Sunday, November 14, 2010

பால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா?

கன்னம் என்பது அன்பு வ்ந்தால் முத்தம் கொடுப்பதற்கும் , கோபம் வந்தால் அறை விடுவதற்கும் மட்டும் பயன்படும் ஒரு உறுப்பு என நினைக்கிறோம்…
அதுதான் கிடையாது.. நாம் எப்படி குடிக்கிறோம் என்பதை கன்னம்தான்
தீர்மானிக்கிறது..
நாம் குடிப்பதற்கும் , பூனை குடிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது..
அனைவருக்கும் கொழு கொழு கன்னன் இருக்கிறது என சொல்ல முடியாது.. ஆனால் மனிதனுக்கு இருப்பது முழுமையாக வளர்ச்சி அடைந்த கன்னம்..
பூனைக்கு அப்படி அல்ல.. அதற்கு இருப்பது பிளவு பட்ட கன்னம், எனவே பூனையால் உறிஞ்ச முடியாது…
நாம் குடிப்பது அது குடிக்க நினைத்தால் பாதிக்கு மேல் வீணாகி விடும்…
சரி.. அது எப்படித்தான் குடிக்கிறது?
நாம் பார்த்து இருப்போம்.. அதில் இருக்கும் அறிவியல் முக்கியத்துவத்தை பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்.
சடத்துவம், புவி ஈர்ப்பு விசை இரண்டையும் கச்சிதமாக சமன் செய்துதான் பூனை பால் குடிக்கிறது…புவி ஈர்ர்பு விசை என்றால் தெரியும் ..சடத்துவம் என்றால்?

ஒரு பொருள் , அதன் மீது வேறு விசை செயல்படாதவரை, இயங்கி கொண்டு இருந்தால் இயங்கி கொண்டே இருக்கும்… சும்மா இருந்தால் , சும்மாவே இருக்கும்…
ஒரு கல் தரையில் சும்மா கிடந்தால் சும்மாவேதான் கிடக்கும்.. நாம் அதை எடுத்து எறிந்தால்தான் அந்த ஓய்வு நிலையில் இருந்து விடுபடும்..
எறியப்பட்ட கல் இப்போது பறக்க தொடங்கி விட்டது.. அது பறந்து கொண்டேதான் இருக்கும்.. புவி ஈர்ப்பு விசை அதன் மேல் செயல்படுவதால்தான் அது சற்று நேரத்தில் கீழே விழுகிறது.. அல்லது அது பறக்கும் பாதையில் இடையூறு ஏற்பட்டால் , தன் பயணத்தை நிறுத்தும்..
இல்லை என்றால் பறந்து கொண்டேதான் இருக்கும்.. இதுதான் சடத்துவம்…

சரி..இதற்கும் பூனை பால் குடிப்பதற்கும் என்ன சம்பந்தம்…
பூனை பால் குடிக்க தன் நாக்கை , சற்று பின்புறமாக வளைத்து ஆங்கில எழுத்து ஜே போல நீட்டும்..
image
அதாவது , தன் நாக்கை ஸ்பூன் போல முன்புறம் மடித்து , அதில் பாலை நிரப்பாது .. முதல் படம் போல் அல்ல…
இரண்டாம் படம் போல நாக்கை பின்புறம் மடிக்கிறது.  நாக்கின் மேற்புறம்தான் பால் படுகிறது…
இப்படி படுவ்தால், பாலுக்கும் நாக்குக்கும் இடையே ஒரு மெல்லிய திரவத்திரை ஏற்படுகிறது..
image

சடத்துவ பண்பின் காரணமாக அந்த திரவத்திரை நாக்குடன் இணைந்து மேல் நோக்கி செல்லும்…
இது கொஞ்ச நேரம்தான் நடக்க இயலும்.. விரவிலேயே புவி ஈர்ப்பு விசை அதை கீழ் நோக்கி இழுத்து விடும்.
எனவே அதற்கு முன் மிக விரைவாக , பூனை தன் நாக்கை வாய்க்குள் இழுத்து கொள்ளும்.. நாக்குடன் சேர்ந்து பாலும் உள்ளே சென்று விடும்.
இது போல மின்னல் வேகத்தில் பல முறை நடைபெறும்..
இதை நாம் பார்த்து இருப்போம்.. அதி நடைபெறும் மெக்கானிசம் இதுதான்…
அதிவேக கேமிராவை வைத்து படம் எடுத்தால் , இதை பார்க்க இயலும்…
இவ்வளவு கவனமாக பால் குடிக்கும் அவசியம் என்ன?
பட்டாம் பூச்சி , கால்களை வைத்தும், காதல் கொண்ட மனித பூச்சி கண்கலை கொண்டும் ருசி அறிவது போல , பூனைக்கு உணர்வு சாதனமாக பயன்படுவது மீசை.. (எனவே அழகு படுத்துகிறோம் என அதை ட்ரிம் செய்து விடாதீர்கள்..)
image

அந்த மீசை ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிந்தாமல் சிதறாமல் பாலை குடிக்க இந்த முறையை பயன்படுத்துகிறது பூனை..
சில விலங்குகள் ஸ்பூன் போல நாக்கை மடித்து பால் குடிப்பதும் உண்டு..
பூனை அப்படி அல்ல.
விலங்குகளை கவனிக்க ஆரம்பிப்பது சுவையான போக்காகவும் , சிந்தனைக்கு விருந்தாகவும் அமையும்..
உதாரணமாக , இப்படி பால் குடிப்பதால் வேறு என்ன அனுகூலம் என யோசித்தால் , பல சிந்தனைகள் தோன்ற கூடும்..
நாய் போல குடித்தால் , சப்தம் அதிகமாகும்.. பூனை பெரும்பாலும் ரகசியமாக இந்த வேலையை செய்யும்… இந்த டெக்னிக் சத்தம் குறைவானது என்பது அதற்கு அனுகூலம்…
நீங்களும் இதை பற்றி யோசித்து பாருங்கள்..

19 comments:

 1. பூனைக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் அருமை. மேலும் தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 2. பூனைக்குள் அறிவியல் அருமை.

  ReplyDelete
 3. "பூனைக்குள் அறிவியல் அருமை"
  நன்றி

  ReplyDelete
 4. பூனைக்குள் இவ்வளவு விசேசமா..?

  ReplyDelete
 5. [im]http://farm5.static.flickr.com/4087/5166507591_88aa370e86_s.jpg[/im]

  ReplyDelete
 6. நண்பா உங்க ஆராய்ச்சி அருமை.

  ReplyDelete
 7. ""நண்பா உங்க ஆராய்ச்சி அருமை"

  .இந்த்த மாதிரி முக்கியமான ஆராய்ச்சினா எனக்கு பிடிக்கும்

  ReplyDelete
 8. ”பூனைக்குள் இவ்வளவு விசேசமா.”

  விலங்குகள் உலகம் வினோதமானது..

  பெரிய பூனைக்ளை விட , குட்டி பூனைதான் விரைவாக குடிக்கும் என்பது இன்னொரு வினோதம்

  ReplyDelete
 9. பூனை மாதிரி இருந்துட்டு இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றீங்களே...

  ReplyDelete
 10. பூனை மாதிரி இருந்துட்டு இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றீங்களே.."

  ஹா .. ஹா ...

  பதிவை விட பின்னூட்டம் அருமைனு எல்லொரு சொல்ல போறாங்க..

  ReplyDelete
 11. நாம தினம் பாக்கும் விஷயத்தில் இத்தனை சுவாரஸ்யமா ? தொடர்க உங்கள் பணி...

  ReplyDelete
 12. அட! பூனைய இவ்ளோ தூரம் கவனிச்சிருக்கீங்க! எனக்கு ரொம்ப பிடித்த வீட்டுப்பிராணி பூனைதான்! ஆனால் அது எப்போதும் காட்டையே தனக்குள் சும்மந்து திரிகிறது!

  ReplyDelete
 13. ஆனால் அது எப்போதும் காட்டையே தனக்குள் சும்மந்து திரிகிறது"

  சூப்பர்

  ReplyDelete
 14. நாம தினம் பாக்கும் விஷயத்தில் இத்தனை சுவாரஸ்யமா ? தொடர்க உங்கள் பணி”’

  நன்றி தினேஷ்

  ReplyDelete
 15. புதிய செய்தி அருமை. அது என்ன சடத்துவப் பண்பு ? விளக்கினால் மகிழ்வேன்.

  ReplyDelete
 16. பூனையைப் பற்றி இன்னுமோர் செய்தி, பூனைக்கென்று எந்த எதிரியும் இல்லை காட்டில். பாம்பைக் கூட பூனை கொன்று விடும். பூனைக்கு இறப்பு பெரும்பாலும் மனிதனாலேயே அல்லது வயதானால் தான்.

  ReplyDelete
 17. பூனைக்கு இறப்பு பெரும்பாலும் மனிதனாலேயே அல்லது வயதானால் தான்.""

  நல்ல தகவல்.

  நன்றி

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா