Thursday, November 3, 2011

கோட்டூர்புரம் நூலக மாற்றம்- வாசகர்களின் பார்வையில்...

கோட்டூர்புரத்தில் இருந்த அண்ணா நூலகத்தை மாற்றப்போவதாக அரசு அறிவித்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

என்ன பிரச்சினை என்றால் நூலகங்களுக்கே செல்லாதவர்கள்தான் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.
பொழுது போக்குக்காக நூலகம் செல்வது என்பது வேறு விஷயம். ஆனால் , வேலை தேடுபவர்கள் , மேற்படிப்பு படிப்பவர்கள் போன்றோர் நூலகங்களையே நம்பி இருக்கின்றனர்.

இவர்கள் பார்வையில் இதை அலசலாம்.

ஐ ஏ எஸ் போன்ற படிப்புகளுக்கு தயார் செய்பவர்கள் கன்னிமரா நூலகத்தில் அமர்ந்து படிப்பதை காண இயலும். பக்கத்திலேயே தேவனேய பாவாணர் நூலகம் , பிரிட்டிஷ் நூலகம், அமெரிக்கன் கவுன்சில் நூலகம் , ஜெர்மன் நூலகம் போன்றவை உள்ளன.

ஃப்ரீ லேன்ஸ் செய்தியாளர்கள், மார்க்கெட்டிங்கில் இருப்பவர்கள், பிசினஸ் செய்பவர்கள் , எழுத்தாளர்கள் போன்றோர்களுக்கு நூலகங்கள் ஒரே இடத்தில் இருக்காமல், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தால் நல்லது.

வேலை காரணமாகவோ, ரிலாக்ஸ் செய்யவோ பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில், எங்கு சென்றாலும் அங்கு ஒரு நூலகம் இருப்பது இவர்களுக்கு நல்லதே.

ஆனால் மாதசம்பளத்துக்கு வேலை செய்பவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் , நூலகங்கள் ஒரே இடத்தில் இருந்தால்தான் நல்லது.

 நானெல்லாம் லீவு போட்டு விட்டுத்தான் நூலகம் செல்ல முடியும். கோட்டூர்புரத்தில் ஒரு நூலகம் , எழும்பூரில் ஒரு நூலகம் என்று இருந்தால் , கஷ்டம். ஒரு நாள் லீவு எடுத்தால் , எல்லா நூலகங்களும் செல்லும்படி இருக்க வேண்டும்.

அதே போல , தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கும் , ஒரே இடத்தில் நூலகங்கள் இருந்தால்தான் நல்லது.

எனவே காரணங்கள் என்னவாக இருந்தாலும், கோட்டூர்புரத்தில் இருந்து நூலகத்தை இடம் மாற்றியது நல்லது.

 வெறுமனே செய்திகளில் நூலக திறப்பு மற்றும் இடம் மாற்றத்தை கேள்விப்பட்டு விட்டு, சிலர் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்படுகின்றனர். இவர்களுக்கும் நூலகங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

எனவே அரசு இந்த முடிவில் உறுதியாக இருந்தால், நூலக பயனாளிகள் மனதார வாழ்த்துவார்கள்.

நவீன வசதிகளுடன் டி பி ஐயில்  நூலகம் உருவாக்குங்கள். சொன்னப்டி மருத்துவமனையும் அமையுங்கள்.
அப்படி செய்யாவிட்டால், வாய்ப்பேச்சு வீரர்களுக்கு நீங்களே இன்னொரு வாய்ப்பு கொடுத்த மாதிரி ஆகி விடும்.3 comments:

 1. பார்வையாளரே.. உங்களின் பார்வை மாற்று சிந்தனையாக உள்ளது..

  ஆனாலும் அரசின் இந்த முடிவை வரவேற்பவனாக இருக்க முடியவில்லை... நூலகம் என்று ஒரு கட்டிடத்தை கட்டிவிட்டு அதன் அமைப்பை மாற்றி மருத்துவமனை ஆக்கவேண்டிய அவசியம் என்ன?.. புதிதாக ஒரு கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனைக்கென்றே உருவாக்கலாமே.. ஏற்கனவே தலைமை செயலக கட்டிடத்தை காலி செய்து வாடகை கட்டிடமான கோட்டைக்கு மாற்றியது தமிழக அரசு.. இதுமாதிரி ஒரு கட்டிடத்தை மாற்றி இன்னொன்றாக செய்வதற்கான பொருட்செலவை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?

  செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும்போது.. இததூக்கி அங்கபோடு.. அத தூக்கி இங்கபோடு என்று கட்டிடங்களை தான் மாற்றுகிறார் என்றால் ஐஏஎஸ் அதிகாரிகளையும் கூட.. இப்படி இவர்களை அடிக்கடி மாற்றினால் இவர்கள் புதிய வேலையை கற்றுக்கொண்டு செய்வதற்குள்..அடுத்த மாறுதல் வந்து நிற்கும்...

  ReplyDelete
 2. இந்த விஷயத்தில் எனக்கு மாற்றுக்கருத்துதான் சார். நாளை வேறு கட்டிடத்தை இட மாற்றம் செய்வார் மேடம். காழ்ப்புணர்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  ReplyDelete
 3. காழ்ப்புணர்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை."

  இருக்கலாம். அதைப்பற்றி நான் பேசவில்லை

  கன்னிமராவில் இருந்து டி பி அய்க்கு செல்வது எளிதா அல்லது கோட்டூர்புரம் செலவது எளிதா என்பதை பாருங்கள்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா