Saturday, December 18, 2010

கருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட முடிவும்…

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பது என் பாலிசி..
அந்த வகையில், நான் ஜொள்ளு விட்டு ரசித்த சில மேட்டர்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டேன்..
இதற்காக பரவலான ஆதரவு கிடைத்தாலும் கடும் மிரட்டலையும் சந்திக்க வேண்டி வந்தது..
ரசிக்கிறார்களா வெறுக்கிறார்களா என்ற குழப்பத்துக்கு விடை காண கருத்து கணிப்பு நடத்தினேன்..
அதன் முடிவுதான் இப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது…
என்ன அதிர்ச்சி?விளக்கமாக சொல்வது என் கடமை..
நான் கேட்ட கேள்வி….

நான் ”ஜல்சா” பதிவுகள் எழுதலாமா?

கொடுத்த ஆப்ஷன்…
ஒரு போதும் எழுத கூடாது
எப்போதாவது எழுதலாம்
ஜல்சா பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும்
ஒரு போதும் எழுத கூடாது
  என்ன வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள்…நாங்கள் எப்படியும் படிக்க போவதில்லை.
 
ஒரு பேச்சாளர் இருந்தார்.. ஒரு முக்கியமான சப்ஜக்ட் பேச வேண்டி இருந்தது…
“ நண்பர்களே.. இதை பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும்.. நான் இரண்டு மணி நேரம் பேச விரும்புகிறேன்…பேசலாமா? “
என்றார்…
கூட்டத்தில் ஒருவன் எழுந்தான் “ நீங்கள் எவ்வள்வு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்… நாங்கள் ஐந்து நிமிடத்தில் எழுந்து போய் விடுவோம் “ என்றான்..
பேச்சாளர் நொந்து போனார்..
 
அது போன்ற நிலை எனக்கு….
நான் கொடுத்த ஆப்ஷனில், அதிகம் ஓட்டு வாங்கிய ஆப்ஷன்..
 
நான் ”ஜல்சா” பதிவுகள் எழுதலாமா?
  என்ன வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள்…நாங்கள் எப்படியும் படிக்க போவதில்லை.
 
அட ஆண்டவா….
ஜல்சா பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் என்பதை தேர்வு செய்து இருந்தால் , புகுந்து விளையாடி இருப்பேன்.. என்ன செய்வது..
எது எப்படியோ… சிலரின் சதியால் இந்த முடிவு வந்து விட்டது…
 
இதற்காக நான் மனம் தளர போவதில்லை…
 
ஜ்ல்சா பதிவு எழுதவே கூடாது என சொல்பவர்கள் குறைவே,,,,
அதை மட்டுமே எழுத வேண்டும் என சொல்பவர்களும் அதிகம் இல்லை…
அவ்வப்போது எழுதலாம் என சொல்பவர்களின் குரலுக்குத்தான் மதிப்பு கொடுத்தாக வேண்டும்…
அவ்வப்போது என்பதற்கு அர்த்தம்தான் தெரியவில்லை..
மாதம் ஒரு முரையா.. தினம் ஒரு முறையா…
நான் வாரம் ஒரு முறை என எடுத்து கொள்கிறேன்..
வாரத்தில் ஒரு நாள் ஜல்சா நாளாக கொண்டாடப்படும்…
அன்று வேறு எந்த நல்ல விஷயமும் பதிவிடப்பட மாட்டாது..
நானே படிக்க கூச்சப்படும் படு மட்டமான விஷ்யங்கள் மட்டும் வெளியிடப்படும்..
தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்…
மற்ற நாட்களில் நல்ல விஷ்யங்கள் வெளியாகும்…

உங்கள் கருத்து ?
 
 
 

22 comments:

 1. ஏற்கனவே கருத்தை உங்களிடம் கூறிவிட்டேன் நண்பரே.

  ReplyDelete
 2. // நான் ”ஜல்சா” பதிவுகள் எழுதலாமா?

  என்ன வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள்…நாங்கள் எப்படியும் படிக்க போவதில்லை.//

  நேத்துதான் இந்த ஒட்டு விட்கேட்டை பார்த்தேன்
  அதிக ஓட்டுக்கள் வாங்கியதை பார்த்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது.

  என் இந்த கொலை வெறி ?

  ReplyDelete
 3. என் இந்த கொலை வெறி "

  எதிர் கட்சியினர் சதி

  ReplyDelete
 4. ஏற்கனவே கருத்தை உங்களிடம் கூறிவிட்டேன் நண்பரே.”

  உண்மைதான்... நான் அதை மதித்து நடந்து வருவதை கவனித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்

  ReplyDelete
 5. ஆம் மிக்க மகிழ்ச்சி. :)

  ReplyDelete
 6. //உங்கள் கருத்து ? //

  ஓகே

  ReplyDelete
 7. சரி சரி.. நடக்கட்டும் நடக்கட்டும்...


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

  ReplyDelete
 8. //அட ஆண்டவா…. //

  இதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..

  //இதற்காக நான் மனம் தளர போவதில்லை… //

  அடங்கொன்னியான்... என்ன பண்ணலாம்.??? அடுத்த திட்டம் ரெடி பண்ணுங்கப்பா..

  //உங்கள் கருத்து ?//

  ஓட்டு போட்டாச்சு போட்டாச்சு..

  ReplyDelete
 9. கூர்மதியன் . எல்லாம் உங்க வேலைதானா ? இருக்கட்டும் .இருக்கட்டும் .எங்களுக்கு ஒரு காலம் வரும் . அப்ப கவனிச்சுக்குறோம்

  ReplyDelete
 10. @சுதா . நன்றி சகோதரம்

  ReplyDelete
 11. @ஜீ @அன்பரசன்

  ஆதரவுக்கு நன்றி. இலக்கிய சேவை விரைவில் துவங்கும்

  ReplyDelete
 12. என ஆதரவு இல்லைங்க. Sorry.

  ReplyDelete
 13. நான் எப்போதாவது எழுதலாம் என்ற ஆப்ஷனுக்கு ஓட்டு போட்டிருந்தேன்...

  ReplyDelete
 14. விடுங்க... உங்களுடைய வாசகர்கள் நகைச்சுவையாக அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்...

  ReplyDelete
 15. இன்று முதல் நான் உங்கள் ரசிகன்

  ReplyDelete
 16. யாரோ கள்ள ஒட்டு போட்டிருகாங்க... கண்டுகாதீங்க :)

  ReplyDelete
 17. பிரபாகரன் மற்றும் சர்பத்

  ஓரிருவர் இப்படி செய்தால் ஜோக் என ஆறுதல் அடையலாம் . எதிர் அலை பலமாக வீசியிருக்கிறதே

  ReplyDelete
 18. நீங்க ஓட்டு போடுவதற்கு காசு குடுத்துற்க்கனும். என்ன பண்றது அப்படியே பழகிட்டோம்ள

  ReplyDelete
 19. கருத்து கணிப்பு நடத்தினாலே அது அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலுமே முடியும் நண்பா!!!

  ReplyDelete
 20. அந்த மாதிரி பதிவுகளால் நிங்கள் பிரபலம் அடைவதை பிடிக்கமால் சிலர் நிறைய கள்ள ஒட்டு போட்டு இருக்கார்கள்.கவலைப் படாதிர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 21. வாரம் ஒருமுறைதானே…? தொடருங்கள்…!

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா