்டால் , சாபம் வழங்கிவிட்டாரே!!!

சோகமாக அமர்ந்து இருந்தார்..  குரு கண்விழித்து பார்த்தார்..

“ ஏன் சோகமாக இருக்கிறாய் ? “

“ ஆசி கேட்டால் , சாவதைபற்றி பேசிகிறார்களே !! “

“ அட மூடா.. சாவு என்பது இயல்பானது.. நான் சொன்னது இயல்பான வாழ்க்கை பற்றிதான்..

முதலில் உன் பெற்றொர் வயதானதும் இயற்கை மரணம் அடைவார்கள்.. உன் காலம் முடிந்த்ததும் நீ, அதன் பின் மகன் , அதன் பின் பேரன் என இயல்பான வரிசையில் மரணம் அடைவது நல்லதுதானே.. நீ இருக்கும் போதே உன் பேரன் கொல்லப்பட்டால் அதுதான் கஷ்டம்..

உனக்கு அப்படி நடக்காது என ஆசிதான் வழங்கினேன் ”

என்றார்..

balakumaran

3. எழுத்தாளர் என்பவர் மற்றவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. அப்போதுதான் மற்றவர்களின் கோணத்தையும் பிரதிபலிக்கமுடியும்..

ஜெயமோகன் ஒரு கூட்டத்தில் பேசும்போது “ உதாரணமாக சமீபத்தில் சுஜாதா,பாலகுமாரன் இருவரைப்பற்றியும் நான் எழுதிய விமர்சனக்குறிப்புகளுக்கு வந்த எதிர்வினைகளில் அந்த மனநிலையையே கண்டேன். அவர் எழுத்தாளரல்ல, அவர் மட்டுமே எழுத்தாளர் என்றார்கள் “ என்று பேசியுள்ளார்..

 

பாலகுமாரன் பற்றி ஜெயமோகன் தளத்தில் நடந்த  விவாதத்தில், balakumaran is not a writer.. he is the writer  என்று நாம் எழுதியதை நினைவு வைத்து பேசியது பாராட்டுக்குரியது…

கருத்தை ஏற்காவிட்டாலும், கருத்தை கணக்கில் வைத்து கொண்ட அவரது விழிப்புணர்வு  , பாரபட்சமற்ற தன்மை வரவேற்கத்தக்கது

 

4. பாலைவனத்தில் செல்லும் எனக்கு ஒரு சோலைவனம் போன்ற ஆறுதலை தருபவர் நயன் தாரா- பிரபு தேவா Nayantara 

5.

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை.

காற்றில் அலைக்கழியும் வண்ணத்து பூச்சிகள் , காலில்

காட்டை தூக்கிகொண்டு அலைகின்றன.

வெட்ட வெளியில்

ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக்கொண்டு இருக்கிறான்.

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை ..

    - தேவதச்சன்

4 comments:

  1. each one is very different yet interesting.

    ReplyDelete
  2. //ஆனாலும் அவர் ஆசையை நிறைவேற்றினார் பாபா.. கண்குளிர பாபாவை தரிசித்தார் பாகவதர்.. அந்த அறையில் இருக்கும் வரை கண் தெளிவாக தெரிந்தது..//

    சும்மா டோப்பா தலையணை ஏத்தி விடாதிர்கள் தல .....
    ஓஷோ கூட சொல்லி உள்ளார் ...சிரடி சாய் பாபா ஒரு ஞானி ...டோப்பா தலையன் ,அரவிந்தர் போன்றவர்கள் அரைகுறைகள் என்று .....


    //பாலைவனத்தில் செல்லும் எனக்கு ஒரு சோலைவனம்//

    பூத்து காய்த்து குலுங்கும் ஒரு சோலை வனம் !!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா