Wednesday, September 29, 2010

எந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் ?- அலசல் ரிப்போர்ட்


எந்திரன் படம் ஆரம்பத்தில் இருந்து பாசிடிவாகவும் , நெகடிவாகவும் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன..

ஆனால் ஒரு முக்கியமானா விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை..

எந்திரன் படம் ஓடுவதை பொறுத்து , படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் லாபமோ , நஷ்டமோ அடைவார்கள்..ஆனால் படத்தில் சம்பந்தப்படாதவர்களில் , இந்த படம் மூலம் யாருக்கு அதிக பலன் கிடைக்கும் என்ற கோணத்தில் யாரும் ஆராயவில்லை என்பது நம் கவனத்துக்கு வந்தது...
இனிமேலு சும்மா இருக்க கூடாது என களத்தில் இறங்கி செய்த அறிவியல்பூர்வ ஆராய்ச்சியின் முடிவு - இதோ உங்கள் பார்வைக்கு..
*************************************************************************

எந்திரன் மூலம் பயனடைவது யார் ?

4. பதிவர்கள்.

எழுதுவதற்கு ஒரு மேட்டர் கிடைத்தது என்ற அளவில் லாபம்தான். சினிமா செய்தி, ஷூட்டிங் நிலவரம், இசை விமர்சனம், சினிமா விமர்சனம், படம் வெற்றியா என்றெல்லாம் அலசலாம் . பதிவிடலாம்..என்ன்று இவர்கள் பலனடைகிறார்கள்..
ஆனால் இதற்கெல்லாம் சொந்த காசை செலவிட வேண்டி இருக்கும்.. உழைப்பும் தேவை...
எனவே கஷ்டமும் உண்டு, லாபமும் உண்டு என்ற அளவில்தான் பலன் இருக்கும்
பயன் சதவிகிதம் : 65 %3பத்திரிகைகள்

திட்டி எழுதினாலும் விற்பனை..பாராட்டி எழுதினாலும் விற்பனை என பயனடைகிறார்கள்..
ஆனால் முன்பு போல அதிகம் லாபம் கிடைக்காது.. நெட், தொலைகாட்சி என பல போட்டி வந்து விட்டதால், இப்போது யாரும் பத்திரிகளை மட்டும் நம்பி இருப்பதில்லை... பயன் அடையும் வாய்ப்பு மங்கும்
பயன் சதவிகிதம் : 72 %

2தொலைகாட்சிகள்

நல்ல வேட்டைதான்... பாடல்கள், காட்சிகள் என நிகழ்சிகள் நடத்தலாம்.. ஆனால் சன் டி வி யின் படம் என்பதால் , மற்ற சானல்கள் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க முடியும்...

பயன் சதவிகிதம் : 70 %
1 சமூக சிந்தனையாளர்கள்..

நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைக்கும் எந்திரன் தான் காரணம் என ஆய்வு கட்டுரை எழுதலாம்... இந்திய பொருளாதாரம் நாசமாக போனதற்கு, ஏழைகள் கஷ்டப்படுவதற்கு, சினிமா உருப்படமால் போனத்ர்க்லு என எல்லாவற்றுக்கும் எந்திரன் தான் காரணம் என ஆதாரத்துடன் நிருபிக்கலாம் ..படம் பார்க்க வேண்டும் , செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை..
செலவு இல்லை ..பலன் உண்டு..
பயன் சதவிகிதம் : 100 %

எனவே எந்திரன் மூலம் அதிகம் பயன் பெறுவது சிந்தனையாளர்கள் தான் ..எனவே , ஒரு சிந்தனையாளர் பார்வையில் எந்திரன் குறித்து கட்டுரை தீட்டி பயன் பெறுமாறு, அனைத்து பதிவர்களையும் கேட்டு கொள்கிறோம்..

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : pichaikaaran.blogspot.com

7 comments:

 1. அருமையான மற்றும் சமூகத்திற்கு அவசியமான ஆராய்ச்சி. தங்களது இந்த பதிவு சிந்திக்கும் வகையிலும் தங்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது.

  ReplyDelete
 2. 1 சமூக சிந்தனையாளர்கள்..
  கலக்குங்க ....serius to comedy...

  ReplyDelete
 3. மிக நல்ல சிந்தனை. மிக எளிதாக அறிவுஜீவியாவதற்கான வழியை காட்டியதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. please put "Endhiran" and "Rajini" in your labels. you can get more hits :)

  ReplyDelete
 5. payapulla nallathan aarainthu ikuringa

  ReplyDelete
 6. நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும்,

  பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள்

  ReplyDelete
 7. நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும்,

  பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா