Thursday, November 25, 2010

தேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவல்கள்



த்ய சாய் பாபாவின் 85 ஆவது  பிறந்த நாளை முன்னிட்டு, தினமணி சிறப்பு இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது..
அதிலிருந்து சில சுவையான பகுதிகள் உங்கள் பார்வைக்கு..

( இவை என் கருத்துக்கள் அல்ல... என் கருத்துக்களை பிரதிபலிப்பவையும் அல்ல..  ஒரு பார்வையாளனாக நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன் )

***********************************************************************
பிரதமரா , முதலமச்சரா ?  



பெங்களூரில் ஒரு விழா. கர்நாடக முதல்வர் தேவே கவுடா உள்ளிட்ட பிரமுகர்கள் மேடையில் இருந்தார்கள்.. பாபா அருளாசி வழங்க தன பேச்சை ஆரம்பித்தார்..


" மாண்பு மிகு பிரதமர் தேவே கவுடா அவர்களே " என பேச்சை ஆரம்பிக்க , ஒருவர் அவசரமாக பாபா அருகே சென்றார்..
" அவர் பிரதமர் அல்ல... முதல்வர் " 

பாபா சிரித்தபடி, தேவே கவுடாவை ஒரு வினாடி பார்த்தார்..
மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்..
" மாண்பு மிகு பிரதமர் தேவே கவுடா அவர்களே " 

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை...

இது நடந்து இருபத்து நாலாம் நாள் தேவே கவுடா பிரதமர் ஆனார்..   யாரும் அவர் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கவே இல்லை  

உயிருக்கு ஆபத்து     

ரு முறை பாபா கடும் வழியால் அவதி பட்டார்.. பரிசோதித்த டாக்டர்கள், அவரது கடல் வால் உடைந்து ரத்தத்தில் சீழ் கலந்து விட்டது.. உயிருக்கு ஆபத்து என்றனர்..
பாபா கவலைப்பட வில்லை...
பிறகு நடந்த பஜனை நிகழ்ச்சியில் சரளமாக பேசினார்..
" என் பக்தர் ஒருவர் உடல் நிலை குறைவால் கஷ்டப்பட்டார்.. அந்த நோயை கொஞ்ச நேரம் நான் வாங்கி , அவரை குணப்படு த்தினேன்.. 
இதை அற்புதம் என நீங்கள் நினைக்கலாம்..  அப்படி பார்த்தால் மூச்சு விடுவது கூட அற்புதம்தான்.. இதுவே கடவுளின் சக்திக்கு சான்று " என்றார்..
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அசந்து விட்டனர்..  அவரது குடல்  வால் நார்மலாக இருந்தது 

சமுதாய பணி


ஆன்மிக பணிகள் மட்டும் இல்லாமல் சமுதாய பணிகளும் செய்து வருகிறார்.. சென்னைக்கு கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து நீர் கிடைக்க வழிவகுத்தார்.. இதற்காக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது..

சிறந்த மதம் எது ? 
எல்லா மதங்களும் மனிதன் தன இதயத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என சொல்கின்றன.. கோபம், தாபம், பொறாமை, வெறுப்பு இவற்றில் இருந்து நம் இதயத்தை விடுவிக்க வேண்டும். நான் மேல், இன்னொருவர் கீழ் என்பதெல்லாம் அகம்பாவம் நிறைந்த இதயத்தில் இருந்து தோன்றுவதுதான். 
யாராவது தன்னை மேலானவன் என நினைத்தால், தன மதமே உயர்ந்தது என நினைத்தால் அவன் கடவுள் நம்பிக்கை விட்டு வழுவி இருக்கிறான் என அர்த்தம். 
- பாபா  

வாழும் தெய்வம் 
தினமணி வெளியீடு 
விலை - ஐந்து ருபாய் 

4 comments:

  1. இதுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு ????

    [im]http://totalchild.com.my/blog1/wp-content/uploads/2010/05/confused1.jpg[/im]

    ReplyDelete
  2. எல்லா மதங்களும் மனிதன் தன் இதயத்தை சுத்தமாக வைத்து இருக்கவேண்டும் என் சொல்கின்றன. சத்யமான வார்த்தைகள்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா