Monday, December 27, 2010

பின்னூட்ட புதையல்

பின்னூட்டங்கள் என்றால் தேவையில்லாத விஷ்யங்கள், அவதூறுகள் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது…

இப்போதெல்லாம் பதிவுகளை விட பின்னூட்டங்கள் சிறப்பாக அமைவது அவ்வப்போது நடக்கிறது..
எழுத்தாளர் சாரு என் பதிவுகளை பாராட்டாமல், அதற்கு வந்த பின்னூட்டத்தை பாராட்டியதால் , பின்னூட்டம் இட்டவர்களை பார்த்து பொறாமை படவில்லை :)
மகிழ்ச்சிதான் அடைந்தேன்.


.
ஆனால் சிலர் பின்னூட்டங்களை அவ்வளவாக படிப்பதில்லை… ( நான் பின்னூட்டங்களை மட்டுமே படிப்பேன்.. ஹி ஹி )
முக்கிய தகவல்கள் தரும் பின்னூட்டங்கள், கட்டுரை போன்ற பின்னூட்டங்கள் , பெயர் இல்லாமல் இருந்தாலும் நல்ல விஷ்யங்களை சொல்லும் பின்னூட்டங்கள் என பல வகை உண்டு…
அவற்றில் சிலவற்றை தொகுத்து தர விரும்புகிறேன்.. மேலும் சில அடுத்த பதிவில்…..
********************************************************************************


Mr. Mrinzo: I read your somewhat hyperbolic comments with some interest. In the interest of disclosure, I have read Zero Degree novel, and this has ben my experience. The novel loosely strings together various injustices that we as humans should be concerned about. The language is abrubt, provocative, and is aimed to shock (much of the middle class values of Tamil readership). I have refrained from commenting about the article to-date, because I am not sure I do get the book in its entirety. You have remarked the following about the book: (a) " The Novel in some part narrated in Satire style, unless we go in depth is very difficult to enjoy those brilliant moments. I have been reading every day for last 2 months, I could grasp50% of it only with the help of Google. Each name, incident, story have relation and gives new dimension to the Novel." In my view, such a cryptic clues do not add to any literary value of the book. With or without the clues, a good literary work, inspires understanding at multiple levels, and reveals an underlying common thread of humanity that people can understand. I did not feel that Zero degree accomplished that. It looked like a string of events put together in an artificial way to elicit a sense of shock. (2) You state that, " Do you know he had restricted himself in using any numbers either in words or in numerical except nine and zero in this novel." So what? Why is this important? It is at best a literary device used by aspiring young students of writing! Can you eloborate on why is this so important (other than the fact that you discovered it?). 3) "That too chapter No15, narration runs to three pages without any punctuation, need to read breathless and conveying messages contrast too that." Again, why is this important. It is a style of presentation. If the content makes you read breathlessly you would not need to resort to such gimmicks. 4) You state that, "the first paragraph is about Peru Genocide the last Paragraph is about Sarajevo Genocide and in between you have note about future protagonist Echo. Find what is Echo, how that word came. Then you know who the real Protagonist, he is talking about. " There have been numeorous genocides in our life time Sarajevo, Darfur, East Timor, etc. I don't know what insight does the writer's book add to the general discussion? There have been courageous reporters who reported these events at grave risk to their lives to inform the world. There have been countless NGO's who risked their lives to directly aid/help the victims. Unfortunately, this book does not provide any insight into their suffering or human condition. It did not help me to understand the underlying human psyche that is capable of this violence. It was at best, a reporting tool. I came away feeling that the author simply used the genocide as another one of his shock elements - a final insult to those who suffered. A charitable explanation is that charu introduces such suffering to an emerging middle-class Indian, who has just conquered his hunger and is generally ignorant of what is going on elsewhere and near him. That is all. I would be very reluctant to compare Charu with Bharathi. They belong to entirely different realms. Charu is a well-known columnist with literary ambitions, with an acute sense for injustice, and who can write about his personal experiences in a readable form. He is good at self-promotion, and his writing does not yet show the depth of understanding of the issues that he purportedly cares about. Read a book about Bharathy. I recommend the book by Vaa.Raa! My $0.02c.
By Karikalan on ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா on 12/16/10
 
உலக திரைப்படம் பார்த்து விமர்சிக்கும் intellectual பெண் இல்லாத சராசரி ரசனை உள்ள வெகு சராசரி பெண் நான்...இந்த படம் காப்பி அடித்து எடுக்கபட்டதாங்க்றது எனக்கு பிரச்சனையே இல்லை...எனக்கு ரசித்தது..நெகிழ வைத்தது..என் மொழியில்..என் கலாச்சாரத்தில் மெனக்கெட்ட மிஸ்கின் னுக்கு வாழ்த்துக்கள்... அப்புறம்... //ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.. // உண்மை..உண்மை...மணிரத்னத்தின் ராவணா,தளபதி எல்லாமே ஒரு படைப்பின் பாதிப்பா..இல்லை அந்த கதையை அப்படியே நம் கலாச்சாரத்திற்கு மாத்திய படைப்பானு இந்த சிறுமூளைக்கு இன்னும் தெரில...அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில..ஏனால் அவரும் நன்றி ராமாயணம்,மகாபாரதம் னு நன்றி கார்டு போடவே இல்லயே..மிஸ்கின் நன்றி னு போடாததுக்கு அந்த ஜப்பான் மொழி கதை ஆசிரியர் கவலைப்படட்டும்...நாம் அழகான கவிதை படத்தை தமிழ் இல் கொடுத்த நம் சக தமிழனை பாராட்டுவோம்...:)))
By ஆனந்தி.. on நந்தலாலா சர்ச்சை, நர்சிம் "நச்" விளக்கம் - தாக்கம்... on 12/5/10
 
உங்கள் தகவலுக்கு நன்றி ! மேலும் ஒரு தகவல் : சனி கிரகத்தின் பெரிய நிலவின் பெயர் " டைட்டன் ". டைட்டன் என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தம். அதன் நீட்சியே டைட்டானிக்.
By கனாக்காதலன் on எரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம் on 11/29/10
@நான்தான், பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் பால்வெளி மண்டலத்தை சுற்றுகிறது. அடிப்படையில் சூரியன் மட்டும் சுற்றவில்லை. அதனுடன் இணைந்த சூரியக் குடும்பமே சுற்றுகிறது. அதனால் பூமியை பொறுத்த வரை சூரியன் நிலையானது.
By நாகராஜசோழன் MA on எரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம் on 11/30/10
//"St Thomas Mount"// மிக மிக தவறான தகவல் .. பிருங்கி முனிவர் பெயரால் பிருங்கி மலை என்று அழைக்கப் பட்டு பின்பு மருவி பரங்கி மலை என்றாகி, ஆங்கிலேயர்கள் புனித தாமஸ் மலை என்று மாற்றி விட்டனர் என்பதே உண்மை
By எல் கே on உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது? சென்னைக்கும் அதற்க... on 12/21/10
பொய்த்தேவு நல்ல நாவல். கே எம் ஜார்ஜ் தொகுத்த 'Masterpieces of Indian Literature' (தொகுதி 2, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு) புத்தகத்தில் வரும் 16 நாவல்களுள் ஒன்று. க நா சு கதைகள் மொத்தம் இரண்டு தொகுதிகள், கட்டுரைகள், விமர்சனங்கள் இரண்டு தொகுதிகள், மொழி பெயர்த்த உலக இலக்கியம் ஒரு தொகுதி (எல்லாம் காவ்யா பதிப்பகம் வெளியீடு) , க நா சு பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை (காலச்சுவடு வெளியீடு)ஆகியவற்றையும் படித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும். படித்து முடிக்க நிறைய நாட்கள் ஆகும்!
By Gopi Ramamoorthy on படித்தவற்றில் பிடித்தவை.. on 11/22/10
 
இது கதையா ? நம்ப முடியவில்லையே. அருமையாக இருந்தது. சூஃபிகளின் வரலாறு படித்தீர்களென்றால் இதுவெல்லாம் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு என்று நம்புவீர்கள். ஆனால் மெஸ்மெரிஸம்,ஹிப்னாட்டிஸம் போன்ற டிரெயினிங்லாம் இல்லாமலே இறந்த ஒருவர் உயிருள்ள ஒருவரிடம் பேசுவார், அது இன்னொரு சூஃபிக்குத்தான் கேட்குமே ஒழிய வேறு யாருக்கும் கேட்காது.
By அரபுத்தமிழன் on மரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை on 11/21/10
குட்டப்பன் தான் அய்யரை விடமுழுமையான பாத்திரமாக நான்கருதுகிறேன். கதை ஆரம்பிக்கும்போதுஎப்படி இருக்கிறானோ அப்படியே வாழ்நாள்முழுதும்இருக்கிறான். அவன் பாத்திரத்தை மகாபாரதக்கண்ணனின் மறுவுருவாக்கம்என்றே எனக்குதோன்ற்ன்கிறது. வாழ்க்கையை அவன்வரையரைக்கேற்பவே வாழ்தல், சலிப்பின்மை, எல்லாவற்றிலும்ஒரு தெளிவு, மற்ற மனிதர்களை புரிந்துகொள்ளல், காட்டைப்பற்றியஅவன்ஞானம், எப்போதும் மகிழ்ச்சியாய் இருத்தல், பிறர்நலனில்கொள்ளும்அக்கறை எவரையும் வெறுத்தொதுக்காத தன்மை, அநீதிக்கெதிரான சீற்றம் என முழுக்க கீதை காட்டும் இலட்சியமனிதனே குட்டப்பன். கதாசிரியர் தன்னை கிரிதரனில்காட்டுகின்றார்என்றால் தான் ஆகவேண்டிய லட்சிய மனிதனாக குட்டப்பனையே கொள்கிறார் என்றே நான்அறின்துகொள்கிறேன்.
By T.Duraivel on காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு on 11/7/10

அருமையா இருக்கு உங்க கோணம். நான் இந்த நாவலை 3 தடவ படித்துவிட்டேன்.. இனிமே இது போல் ஒரு நாவல் பாலக்குமாரன் அவர்களாலே எழுத முடியுமாங்றது சந்தேகம் தான்.. இந்த நாவல படித்துவிட்டு தஞ்சை கோவிலுக்கு போகும் போது ஒரு மாதிரியான மிடுக்கு,பெருமை வரும். என்னமோ நாமலே கட்டினது மாதிரி. அவ்வளவுக்கு இந்த நாவல் பாதிப்பை உண்டாக்கிவிட்டது... நீங்க சொல்கிற மாதிரி உடையரிலிருந்து ’பொன்னியின் செல்வன்’ முற்றிலும் வேறுப்பட்டது. ‘பொன்னியின் செல்வன்’ படித்ததும் ஒரு முழு திருப்தி இருந்தது, ‘உடையார்’ படித்ததும் மனது எதையோ அனுபவிச்ச மாதிரி இருந்தது... பாலக்குமாரன் அடுத்து ‘ராஜேந்திரச் சோழன்’ வரலாறு எழுதப்போவதாக கேள்விப்பட்டேன்.. காத்திருக்கிறேன்...
By Suresh on எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்... on 10/28/10
// மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்.// ---------------------பார்வையாளன். அய்யா சாமி, நானும் இதைதான் சொல்கிறேன். ஒருசாரார் மட்டும் சகலதையும் ஏற்றுக்கொண்டு பிற, பல இன. மொழி. மத கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் மட்டும் தன், இன. மொழி. மத வழிமுறைகளை மட்டுமே கொண்டாடி வாழலாம். பிறரை தன் மதம், மொழி, இனம் போன்ற காரணங்களை காட்டி பிரிவினையை நாடலாம். இது மட்டும் முரண்பாடாக இல்லையா? இன்றைய காஷ்மீரில் "உமர் அப்துலா, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே " என்று கூறுவதை ஏற்றுகொள்வீர்களா? அவர் "காஷ்மீர் இந்தியர்களுக்கே " என்று சொல்ல முடியுமா? நம் ஊரில் உமர் அப்துல்லா அதை சொன்னால் அது சரி, ஆனால் வெளிநாட்டில் வேறு யாரோ ஒரு ஏதோ ஒரு நாட்டில் சொன்னால் அது பற்றி நாம் கவலை கொண்டு இளைத்து போக வேண்டும்?
By கக்கு - மாணிக்கம் on ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்... on 10/17/10
நண்பரே எனக்கும் உங்கள் அளவுக்கு பாலகுமாரன் எழுத்துகள் பிடிக்கும். நான் ஜே மோ வலை பக்கத்தில் பாலகுமாரன், ராஜேஷ் குமார், ரமணி சந்திரன், புஷ்பா தங்கதுரை எல்லாரும் ஒன்று என்று சொல்ல வந்தது, எல்லாரும் வாசகர்களை மகிழ்வித்தார்கள் என்ற அர்த்தத்திலேயே. ஜே மோ அவர் அளவிற்கு ரமணி சந்திரனும், பால குமரனும் எழுதுவது இல்லை என்று தரப் படுத்துதல் தவறு. கமபனின், இளங்கோ வின் எழுதிகளோடு ஜே மோ தனது எழுத்தை ஒப்பிட விரும்புவது இல்லை. இளங்கோ அடிகளின் எழுத்தோடு விஷ்ணு புரத்தை ஒப்பீடு செய்து விஷ்ணு புரம் இலக்கியமே இல்லை என்றால் எப்படி இருக்கும். ஜே மோ, புதுமை பித்தன், கோணங்கி எல்லாம் படிக்காதீர்கள், நேரிடையாக எல்லலரும் கம்பன், இளங்கோ சீவக சிந்தாமணி மட்டும் படியுங்கள் என்றால் முறையாகுமா.
By ராம்ஜி_யாஹூ on பாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ...

உண்மை தான் நண்பரே..! ஒரு காலத்தில் அவர் பெயர் போட்ட எதுவும் எனக்கு ஒரு பொக்கிஷமகாதான் தெரிந்தது. இன்றும் கூட ஆனால் விழுந்தடித்து வாங்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. பல நாவல்களை நானே அடுத்த தலைமுறைக்காக சேர்த்து வைத்திருக்கிறேன். அதையெல்லாம் என் குட்டி தேவதை படிக்கிறேன் பேர்வழி என்று கிழிக்கையில் மனசு வலித்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் கிழிப்பதும் ஒரு அழகு தான். ஆனால் அவரின் தரம் எப்போதும் குறையாது. He is really a genius writer
By ஜீவன்சிவம் on பாலகுமாரன் உடையாரா ? on 8/18/10
 
History/Previous warnings and accidents A series of prior warnings and MIC-related accidents had occurred: In 1976, the two trade unions reacted because of pollution within the plant.[4][23] In 1981, a worker was splashed with phosgene. In panic he ripped off his mask, thus inhaling a large amount of phosgene gas; he died 72 hours later.[4][23] In January 1982, there was a phosgene leak, when 24 workers were exposed and had to be admitted to hospital. None of the workers had been ordered to wear protective masks. In February 1982, an MIC leak affected 18 workers.[4][23] In August 1982, a chemical engineer came into contact with liquid MIC, resulting in burns over 30 percent of his body.[4][23] In September 1982, a Bhopal journalist, Raajkumar Keswani, started writing his prophetic warnings of a disaster in local weekly 'Rapat'. Headlines, one after another ' Save, please save this city', 'Bhopal sitting at the top of a volcano' and 'if you don't understand, you will all be wiped out' were not paid any heed.[31] In October 1982, there was a leak of MIC, methylcarbaryl chloride, chloroform and hydrochloric acid. In attempting to stop the leak, the MIC supervisor suffered intensive chemical burns and two other workers were severely exposed to the gases.[4][23] During 1983 and 1984, leaks of the following substances regularly took place in the MIC plant: MIC, chlorine, monomethylamine, phosgene, and carbon tetrachloride, sometimes in combination.[4][23] Reports issued months before the incident by scientists within the Union Carbide corporation warned of the possibility of an accident almost identical to that which occurred in Bhopal. The reports were ignored and never reached senior staff.[4][24] Union Carbide was warned by American experts who visited the plant after 1981 of the potential of a "runaway reaction" in the MIC storage tank; local Indian authorities warned the company of problems on several occasions from 1979 onwards. Again, these warnings were not heeded.[4][24] [edit] The leakage In November 1984, most of the safety systems were not functioning. Many valves and lines were in poor condition. Tank 610 contained 42 tons of MIC, much more than safety rules allowed.[4] During the nights of 2–3 December, a large amount of water entered tank 610. A runaway reaction started, which was accelerated by contaminants, high temperatures and other factors. The reaction generated a major increase in the temperature inside the tank to over 200 °C (400 °F). This forced the emergency venting of pressure from the MIC holding tank, releasing a large volume of toxic gases. The reaction was sped up by the presence of iron from corroding non-stainless steel pipelines.[4] It is known that workers cleaned pipelines with water. They were not told by the supervisor to add a slip-blind water isolation plate. Because of this, and the bad maintenance, the workers consider it possible for water to have accidentally entered the MIC tank.[4][15] UCC maintains that a "disgruntled worker" deliberately connected a hose to a pressure gauge.[4][17] [edit] Timeline, summary At the plant[4] 21:00 Water cleaning of pipes starts. 22:00 Water enters tank 610, reaction starts. 22:30 Gases are emitted from the vent gas scrubber tower. 00:30 The large siren sounds and is turned off. 00:50 The siren is heard within the plant area. The workers escape. Outside[4] 22:30 First sensations due to the gases are felt—suffocation, cough, burning eyes and vomiting. 1:00 Police are alerted. Residents of the area evacuate. Union Carbide director denies any leak. 2:00 The first people reached Hamidia Hospital. Symptoms include visual impairment and blindness, respiratory difficulties, frothing at the mouth, and vomiting. 2:10 The alarm is heard outside the plant. 4:00 The gases are brought under control. 7:00 A police loudspeaker broadcasts: "Everything is normal".
By vasan on போபால் கொடுரமும், போராட்டமும் on 7/28/10
 

அய்யா... நான் எழுதிய மறுமொழியில் பகத் ஐயும் வறுமையில் வாழ்ந்த ஒருவராகத்தான் சித்தரித்திருக்கிறேன். ஒருவர் வறுமையில் பிச்சை எடுத்தார் என்பதற்காக ஒருவர் மாற்று குறைந்து விடுவாரா அல்லது திருடினால் மாற்று குறைந்து விடுவாரா. அப்படி திருடுவதற்கு ஒப்பான செயல்தான் பாரதி இழைத்த தவறு. மக்களை போராட தூண்டி விடும் எழுத்தை எழுதி விட்டு தான் மட்டும் எதிரிக்கு முதுகுசொறியும் வேலை செய்பவனை எப்படி எடை போட வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருப்பவர்களைத்தான் மக்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த சாதாரண மனித பண்பு கூட இல்லாத ஒருவரை எப்படி மகாகவி என்றெல்லாம் சொல்ல முடியும். சின்னமருது பற்றி ....""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். பாவம் அவனுக்கு மருதிருவரின் திருச்சி பிரகடனத்தின் ஆங்கில மொழியாக்கம் கிடைத்திருக்காது. அதில் வெல்ஷ் துரையின் கேள்விக்கு தனது அரசியலால் பதில் சொல்லியிருப்பான் சின்ன மருது. சரண்டையலாம் எனச் சொன்ன உதவியாளனின் முகத்தில் காறி உமிழ்வான் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த திப்பு. கொஞ்சம் பாரதி உடன் சின்ன மருதுவை திப்புவை ஒப்பிட்டு பாருங்களேன். அதோடு பாரதியின் படித்தவன் பாதகம் செய்தால் ஐயோ... என்ற வரிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். அப்புறம் வழிமுறைதான் கொள்கையை தீர்மானிக்கிறதா... கொள்கை வழிமுறையை தீர்மானிக்கிறதா... வேறுபட்ட ஆயுதம் என்ற வழிமுறையை விட ஒன்றுபட வேண்டிய அரசியல் முதன்மையானது இல்லையா.. தன் எழுத்தை படித்தவன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நோக்கமும், தான் மட்டும் தெரியாமல் எதிரி காலில் விழுந்து கிடக்கலாம் என்பதும் காரியவாதிகளின் செயல் அல்லவா.. அதாவுது நீங்கள் சொல்லும் அரசியல்வாதிகள் செயல் போல பாரதியின் செயல் உள்ளதே.. கவிஞன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவனை வறுமையில் வாட விட்ட சமூகம் வெட்கப்பட வேண்டும் என்பதும், அவனது கவிதையால் புரட்சியாளனாக மாறியவன் மாத்திரம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஜனநாயகம் போல தெரியவில்லையே.. பூணூல் பற்றி பெரியார் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா... அதாவது பூணூல் போடுவது எதற்கு சம்ம் என்றால், தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாத்திரம் கதவில் <>இது பத்தினிகள் வாழும் வீடு<>என எழுதி வைப்பதற்கு சம்ம் என்பார் பெரியார். பாரதி அந்தப் பையனுக்கு பூணூல் மாட்டியதன் மூலம் மற்ற சிறுவர்களின் தாயின் ஒழுக்கத்தை மனுவின் பெயரால் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். அதெல்லாம் இருக்கட்டும். கட்ட பொம்மனை பாடாத பாரதி, மருதுவை பாடாத பாரதி எட்டப்பன் குல வம்ச வரலாறு எழுத முன்வந்த ரகசியம் என்ன•. அதற்காக அவர் எழுதிய கடிதம் படித்து விட்டு வந்து பேசவும். அப்புறம் அவரு கவிஞரு மட்டும்தான் என சொல்வது தவறு. காங்கிரசு இயக்கத்தில் தீவிரவாதிகள் பிரிவின் சார்பாக மாநாட்டுக்கு போனவர்தான் அவர். தாம்ப்ராஸ் மாநாட்டுக்கும் போனவர் என்பது வேறு விசயம். ஒரு கவிஞருக்கு பூணூல் மாட்டுவதும், தாம்ப்ராஸ் மாநாட்டுக்கு போவதும் தனிமனித உரிமை என்றே எடுத்து கொள்வோம். மென்ஷ்விக் புரட்சியை ஆதரித்து ரசிய சோசலிச புரட்சியை எதிர்த்தும் தனது கவிதையில் எழுதியவன் பாரதி என்பதை முற்போக்காளர்கள் தமது அணிகளுக்கு எடுத்து ஆதாரம் தருவது இல்லையா.. ?
By Anonymous on பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல on 7/22/10

 


கோயம்பேடு, சிறுவாபுரி, சுருட்டப்பள்ளி இது மூன்றிற்கும் ஒரு பொதுவான பொதுவான விஷயம் இருக்கிறது. மூன்றிலுமே ராமாயணத்தின் வெவேறு நிகழ்சிகளின் references வருகிறது. மேலும் இந்த பாற்கடல் அமுதம் இத்தியாதி references சிறுவாபுரி, சுருட்டப்பள்ளி கோவில்களில் சொல்லப்படுகிறது. சிறுவாபுரி போகும் வாய்ப்பு எனக்கு இன்னும் வாய்கவில்லை
By virutcham on பொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும் on 6/30/10
Anonymous said...


சிறுவாபுரி நல்ல அமைதியான கோவில். சொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி வேண்டினால் நிச்சயம் நடக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு மேலதிக தகவல் மட்டுமே.
நாத்திக,பகுத்தறிவு ஆசாமிகள் உங்கள் கும்மிக்காக அல்ல.
 


 செந்தாரப்பட்டி பெத்துசாமி said...ஆத்திகம், நாத்திகம் பேசுபவர்களை விட, இரண்டையுமே நம்பி/நம்பாமல் இருப்பவர்கள் (Agnostics) ஆபத்தானவர்கள். உங்களை நீங்களே பொறுக்கியாக அறிவித்துக்கொண்டதை நான் ஆமோதிக்கிறேன்.

on பொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்

உங்க பிளாக் டைட்டில் ஓப்பன் ஆனது முதலில் அடுத்து ஆதியோட போட்டோ வந்துச்சு..என்னடா ஆதிய இப்படி திட்டுறீங்களேன்னு நினைச்சு ஒரு நிமிடம் சந்தோசப்பட்டுவிட்டேன்:))) //தமிழிலும் , ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதிலும் அவருக்கு இருக்கும் அக்கறை புரிந்தது.. இல்லை என்றால் முதல் முறை சந்திக்கும் என்னிடம்இவ்வளவு பேசும் அவசியம் அவருக்கு இல்லை… // ரொம்ப நாளா ஒரு காது கிடைக்காம இருந்திருக்கிறார். நீங்க வசமா போய் சிக்கியதும் போட்டு கும்மு கும்முன்னு கும்மியிருக்கிறார்.
By குசும்பன் on சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி... on 12/10/10

10 comments:

 1. பதிவில் அதிக இடைவேளை

  ReplyDelete
 2. என் பின்னூட்டம் உங்களுக்குப் பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி

  ReplyDelete
 3. வித்தியாசமான் பார்வை.

  ReplyDelete
 4. பதிவில் அதிக இடைவேளை"

  ஆம்... ஷார்ட் கமர்ஷியல் பிரேக்

  ReplyDelete
 5. என் பின்னூட்டம் உங்களுக்குப் பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி


  உங்கள் பதிவை மட்டும் அல்ல... பின்னுட்டத்டையும் ரசிப்பவன் நான்

  ReplyDelete
 6. வித்தியாசமான் பார்வை.

  நன்றி

  ReplyDelete
 7. என்னது சாருவுக்கு உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் பிடித்திருந்ததா... அப்படிஎன்றால் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. உங்கள் பார்வை சற்று வித்தியாசம் தான் நண்பரே ...

  ReplyDelete
 9. ஆம்...எனக்கு கிடைத்த நண்பர்களில் வித்தியாசமானவர் நீங்கள். விரைவில் நேரில் வந்து சந்திக்கின்றேன்.

  ReplyDelete
 10. பின்னூட்டத்தைவைத்தே ஒரு பதிவா ? அதுலயும் செகண்ட் பார்ட் இருக்கா சரிதான்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா