Saturday, November 27, 2010

நந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…

ஒரு சராசரி தமிழனுக்கு ஆயிரம் பிரச்சினைகள்…
சரி, கொஞ்ச நேரம் படமாவது பார்க்கலாம் என்று பார்த்தால் அதே குத்து பாட்டு, அதே அறிமுகப்பாட்டு அதே  ப்ஞ்ச் டயலாக் ,ஃபார்முல படங்கள்தான் பார்க்க கிடைக்கின்ற்ன..
இதை பார்க்க, ட்ராஃபிக்கில் நீந்தி சென்று, பெட்ரோல் செலவு செய்து தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டுமா என பலர் திரை அரங்கே செல்வதில்லை…



இதை புரிந்து கொள்ளாமல் படங்கள் ஒரே டெம்ப்ளேட்டில் வெளியாவதால்தான், பல திரை அரங்குகள் ஷாப்பிங் காம்ப்ள்க்ஸ் ஆகிக்கொண்டு இருக்கின்றன..
இத நிலையில் எந்திரன் வந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக அமைந்தது..
மைனாவும் சிறந்த முறையில் எடுக்கப்பட்ட நல்ல பொழுது போக்கு படம்..
மந்திர புன்னகை வித்தியாசமான படமாக இருந்தது..
தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது போல என நினைத்து ஒரு சராசரி ரசிகன் நந்தலாலா போனால் என்ன ஆகும்..
தன் ஆயிரம் பிரச்சினைகளை மறக்க, திரை அரங்கில் நுழையும் ரசிகனை, இனி படத்துக்கு வருவியா ,, வருவியா,,, என தூக்கி போட்டு மிதிக்கிறார் இயக்குனர்…
ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது..
இன்னொரு டெம்ப்ளெட் படம்…
கம்ர்சியல் டெம்ப்லேட் அல்ல..
தமிழ் நாட்டை பொறுத்த வரை, விருது படத்துக்கு என டெம்ப்ளேட் உண்டு..
விதி விலக்கான குண நலம்/ உடல் நலம்  கொண்ட கதானாயன்.. படம் முழுக்க இழையோடும் சோகம், இளையராஜாவின் உருக்கமான இசை, சில நல்ல காட்சிகள்..
இந்த டெம்ப்ளேட்டை சிலர் திறமையாக பயன்படுத்த மாட்டார்கள்..
மிஷ்கின் மிக திறமையாக இந்த டெம்ப்ளேட்டை பயன் படுத்தி, அறிவு ஜீவிகளை கவர்வதில் வெற்றி கண்டுள்ளார்..
எதிலும் ஒத்து போகாத, ஜெயமோகன்  சாரு போன்றோர் இதை பாராட்டுவதில் ஒத்து போவது , அவர் வெற்றிக்கு ஆதாரம்..
ஆனால் சராசரி ரசிகன் பார்வையில் இது ஒரு குப்பை படம்..
மெதுவாக நகரும் காட்சிகள், யூகிக்க கூடிய காட்சி அமைப்பு, எல்லா பாத்திரங்களும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டது போல செயற்கையாக இருப்பது , எரிச்சலூட்டும் திரைக்கதை என ஏற்கனவே பல தொல்லைகளில் இருக்கும் ரசிகனை மேலும் துன்ப படுத்துகிறது படம்..
ஒன்ரு , நல்ல பொழுது போக்கை தர வேண்டும்..அல்லது யதார்த்தமாக சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும்..
இதில் இரண்டும் இல்லை..
தமிழ் நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன.. எத்தனை கதை களன்கள் இருக்கின்றன, கிராமங்களில் பிரச்சினை., வேலையில் வொர்க் ஸ்ட்ரஸ் உள்ளிட்ட பிரச்சினைகள், உறவு சார்ந்த பிரச்சினைகள், என ஆயிரம் இருக்கின்றன.
இதை எல்லாம் விட்டு விட்டு, வெளி நாட்டு படத்தை பார்த்து படம் எடுக்க பார்ப்பது கேலிக்குரியது..
தமிழ் நாடும் உலகத்தில்தான் இருக்கிறது..
எனவே சமகால தமிழ் நாட்டை பிரதி பலிக்கும் வகையில் படம் எடுத்தால் அதுவும் உலக சினிமாதான்…
அப்படி எடுக்க தெரியவில்லையா…
ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை, ஒரு ஃபாண்டசியை வழங்குங்கள்..
இப்படி காப்பி அடிப்பது உள்ளூரிலும் விலை போகாது..
வெளினாட்டினர் பார்த்தாலும் சிரிப்பார்கள்..
கண்டிப்பாக படம் குப்பை கிடையாது.. பல நல்ல காட்சிகள் இருக்கின்றன.. இசையை சொல்லவே வேண்டாம். அருமை..
இதையும் மீறி படம் தோல்வி அடைந்தால்தான் , இனி மேலாவது தமிழ் நாட்டில், தமிழ் நாட்டை பற்றி படம் எடுப்பார்கள்..
இல்லை என்றால், இதே டெம்ப்ளேட்டில் , பல ஈரான் , லத்தின் மொழி, ஜப்பான் மொழி படங்கள் தமிழாக்கம் செய்யப்படும் அபாயம் இருக்கிறது..
காப்பி அடிப்பதை நாம் ஏன் பார்க்க வேண்டும்.. நேரடியாக ஜப்பான் படததையே பார்க்கலாமே என ரசிகன் நினைக்க ஆரம்பித்தால், தமிழ் திரை உலகம் அழிந்து விடும்.
இதை தவிர்த்தாக வேண்டும்.. பதிவர்களுக்கு அந்த வகையில் முக்கியமாக கடமை இருக்கிறது…
மிஷ்கின் நல்ல இயக்குனர்..
முந்தைய படத்தில், வக்கிரமான காட்சிகள் வைக்கும் வாய்ப்பு கதையில் இருந்தும் கூட , அப்படி செய்யாமல், ஒரு விறுவிறுப்பான படம் வழங்கியவர்..
இவர் படித்து வீணாக போனது வருத்தமாக இருக்கிறது…
புத்தகத்தை வேண்டாம்.. மக்களை படியுங்கள் , சமுதாயத்தை படியுங்கள் என கேட்டு கொள்கிறேன்..
கண் திறந்து பார்த்தால் ஆயிரம் கதைகள் கொட்டி கிடக்கின்றன…

மொத்ததில் நந்தலாலா- நொந்தலாலா
காசு கொடுத்து பார்க்க சொன்னால் கூட படத்தை பார்க்காதீர்கள் ..

25 comments:

  1. // இன்னொரு டெம்ப்ளெட் படம்… //
    சரிதான்... ஆனால் நான் தாய்ப்பாசத்தில் ரொம்ப ரொம்ப வீக்... அதனாலோ என்னவோ படம் எனக்கு அதிகம் பிடித்துவிட்டது...

    // மிஷ்கின் மிக திறமையாக இந்த டெம்ப்ளேட்டை பயன் படுத்தி, அறிவு ஜீவிகளை கவர்வதில் வெற்றி கண்டுள்ளார்.. //
    நானும் அறிவுஜீவியா...?

    // இதையும் மீறி படம் தோல்வி அடைந்தால்தான் , இனி மேலாவது தமிழ் நாட்டில், தமிழ் நாட்டை பற்றி படம் எடுப்பார்கள்.. //
    கவலையே வேண்டாம்... படம் நிச்சயம் தோல்விதான் அடையும்...

    இயக்குனரின் முந்தய படங்கள் கூட காப்பி அடிக்கப்பட்டவையே... :)

    ReplyDelete
  2. தோல்வி அடையுமா ? நல்ல சேதி சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  3. தோல்வி அடையுமா ? நல்ல சேதி சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  4. ஏன் பாஸ் இவ்வளவு கோவம்?

    ReplyDelete
  5. DVD யில் பார்க்கிற அளவிற்கு சரி படம் தேறுமா?

    ReplyDelete
  6. ஏன் பாஸ் இவ்வளவு கோவம்?"

    கோபம் அல்ல... வேதனை...

    ReplyDelete

  7. DVD யில் பார்க்கிற அளவிற்கு சரி படம் தேறுமா “

    காசு கொடுத்து கஷ்டத்தை வாங்க வேண்டுமா..

    ReplyDelete
  8. நல்ல இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இத்தகைய முயற்சிகளையும் பாராட்டக் கூடாது ?

    ReplyDelete
  9. "கனாக்காதலன் said...
    நல்ல இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இத்தகைய முயற்சிகளையும் பாராட்டக் கூடாது ? "

    பொழுது போக்கு படத்தை அப்படி செய்தால் ஏற்கலாம்..
    ஆனால் ஒரு நாட்டில் குறியீடாக காட்டப்படும் சில காட்சிகளை அப்படியே காப்பி அடிக்கும் போது, இன்னொரு நாட்டில் அதற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகிறது..

    அதை கூட மன்னித்து விடலாம்..

    ஆனால் காபி அடித்து விட்டு , தானே உருவாக்கியதாக பேசுவது தவறு..
    அதிகார பூர்வ டப்பிங் படங்களையோ, அதிகார பூர்வ ரீ மேக் படங்களையோ ஏற்பதில் தடை இல்லை..

    இப்படி அதிகார பூர்வமாக செய்தால், சில காட்சிகள் செயற்கையாக திணிக்கப்பட்டதாக தோன்றாது.. அந்த நாட்டு பாணி என உணர முடியும்...

    ReplyDelete
  10. இதை விட நல்ல கதைகளை இங்கிருந்தே பெற முடியுமே? அப்புறம் ஏன் காப்பி என்பதே நம் ஆதங்கம்..

    மொழி பெயர்ப்பு இலக்கியங்களை ரசிக்கிறோம்...

    ஆனால், போரும் அமைதியும் நாவலை தன் நாவல் போல ஒரு தமிழ் எழுத்தாளர் வெளியிட்டால் ஏற்போமோ...?

    ரஷ்ய பனியின் நடப்பதை, சென்னை ப்னியில் நடப்பதாக எழுதினால் அபத்தமாக இருக்காதா ?

    ReplyDelete
  11. நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு விமர்சிப்பதே முறையாகும். பார்த்துவிட்டு வருவேன். :)

    ReplyDelete
  12. மாறுபட்ட பார்வையில், உங்கள் விமர்சனமும் நல்லா இருக்கே.....

    ReplyDelete
  13. உங்க விமர்சனத்தை பார்த்துதான் நொந்துகொள்ள வேண்டும்..நந்தலாலாவை பார்த்து அல்ல நண்பரே..கூகுள்காரானை சொல்லனும்...

    ReplyDelete
  14. மாறுபட்ட பார்வையில், உங்கள் விமர்சனமும் நல்லா இருக்கே."

    நன்றி..

    ReplyDelete
  15. ”நந்தா ஆண்டாள்மகன் said...
    உங்க விமர்சனத்தை பார்த்துதான் நொந்துகொள்ள வேண்டும்”

    :(

    ReplyDelete
  16. நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு விமர்சிப்பதே முறையாகும். பார்த்துவிட்டு வருவேன். : “

    ஒரு நண்பர் கஷ்டத்தில் சிக்கும்போது கூட இருப்பதே நியாயம்..
    ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடன் வந்து இன்னொரு முறை அவதிப்பட விரும்பவில்லை..

    தனியாகவே போய் வாருங்கள்.. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  17. //ஒரு நண்பர் கஷ்டத்தில் சிக்கும்போது கூட இருப்பதே நியாயம்..
    ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடன் வந்து இன்னொரு முறை அவதிப்பட விரும்பவில்லை..
    //

    விமர்சனத்த விட இது நல்லா இருக்கு..

    ReplyDelete
  18. ellaa padangalukkum oru maattru karuthu irukkathanee seiyum.. athu pola ungalin intha karuthaiyum eerkiren.. een entral ithu ungal karuthu mattum.. athupolathaan... enthiranai pattriya.. karuthum..

    ReplyDelete
  19. 'விமர்சனத்த விட இது நல்லா இருக்கு "

    அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன் :-(

    ReplyDelete
  20. een entral ithu ungal karuthu mattum.. ”

    என் ஆதங்கத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை, கேபிள் ஜீ..

    i will send u detailed mail ..

    ReplyDelete
  21. ஒரு வித்தியாசமான பார்வை.

    மசாலாப்படம் எப்படி ஒரு template-ஒ அதே போல், "உலகப்படம்" என்பதும் ஒரு template தான் எனும் உங்களின் பார்வை சிந்திக்கத் தகுந்தது தான் :)

    ஆனால், எந்திரன் என்பதும் ஒரு பக்க பக்கா "Hollywood" template படம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    உங்களுக்கு Hollywood template பிடிக்கிறது , சிலருக்கு ஈரான்/Japan template பிடிக்கிறது.

    Loosu-la vidunga boss.

    இது DVD காலம்.

    ReplyDelete
  22. //ஆனால், எந்திரன் என்பதும் ஒரு பக்க பக்கா "Hollywood" template படம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    உங்களுக்கு Hollywood template பிடிக்கிறது , சிலருக்கு ஈரான்/Japan template பிடிக்கிறது. //
    மிகச்சரி...

    ReplyDelete
  23. ஆனால், எந்திரன் என்பதும் ஒரு பக்க பக்கா "Hollywood" template படம் என்பதை மறந்துவிடாதீர்கள். “

    உண்மை.. ஆனால் ஒரு விஷ்யம்...

    ஜெஃப்ரி ஆர்ச்சர் நாவலை போல ஒருவர் இந்தியாவுக்கு ஏற்றபடி எழுதினால் அதை கண்டு கொள்ள தேவையில்லை..
    ஆனால், வெண்ணிற இரவுகள், பைத்தியக்காரன்ம் போன்றவற்றை சென்னையில் நடப்பது போல எழுதுவது தவறு...
    மூல நாவலில் இருப்பது கதை மட்டும் அல்ல... ஒவ்வொரு வீடும், தெருவும், பனியும்,இரவும் என எல்லாம் முக்கியம்..

    ரஷ்ய தெருக்களில் ஒருவன் பனியில் நடக்கிறான் என்பதும் சென்னை தெருவில் ஒருவன் பனியில் நடக்கிறான் என்பது வேறு வேறு..

    எனவே மூல நாவலை அப்படியே மொழி பெயர்க்கலாமே தவிர, தமிழ்”படுத்த” கூடாது

    ReplyDelete
  24. உங்களுக்கு Hollywood template பிடிக்கிறது , சிலருக்கு ஈரான்/Japan template பிடிக்கிறது”

    சரியா சொன்னிங்க

    .

    ReplyDelete
  25. மிகச்சரி.. “

    ஆமாம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா