Saturday, November 5, 2011

முதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு.

வணக்கம்.

அரசியல் கட்சிகளிலோ, அரசு பதவிகளிலோ இல்லாத நான் உங்களுக்கு கடிதம் எழுவதற்கு காரணம் நூலக விவகாரம்தான்.

இந்த விவகாரத்தில் அதிகம் பேசுவது சவடால் பேர்வழிகளும், நூலகம் செல்லும் பழக்கம் இல்லாதவர்களும்தான். வெறுமனே செய்தி தாள்களில் விஷயத்தை படித்து விட்டும் , அரசியல் நோக்கங்களுக்காகவும் , செஞ்சோற்று கடனுக்காகவும் , விஷ்யம் புரியாமலும்  பேசுபவர்களின் சப்தத்தில் , உண்மையான பயனாளிகளின் குரல் உங்களுக்கு கேட்காமல் போய் விடக்கூடாது என்பதற்காகவே இந்த கடிதம்..

  நூலக இடம் மாற்றலை எதிர்ப்பவர்கள் பேசும் விஷ்யம் என்னவென்று பாருங்கள். அனைவரும் பேசுவது கட்டடம் பற்றி மட்டுமே. பயனாளிகள் பற்றி எந்த கவலையும் இவர்களுக்கு இல்லை.

முதல்வர் அவர்களே..

பணக்காரர்களுக்கும் , வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டவர்களுக்கும் நூலகங்கள் தேவையில்லை.  ஆனால் எதிர்கால கனவுகளோடு தேர்வுகளுக்கு தயாராகும் எழைகளுக்கும் , வேலை தேடும் நடுத்தர மக்களுக்கும் நூலக்ங்களை விட்டால் வேறு வழி இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு கை கொடுப்பது கன்னிமரா நூலகமும், தேவனேய பாவாணர் நூலகமும்தான்.

தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு , இந்த நூலகங்கள்தான் தெரியும். காரணம் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் இவை உள்ளன.

இந்த நிலையில், சுய விளம்பரத்துக்காக சம்பந்தமே இல்லாத இடமான கோட்டுர்புரத்தில் கோடிக்கணக்கான செலவில் நூலகம் அமைத்தது லாஜிக்கே இல்லாதது.

 இந்த காசில் , மா நிலம் முழுதும் ஆங்காங்கு  நூலகங்கள் அமைத்து இருந்தால் அனைவருக்கும் பயன்பட்டு இருக்கும். அப்படி நடக்கவில்லை.

இந்த தவறை எப்படி சரி செய்வது என்றால் , கன்னிமராவுக்கு அருகில் இருக்கும் டி பி அய்க்கு இடமாற்றம் செய்வதுதான்.. இதைத்தான் உண்மையான் பயனாளிகள் எதிர்பார்த்தார்கள்.

ஒரு வேளை உணவு மட்டுமே உட் கொண்டு , நூலகத்தியே பழியாக கிடந்து படிக்கும் இளைஞர்கள் ஏராளம். இவர்களால் எக்மோருக்கும் , கோட்டுர்புரத்துக்குமாக அலைய முடியாது. முடியவே முடியாது.

சும்மா பொழுது போக்குக்காக ஏதாவது ஒரு இடம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு கோட்டுர்புரம் வசதியாக இருக்க கூடும்,. இன்னும் வேண்டுமானால் ஓ எம் ஆரில் ஒரு பிரமாண்டமான நூலகம் அமைத்தாலும் இவர்களுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் இதனால் ஏழைகளுக்கு என்ன பயன்.

நூலக மாற்றத்தை எதிர்த்து ஆவேசப்படும் இலக்கியவியாதிகளையும், சுகி சிவம் போன்ற கூலிக்க்கு மாரடிக்கும் வியாபாரிகளையும் நான் நூலகங்களில் பார்த்ததே கிடையாது.

எனவே இவர்கள் பேச்சுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காமால், உடனடியாக நூலகத்தை இடம் மாற்றம் செய்தால், பயனாளிகள் உங்களை வாழ்த்துவார்கள்




1 comment:

  1. http://rajinifans.com/images/top_rajini.jpg[/im

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா