Tuesday, December 21, 2010

"உண்மையை" அமைதியாக்கிய அவாள், "வயரை" வருத்தப்பட வைத்த நடிகர்- பதிவுலக கிசுகிசு

1 "உண்மை" க்கு வந்த சோதனை

எதிலுமே "உண்மையாக" இருக்கும் பதிவர் அவர்..மிகவும் நல்லவரும் கூட... அன்பாக பழக கூடியவர் அவர் ..

அவரது சமிபத்திய போக்கு பதிவுலகில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது..

ஒரு முக்கிய தலைவரின் படம் சமிபத்தில் ரிலிஸ் ஆனது.. பரவலான வரவேற்பும் பெற்றது..படம் வெளிவரும் வரை அந்த படம் பற்றி உற்சாகமாக பேசி வந்த அந்த பதிவர்., படம் வந்த பின் அதை பற்றி எதுவும் சொல்லவில்லை..
இதுவே பதிவுலகின் குழப்பத்துக்கு காரணம்...

விசாரித்த போதுதான் உண்மை தெரிய வந்தது..

அவர் மனம் கவர்ந்த பெண் யாராவது படம் பற்றி பேச தடை போட்டு விட்டார்களா என்பது ஆரம்ப கட்ட சந்தேகமாக இருந்தது..
விசாரணையின் முடிவில் அவர் மவுனத்துக்கு காரணம் ,
"அவள் "அல்ல... அவாள் என்பது தெரிய வந்தது..
அந்த படத்தில் அவாளுக்கு எதிரான சில வசனக்கள் இருப்பது அவாளுக்கு பிடிக்கவில்லையாம்.. எனவே அவாள் இனத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் , அந்த படம் பற்றி எழுத வேண்டாம் என அன்பாகவும் , உரிமையுடனும் கேட்டு கொண்டாராம்...
மிரட்டலுக்கு அஞ்சாத அவர், நட்புக்கு தலை வணங்குவார் என்ற அடிப்படையில், அவரது இந்த வீக் பாயின்ட் பயன்படுத்தி கொள்ளப்பட்டதாம்...

உண்மையான பதிவர் , நட்புக்கு உண்மையாக நடந்து கொண்டாராம்... ( அந்த அவாள் நண்பர் எந்த துறையை சேர்ந்தவர் என்பது இப்போது தேவை இல்லை ) ..

(அவர் நேர்மை மேல் நமக்கு சந்தேகம் இல்லை... .. ஆனால் அவர் மேல் தவறு இல்லை என்பதை உணர்த்தவே இது வெளியிடப்படுகிறது...)

2 மேக்கப் நடிகரின் கொள்கையும் நடிப்பா? அதிர்ச்சியில் வயர் பதிவர்

மேக்கப் நடிகரின் அடுத்த படம் வெளியாகும் நிலையில் , அவரை பற்றியும் , அந்த படத்தை பற்றியும் பில்ட் அப் செய்து எழுத விரும்பினாராம், வயர் பதிவர்.. ஆனால் பாராட்டி எழுத விஷயம் கிடைக்க வில்லையாம்

எனவே அவருக்கு போட்டி நடிகரான சூப்பர் நடிகரை பற்றி இழிவு செய்யும் செய்திகளை தொடர்ந்து எழுத ஆரம்பித்தாராம் ( எதிர் வீட்டு விளக்கை உடைத்தால், தன வீடு ஒளி பெற்று விடும் என்ற லாஜிக் ( ? ! ) அடிப்படையில் ..
இந்த நிலையில், மேக்கப் நடிகர் தன ஜாதி / மத வெறியை வெளிப்படுத்தியது , இவரை போயா ஆதரித்தோம் என்ற வேதனையை ஏற்படுத்தி விட்டதாம்..

தேவை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு விளம்பரம் தரும் வகையில் ஒரு பாட்டை தன படத்தில் வைத்த நடிகர், பிறகு அதை நீக்கி விட்டாராம்.. கொள்கை என எதுவும் இல்லாமல் இப்படி ஸ்டன்ட் அடிக்கும் இவரை பற்றி அடுத்த வாரம் எழுத முடிவு செய்துள்ளாராம் வயர் பதிவர்...


இதெல்லாம் தேவை இல்லை .. வயர் பதிவருகென ஒரு பாணி இருக்கிறது.. இவர் ஏன் மேக்கப் ஏன் நடிகருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என வருத்தப்படுகின்றனர் அவர் நண்பர்கள்...

அந்த மூன்று எழுது பத்திரிகை எப்போதுமே ஜாதி வெறியுடன் செயல்பட்டு, சூப்பரை விட மேக்கப் நடிகரே சிறந்தவர் என எழுதும்.. வரலாறு படைத்த ஆட்டோக்காரன் படத்தை கூட தரக்குறைவாக விமர்சித்து தன்னை தானே அசிங்க படுத்தி கொண்டது அந்த பத்திரிகை..
அந்த பத்திரிகை வரலாற்றில் முதல் முறையாக உச்ச நடிகர் படத்தை நடுநிலையாக பாராட்டி எழுதியது வயர் பதிவர் என்ற வகையில் சூப்பர் நடிகரின் ரசிகர்களின் அன்பை பெற்றவர் அவர்... அவர் இனிமேல் சூப்பர் மேல் தேவையில்லாத துவேஷம் கொள்ள மாட்டார் என்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் சூப்பர் ரசிகர்கள்..

9 comments:

 1. முதல் வடை சாப்பிட்டு தலை சுத்து சுத்துது, வயர் (கேபிள்) தெரிகிறது, உண்மை யாரு, நான் தமிழன் தான்

  ReplyDelete
 2. பாஸ் . குதூகலாமான குடும்பத்தில் கும்மி அடித்து விட்டு போய்விடாதீர்கள் .

  ReplyDelete
 3. ரிப்பிட்டு

  ReplyDelete
 4. தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் பார்வையாளன்..!

  தற்போது நான் உலகத் திரைப்பட விழாவில் மிக பிஸியாக உள்ளேன். காலையில் 9 மணிக்குக் கிளம்பினால் இரவு 10.30 மணிக்குத்தான் வீடு திரும்புகிறேன்..!

  உடனுக்குடன் எழுத வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கின்றன. வருகின்றன. அதனால் அவற்றை எழுதி வருகிறேன்..!

  அம்பேத்கர் படத்துக்கும் விமர்சனம் எழுதுவேன். நிச்சயம் அடுத்த வாரம் வரும்.. ஏன் இப்படியொரு கொலை வெறி உங்களுக்கு..?

  இந்தப் பதிவே முட்டாள்தனமானது..!

  ReplyDelete
 5. பார்வையாளன். உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உங்கள் பர்ஷப்ஷன் மட்டுமே சரி என்று எப்போதும் எண்ணாதீர்கள் என்று..:))

  ReplyDelete
 6. அந்த அவாள் பதிவுலகத்தை சேர்ந்தவர் தானே...

  ReplyDelete
 7. கிசு கிசு மாதிரி இல்லை கிச்சு கிச்சு மாதிரி இருக்கு :)

  ReplyDelete
 8. Naan VIRUTHA GIRI nu la nenachen

  ReplyDelete
 9. நடக்கட்டும் ...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா