Tuesday, March 15, 2011

வெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்தியேக பேட்டி


  நல்ல புத்தகங்கள் மூலம் வாழ்வை புரிந்து கொள்ளுதல் ஒரு விதம்… வாழ்வையே புத்தகமாக படிப்பது ஒரு விதம்..
நண்பர் மணிவண்ணன் , வம்ப வெலைக்கு வாங்குவோம்ல வலைபூ நடத்துபவர் ,  புத்தகங்கள் எழுதும் அளவுக்கு வாழ்வியல் அனுபவம் பெற்றவர் என்பது என் அனுமானம்..
அவர் சொந்த தொழில் செய்வது என்க்கு மிகவும் பிடித்து இருந்தது,,, அவர் அனுபவம் பலருக்கும் பயன்படும் என தோன்றியது… எனக்கும் பயன்படும் ….
அந்த அடிப்ப்டையில் அவரிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.. தான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என சொல்லி எழுத மறுத்து விட்டார்…
நான் விடவில்லை… எழுதாவிட்டாலும் பரவாயில்லை… என் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என சொல்லி ஒரு மினி பேட்டி எடுத்தேன்.
அவர் சொன்ன பதில்கள், நான் அவர் மேல் வைத்து இருந்த நம்பிக்கை , என் அனுமானம் சரிதான் என நிரூபித்தன..
மார்க்கெட்டிங் குறித்த அவர் கருத்தை என் அலுவலகத்தில் அனைவரும் ரசித்தனர்..
ஓகே ..அவர் பேட்டி இதோ, உங்கள் பார்வைக்கு…


**************************************************************************************

பிச்சைக்காரன் : .
சொந்த தொழில் என எப்படி முடிவு செய்தீர்கள்? எப்போது தொடங்கினீர்கள்?

மணிவண்ணன் :
சரியாக சொல்ல வேண்டுமென்றால் போன ஜூலையில் தொடங்கினேன் ,,
முன்னர் வேலை பார்த்த நிறுவனத்துடன் சில My Photoபிணக்குகள் ,சம்பளம் குறைவு ,இத்தொழிலை அப்பொழுதே சைடு பிசினஸ்சாக செய்துவந்து கொண்டிருந்தேன் ,அதை முழுமையாக நேரடி தொழிலாக செய்துவருகிறேன்
இங்கு நானே முதலாளி நானே தொழிலாளி ,
பிச்சைக்காரன் :
அந்த தொழிலை எப்படி கற்றீர்கள்? அந்த தொழில் செய்யலாம் என எப்படி நம்பிக்கை வந்தது?
மணிவண்ணன் :
திருநெல்வேலியில் நண்பர் ஒருவர்  இதே வேலை சுயமாக செய்து வருகிறார் , அவரது ஊக்கத்துடனும் ,ஆதரவிலும் நான் மதுரையில் செய்துவருகிறேன் அவ்வளவுதான் .இதே துறையில் சுமார் நான்கு வருட அனுபவம் உள்ளது ,அதனாலேயே இத்தொழிலை தேர்ந்தெடுத்தேன்
பிச்சைக்காரன் :
இதுதான் நீங்கள் செய்யும் முதல் தொழிலா அல்லது பலவற்றை முயன்று இதற்கு வந்தீர்களா?
மணிவண்ணன்
இதுதான் என்னுடைய முதல் தொழில்
பிச்சைக்காரன் :
உங்கள் மார்க்கெட்டிங் வியூகம் பற்றி சொல்லுங்கள்
மணிவண்ணன்
எப்போது ஒரு பொருள் தயாரிக்க பட்டு விட்டதோ அப்போதே அதை வாங்குவதற்கு ஒருவர் தயாராகி விட்டார் என்று அர்த்தம் ,அதை கண்டுபிடித்து அந்த உரியவரிடம் சேர்ப்பதுதான் மார்கெட்டிங் 
இறந்துபோன நாயை விற்க சொன்னால் கூட விற்று வர வேண்டும் ,கஸ்டமர் ஏன் நாய் குரைக்கவில்லை என்று கேட்டால் ,அது கெட்டவர்களை பார்த்தால்தான் குரைக்கும் நீங்கள் கெட்டவராக இருந்தால் உங்களையும் பார்த்து குரைத்திருக்கும் கூறினோம் என்றால் முடிந்து போச்சு ,(இதையாரும் செயல் படுத்தி விடாதீர்கள் ,மார்க்கெட்டிங் என்றால் என்ன என்று இதுநாள் வரை புரிந்து கொண்டது )
பிச்சைக்காரன்
இன்று பயன்படுத்தப்படும் வியாபார யுக்திகள் குறித்து உங்கள் கருத்து என்ன? வியாபார வெற்றியின் மேஜிக் ஃபார்முலா என்ன?
மணிவண்ணன்
வியாபாரா யுக்திகள் - மிகைப்படுத்த பட்ட பொய்யான விளம்பரங்களை மக்கள் எளிதாக நம்புகிறார்கள் ,(சில ஜென்யூன் கஸ்டமர்களை தவிர்த்து) ,எந்த ஒரு பொருளை எடுத்துகொண்டாலும் இலவசங்கள் அல்லது கவர்ச்சிகரமான திட்டங்கள் இருந்தால்தான் அந்த பொருட்களையே வாங்குகிறார்கள் ,அது மக்களின் இயல்புகளில் ஒன்றாகி போனது வருத்தமே ,காசுக்கு தகுந்த பொருள் என்ற நிலையும் வந்துவிட்டது ,காம்பட்டீசன் அதிகம் ,வியாபாரம் இன்றைய தேதியில் கிட்டத்தட்ட ஏமாற்று வேலை போல் ஆகிவிட்டது ,தரமில்லாத பொருளை இலவசங்கள் மூலம் தரமான பொருள் என்று கூறி விற்றுவிடலாம் , இது போல் வியாபாரம் செய்பவர்கள் ,அப்போதைய சூழ்நிலையில் நல்ல லாபம் பார்க்கலாம் ,ஆனால் தொடர்வெற்றி காண முடியாது ,என்றைக்கிருந்தாலும் குட்டு வெளிப்பட்டுவிடும் 
அதனால் கூடுமானவரை தரமான பொருட்களை விற்ப்பதன் மூலம் காலம் கடந்தாலும் நம் பெயர் சொல்லும் ,எலெக்ட்ரானிக் பொருட்களை பொறுத்தவரை ஆப்டர் சேல்ஸ்சிற்கு வாரண்டி பீரியடில் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து குடுத்தாலே போதும் ,கஸ்டமரே ரெபரென்ஸ் குடுப்பார்கள் ,இதுதான் நான் பயன்படுத்தும் சில யுக்திகள் ,அதே போல் பொட்டெண்சியல்  உள்ள இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் .
பிச்சைக்காரன்
கவனித்து பார்த்தால் நம் ஊரில் சொந்தமாக தொழில் செய்வது கடினமாக ஒன்று.. தொழில் துறையில் நாம் ஏன் முன்னேற முடியவில்லை… சின்ன சின்ன நாடுகள் கூட நம்மை ஓவர் டேக் செய்து சென்று வருகின்றனவே?
மணிவண்ணன்
இன்றைய இநதியாவின்  பொருளாதாரத்தை சீர்க்குளைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது , சைனா ப்ராடக்ட்ஸ் என்கிற சைனா பீஸ் ,இன்று இந்தியாவிற்கு மிக அச்சுறுத்தலான  நாடு என்றால் அந்து பாகிஸ்த்தான் கிடையாது ,சைனாதான் ,மறைமுகமான ஒரு பொருளாதார தாக்குதலை நம் மேல் செலுத்துகிறார்கள் ,அவர்களால் எப்படி இந்தளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்யமுடிகிறது ? அங்கு நிலையான அரசாங்கம் உள்ளது ,அவர்களுக்கு குடுக்கப்படுகின்ற வேலையை சரியாக செய்வார்கள் ,யாரும் கண்காணிக்க வேண்டாம் ,ஆனால் இங்கு ஒரு நிறுவனத்தில் நான்கு பேர் வேலை செய்தால் கூட அவர்களை கண்காணிக்க ஒரு சூப்பர்வைசர் தேவை ,அவரை கண்காணிக்க ஒரு மேனேஜர் தேவை ,என்று பட்டியல் நீளுகிறது ,எதற்க்கெடுத்தாலும் போராட்டம் ,இப்படி எதற்க்கெடுத்தாலும் போராட்டம் செய்வதை தடுக்க ஒரு போராட்டம் கூட  செய்யலாம் ,கிராமத்தில் ஒரு சொல்வாடை உண்டு "ஒப்புக்கு சித்தப்பா உப்ப போட்டு நக்கப்பா " இதுதான் நாம்
பிச்சைக்காரன்
சரி..புதிதாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்… எந்த தொழிலுக்கு  நல்ல எதிர்காலம் இருக்கிறது?
மணிவண்ணன்
வேறு தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணம் உள்ளது ,அப்படி செய்தால் ,உணவு சார்ந்த தொழிலாக இருக்கும் (ஓட்டல் தொழில் அல்ல )உணவு தொழில் அழிவே இல்லாத ஒரு தொழில்,  எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது ,அது போக ஷேர் மார்கெட் பிசினஸ் , எந்தவளமும் இல்லாத சிங்கப்பூர் நாடு நம்மைவிட எக்ஸ்போர்ட் பிசினஸ்சில் முன்னையில் உள்ளது ,,தொழில் முனைவோர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான உண்மை இது .
பிச்சைக்காரன்
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் என்னை போன்ற சிறுவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை ?
மணிவண்ணன்
புதிதாக தொழில் துவங்குவோர்க்கு அறிவுரை கூறுமளவிற்கு நான் இன்னும் சாதிக்கவில்லை 
நேர்மையான நோக்கம் ,தீவிரமான முயற்சி ,விவேகம்கலந்த வேகத்துடன் செயல்படுங்கள் ,லேட்டானாலும் லேடஸ்ட்டாக வெற்றி உங்களை அடைந்தே தீரும் 
பிச்சைக்காரன்
விரிவாக பதில் அளித்ததற்கு நன்றி நண்பரே !!!
மணிவண்ணன்
நன்றி

10 comments:

  1. அனுபவம் தந்த முதிர்ச்சி பதிலில் தெரிகிறது..அவர் என்ன தொழில் செய்கிறார் என்பதையும் இங்கு சொல்லியிருக்கலாம்!

    ReplyDelete
  2. மார்க்கெட்டிங் டெக்னிக், வியாபார யுக்தி - சூப்பர்! பேட்டியும் சூப்பர்!

    ReplyDelete
  3. ///புத்தகங்கள் எழுதும் அளவுக்கு வாழ்வியல் அனுபவம் பெற்றவர் என்பது என் அனுமானம்.///

    சார் இதலாம் கொஞ்சம் அதிகம் சார்

    ReplyDelete
  4. என்னை நேரில் சந்திதால் உங்கள் அனுமானம் பொய் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது , சுய தொழில் செய்வது அப்படி ஒன்றும் மிக பெரிய சாதனை இல்ல சார் ,மார்க்கெட்டிங் செய்வது ரொம்ப ஈசி ,பொருளின் தரத்தை கஸ்டமருக்கு புரியும் படி விலக்கினாலே போதும் ,எனக்கு வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்காது ,நானே மார்க்கெட்டிங் எளிதாக செய்து விடுகிற பொழுது ,பிறருக்கு அது மிக பெரிய கஷ்டம் இல்ல

    ReplyDelete
  5. என்னை நேரில் சந்திதால் உங்கள் அனுமானம் பொய் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது "

    இந்த பதில்கள், என் கணிப்பை விட சிறப்பாக இருந்தன.. ஆகவே ஒரு விதத்தில் என் அனுமானம் தவறாகி விட்டது... நேர்ல் சந்தித்தால் என் அனுமான இன்னும் கொஞ்சம் தவறாகி விடும்.. ஏன் என்றால் இப்போதைய என் அனுமானத்தை விடவும் சிறப்பாக பதில் அளிப்ப்பீர்கள்


    "சுய தொழில் செய்வது அப்படி ஒன்றும் மிக பெரிய சாதனை இல்ல சார்"

    வேலை கிடைக்காமல் , அல்லது கஷ்டமான வேளையில் சிக்கி, கஷ்டப்படும் சிலருக்கு , உங்களை போன்றோரின் இந்த உணர்வு வர வேண்டும் என்பதே என் விருப்பம்


    "பொருளின் தரத்தை கஸ்டமருக்கு புரியும் படி விலக்கினாலே போதும் ,எனக்கு வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்காது ,நானே மார்க்கெட்டிங் எளிதாக செய்து விடுகிற பொழுது ,பிறருக்கு அது மிக பெரிய கஷ்டம் இல்ல "

    பேச்சுக்கலையில் கில்லாடியாக இருக்கும் பலருக்கு இந்த மார்க்கெடிங் நுணுக்கம் தெரியாமல்தானே , தோல்வியை சந்திக்கிறார்கள்..
    பேச்சு மட்டுமே மார்க்கெடிங் இல்லை என்ற உங்கள் கருத்து அருமை

    ReplyDelete
  6. நல்ல கேள்விகள் அதே நேரத்தில் நல்ல பதில்களும்

    ReplyDelete
  7. எனது விருப்பத் துறையான மார்க்கெட்டிங்கில், பொய் அதிகம்
    கலப்பதால் அதை விட்டு நான் வெளியேறினாலும் அவர் கொடுத்த
    விளக்கம் மிக ரசிக்கும் படி இருந்தது.

    ReplyDelete
  8. அருமை மணி, அற்புதமான பதில்கள்.... தொழிலில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...! பார்வையாளனுக்கு நன்றி!

    ReplyDelete
  9. //"ஒப்புக்கு சித்தப்பா உப்ப போட்டு நக்கப்பா "//

    :))

    //எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது ,அது போக ஷேர் மார்கெட் பிசினஸ் //

    தலைவரே எனக்கும் இந்த இரண்டில் ஆர்வம் உண்டு ...ஷேர் மார்க்கெட்டில் தற்போது போண்டி ஆகி உக்கார்ந்து உள்ளேன் ...:)

    ReplyDelete
  10. கண்டிப்பா இவரு மீனாக்ஷி பஜார்ல கடை போட்டு கள்ள கடத்தல் யாவாரம் பண்ணலன்னு நினைக்கிறேன். அப்படி என்ன சீக்ரெட் பிசினஸ் பண்றாரு!.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா