Monday, March 21, 2011

தன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பதில்கள்

 

 

பதிவுலகிலும் , சில பத்திரிகைகளும் எழுப்பும் கேள்விகளும் , அவற்றிற்கு வைகோ சார்பில் பதில்களும்…

 

1. இன்று தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் கட்சி மதிமுக என்றால் அன்று  கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தது ஏன்? அப்போது எங்க போச்சு உங்க சுயமரியாதை?

திமுகவில் உரிய மரியாதை இல்லாதபோது கட்சியை விட்டு விலகினார்.. அதன் பின் மரியாதையுடன் அழைத்ததால்தானே சென்றார்?

அதன் பின்னும் குறைந்த தொகுதி ஒதுக்கியபோது , இப்போது போலவே, அப்போதும் விலகினாரே.. சமரசம் இல்லையே…

 

 

2. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி போடுவது என்பது தார்மீக கடமை.இப்போது ம தி மு க எடுத்து உள்ள முடிவு ஏன்?தேர்தல் முறை சரி இல்லை என்பதாலா? அல்லது அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கபடுகின்றது என்பதாலா? கூட்டணி கட்சியில் பிரச்சனை என்றால் ஏன் பேசி தீர்க்க முயலவில்லை?

 

ஜெ எடுத்தது அரசியல் ரீதியான முடிவு அல்ல… கருப்பு ஆடை அணிந்தவருடன் சேர்ந்தால் வெல்ல முடியாது என சில ஜோசியர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்பவரிடம் என்ன பேச முடியும்?

பெரியார் சொல்லியே திருந்தாதவர்கள் , இப்போதா மூட நம்பிக்கைகளை விட போகிறார்கள்?

இப்போது போட்டியிடுவது , ஓட்டு பிளவுக்குத்தான் வழி வகுக்கும்… எனவேதான் அவர் போட்டியிடவில்லை…

 

3. நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது உங்களுடன் வந்த தலைவர்கள் எல்லாரும் அப்போது திமுகவின் ஜம்புவான்கள் அவர்கள் திரும்பி மாற்று கட்சிக்கு செல்லம் போது ஏன் அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை? உங்கள் கட்சியை விட்டு ஒரு சில தலைவர்கள் வெளியேறிய போதும் மற்றவர்களை வெளியேற விடாமல் ஏன் அரவணைக்கவில்லை?

அரவணைத்ததால்தானே முக்கிய தலைவர்கள் இன்னும் இருக்கிறார்கள்

 

 

4. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை இவ்வளவு நாள் நடத்துனீங்களா?

 

இந்த தேர்தல் மட்டும்தான் புறக்கணிப்பு என தெளிவாக சொல்லி விட்டாரே..

தனித்து போட்டியிடவில்லையே…

பிறகு ஏன் இந்த கேள்வி?

5. ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து ஏன் 3 ம் அணி துவங்க முயற்சிக்கவில்லை (நிச்சயம் ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்சியிட்டு இருந்தால் கணிசமாக வெற்றி பெற்று இருக்கலாம்)

சிலவற்றில் வென்று இருக்க முடியும்,,, பலவற்றில்., ஈழ ஆதரவு கட்சிகளுக்கு பிடிக்காத கட்சிக்கு சாதகமாக முடிவு அமையும்

 


6. அரசியலில் உணர்ச்சிக்கு இடம் இல்லை, தந்திரமே வெல்கிறது என்பதை இப்போதாவது உணர்தீர்களா? ஏன் கிளை, கிளையாக, ஊர் ஊராக சென்று உங்கள் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை?

தந்திரம் வென்றதா இல்லையா என்பது தேர்தலுக்கு பிறகே தெரியும்…

 

7. மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இந்த முடிவை அறிவித்ததும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்களா? இன்று உங்கள் தொண்டர்களின் மனநிலைமையை நினைத்து பார்த்தீர்களா?  ஏன் உங்கள் முடிவை மறுபரீசீலனை செய்யக்கூடாது?

தன்மானம் போனாலும் பரவாயில்லை என ஜெ யுடன் சேர்ந்திருந்தால்தான் வருத்தப்பட்டு இருப்பார்கள்.. இப்போது அவர் நிலை அனைவருக்கும் புரிந்து இருக்கிறது..இமேஜ் உயர்ந்து இருக்கிறது

 

 

8. இது வரை யாருக்கும் பயபடாமல், யாருக்கும் இறங்கி வராமல் இருந்த ஜெ அவர்கள் இறங்கி வந்து தொகுதிகளை உயர்த்தி 13 தொகுதிகளை தருகிறேன், ஒரு MP தருகிறேன் என்று கூறிய பின்பும், நீங்கள் தன்மானம், சுயமரியாதை என்று சொல்லி உங்கள் கட்சி தொண்டர்களையும், கிடைக்கப்போகும் சில எம்எல்ஏக்களையும் முக்கியமாக எம்பி பதவியையும் ஏன் விட வேண்டும்?

ஏன் என்றால் சில எம் எல் ஏக்களையும், எம்பி பதவியையும் விட தன்மானம் முக்கியம் என்பது அவர் நிலைப்பாடு.

தவிர, ஜூனியர் பார்ட்னர் என்ற நிலையில் இருந்து கிடைத்து இருக்கும் விடுதலை, எதிர்கால அரசியலுக்கு நல்லது..

 

9. 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்?

இல்லை… வைகோவுக்கு இது வாழ்வா , சாவா பிரச்சினை இல்லை… இது இல்லை என்றால் அடுத்த தேர்தல்.. தேர்தலே இல்லாமல் ஓர் இயக்கம் கூட அவர் நடத்த முடியும்…

இவரை சம்மதிக்க வைத்து இருக்க வேண்டியது ஜெ யின் சாமர்த்தியம்.. அவருக்கு அந்த சாமர்த்தியம் உண்டு என்ற போதிலும், ஜோசியர்கள் அவரை யோசிக்க விடவில்லை…

10. இதுவரை உங்களுடன் இருந்து வெளியேறியவர்களை விடுங்கள் தற்போது உங்களுடன் இருப்பவர்கள் உங்கள் மேல் உள்ள அன்பால் இருப்பவர்கள் அவர்களுக்காக ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது?

அவர்கள் இருப்பது அன்பினால், கொள்கையினால் … பதவிக்கோ , தேர்தலுக்கோ அல்ல….

தேர்தல் இதோடு முடியப்போவதில்லை… அடுத்தடுத்து வரபோகின்றன.. அப்போது பார்க்கலாமே..

9 comments:

  1. வைகோ வஞ்சிக்கப்பட்டார் அவ்வளவுதான்.

    வேற என்ன சொல்ல!

    ReplyDelete
  2. மக்கள் பணி செய்ய எந்த ஒரு அவமானத்தையும் தாங்கும் தலைவன் வேண்டும் எங்களுக்கு.

    மானம், மரியாதையை என்று எல்லோரையும் முட்டாள் ஆக்குகிறார் வைகோ. அந்த அன்பு சகோதரியிடம் கூட்டு வைப்பதற்கு முன்பு அவரை 2 வருடம் தடா சட்டத்தில் இவரை சிறையில் அடைத்தது எல்லாம் மறந்து போய்விட்டதா?


    /// வைகோ வஞ்சிக்கப்பட்டார் அவ்வளவுதா/// He deserves as all other Tamil politicians, he is no way different from others.

    ReplyDelete
  3. இப்படி ஏத்தி விட்டு ரணகளமாக போறங்கோ....

    ReplyDelete
  4. இன்றைய செய்தித்தாளிலேயே ஒரு மதிமுக பிரமுகர் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக செய்தி!

    ReplyDelete
  5. //தேர்தல் இதோடு முடியப்போவதில்லை… அடுத்தடுத்து வரபோகின்றன.. அப்போது பார்க்கலாமே.//

    அடுத்து அடுத்து வருமா...ஒடம்பு தாங்காது...

    ReplyDelete
  6. ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து ஏன் 3 ம் அணி துவங்க முயற்சிக்கவில்லை (நிச்சயம் ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்சியிட்டு இருந்தால் கணிசமாக வெற்றி பெற்று இருக்கலாம்
    இதுதான் ஒவ்வொரு என் கருத்தும்....

    ReplyDelete
  7. அடிப்பாவி, ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பண்ணினே? பெரியார் தோற்றுவித்த இயக்கம் எப்படியெல்லாம் மாறிப் போச்சே!!!!!!!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா