Friday, November 19, 2010

கருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை

சின்ன விஷயங்கள் ஒன்று சேர்ந்து , எப்படிப்பட்ட பெரிய விபரீதங்களாக மாறும் என்பதற்கு என் வாழ்க்கை ஓர் உதாரணம்..
வீட்டில் நடந்த சாதாரண விஷயங்கள் , பயங்கரமான சம்பவங்களாக முடிந்ததைப்பற்றி இப்போது நான் சொன்னால் நீங்கள் நம்பலாம் , நம்பாமல் போகலாம்..
ஆனால் நடந்த்தை நடந்தபடி சொல்வது என் கடமை… நாளையே நான் இறந்து போகலாம்,,, மரணதண்டனை விதிக்கப்படலாம்… அதற்கு முன் இந்த உலகத்திற்கு என்ன நடந்த்து என்பதை சொல்லி விட்டால் என் ஆன்மாவுக்கு சற்று அமைதி கிடைக்கும்..
போதுமான அளவு மனக்கஷ்டங்களையும், துயரங்களையும், பயங்கரங்களையும் பார்த்து விட்டேன்..

*****************************

          அன்பு என்பதன் அடையாளமாக சின்ன வயதில் இருந்தேன்,., எனக்கு அன்பை காட்ட தெரியாது.. அன்பை கொட்டத்தான் தெரியும்.
குறிப்பாக விலங்குகளையும் , பறவைகளையும் உயிருக்குயிராக நேசித்தேன்,,,’
அவற்றை அன்போடு தடவி கொடுப்பதிலும், உணவு ஊட்டுவதிலும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வேறு எதுவும் தரவில்லை…
என் வய்தும் அதிகரித்து வ்ந்தது.. வளர்ப்பு விலங்குகள் மேல் என் அன்பும் அதிகரித்து வந்தது,,,
திருமணம் இதற்கு தடையாக இருக்கவில்லை… எனக்கு மனைவியாக வந்தவளுக்கும் இதில் ஈடுபாடு இருந்தது.. எனவே வீட்டில் பல பறவைகள், தங்க மீன், அருமையான ஒரு நாய், முயல்கள் , ஒரு குட்டி குரங்கு ..அப்புறம் ஒரு பூனை போன்றவற்றை வளர்த்து வந்தோம்..
அந்த பூனையை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.. பெரிய பூனை.. அழகென்றால் அப்படி ஓர் அழகு,, அதன் சிறப்பம்சம் , அதன் நிறம்தான்..
கருப்பு நிறம்.. புதிதாக பார்ப்பவர்கள் சற்று திகைக்க கூடும்.. அப்படிப்பட்ட முழுமையான கருப்பு…
“ கருப்பு பூனை வடிவில்தான் பிசாசுகள் நடமாடும்னு என் பாட்டி சொல்லுவாங்க “ என அவ்வப்போது மனைவி பயம் காட்டுவாள்..ஆனால் அதை சீரியசாக வலியுறுத்தியதில்லை..
நானும் இதை எல்லாம் நம்புவதில்லை…
அது தவறோ என இப்போது வருந்தி பயன் எதுவும் இல்லை.. அப்ப்டி நடந்தது என நினைவுபடுத்தி கொள்கிறேன் .. அவ்வளவுதான்..
நான் பலவற்றை வளர்த்தாலும் என் செல்லக்குட்டி இந்த பூனைதான்.. என்னை அது சுற்றி வரும்… எனவே அதற்கு ப்ளூட்டோ என பெயரிட்டேன்.
அதற்கு நான் தான் உணவூட்டுவேன்,, வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது… என் பக்கத்திலேயெ இருக்கும்.. வெளியில் கிள்ம்பினால் அதுவும் என்கூடவே ஓடி வரும்.. தப்பித்து வெளியே செல்வது பெரும்பாடு,,
நாட்கள் செல்ல செல்ல அதன் அன்பும் அதிகரித்து வந்தது..
ஆனால் என் கேரக்டரில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.. எளிதில் கோபப்பட தொடங்கினேன்..எரிச்சல் அடைந்தேன்… மற்றவர் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மையை இழக்க தொடங்கினேன். சில சமயம் என் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு , அதற்கு பின் வருந்தி இருக்கிறேன்..
எனது இந்த மாற்றத்தை வளர்ப்பு செல்லங்கள் உணர்ந்தன.. என் கவனிப்பை நிறுத்த ஆரம்பித்தேன்.. அதோடு இல்லாமல் அவ்வப்போது என் கோபத்தை அவற்றிடம் காட்டவும் ஆரம்பித்தேன்,,
ப்ளூட்டொவிடம் மட்டும் சற்று அன்பாகவே இருந்து வந்தேன்..
ஒரு நாள்.. வழக்கம்போல எரிச்சலுடனும் , கோபத்துடனும் வீட்டுக்கு வந்தேன்.. இது போன்ற சந்தர்ப்பங்களில் , எதிரே வரும் வளர்ப்பு மிருகங்களை ஒரு மிதி விடுவேன்.. அவை அலறிக்கொண்டு ஓடும்..
அன்று என் வருகையை உணர்ந்தோ என்னவோ , எந்த மிருகமும் கண்ணில் படவில்லை…
ப்ளூட்டொ மட்டும் இருந்தது… ஆனால் அதுவும் என்னை பார்த்ததும் மெதுவாக அறைக்குள் செல்ல எத்தனித்தது.. என்னை வெறுக்க ஆரம்பித்து விட்டதா அல்லது தற்செயலாக செல்கிற்தா என யோசிக்கும் நிலையில் நான் இல்லை..
என்னை தவிர்க்கிறது என்ற என்ன எண்ணமே மனதில் ஓங்கியது… எப்படியெல்லாம், வளர்த்தேன்…  அன்பை பொழிந்தேன்…
என்னையே புறக்கணிக்கிறதா..
கோபத்துடன் அதை  விரட்டி பிடித்து தூக்கினேன்… அது முரண்டு  பிடித்தது..
“ஆஆ “ அத பல் லேசாக என் கையில் பட்டு ரத்தம் எட்டி பார்த்தது..
கண்மண் தெரியாத கோபத்தில் , பேனா கத்தியை எடுத்தேன்,,
‘” என்னிடமே விளையாட்டா “ பூனையை பிடித்து அதன் கண்ணில் கத்தியை பாய்ச்சினேன்,, ஒரு கண்ணை தோண்டி எடுத்தேன்,, அதன் அலறலை அலட்சியப்படுத்தி, கச்சிதமாக வேலையை முடித்தேன்..
காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த போதுதான் , என்ன ஒரு பயங்கரமான இழிவான காரியத்தை செய்து இருக்கிறேன் என உணர்ந்தேன்.. ஆனால் இந்த குற்ற உணர்வு என்னை எந்த விதத்திலும் மாற்ற வில்லை..
பூனைக்கு விரைவிலேயே காயம் ஆறிவிட்டது.. அங்கும் இங்கும் ஓடி விளையாடத் தொடங்கியது.ஒற்றைக் கண்ணுடன் அந்த பூனை ந்டமாடும் காட்சி பயங்கரமாக இருக்கும். என் தவறை சொல்லிக்காட்டுவது போலவும் இருக்கும்.
தவறு செய்வது , மற்றவரை துன்புறுத்துவது ஆகியவை முதலில் குற்ற உணர்வை ஏற்படுத்தும்… பிறகு பழகி விடும்.. அதன் பின் அதில் ஒரு வித இன்பம் கிடைக்கும்.. இன்னும் கொஞ்ச காலத்துக்கு பின், அப்படி செய்வது ஒரு வித போதையாக மாறிவிடும்.
துன்புறுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விடும் .
*************************************
ஒரு நாள் காலை… அந்த ஒற்றைக்கண் பூனைக்கு மரண தண்டனை விதிக்க தீர்மானித்தேன்..
எந்த தவறும் செய்யாத அந்த பூனையை, என் செல்ல ப்ளூட்டோவை , என்னையே நம்பி இருக்கும் அந்த அப்பாவி உயிருக்கு தூக்கு தனடனை..
மரத்தில் ஒரு தூக்கு கயிற்றை மாட்டி அதில் பூனையின் கழுத்தில் மாட்டினேன்…
அது உயிருக்கு போராடி, துடித்து , உயிரை விட்டபோது, என் கண்களில் கண்ணீர்..
இந்த பாவத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடைக்காது என தோன்றியது..
அந்த கொடூர செயலை செய்த அந்த நாள் முடிந்து இரவு வந்தது… நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த என்னை அலறல் சத்தமும் வெப்பமும் எழுப்பின..
என் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது,,, நானும், என் மனைவியும் தப்பித்து வெளியே வந்த்தது பெரிய அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.
அழிவு.. முழுமையான அழிவு… எல்லாம் எரிந்து போய் இருந்ததை மறு  நாள் காலையில் வந்து பார்த்தபோது உணர்ந்தேன்.
நான் படுத்து இருந்த அறைசுவர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்தது… அதை சுற்றி பலர் நின்று ஏதோ ஆச்சரியமாக பேசுவதை பார்த்து அருகே சென்றேன்..
” அதிசயமா இருக்கே.. ஒண்ணும் புரியல” அவர்கள் பேச்சுக்கு மத்தியில் சுவற்றை பார்த்து திடுக்கிட்டேன்..
அந்த வெள்ளை சுவற்றில் ஒரு பூனையின் உருவம் புகை போல உருவாகி பதிந்து இருந்தது… அதன் கழுத்தில் கயிறு போல ஒன்றும் பதிவாகி இருந்தது
அதிர்ந்தேன்.,
,படு பயங்கரமான ஒரு வளையத்துக்குள் நான் சிக்கி இருப்பது போல தோன்றியது..
ஆனால் யோசித்து பார்த்தால் இன்னொன்று தோன்றியது..  தோட்டத்தில் அந்த பூனையை தொங்க விட்டபடியே வந்து இருந்தேன். தீயை பார்த்த யாராவது , அந்த பூனையை உள்ளே எறிந்து என்னை எழுப்ப முயன்று இருக்கலாம். அது சுவற்றில் மோதி உருவமாக படிந்து இருக்கலாம்..இதற்கு போய் !!!
அப்படி மனம் சொல்லியதே தவிர இதயம் ஏற்கவில்லை…ஏதோ மாபெரும் தவறு செய்துவிட்டதை போலவே தோன்றியது..
என் இதயம் அந்த பூனைக்காக அழுதது… என் ப்ளூட்டோ மீண்டும் கிடைக்குமா?
*********************************************8
ஒரு நாள், பாரில் ஃபுல்லாக சரக்கடித்து  அரை மயக்கத்தில் இருந்த போது ஏதோ ஒரு சப்தம் என்னை ஈர்த்தது,,,  தட்டுமுட்டு சாமான்களுக்கிடையில் கருப்பாக ஏதோ தென்பட்டது..
என்ன அது..
ஆர்வமாக எடுத்து பார்த்தேன்,,
அட.. என்ன இது? ஒரு கருப்பு பூனை…. ப்ளுட்டோவை போலவே இருந்தது,,,,  ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,,, ப்ளுட்டோ முழுக்க முழுக்க கருப்பு.
இந்த பூனையின் கழுத்து புறத்தில் மெல்லிய வெள்ளைக் கோடு கழுத்தை சுற்றி அழகாக காணப்பட்டது, மிகவும் அழகாக இருந்தது,,,
அதை தொட்டவுடனேயே பூனை என்னுடன் ஒட்டிகொண்டது… வீட்டுக்கு எடுத்து சென்றேன்..
வீட்டுக்கு ஏற்ப த்ன்னை மாற்றிக்கொண்டது பூனை… என்னுடன் விளையாடுவதில் அதற்கு அலாதி இன்பம்… ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு ஏற்படத்தொடங்கியது… அதுவும் , அதன் ஒரு கண் பாதிக்கப்பட்டு இருந்தது பயங்கரமாக காட்சியளித்தது..
அது என்னை பின் தொடர்வதும், என்னை ஒரு மாதிரியாக பார்ப்பதும் என் ஆன்மாவையே நடுங்க வைக்கும்…
இந்த பிரச்சினைகளில் எல்லாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தவள் என் மனைவிதான்..
அவள் எப்போதும் போலவே இருந்தாள்… பூனையை அன்பாக கவனித்துக்கொண்டாள்..
பூனையின் கழுத்தை சுற்றி காணப்பட்ட வெள்ளை வளையம் ஒரு கயிறு போல இருப்பதை அவள்தான் கவனித்து என்னிடம் சொன்னாள்..
அதிர்ந்தேன்,,
அது தூக்கு கயிறு போல இருந்தது,.,
அட கடவுளே… நான் எந்த குற்றத்தை, பாவத்தை , பயங்கரத்தை மறக்க விரும்பினேனோ அது என் கண் முன் நிற்பது போல இருந்தது..
என் பயம் பலமடங்கு அதிகரித்தது,,,
அதை கொல்ல நினைத்தேன்..ஆனால் அதற்கான தைரியம் வரவில்லை…
**********************************************
ஒரு நாள் நானும் மனைவியும் பழைய வீட்டுக்கு சில பொருட்களை எடுக்க சென்றோம்.. பூனையும் கூடவே வந்து எரிச்சல் ஊட்டியது..
மாடியில் ஏறும் போது காலில் நுழைந்து என்னை சற்று தடுமாற வைத்தது அந்த கருப்பு பிசாசு.. எரிச்சல் உச்சத்துக்கு செனறது… இனி பொறுக்க முடியாது.. இந்த சனியன் என்னை கொல்லும் முன் இதை நாம் கொல்ல வேண்டும்..
கோடாலியை எடுத்து எதன் மீது வீச எத்தனித்தேன்..
மனைவி குறுக்கிட்டாள்.. கையை பிடித்தாள்..” பாவம்,, அதை ஒண்ணும்  செய்யாதீங்க”
என்ன விபரம் புரியாமல் இவள்… கோபம் அவள் மீது மாறியது…
என்ன செய்கிகிறோம் என்பதே புரியாமல் அவள் மீது கோடாலியை முழு பலத்துடன் செலுத்தினேன்…
மண்டை பிளந்து கீழே விழுந்தாள்..
அட கடவுளே…  ஒரு கொலை செய்து விட்டேனே….
யோசிக்க நேரமில்லை… யாரும் பார்ப்பதற்குள் இதை மறைக்க வேண்டும்..
சுவற்றின் சில செங்கல் கற்களை எடுத்து விட்டு , அதனுள் அவளை வைத்தேன்.. கீழே கிடந்த கோடாலி, துணி என அனைதையும் உள்ளே தூக்கி போட்டு மூடினேன்,,
அப்பாடா.. தொல்லை முடிந்தது…
சரி, பூனை எங்கே ? கண்ணிலேயே படவில்லை.. சரி,,சனி விட்டது என நிம்மதி அடைந்தேன்..

*************************
வழக்கம்போல போலிஸ் ஃபார்மாலிட்டிகள் நடந்தன,., நான் அதை எல்லாம் அலட்சியமாக சமாளித்தேன்..
கடைசி நாள்..
போலிசார் தம் பணியை முடித்து விட்டு, மனைவி எங்கோ காணாமல் போய் விட்டாள் என கேஸை மூடும் எண்ணத்துடன் வந்து இருந்தனர்..
அனைவரையும், மகிழ்ச்சியுடன் வரவேற்றேன்..
“ வாங்க சார்.. எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம்.. என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்க ..ஏதாச்சும் சந்தேகம் வந்தால் என்கவுண்டர்ல என்னை போட்டு தள்ளுங்க… நான் ஓர் அப்பாவி..அதனால அறிவு ஜீவுகள் யாரும் எனக்காக குரல் கொடுக்க மாட்டாங்க… நான் குற்ற்வாளியா இருந்து , நீங்க என்னை கொன்னால்தான் பிரச்சினை “
என்னுடன் சேர்ந்து அவர்களும் சிரித்தனர்..
வீட்டை சுற்றி காட்டினேன்,
அவளை புதைத்த சுவர்,,,  குரலிலோ, முகத்திலோ எந்த பயமும் இல்லாமல் பார்த்துக்கொண்டேன்..
ஏதாவது ஜாலியாக பேசி ஃபினிஷிங் டச் கொடுக்க நினைத்தேன்..
“ சரி,, சார்,, எல்லாம் பார்த்து முடிச்சாச்சு…  உங்களை எல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி… என்னை மாதிரி ஒரு நல்லவனை நீங்க பார்த்து இருக்க முடியாது.. அதே மாதிரி இப்படி ஒரு வீட்டையும் பார்த்து இருக்க மாட்டீங்க,,
எவ்வளவு உறுதியான சுவர் பாருங்க”
லேசாக தட்டி காட்டினேன்,,
தட்ட ஆரம்பிததுதான் தப்பாகி விட்டது…
ஏதோ ஒரு பயங்கரமான அலறல் சத்தம் சுவற்றில் இருந்து கேட்க ஆரம்பித்தது…
வெற்றி கூக்குரலா… பழிவாங்கும் கெக்கலிப்பா, பயங்கரத்தின் ஒலி வடிவா …
ஒன்றும் புரியவில்லை…  அந்த ஊளை சத்தம் போலீசாரை அதிர வைத்து விட்டது மட்டும் புரிந்தது…
அவர்கள் சுவற்றை இடிப்பதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்..
சுவர் இடிந்து விழுந்தது…
உள்ளே ..அரைகுரையாக அழுகிய நிலையில் அவள் பிணம்..
அவள் தலை மேல் , வெற்றி சிரிப்புடனும், ஒற்றைக்கண்ணுடனும் அந்த கருப்பு பூனை அமர்ந்து இருந்தது..
அந்த சனியனையும் சேர்த்து புதைத்து இருக்கிறேன் என் உணர்ந்தேன்



File:Aubrey Beardsley - Edgar Poe 2.jpg

21 comments:

  1. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மையிலேயே சிறுகதை அருமை நண்பரே.,! படிக்க படிக்க நேரம் போனதே தெரியல.. 10 நிமிடத்துல படிச்சு முடிச்சுட்டேன்.
    சூப்பரா இருக்கு முடிவு.
    என்னதான் நீதியை மறைக்க முயன்றாலும்.. நிச்சயம் புகையை போல வெளிவந்துவிடும் என்பதை உணர வைத்தது.

    ReplyDelete
  3. "பகிர்விற்கு நன்றி."

    நன்றி பாஸ்கர்

    ReplyDelete
  4. என்னதான் நீதியை மறைக்க முயன்றாலும்.. நிச்சயம் புகையை போல வெளிவந்துவிடும் என்பதை உணர வைத்தது.”

    இது பலருக்கு தெரியாமல் இருப்பதுதான் வினோதம்..

    நன்றி பிரவின்

    ReplyDelete
  5. ஏனோ இதைப் படிக்கும் போது " சிவப்பு ரோஜாக்கள்" நினைவில் வந்து போவதை தடுக்க இயலவில்லை.
    ஒரு சின்ன திருத்தம். //சுவற்றில்// என்பது தவறான பிரயோகம். "சுவரில்" என்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. என்ன சொல்றதுனே தெரியல பார்வையாளன் . கொஞ்சம் சத்யராஜ் படம் பார்த்தது போல் இருந்தது. பூனையின் கண்ணில் கத்தியை சொருகிய அதிர்வில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. எங்க வீட்டில ஒரு அழகு பூனை இருக்குது. அது தொல்லை செய்தால் அதை விரட்ட ஒரு கை தண்ணீர் போதும். பதிவு பிரமாதம்

    ReplyDelete
  7. //சுவற்றில்// என்பது தவறான பிரயோகம். "சுவரில்" என்றிருக்க வேண்டும்"

    அருமை,, அருமை,,,

    உண்மைதான்,,,
    அவசரத்தில் அப்படி எழுதி விட்டேன்..

    பல பத்திரிககைகளில் கூட தவறாகவே எழுதுகிறார்கள்

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  8. எங்க வீட்டில ஒரு அழகு பூனை இருக்குது. அது தொல்லை செய்தால் அதை விரட்ட ஒரு கை தண்ணீர் போதும்."

    சில ஆண்டுகள் முன் எங்கள் வீட்டிலும் ஒரு அருமையான பூனை வளர்த்து வந்தோம்...
    அதை கவனிப்பதே நல்ல பொழுதுபோக்காக இருந்தது...

    ReplyDelete
  9. கதை நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  10. நன்றி அன்பரசன் சார்

    ReplyDelete
  11. இந்த கதையை படிக்கும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத அமானுஷ்ய உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஒன்றி படித்தேன். உங்கள் எழுத்து நடை சூப்பர். (நான் படித்தது நள்ளிரவில்). உங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை. என்னவென்று பார்க்கவும்.

    ReplyDelete
  12. "உங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை. என்னவென்று பார்க்கவும்"

    சிறிது நாளாகவே பிரச்சினைதான்.,.. சரி செய்ய வேண்டும்

    ReplyDelete
  13. உங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை."

    சரி செய்து விட்டேன்.. உங்கள் அன்புக்கு நன்றி

    ReplyDelete
  14. Beautiful & natural flow of writing.

    Packiri N

    ReplyDelete
  15. Beautiful & natural flow of writing.

    Packiri N"

    thank u

    ReplyDelete
  16. கதை செம சூப்பருங்க! திரில், திகில் எல்லாமே இருந்தது!
    தவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும்!

    ReplyDelete
  17. கதை சூப்பரா இருக்குங்க .............

    ReplyDelete
  18. கதை நல்லா இருக்கு சார்.... :) நன்றி!!

    ReplyDelete
  19. நன்றி டெர்ரர் சார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா