Monday, November 21, 2011

செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூலகம் - எக்ஸ்ளூசிவ் படங்கள்

சி சு செல்லப்பாவின் எழுத்தை படித்து நெகிழ்ந்ததை எழுதினேன், அவ்வளவு உன்னத எழுத்தாளரான அவர் தன் புத்தகங்களை விற்க மிகவும் கஷ்டப்பட்டாரம். கேள்விப்பட்டு வருத்தமாக இருந்தது.

இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இணையம் அவருக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதை எல்லாம் பார்த்தால், இப்படி கஷ்டப்படுவதை விட , யாராவது அரசியல் தலைவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நன்றாக இருந்தால்கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இன்றைய அறிவு ஜீவிகள் , சூட்கேஸ் பெறும் சாமர்த்தியம் இன்றி , வெறும் சிக்கன் பிரியாணிக்கும் லெக் பீசுக்கும் மயங்கி , உளறிக்கொட்டுவது பரிதாபம்.

ஆனால் அவர்களை சொல்லி தவறில்லை அவர்களை பராமரிக்க , டாக்டர்கலைஞரும் , புரட்சி தலைவியும் போட்டி போட்டால் , அவர்களுக்கு டிமாண்ட் இருக்கும். பேரம் பேசலாம்.

ஆனால் ஜெ, இவர்க்ளை சீந்தாத நிலையில் கலைஞர் என்ன கொடுத்தாலும் ஏற்க வேண்டிய நிலை.

சாப்பிட்ட பிரியாணிக்கு வஞ்சகம் இல்லாமல் நன்றாகவே பேசினார்கள்.

அண்ணா நூலகம் ஒரு சொர்க்கலோகம், குறைகளே இல்லாத நூலகம் என்றெலாம் உளறினார்கள்.

இதற்கெல்லாம் ஏழைகளின் காசுதானே செலவாகிறது என்று கேட்டால் பதில் இல்லை.

இதனிடையே வெளியூர் நண்பர்கள் சிலர், நூலகத்தின் உண்மை நிலைதான் என கேட்டார்கள்..

பலரும் நக்கீரனை படித்து விட்டு ,  தாமே கண்டு பிடித்தது போல எழுதுவதால் , உண்மை நிலை தெரிவதில்லை. எனவேதான் கேட்கிறார்கள்

சொல்கிறேன்.. • அங்கு வேலை செய்பவர்கள் சிறப்பானவர்கள். குறை சொல்ல கூடாது.
 •  நல்ல புத்தகங்கள் இருக்கின்றன
 • ஆனால் அனாவசிய செலவு ஏராளம். 
 • இதே நூலகம், இதே  ஊழியர்களோடு டி பி அய்யில் இருந்தால் , ஆயிரம் மடங்கு பலனுண்டு 
இவ்வளவு செலவு செய்துமேகூட பணப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள்.

ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியரை செக்ஸ்பிரியர் என எழுதுவார்களா? எழுதினால் அறிவுலகம் விட்டு விடுமா? 

ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் பெயரகளை கன்னா பின்னாவென எழுதி வைத்து இருக்கிறார்கள் , இந்த உலகத்தர மிக்க நூலகத்தில்.அதை பிரியாணி மயக்கத்தில் எந்த ஒரு அறிவு ஜீவியும் சுட்டிக்காட்டவில்லை. 

மேலும் பல்வேறு குளறுபடிகள்..

நீங்களே பாருங்கள்


அதென்ன கோத்த மங்கலம்? எதை  கோர்த்தார்? 

மணாளனா? மனளனா? 

பிச்சை மூர்த்தியா? அடப்பாவிகளா !! 

அமுதல்? 

புருஸ்? 

அதற்குள் உடைத்து விட்டீர்களே 

சமுத்திரம் இப்படி ஆகி விட்டார்

திலிபன்?

வல்லினம் வள்ளினம் ஆகி விட்டதே?

நான் இதற்கு ஊழியர்களை குறை சொல்ல மாட்டேன் .  வேலையில் தவறு நிகழ்வது இயல்புதான். 
தமிழ்  பேசும் இந்த அறிவு ஜீவிகள் இதை சுட்டி காட்டி  இருந்தால் , அவர்கள் உடனே சரி செய்து இருப்பார்கள். 
 
ஆனால் இந்த அறிவு ஜீவிகள் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தில் 1 % கூட  மக்கள்  மீதோ தமிழ் மீதோ காட்டுவது இல்லை எனபதே நம் ஆதங்கம்


7 comments:

 1. சரியா சுட்டி காட்டி இருக்கீங்க.

  ReplyDelete
 2. dear sir,
  super...you have done good job....keep rocking..

  ReplyDelete
 3. நல்ல குறிப்பிடல் பிச்சைக்காரன்

  ReplyDelete
 4. இந்த நூலகம் திருவொற்றியூரில் இருந்தால் சூப்பரா இருக்குமில்ல என்று என்னிடமும், தம்பி இந்த நூலகத்தை நந்தனத்திற்கு மாற்ற போராடுவோம் என்று சிவகுமாரிடமும், நாம் ஏன் இந்த நூலகத்தை மதுரைக்கு பெயர்த்துக் கொண்டு செல்லக்கூடாது என்று மணிவண்ணனிடமும் கேட்டாலும் கேட்பீர்கள்...

  நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை... (மைனா பட காமெடி பார்க்கவும்)

  ReplyDelete
 5. சரி தவறுகள் இருந்தா உடனே மூடிடனுமா?இல்லை மருத்துவமனையா மாற்றிடனுமா?ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் உள்ளது?அதையும் காட்டுங்கோ !!

  ReplyDelete
 6. இதை அங்குள்ள நூலகரிடம் சுட்டி காட்டினீர்களா?

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா