Tuesday, November 23, 2010

மந்திரப் புன்னகை- எனது பார்வையில்

 மந்திரப் புன்னகை
எல்லா கெட்ட பழக்கங்களும் உள்ள புத்திசாலி எஞ்சினியர்  என்று ஆரம்பமே அமர்க்களம்..   இந்த கேரக்டரை சாஃப்ட்வேர் எஞ்சினியர் அல்லது கால்
செண்டர் ஸ்டாஃப் என சொல்லாமல் விட்டதே வித்தியாசமாக இருக்கிறது.
அயன் ராண்ட் நாவலில் வரும் கதாநாயகன் போல என நினைக்கும்போதே அப்படி இல்லை என தெரிகிறது.
யாருடனும் ஒட்டாமல் வாழும் இவன் , ஒரு பெண்ணை நேசிக்க ஆரம்பிக்கிறான்.. அவளும் நேசிக்கிறாள்…
பொறுக்கியான உன்னை ஒரு பெண் காதலிக்கிறாள் என்றால் அவளும் உன்னைப்போல ஒரு சாக்கடையாகத்தான் இருக்க முடியும்,, அவ்ளை நம்பாதே என அவர் தந்தை எச்சரித்தும் அவளையே திருமணம் செய்ய முடிவு செய்கிறான்..
இந்த நேரத்தில் அவள் இன்னொருவருடன் படுக்கையில் இருப்பதை பார்த்து அதிர்கிறான்… நாமும் அதிர்கிறோம்…



அதன் பின் நடக்கும் சம்பவங்கள் லாஜிக்கலாகவும் , விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது..
எதிர்பாராத பல திருப்ப்ங்கள் படத்தை ரசிக்க செய்கின்றன…
கதாநாயகனின் பிரச்சினையை மட்டுமே நம்பி படம் முழுதையும் கொண்டு செல்லாமல், காதலை மையமாக வைத்து இருப்பதுதான் படத்தை காப்பாற்றி இருக்கிறது… இல்லை என்றால் பார்த்திபன் படம் போல ஆகி இருக்கும்..
வேறு யார் நடித்து இருந்தாலும் இந்த அளவுக்கு இயல்பாக இருந்திருக்க முடியாது…
கரு.பழனியப்பனை பாராட்டியே ஆக வேண்டும்..
எந்திரன் போல இல்லாமல் , சந்தானத்துக்கு இதில் நல்ல வாய்ப்பு,,, அருமையாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்..
கண்ணில் தூசு எடுக்கும் காட்சி, வீட்டில் பஞ்சாயத்து, காண்டம் வாங்குவது என அமர்க்க்ளம்..
கதாநாயகியாக மீனாட்சி .. கச்சிதம்…  விலைமாதுவாக வருபவரும் மனதில் நிற்கிறார்…
எல்லாம் இருந்தாலும் மேன் ஆஃப் த மேட்ச் அந்த தந்தைதான்…
லேசாக பழைய தமிழ் படங்களின் வாசனை அடிப்பது, ஒரு பாடல் தவிர மற்ற பாடல்கள் சராசரியாக இருப்பது, செயற்கையாக திணிக்கப்பட தண்ணி பாடல் ,இரட்டை அர்த்த காமெடி என குறைகள் இருந்தாலும், வித்தியாசமான , நல்ல படம் என்பதை மறுக்க முடியாது…

மந்திரப் புன்னகை-  வித்தியாச புன்னகை


உடனே சி டி வாங்க கிளம்பி விடாதீர்கள்.. திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் 

11 comments:

  1. இப்ப என்ன அவசரம்?

    ReplyDelete
  2. "இப்ப என்ன அவசரம்?"

    எல்லாம் உங்களுக்காகத்தான் :-)

    ReplyDelete
  3. உங்களுடைய விமர்சனம் நல்லா இருக்கு... நான் இன்னும் கொஞ்சம் விலாவரியாக எழுதியிருக்கிறேன்... நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும்...

    ReplyDelete
  4. கண்டிப்பா பார்த்திடுறேன் பாஸ் :)

    ReplyDelete
  5. ”நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும்”

    படிச்சுட்டேன்...

    உங்களை சந்திக்க நினைத்தேன் ..இயலாமல் போய் விட்டது

    ReplyDelete
  6. கண்டிப்பா பார்த்திடுறேன் பாஸ் :)"

    பாருங்க..கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்

    ReplyDelete
  7. Sorry, I couldn't read your post due to some error. I will check it again, later.

    ReplyDelete
  8. "I will check it again, later. "
    ok madam

    ReplyDelete
  9. படங்களைப்பார்ப்பது மட்டுமல்லாமல் அதை நன்கு
    கச்சிதமாக விமர்சிக்கவும்தெரிந்திருக்கிரது.
    நன்று.

    ReplyDelete
  10. நண்பர் இளா அவர்களே . உங்கள் ஃபீட் பேக் பயனுள்ளதாக இருந்தது . அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா