Tuesday, November 30, 2010

தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை

தமிழ் மணம் டாப் 20 , முதல் பத்து பதிவர்களை பார்த்தோம்.. டாப் 20 பதிவர்கள் முதல் பாகம் படிக்க இதை சொடுக்கவும்

அடுத்த பத்து பதிவர்கள்.. அதன் பின் ஒரு வரி விளக்கம் அனைவருக்கும்…

11. philosophy prabhakaran

பதிவுலகத்திலும், வெளி உலகத்திலும் நாம் பார்க்கும் ஒரு விஷயம்..
வயதான சிலர் , தாம் இளமையானவர் என காட்டிக்கொள்வதற்காக செய்யும் சில வேலைகள்..  செக்ஸ் ஜோக் அடிப்பது, வயதுக்கு ஒவ்வாத முறையில் பேசுவது , செய்வது என , பதிவர்கள் முதல் எழுத்தாளர்கள் வரை எங்கெங்கும் காண முடியும்..



இன்னொரு கேஸ்… வயதில் சிறியவர்க்ள் சிலர், நாலு புத்தகம் படித்து விட்டு, பெரிய மனித தோரணையுடன் பேச முயல்வது… பக்குவம் அடைந்து விட்டார்களாம்…
உண்மயில் பார்த்தால், வாழ்வின் ஒவ்வொரு பருவமும் முக்கியம்தான்… ஒவ்வொரு பருவமும் இனிமைதான்…
அதனால்தான், குழந்தை பருவம்- இளம் பருவம்- இளைஞர் அப்ருவம்- மத்திய வயது- முதுமை என இயற்கை வைத்து்ள்ளது… எல்லாமே கொண்டாடப்பட வேண்டிய பருவங்கள்தான்.. இருக்கும் பருவத்தை விட்டுவிட்டு, இன்னொன்றுக்கு ஆசைப்படுவது அபத்தம்
அந்த வகையில், தன் வயதுக்கு ஏற்ப நேர்மையாக, போலித்தனம் இல்லாமல் எழுதுபவர் இவர்…
உதாரணம் சொல்ல வேண்டுமானால், மாலையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புக்கு , அதிகாலையிலேயே , பிட்டு பட கனவுடன் தூங்கி கொண்டு இருந்த ,  உண்மைதமிழனை போன் செய்து எழுப்பி , அவரை டென்ஷன் ஆக்கியதை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்… இதைத்தான் வயதுக்கு ஏற்ற குறும்பு என்கிறேன்.. ஒரு நாற்பது வயது ஆள் இப்படி செய்வது ஏற்கத்தக்கது அல்ல… அதே நேரத்தில் இளம் வாலிபன், மிகவும் ஃபார்மலாக நடப்பதும் செய்ற்கையானது… (  சந்திப்பு இடத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பே சென்று உ.த வுக்கு போன் செய்தபோது , உ, த பக்கத்தில் இருந்து அவர் முகபாவத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு :-)   }
டப் 10 ரஜினி பதிவை விக்கிபீடியா பார்த்து எழுதாமல், வேறு யாரிடமும் கேட்டு எழுதாமல் சொந்தமாக எழுதியது ஓர் உதாரணம்..
ஆரம்ப காலத்தில் இருந்து ரஜினியை பார்க்கும் விதம்  வேறு..  புதிதாக பார்க்கும் விதம் வேறு… அதை சரியாக பிரதிபலித்து இருந்தார் இவர்…
எழுத்து ஸ்டைல் , சொல்லும் கருத்து என்பதெல்லாம் வேறு விஷயம்..
இந்த விஷயத்தில் (உதாரணம்: வேலை ) நான் இப்படித்தான் முடிவு எடுத்து இருப்பேன்,, இப்படித்தான் சொல்லி இருப்பேன் ( அரசியல், சமூகம், சினிமா போன்றவற்றில் )  என நினைக்க வைப்பவர் இவர்,,, இவரை மந்திர புன்னகை படத்தின் போது பார்க்க நினைத்தேன்,,, முடியவில்லை என்பது ஒரு வருத்தம்
குறை என்ன என்று பார்த்தால், அவ்வப்போது தன் இயல்புக்கு மாறாக, வெறும் பரபரப்புக்கு எழுதுவது…
கூட்டத்தில் நாம் இருக்கலாம்.. நமக்க்குள் கூட்டம் இருக்க கூடாது என்பது ஒரு நலம் விரும்பி என்ற முறையில் இவருக்கு நான் வழங்கும் அட்வைஸ்     இவருடன் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தி
12 : தமிழா...தமிழா.. T.V.ராதாகிருஷ்ணன்
தரமான எழுத்துக்கு சொந்தக்காரர்,,, நான் எழுத ஆரம்பித்த புதிதில் பல கரக்‌ஷன் சொல்லி திருத்தி இருக்கிறார்.. கிரேட்..
என்னை விட ஒரு படி மேலாக இவர் இருப்பதாகவே தோன்றும் என்பது மைனஸ்.. இவருடன் இயல்பாக உரையாட என்னால் முடிவதில்லை…

13  சிபி பக்கங்கள் சி.பி.செந்தில்குமார்
மனம் சரியில்லை..அல்லது ஏதாவது படிக்க வேண்டும் என தோன்றுகிரது என்ற நிலையில் இவர் பதிவை ஜாலியாக படிப்பேன்..
எல்லா விஷ்யங்களையும் எழுதுவார் என்பது ப்ளஸ் ..அதுதான் மைனஸும் கூட…
நன்றாக எழுதுகிறார்,., ஆனால் சித்ரா மேடம் என்றால் நகைசுவை, பிரபாகரன் என்றால் குறும்பு என்பது போல இவரைப்பற்றி ஒரு தனி அடையாளம் இன்னும் உருவாகவில்லை
13 மாற்றம் Sindhan R
பலவ்ற்றில் தீர்க்கமான , தெளிவான சிந்தனை கொண்டவர்.. நந்தலால படத்தை சரியாக விமர்சித்த ஒரே பதிவர் இவர்தான் என்பது என் கருத்து..
பேலஸ்டாக சிந்திப்பவர் இவர்… தீர்க்கமான சமூக பார்வை கொண்டவர்..
சில  நேரங்களில் செய்திதாள் படிக்கும் உனர்வை தருவது மைனஸ்..
14 சிரிப்பு போலீஸ் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
இவர் எல்லா விஷ்யங்களும் எழுதினாலும் மனதில் நிற்பது நகைசுவைதான்,,,,
இதில் பல ஜோகுகளை வாய் விட்டு சிரித்து இருக்கிறேன்..
பலவற்றை நானே எழுதியது போல எஸ் எம் எஸ் செய்ததும் உண்டு..
முன்பு நான் சொன்ன சித்ரா மேடம் எழுத்துக்கும் இவர் எழுத்துக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு,,,
இவர் எழுத்தை நான் ரசிப்பேன்,,, ஆனால் எல்லோருக்கும் ரெகமண்ட் செய்வேன் என சொல்ல முடியாது…
மேடம் எழுத்தை தைரியமாக அனைவருக்கும் ரெகமண்ட் செய்வேன்..
இது ஒரு மைனஸ் பாயிண்ட் அல்ல… என் டேஸ்டுக்கு நன்றாக இருக்கிறது.. ஆனால் அனைவருக்கும் பொருந்தாது..
15 . கோகுலத்தில் சூரியன் வெங்கட்
துன்புறுத்தாத இனிமையான எழுத்து இவருடையது..
இவரிடம் எனக்கு பிடித்தது சமூக அரசியல் பார்வை..
மசாலா என் டேஸ்டுக்கு இல்லை என்பது என்னை பொறுத்தவரை குறை..
ஆனால் இதுவே ஒரு பிள்ஸ் பாயிண்ட்தான் , இன்னொரு கோணத்தில்
16 : பார்வையில் ராஜ நடராஜன்
இவரது பெரும்பாலான பதிவுகள் நன்றாக இருக்கும்.. ஆனால் பதிவு போட வேண்டுமே என்பதற்காக சிலவற்றை பதிவேற்றுவேறுவது தவறு என சொல்ல மாட்டேன்..
ஆனால் கன்சிஸ்டன்சி பாதிக்கப்படுகிறது..
 
17 பதிவின் பெயர் : SASHIGA
உடனடியாக பலனளிக்கும் பதிவு என்றால் அது இதுதான்… எந்த குறையும் இல்லாத சீரிய பணி.
ஆனால் இதை நான் ரெகுலராக பார்ப்பேன் என சொல்ல முடியாது…
18 பிச்சைக்காரன் பார்வையாளன்
இந்த பட்டியலில் என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒருவர் இவர்தான்…
19 Dondus dos and donts dondu(#11168674346665545885)
பல்மொழி வித்தகரான இவரிடன் நிறைய தெரிந்து கொள்ள முடியும் என்பது பிளஸ்..
சில ச்மயம், சிறியவர்களுடன் சரிக்கு சமமாக பேசுவது, மோதுவதை சிலர் ரசிக்கலாம்..
என்னை பொறுத்தவரை அதை ரசிப்பதில்லை.
20 கவிஞன் கவிதைகள்  வேல் தர்மா
  இவர் பதிவை நன்றாக இருக்கிறது அல்லது சரியில்லை என சொல்லுவது நியாயம் இல்லை… ஓர் ஆவனத்தை படிப்பது போல இருக்கும்… இப்படி பட்ட சீரிய பதிவில் , மசாலாவை நான் எதிர்பார்ப்பது இல்லை…
ஆனால் அதில் கலக்கும் மசாலா என்னை ஈர்ப்பதற்கு பதில் எரிச்சலூட்டவே செய்யும்…


எல்லோருமே ஒவ்வொரு வகையில் சிறப்பாக எழுதினாலும், நம் மன நிலைக்கு ஏற்ப , நம் பய்ன்பாட்டுக்கு ஏற்ப சில நெருக்கமாக இருக்கும்…
சரி.. இவர்களை பற்றிய ஒரு வரி விளக்கம்…
1. வினவு---           அவ்வபோது தவறான இலக்கை குறி வைக்கும் சமூக துப்பாக்கி
2 உண்மை தமிழன் – அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு தவறுகள் செய்தாலும், ஓர் உண்மை மனிதன்,. கலைஞன், எழுத்தாளன்
3 கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா-  நல்ல எண்ணங்களை பரப்ப எழுத்தை பயன்படுத்தும் பதிவர்
4 கே ஆர் பி செந்தில் ; மிஷன் ஸ்டேட்மெண்டை இதயத்தில் எழுதி, பயனுள்ள விஷ்யங்களை நெட்டில் எழுதுபவர்
நண்டு@ நொரண்டு  ; தரம், பண்பு, நேர்மை
6 தீராத பக்கங்கள் மாதவராஜ் ; தேவையற்ற துவேஷத்தை நீக்கி விட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும்
7 மனிதாபிமானம்  துமிழ் 
      அவ்சியமான எழுத்து
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... ஜாக்கி சேகர்
     ஜெயமோகனை மிஞ்சிய பல்சுவை பதிவர்
9 கேபிள் சங்கர் : நல்ல மனிதர், நல்ல கலைஞர், நல்ல பதிவர்,, ஆனால் தலைமை பண்புகளில் சிலவற்றை இனிமேல்தான் கற்க வேண்டும்
10 நனைவோமா? ம.தி.சுதா
தேன் தமிழில் நனைய வைப்பவர்
11 philosophy prabhakaran
     ஒரிஜினல் சிந்தனைக்கு சொந்தக்காரர்..
12.தமிழா...தமிழா.. T.V.ராதாகிருஷ்ணன்
   பண்பான் எழுத்து
13 மாற்றம் Sindhan R
ஏமாற்றம் தராத எழுத்து
14 சிரிப்பு போலீஸ்
    எண்டர்டெய்ன்மெண்ட் அன்லிமிடட்
15 கோகுலத்தில் சூரியன் வெங்கட்
சுட்டெரிக்காத இனிய எழுத்து
16 பார்வையில் ராஜ நடராஜன்
பார்வையில் இன்னும் தெளிவு தேவை
17 SASHIGA
பயனுள்ள பதிவு
18 பிச்சைக்காரன் பார்வையாளன்
என்னால் இன்னும் சரிவர புரிந்து கொள்ள முடியாதவர்
19 Dondus dos and donts dondu(#11168674346665545885)
     சர்ச்சைகள் இல்லாமல் சரக்கை மட்டும் நம்பி எழுதினாலே பலர் படிப்பார்கள்..ஆனால் இவர் நம்புவது சர்ச்சைகளை
20 கவிஞன் கவிதைகள்  வேல் தர்மா
மட்டன் குழம்பில் மசாலா கலக்கலாம்.. தேனில் கலக்கலாமா ?

**********************************************
ம தி சுதா  மற்றும் சித்ரா அவர்கள் எழுத்தில் குறை என்ன என கடைசியில் சொல்வதாக சொல்லி இருந்தேன்…
என்ன குறை….





குறைகளே இல்லை என்பதுதான் ஒரு குறை  :-)

18 comments:

  1. Jejamohan just mentioned in one line. please leave him. Please dont compare him

    ஜெயமோகனை மிஞ்சிய பல்சுவை பதிவர்

    ReplyDelete
  2. Please dont compare him"

    I do not compare..
    it is je mo who compared

    ReplyDelete
  3. இன்றுதான் உங்கள் பதிவினை பார்க்கிறேன். தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.
    பல பதிவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
    முடிந்தால் visaran.blogspot.com பாருங்கள்.

    ReplyDelete
  4. இளம் பதிவரை பெருமையாக எழுதியதும் பிரபல பதிவர்களிடம் இருக்கும் குறைகளை அழகாக சொன்ன உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லமுயற்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்லமுயற்சி, வாழ்த்துக்கள் “

    நன்றி

    ReplyDelete
  7. உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள் “

    நன்றி

    ReplyDelete
  8. நேர்மையா மனசுல தோனுனத எழுதியிருக்கீங்க..தொடருங்கள்...

    ReplyDelete
  9. நல்லதொரு பார்வை. நிறைய நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்தியிருக்கீர்கள். நன்றி. இது போன்று நீங்கள் வாசிக்கு புதிய பதிவர்களையும் பற்றி எழுதலாமே !

    ReplyDelete
  10. இது போன்று நீங்கள் வாசிக்கு புதிய பதிவர்களையும் பற்றி எழுதலாமே "

    எழுதலாம்தான்.. ஆனால் குறைகளை சொல்லும்போது அது நட்பை கெடுத்து விட்டால் என்ன செய்வது..

    போலியாக பாராட்டுவதும் தவறு..

    ReplyDelete
  11. நேர்மையா மனசுல தோனுனத எழுதியிருக்கீங்க..தொடருங்கள்..”

    நன்றி .

    ReplyDelete
  12. இளம் பதிவரை பெருமையாக எழுதியதும் பிரபல பதிவர்களிடம் இருக்கும் குறைகளை அழகாக சொன்ன உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள்”

    நன்றி

    ReplyDelete
  13. முடிந்தால் visaran.blogspot.com பாருங்கள்”

    பார்த்துட்டேன்,,, என் கருத்தையும் பதிவு செஞ்சு இருக்கேன்.

    ReplyDelete
  14. எல்லோருக்கும் நாலஞ்சு வரிகள் எழுதிட்டு எனக்கு மட்டும் பக்கம் பக்கமா எழுதியதற்கு நன்றி... மகிழ்ச்சியாக இருந்தது...

    // இன்னொரு கேஸ்… வயதில் சிறியவர்க்ள் சிலர், நாலு புத்தகம் படித்து விட்டு, பெரிய மனித தோரணையுடன் பேச முயல்வது… //
    நானும் சில சமயங்களில் இதுபோன்ற முயற்சிகள் செய்து தோற்றிருக்கிறேன்...

    // அவ்வப்போது தன் இயல்புக்கு மாறாக, வெறும் பரபரப்புக்கு எழுதுவது… //
    நீங்கள் ஏதோ ஒரு பதிவை மனதில் வைத்துக்கொண்டு இதுபோல கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்... அது என்ன என்று சொல்லுங்கள்... இனி அதுபோன்ற பதிவுகளை தவிர்க்கிறேன்... நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் தொடர்ந்து அதைப்போன்ற பதிவுகளை எழுதும் அபாயம் உண்டு...

    // இவரைப்பற்றி ஒரு தனி அடையாளம் இன்னும் உருவாகவில்லை //
    என்ன சொல்றீங்க... சிபின்னு சொன்னா நம் நினைவுக்கு வருவது ஜோக்ஸும், மொக்கைப்பட விமர்சனங்களும் தான்...

    // இந்த பட்டியலில் என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒருவர் இவர்தான்… //
    உங்களை உங்களாலேயே புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால் ரொம்ப கஷ்டம்...

    // சில ச்மயம், சிறியவர்களுடன் சரிக்கு சமமாக பேசுவது, மோதுவதை சிலர் ரசிக்கலாம்.. //
    நான் ரசிப்பேன்... ஹி... ஹி... ஹி...

    // ஆனால் தலைமை பண்புகளில் சிலவற்றை இனிமேல்தான் கற்க வேண்டும் //
    ஏன் அப்படி...?

    ReplyDelete
  15. "என்ன சொல்றீங்க... சிபின்னு சொன்னா நம் நினைவுக்கு வருவது ஜோக்ஸும், மொக்கைப்பட விமர்சனங்களும் தான்..."

    இந்த அடையாளத்தை தாண்டி அவர் வர வேண்டும் என்பது என் விருப்பம்... அப்போதுதான் அவர் தனித்து தெரிய முடியும்...

    // ஆனால் தலைமை பண்புகளில் சிலவற்றை இனிமேல்தான் கற்க வேண்டும் //
    ஏன் அப்படி...?

    அவருடன் நானும் நீங்களும் ஒரே இடத்தில் இருக்கும்போது இதைப்பற்றி விரிவாக பேசலாம்... பேச வேண்டும்...

    ”நீங்கள் ஏதோ ஒரு பதிவை மனதில் வைத்துக்கொண்டு இதுபோல கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்”

    உண்மை... நேரில் விரிவாக பேசலாம்..

    ReplyDelete
  16. நன்றி..
    நான் உங்களில் ஒருவன்..என்னிடம் எது வேண்டுமானாலும் தாராளமாக எப்போது வேண்டுமானாலும் பேசலாம்.
    என்னைப் பற்றிய கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  17. அன்புக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா