Saturday, March 19, 2011

தேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அதிமுக

 

தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடந்து வரும் பரபரப்பான சம்பவங்கள் ,  எதிர்பாராத விதமாக மதிமுகவுக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்கியுள்ளது..

இதை உணர்ந்த அதிமுக , மதிமுக அலுவலகத்துக்கே சென்று அவர்களை சமாதானப்படுத்த துவங்கியுள்ளது…

ஆனால் இந்த சாதகமான நிலையை வைகோ உணர்ந்துள்ளாரா என தெரியவில்லை…

வைகோ திமுகவை விட்டு பிரிந்து கட்சி ஆரம்பித்தபோது கட்சி சார்பற்றவர்கள் , இளைஞர்கள், மூன்றாவது அணியை விரும்பியவர்கள் என அனைவரும் அவருக்கு ஆதரவு அளித்தனர்… வெற்றி பெறாவிட்டாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை அக்கட்சி பெற்று வந்தது…

இந்த நிலையில், ஜெயலலிதா தோல்வியுற்று வழக்குகளை சந்தித்த சோதனையான காலம்… அவர் பெயர் முற்றிலும் கெட்டு இருந்தது…

அப்போது வந்த பாராளுமன்ற தேர்தலில் புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்தார்..

அன்று வரை தமிழக பாராளுமன்ற தேர்தலில் வெற்றியே பெற்றிராத மதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா 4 சீட்டுகள் கொடுத்து கூட்டணி அமைத்தார்…

அது வரை அந்த கட்சிகள் பெரிய வெற்றிகளை பெற்றதில்லை… ஆனாலும் , அப்போது தனிமைபட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு, அந்த ஆதரவு தேவையாக இருந்தது…

இந்த கூட்டணி சற்றும் எதிர்பாராத வகையில் வலுவான கூட்டணியான திமுக- தமாக கூட்டணியை வீழ்த்தியது..

மதிமுக, பாமக போன்றவை வென்றது மட்டும் அன்றி மத்திய அரசில் பதவியும் பெற்றன,, பாஜக தன் கணக்கை தமிழ் நாட்டில் துவக்கியது.. மத்தியில் ஆட்சியை பிடித்தது…

ஆக, அனைவருக்கும் அது பலன் அளித்தது…

இதில் மதிமுக வுக்கு சற்று இழப்புதான்,  மாற்று கட்சி என்ற பெயரை அது இழந்தது…அதன் பின் மாறி மாறி கூட்டு வைத்தே தேர்தலை சந்திக்க வேண்டியதாயிற்று,

இப்போது ஏற்பட்ட வெற்றிடத்தில், விஜய்காந்த் மூன்றாவது அணித்தலைவராக உருவாக ஆரம்பித்தார்.

இனி ஒரு போதும் மதிமுக மாற்று கட்சியாக உருவாக முடியாது என்ற நிலை நிலவியது..

இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணி குழப்பங்கள் துவங்கின.

அது மதிமுகவுக்கு உவப்பாக இல்லை..

அடுத்து மூன்றாவது அணி முயற்சிகள் துவங்கின..

அதுவும் மதிமுகவுக்கு உவப்பாக இல்லை…. விஜய்காந்த் தலைமையில் , ஜூனியர் பார்ட்னராக சேரும் நிலை.. என்றென்றும் ஜூனியர் பார்ட்னர்தானா என கட்சியினர் யோசித்தனர்.

அடுத்த கட்டமாக , மூன்றாவது அணி முயற்சி முடிவுற்று அதிமுக கூட்டணி செட்டில் ஆனது ..

இந்த நிலைதான் மதிமுகவுக்கு வலுவான நிலையை தந்தது…

அதற்கு முன் என்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன..

1. விரும்பும் தொகுதிகள் தந்தால், அதிமுக கூட்டணி

2. இல்லை என்றால் , விஜய்காந்த் கூட்டு சேர்ந்துவிட்ட நிலையில், மூன்றாவது அணியாக களம் இறங்குதல்..

சென்ற தேர்த்தல்வரை மூன்றாவது அணி என்பது தற்கொலை முயற்சி..

இந்த தேர்தலில் அப்படி இல்லை..

குறிப்பிட்ட ஓட்டு வாங்கி தனித்தனமையை நிரூபித்தால் , நாளை திமுகவின் ஒரு பகுதிக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும்..

திமுக , அதிமுகவை விரும்பாத பலர் இந்த தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாக்களிப்பார்கள்.

இந்த வாக்குகளை விஜய்காந்த் இழந்து விட்ட நிலையில், வைகோ இதற்கு குறி வைக்கிறார் என்று சந்தேகப்பட ஆரம்பித்த அதிமுக வைகோவை சமாதானப்படுத்த முயன்று வருகிறது..

மற்ற கட்சியினர் அதிமுக அலுவலகம் செல்லும் நிலையில் ,அதிமுக முன்னணி தலைவர்கள் , மதிமுக அலுவலக்ம் சென்று பேச்சு நடத்தினர்..

அதிமுக என்ன முடிவு எடுத்தாலும், அது மதிமுகவுக்கு நல்லதுதான்..

அந்த வகையில், தேர்தலுக்கு முன்பே மதிமுக வென்று விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதனால்தான், சின்ன விஷ்யதுக்குகூட ஆவேசப்படும் வைகோ, தற்போது அமைதியாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்…

ஒரு 25 சீட் கொடுத்து , வைகோவை ஜூனியர் பார்ட்னராக வைத்து இருக்காமல், அவரை வளர்த்து விட்டதன் மூலம் ஜெயலலிதா வரலாற்று தவறு செய்து விட்டாரா என காலம்தான் சொல்ல முடியும்…

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா