Tuesday, November 30, 2010

அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு

அம்பேத்கர்...




நாட்டுக்காக போராடியவர்களில் ஒருவர்... அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்..



உழைப்பு, திறமை, நல்ல எண்ணம் என அனைத்தும் கொண்டவர்..



அவரை சிலர் , தங்களுக்கு மட்டும் தலைவர் என அடையாலப்படுத்துவது எனக்கு ஏற்புடையது அல்ல.. அவர் இந்திய தலைவர்களில் ஒருவர் என்பது என் கருத்து...



 அம்பேத்கர் ஒரு ரோல் மாடல் .. அவரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்..



இதற்கு நல்ல வாய்ப்பாக , அவரை பற்றிய திரைப்படம் திரை இடப்பட இருக்கிறது..



அது பற்றிய செய்தி இதோ உங்கள் பார்வைக்கு,,,, நண்பர் உண்மை தமிழனின் அனுமதியுடன், அவர் கட்டுரை இங்கே வெளியாகிறது

******************************************************************



அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!




அம்பேத்கர் படம் பற்றிய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.. தொலைபேசியில் பலரும் அழைத்து திரையரங்குகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள். மேலும் ஐநாக்ஸ் திரையரங்கு பற்றி இறுதி முடிவு எடுக்காததால் தியேட்டர் நிர்வாகமும் நேற்று முன்தினம் வரையிலும் கருத்து சொல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மேலும் நான் விசாரித்தபோது சில தகவல்கள் தெரிந்தன. பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்குக் கொடுத்திருந்த மூன்றாண்டு தவணைக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் தற்போது அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விநியோக உரிமை திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கே திரும்பவும் கிடைத்துவிட்டது.

தற்போது படம் திரையிடல், விளம்பரங்கள் போன்றவற்றை திரைப்பட வளர்ச்சிக் கழகமே செய்து வருகிறது. நேற்று இன்னும் கூடுதலாக சில திரையிடல் வசதிகளை திரைப்பட வளர்ச்சிக் கழகம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில் சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி ஆகிய திரையரங்குகளில் மதியக் காட்சியில்(Noon Show) மட்டும் அம்பேத்கர் படம் திரையிடப்படுகிறதாம். வரும் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில்(சனி, ஞாயிறு) மட்டும்தானாம்.

ஆல்பர்ட் திரையரங்கில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தினம்தோறும் ஒரு வாரத்திற்கு காலை காட்சியாக(11.30 மணிக்கு) மட்டும் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படுவதாக நேற்று மாலை முடிவான, இறுதியான செய்தியாகக் கூறினார்கள்.

இது பற்றி இன்று வெளியான 'தினத்தந்தி', 'தினகரன்' பத்திரிகைகளில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.


அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். சென்னைவாழ் பதிவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

காலை காட்சி மட்டும்தான் என்பது நமக்கு மிகவும் சிரமமானதுதான். வார நாட்களில் செல்ல முடியாது என்றாலும்.. டிசம்பர் 4, 5(சனி, ஞாயிறு)தேதிகளில் காலை, மதியம் என இரண்டு காட்சிகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாளில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் திரையரங்கிற்குச் சென்று படத்தினை கண்டுகளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


Posted by உண்மைத் தமிழன்(15270788164745573644)

7 comments:

  1. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டியபடம். தவறாமல் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதற்கு முன்னதாகவே பார்க்க வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்... ஆனால் குறைவான திரையரங்குகளில் வெளியாவது ஏமாற்றத்தை தருகிறது...

    ReplyDelete
  3. நீண்ட நாட்களாக அடிபடும் பெயா். பெரியார் படத்தை வெளிக்கொணா்ந்தவா்கள் இதையும் செய்தால்...

    ReplyDelete
  4. அனைவரும் பார்க்க வேண்டிய படம். நன்றி.

    ReplyDelete
  5. நண்பரே!

    பகிர்வுக்கு நன்றி.

    என வலைப்பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. "தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். "

    s .. done...

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வதற்கு முன்னதாகவே பார்க்க வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்...

    thank u

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா