Sunday, November 28, 2010

நந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்

 
நந்தலாலா படத்தை பற்றி கேபிள் சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்..
அவர் சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பதாலும் , வருங்கால தமிழ் திரைதுறையில் முக்கிய பங்களிப்பை வழங்க இருப்பவர்களில்  ஒருவர் என்பதாலும்  , அவர் கருத்து எனக்கு முக்கியமாக தோன்றியது.. முக்கியமாக சொல்வதை, உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக சொல்லக்கூடியவர் அவர்..
எனவேதான் அவருக்கு கடிதம் எழுதினேன்…
  அவர் விளக்கமாக அளித்த பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால், அவர் பதில் இதோ உங்கள் பார்வைக்கு…
உடனடியாக விளக்கம் அளித்த அவருக்கு , உங்கள் அனைவர் சார்பாக நன்றி…
*********************************************************************************************

இனிய நண்பர் கேபிள் அவர்களுக்கு.,
நலமா ?
            நலம் image

எப்போதும் பின்னூட்டம் வழியாக உங்களுடன் உரையாடும் நான் இப்போது மெயில் அனுப்ப காரணம் ந்ந்தலாலா எனும் டெம்ப்ளேட் படம்
நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டிய படம் image நந்தலாலா.. இது வரை எத்தனை படங்களை இந்த டெம்ப்ளேட்டில் பார்த்திருக்கிறீர்கள்?

 
உங்களது பெரிய பிளஸாக நான் கருதுவது, சராசரி மனிதனை புரிந்து வைத்து கொண்டுள்ள தன்மைதான்.
.மிக்க நன்றி.. image

மந்திர புன்னகை படம் பார்க்கும்போது , என் அருகில் சற்று நேரம் அமர்ந்து இருந்தீர்கள்.. என்னை அறிமுகப்படுத்தி கொண்டு , கை குலுக்கி பாராட்ட நினைத்தேன்.. ஆனால் மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என்பதால் , செய்ய முடியவில்லை.
..ஆஹா.. மிஸ் பண்ணிட்டேனே.. அன்று நான் வந்ததும் லேட்.. இடைவேளையில் அப்படத்தின்  உதவி இயக்குனர்கள் என்னை சூழ்ந்து imageகொண்டு பேசிக் கொண்டிருந்ததால் யாரையும் கவனிக்க முடியவில்லை. அதுவும்  இல்லாமல் இரவு ஒரு சந்திப்பு இருந்ததால் உடனே கிளம்பிவிட்டேன்.

இதை நான் சொல்ல காரணம், உங்கள் கருத்துக்கள் மீது நான் வைத்துள்ள மரியாதையை உணர்த்துவதற்காக.
.
அப்படிப்பட்ட நீங்கள் , ந்ந்தலாலாவை சரியான படி விமர்சிக்கவில்லை என்ப்தே என்னை போன்றோரின் வருத்தம்
:((..     image
 
 
ஒரு ரசிகன் என்ற முறையில், என்னை போன்றோர் என்ன வேண்டுமானாலும் சொல்ல்லாம்.. ஆனால் நாளைய இயக்குனர்களுக்கு செக் வைக்கும் இது போன்ற இயக்குனர் படங்களுக்கு , திரை துறையில் இருக்கும் நீங்களே ஆதரவளிப்பது, மரத்தின் மீது இருந்து கொண்டு அதன் அடிப்பகுதியை வெட்டுவது போன்ற செயல்
 
அவர் என்ன செய்துவிட்டார் மற்ற இயக்குனர்களுக்கு.நிச்சயம் அவ்ர் பேசிய முறை வேண்டுமானால் தவறாய் இருக்கலாம் ஆனால் எள்ளளவும் அவர் பேசிய விஷயம் தவறு கிடையாது.  .. image க்ரியேட்டர்ஸ் எல்லாரும் கொஞ்சம் அரகண்ட் அண்ட் எமோஷனல் ஃபூல்ஸ்தான்.. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நாம் அவர்களை பற்றி பேசுவதை விட அவர்களது படைப்புகளை விரும்புவது நல்லது....
 
கண்ணை திறந்து பார்த்தால், ஆயிரம் கதைகள் இங்கு இருக்கின்றன.. ஆயிரம் பேர் நல்ல கதைகளை வைத்து கொண்டு வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில், அனுபவம் எல்லாம் குப்பை... நான் வெளினாட்டு பட்த்தை பார்த்தோ, புத்தகம் படித்தோ படம் எடுப்பேன் என சொல்வது , அந்த அப்பாவிகளை, திறமைசாலிகளை கிண்டல் செய்வது போல ஆகாதா? இதை என்னை போன்ற ரசிகர்கள் கேட்பதைவிட, நீங்கள்தானே கேட்க வேண்டும்
 
நான் முன்பே சொன்னதுதான் நண்பா.. உங்களுக்கு எந்த விதத்தில் பாதித்தீர்கள் என்று தெரியவில்லை. .

image புத்தகம் படிக்காமல் இருந்த ஒரு உதவி இயக்குனர் ஒரு சிறந்த படத்தை எடுத்து முகத்தில் அடிக்க வேண்டும். ஏன் சசிக்குமாருக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே கிடையாது. என்று அவரே சொன்னார்.. தெரியுமா.. அதனால் அவர் இயக்குனர் இல்லையா..?
..
எத்தனை பேர் வெளி நாட்டு படங்களை பார்த்து இருப்பார்கள்.. இப்படியாவது வந்தால் நல்லதுதானே என நீங்கள் கேட்கலாம்
 
..நீங்கள் அந்த வெளிநாட்டுபடத்தை பார்த்தீர்களா..? அதன் சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அவர் சிறந்த முறையில் அதை தந்துள்ளார்..  நல்லதோ கெட்டதோ.. என்னை என்கிராஸ் செய்யும் எந்த  படத்தையும் என்னால் பாராட்டாமல் imageஇருக்கமுடியாது. எடுத்த நபர் நல்லவர், கெட்டவர் என்பதை மீறி..
 
ஒரு பொழுது போக்கு படம் இப்படி எடுக்கப்பட்டால்கூட ஒப்புக்கொள்ள்லாம்.. ய்தார்த்த படங்கள் இப்படி எடுக்கப்பட்டால், அது அபாயகரமானது.
 
ஒப்புக் கொள்ளக்கூடாது என்றால் அது எந்த வித படமாக இருந்தாலும் ஒப்புக் கொள்ளக்கூடாது.. அது தான் தர்மம்.. image இதில் எங்கயோ.. உள்குத்திருக்கிறது.. நண்பா..:))
.
 
உதாரணமாக, தாஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதையை , சென்னையில் நடப்பது போல மாற்றி ஒருவர் எழுதி வெளியிட்டால் அது கேலிக்கூத்து ஆகி விடாதா?
 
அப்படி ஆனால் அதற்கான விளைவை மக்கள் image நிச்சயம் கொடுப்பார்கள்.. அதற்கு நீங்கள் கவலை பட வேண்டாம்..

இரவு, பனி போன்றவை ரஷ்ய நாவலில் தரும் அர்த்தம் வேறு.. சென்னையில் நடப்பதாக ஒருவர் அதே பாணியில் எடுத்தால் அந்த அர்த்தமே மாறி விடும்.
நிச்சயமாய் எந்த ஒரு முட்டாளும் அப்படி எடுக்க மாட்டான்.. முன்புசொன்னது போலத்தான் நிச்சயம் அதற்கான பதில் image அவனின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பில் தெரிந்துவிடும்..
..
 
அதிகார பூர்வ மொழி பெயர்ப்பை படித்தால்தான் , சரியான உணர்வை பெற முடியும்.
யார் சொன்னது..? நண்பா.. அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு என்று எடுத்துக் கொண்டு.. எனக்கு புரியாத தமிழில் image சொன்னால் அதுவும் எனக்கு அந்நியமே.. 
..
 
இந்த அதிகார பூர்வமற்ற மொழி பெயர்ப்பை, எந்திரனுடன் ஒப்பிட்டு நீங்கள் சொன்னது, மிக மிக தவறானது.
..
உண்மையில் இது போன்ற போக்கை கண்டிக்கும் கடமை என் போன்றோரை விட உங்களுக்குத்தான் உள்ளது.
.
இது போன்ற இயக்குனர் படங்கள் ஜெயித்தால் அப்படி என்ன கெடுதல்.ஏற்படும் ( என் போன்ற ரசிகனுக்கு அல்ல... திரை உலகுக்கு )
1. நல்ல சினிமா என்றால், மெல்லிய சோகம்- இயல்பை விட்டு விலகிய கதானாயகன்- இளையராஜா இசை என்ற டெம்ப்ளேட் உறுதியாகி விடும்.. உண்மையான நல்ல படங்கள் வராமல் போய் விடும்

வந்திட்டாய்ங்க..போய்ட்டாய்ங்க.. வயதுக்கு மீறின செயல்களோடு ந்டிக்கும் அப்பனாத்தாவை அடிக்கும் பையன்கள். குடி, கூத்தியா வைத்துக் கொண்டிருப்பவனை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன். கடைசியில் மிக சோக image மான முடிவு என்ற டெம்ப்ளேட்டைவிட இதில் என்ன குறை கண்டுவிட்டீர்கள் நண்பா..?

2. நம் பிரச்சினைகளை, நம்மை , நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ப்டங்கள் வராது.. அனைவரும், இறக்குமதியை ஆரம்பித்து விடுவார்கள்.
என்னை பொறுத்த வரை.. சுவாரஸ்யமான சொல்லப்படும் image கதைகள் எல்லாமே.. சிறந்த படமே..

3. உலகப்பட தரத்தை நாம் என்றுமே எட்ட முடியாமல் போய் விடும்..
உலக தரம் என்றால் என்ன..? நமக்கு ஜப்பான் படம் உலக் படம் என்றால். ஜப்பான் காரனுக்கு நம்ம் படம் உலக படம்.. image அவ்வளவுதான்..
.
 
4. சராசரி மனித்னை சினிமா புறக்கணித்தால், அவனும் சினிமாவை புறக்கணிப்பான்.
அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது.. சராசரி மனிதனை புறக்கணித்து சினிமா இயங்கவே இயங்காது.. கூடவே சராசரி ரசிகனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக இம்மாதிரி image படங்களும் தேவை.. இல்லாவிட்டால்.. குப்பைகள் மிஞ்சுவது தான் அதிகம்.

விரைவில் மிச்சம் இருக்கும் திரை அரங்குகளும் , ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகி விடும்..
ஒரு விஷயம் தெரியுமா.. முன்பை விட இப்போதுதான் நிறைய  தியேட்டர்கள் கட்டப்பட்டு வருகிறது. நிறைய image மல்ட்டிப்ளெக்ஸுகள் வந்திருக்கிறது வரப்போகிறது.. நண்பா..

5. சராசரிக்கு மேற்பட்ட ரசிகனும் , தமிழ் சினிமாவை புறக்கணிப்பான்.. ஜப்பான் பட்த்தை அவனே பார்க்க முடியும் சூழ்னிலையில், காப்பியை பார்க்க விரும்ப மாட்டான்..
முதலில் நீங்கள் அந்த ஜப்பான் படத்தை பார்கவும் நண்பா.. அப்படி பாத்திருந்தால் அதில் வரும் காட்சிகளை தவிர.. எவ்வளவு காட்சிகள் நம் கலாச்சாரத்துக்கு ஏற்ப சிற்ந்த image முறையில் க்ரியேட் செய்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். முதலில் பயாஸ்டாக பார்க்காமல் இருக்கவேண்டும்.

சுருக்கமாக சொன்னால், எந்திரன் சராசரி ரசிகனை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழுக்கு ஏற்ற படம்..
உங்களுக்கு எந்திரன் எவ்வளவு படங்களிலிருந்து சுட்ட படம் என்பது தெரியுமா..? ரஜினி செய்தால் ஷங்கர் செய்தால் image நல்லது.. மற்றவர்கள் செய்தால் தவறா..?
ந்ந்தலாலா , அறிவு ஜீவிகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழுக்கு ஒவ்வாத படம்...
ஏன் அறிவு ஜீவிகள் தமிழ் நாட்டில் இருக்கவே கூடாதா..? இப்படத்தை விரும்பிய நான் என்ன அறிவு ஜீவியா..? image அபடியென்றால் எந்திரனையும் நான் தான் பாராட்டினேன்.
.
அதை உங்களை போன்றோர் ஆதரிப்பது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல...
என்னை பொறுத்த வரை.. நல்ல சுவாரஸ்யமான சினிமாவை எப்போது ரசிப்பேன். ரசனை என்பது எனக்கு ரஜினி படம் மட்டுமல்ல. என்னுடயது பரந்து விரிந்த ரசனை.. அது ஆளுக்கு ஆள் மாறுபடும்.. என்னை பொறுத்த வரை நந்தலாலாவை தயாரித்தவர்கள் நிச்சயம் பெருமைபட்டுக் image கொள்ளும் விதமான் திரைப்படமே.. எனக்கு ரஜினியையும் பிடிக்கும். குரசேவாவையும் பிடிக்கும்.. இம்மாதிரியான சினிமாக்களும் வெளிவந்தால் தான் நல்ல ஆரோக்க்யமான சினிமா வரும் என்பது என் கருத்து..
என்றென்றும் அன்புடன்,
பார்வையாளன்

பின் குறிப்பு: பாருங்கள் நண்பரே. இது வரை என்னுடன் பின்னூட்டமிட்டே வ்ந்த நீங்கள் எனக்கு கடிதமெழுதி உரையாடும் அளவுக்கு ஒரு படத்தை தந்த மிஷ்கினுக்கு நன்றி சொல்ல வேண்டுமா இல்லையா..? 
அன்புimage
சங்கர்நாராயண் (கேபிள் சங்கர்)
http://cablesankar.blogspot.com

19 comments:

  1. மிக அருமையான ஏற்புடைய விளக்கம். உங்கள் இருவரின் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. மிக அருமையான ஏற்புடைய விளக்கம். உங்கள் இருவரின் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன் "

    வறட்டுத்தனமாக வாதம் செய்வதை விட புரிந்து கொள்ளுதல்தான் முக்கியம்...

    ReplyDelete
  3. mika nermaiyaana pathil.thirunthungappaa.

    ReplyDelete
  4. கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை! ஆரோக்கியமான ஓர் இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே. :)

    ReplyDelete
  5. மிகச் சரியாகச் சொன்னீர்கள் பார்வையாளன்.

    ReplyDelete
  6. இதற்கு முந்தய உங்கள் பதிவை படித்துவிடு உங்கள் புரிந்துணர்வின் மேல் வருத்தம் கொண்டிருந்தேன், ஆனால் நீங்கள் முன்வைத்த கேள்விகள், அதனை முவைத்த நபர் இருவருமே தரமானவை..

    சமீபமாக நான் தமிழ் படங்களை அதிகம் பார்ப்பதில்லை, காரணம் அளவுக்கு அதிகமாக பார்த்துவிட்ட உலகின் முன்னணி படங்களால் தமிழ் படங்களின் மேல் இருந்த ஈர்ப்பு போய்விட்டது, எந்திரனை நான் திட்டுவதற்கு காரணம், அதன் மேக்கிங் ஹாலிவுட்டுக்கு பக்கத்தில் போகவே முடியாது, மேலும் பல ஹாலிவுட் படங்களின் அப்பட்டமான காப்பி, ஆனால் அதனை எடுத்துவிட்டு ஹாலிவுட்டுக்கே சவால் என சொன்னார்கள், ஆனால் நந்தலாலா ஜப்பானிய படத்தின் தாக்கத்தில்தான் செய்தேன் என மிஸ்கின் தானே சொன்னபிறகுதான் கிஜுகுரே பற்றி பலருக்கு தெரியும், அடுத்து எடுக்கும் யுத்தம் செய் ஒரு கொரிய படத்தின் இன்ஸ்பிரேசன்தான், ஆனால் வேறு படத்தை தழுவி எடுக்கும்போது வழக்கமான மசாலாக்களை சேர்க்காமல், தமிழ் படத்தை சர்வதேச தரத்திற்கு கொடுத்தமைக்கு நாம் பாராட்டத்தான் வேணும்..

    மிஸ்கின் இதில் எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளவில்லை, அப்படி செய்திருந்தால் அவரின் வழக்கமான குத்துபாட்டை வைத்திருப்பார்..

    மற்றபடி மாறுபட்ட ரசனைகள் இருக்கத்தான் செய்யும், அந்த வகையில் உங்கள் பார்வையை வரவேற்கிறேன்...

    ReplyDelete
  7. ஆரோக்கியமான ஓர் இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே. :)

    ந்ன்றி

    ReplyDelete
  8. ”மிஸ்கின் இதில் எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளவில்லை, அப்படி செய்திருந்தால் அவரின் வழக்கமான குத்துபாட்டை வைத்திருப்பார்..

    மற்றபடி மாறுபட்ட ரசனைகள் இருக்கத்தான் செய்யும், அந்த வகையில் உங்கள் பார்வையை வரவேற்கிறேன்”

    நன்றி.. நன்றி

    ReplyDelete
  9. பதிப்பிக்க உள்ளதாக ஐடியா இருந்திருதால் இன்னும் (தெளிவாக) பதில் கொடுத்திருப்பேனே.. நண்பா..:)) கேட்டிருக்கலாம்..

    ReplyDelete
  10. கேபிளின் பதில்களை படித்த பின்பு உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா...?

    ReplyDelete
  11. "இப்போ எல்லாம் நான் தமிழ் மூவிஸ் பார்ப்பதில்லை" என்பது ஒரு ஃபேஷன் ஆகி போயி விட்டது. என்னமோ போங்க...

    ReplyDelete
  12. ஒவ்வொருவருக்கு ரசனைகள் மாறுபட்டுத்தான் இருக்கு. அதற்குதங்களின் தெளிவான கேள்வி பதில்கள்
    சான்று.

    ReplyDelete
  13. "பதிப்பிக்க உள்ளதாக ஐடியா இருந்திருதால் இன்னும் (தெளிவாக) பதில் கொடுத்திருப்பேனே "

    கேஷுவலாக பேசும் போது கூட , விஷய ஞானத்துடன் பேசுவீர்கள் என்பதை உணர்த்துவதே இந்த பதிவின் சிறப்பு...

    ஒரு துறை வல்லுனரின் சிந்தனை பேட்டர்ன் மற்ற துறையினருக்கும் பயன்படும்...

    ReplyDelete
  14. "கேபிளின் பதில்களை படித்த பின்பு உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா...? "



    ஹென்றி போர்டின் வாழ்க்கை வரலாறாய் படித்தால், நாமும் கார் கமபனி ஆரம்பிக்க போவதில்லை.. இருந்தாலும் , அவரது சிந்தனை போக்கை அறிவது , நம் துறையில் நமக்கு பயன்படும்..

    அதே போல , திரைப்படம் சார்ந்த விஷயத்த்தை, எதிர் வாதத்தை திரை துறையில் ஞானம் உள்ளாவர் எப்படி அணுகுகிறார் என்று கவனிப்பது எனக்கு பயனுள்ளதாக இருந்தது...

    தன பதில் வெளியிட போவது தெரியாத நிலையிலும், அக்கரையகாகவும் , சிரத்தையாகவும் , தனி மனித தாக்குதல் இன்றியும் , யாரையும் விட்டு கொடுக்காமலும் பேசிய கேபிளின் பண்பு வியக்க வைத்தது...
    நம் மேல் , நம் கருத்து மேல் நம்பிக்கை இருந்தால், நம் பேச்சும் செயலும் தெளிவாக இருக்கும்...

    ஆக, படத்தை பற்றிய என் எண்ணம் மாறியதா என்பதை விட , ஒரு விஷ்யத்தை அணுகுவது பற்றிய ஒட்டு மொத்த பார்வை என் எண்ணம் செம்மை அடைந்து இருக்கிறது

    ReplyDelete
  15. "இப்போ எல்லாம் நான் தமிழ் மூவிஸ் பார்ப்பதில்லை" என்பது ஒரு ஃபேஷன் ஆகி போயி விட்டது. என்னமோ போங்க... "

    :(

    ReplyDelete
  16. நல்லதொரு அனுபவம்! :-)

    உண்மையில் படு மோசமான படங்களை வாங்கி அல்லது தயாரித்து விநியோகிக்கும் Sun pictures போன்ற பெரிய நிறுவனங்கள் வருடத்திற்கு இரண்டு நல்ல படங்களாவது வெளிவர உதவியாக இருக்கலாம். தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு கொஞ்சமாவது நியாயம், நல்லது செய்ய விரும்பினால்.

    நந்தலாலா வெளிவராமல் இழுபறியாக இருந்தபோது நான் யோசித்தது இப்படித்தான்.

    நல்லவேளை ஐங்கரன் முதன்முறையாக ஒரு நல்ல 'சினிமா' வை வெளியிட்டது!

    ReplyDelete
  17. என்னவொரு உரையாடல் !

    ReplyDelete
  18. நல்லவேளை ஐங்கரன் முதன்முறையாக ஒரு நல்ல 'சினிமா' வை வெளியிட்டது!"

    உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது,,
    இது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க பெரிய நிறுவனங்கள் முன் வர வேண்டும்..

    ஆனால் இது போன்ற படங்கள்தான் நல்ல படங்கள் என்பது கிடையாது..
    இது ஒரு வகை.. எந்திரன் ஒரு வகை...
    வேறு வேறு காட்டகரி...

    ReplyDelete
  19. மிகவும் ரசிக்கக் கூடிய விவாதம் ஒன்று... அருமையான கேள்விகள் அருமையான பதில்க் மொத்ததில் அருமையான ஒரு பதிவு..


    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    http://mathisutha.blogspot.com/

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா