Monday, December 6, 2010

ரத்த சரித்திரம்  -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சமூகம்

ரத்த சரித்திரம் படம்..


இதன் பூர்வீகம் என்ன... வரலாறு என்ன ... இயக்குனரின் திறமை... கொலை செய்ய பயன் படுத்தும் யுக்திகள்...

கொலை செய்யபடும் இடத்தின் முக்கியத்துவம், கொலை செய்ய தூண்டப்படும் கதாபாத்திரத்தின் நியாயங்கள், எதிர் தரப்பு கேரக்டரின் கொலைக்கு கூட சரியான காரணம் சொல்லும் இயக்குனரின் நடுநிலை பார்வை, பல அப்பாவிகளை கொன்று குவிப்புக்கு காரணமானவர்கள் இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்ட உருக்கமான தகவல்கள் என்று எழுத்துலகம் பரபரப்பாக இருக்கிறது..


இதை சிலர் ரசிக்கலாம்,சிலர் போரடிப்பதாக நினைக்கலாம்..

அது ரசனை சம்பந்தப்பட்ட விஷயம்.. நாம் எதுவும் சொல்வதற்கில்லை..



ஆனால், நமக்கு நாமே குழி வெட்டிக்கொள்ளும் ஒரு வினோதமான நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம் என்பது நாம் கவனிக்க வேண்டிய கோணம்.



சில அப்பாவிகள்... அவர்கள் இடத்தி நாமும் இருந்திருக்க கூடும்.. அல்லது நாளை அவர்கள் இடத்தில் நாம் இருக்க கூடும்..

அவர்களை புழு பூச்சிகளை கொன்றவர்களை கதாநாயகர்கள் ஆக்கி , நாம் ரசித்து பார்க்கிறோம் என்றால் இதை என்ன என்று சொல்வது.. ?



வன்முறையை ரசிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி விட்டு, நாளை வன்முறையால் பாதிக்கப்படும்போது அழுது புலம்பி என்ன செய்வது..



நாம் எதை போற்றுகிறோமோ அதுதானே செழித்து வளரும்...



நமக்கு எதிரான ஒன்றை நாமே வளர்க்கலாமா..



வன்முறை என்பது வேறு.. வீரம் என்பது வேறு...



அன்னை தெரசா ஒரு முறை தன சமூக பணிகளுக்காக நன்கொடை வாங்க சென்றார் ... ஒரு பணக்காரரிடம் கை ஏந்தினார்... அந்த பணக்காரர் எச்சில் துப்பி , இதை கொண்டு செல் என பரிகாசம் செய்தார்.. அன்னை தெரசா சற்றும் அயரவில்லை " சரி.. இதை நான் வைத்து கொள்கிறேன்... என்னை நம்பியுள்ள நலிவடைந்த மக்களுக்கு வேறு எதாவது கொடுங்கள்" என்றார் ..

அந்த பணக்காரரின் சிந்தனை போக்கு மாறியது...



ஒரு வலுவான பணக்காரருடன் , நேருக்கு நேர் தைரியமாக பேசிய அந்த தன்மை வீரம் இல்லையா.. ஒரு தீயவனை கத்தியின்றி ரத்தம் இன்றி "கொன்று" விட்டாரே அவர்



ஆரம்ப காலங்களில் இஸ்லாம் பல எதிர்ப்புகளை சந்தித்தது... பல போர்கள் நடந்தன... அனால் எதிரிகளை எப்படி விதம் விதமாக கொன்றோம் என்பதை விட, நபி அவர்கள் எதிரிகளை மன்னித்ததைத்தான் அவர்கள் பெருமையாக சொல்கிறார்கள்.. சில நேரங்ககளில் சண்டை தேவைப்பட்டாலும் , அது ரசிக்க வேண்டிய ஒன்றல்ல.. அது ஒரு நடவடிக்கை என்ற அளவில்தான் அது இருக்கிறது.

எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை என்ற நிலையில், வன்முறையை ரசிக்கும் ஒரு சமுதாயம் உருவாகி வருவது, வன்முறைதான் நம் தேசிய மதம் என தோன்றுகிறது.



சிலருக்கு அதை நேரடியாக நிகழ்த்தும் வாய்ப்பு இருக்கும்... இல்லாதவர்கள் இது போல வன்முறையை ரசித்து மகிழ்ந்து கொள்கிறார்கள் என தோன்றுகிறது..



இதனால் தெரிவிக்கப்படுவது யாதெனில், ரத்த சரித்திரம் படத்தை பார்க்காதீர்கள் என்று சொல்ல வில்லை..



ஆனால் வன்முறையை போற்றும்போது, நாமும் அதன் ஓர் அங்கமாகி விடுகிறோம்.. என்றாவது அதனால் பாதிக்கப்படும்போது, அதை எதிருக்கும் தார்மீக உரிமையை இழந்து விடுகிறோம் என்பதை புரிந்து கொண்டால் போதும்...

அப்படி என்றால் நீதி போதனை படங்கள் மட்டும்தான் வர வேண்டுமா என்றால் இல்லை...

பாலியல் காட்சிகளை காட்டாமல், பாலியல் கொடுமையை உணர வைத்த அஞ்சாதே படம் ஒரு நல்ல உதாரணம்..

ஆனால் எல்லா இயக்குனர்களும் இது போல பொறுப்புணர்வுடன் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது..
ஆனால், நாம் எதை ஆதரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை நம்மிடம் நாம் எதிர்பார்க்க வேண்டும்..

23 comments:

  1. மாப்பு யார் எக்கேடு கெட்டாலென்ன நம்மளுக்கு பணம் வந்தல் சரி....

    ReplyDelete
  2. ..சுதா said...

    மாப்பு யார் எக்கேடு கெட்டாலென்ன நம்மளுக்கு பணம் வந்தல் சரி....

    :(

    ReplyDelete
  3. Excellent Humanitarial view

    //வன்முறையை ரசிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி விட்டு, நாளை வன்முறையால் பாதிக்கப்படும்போது அழுது புலம்பி என்ன செய்வது.....
    வன்முறை என்பது வேறு.. வீரம் என்பது வேறு.....
    வன்முறையை போற்றும்போது, நாமும் அதன் ஓர் அங்கமாகி விடுகிறோம்.//

    அருமையானக் கருத்துக்களைக் கொண்ட ஒரு சிறந்த பதிவு.

    ReplyDelete
  4. நன்றி அரபுதமிழன்

    ReplyDelete
  5. தேவையில்லாத குப்பை இந்த படம்.

    ReplyDelete
  6. @தொப்பிதொப்பி
    நாலு வரில நச் விமர்சனம்

    ReplyDelete
  7. அவ்வளவு வன்முறையாகவா இருக்குது????? நாம பார்க்கலாம். நமக்கு பழக்கப்பட்டதுதானே!

    ReplyDelete
  8. @ஜனா
    வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழினம்தான் . ஆனால் நம்மில் சிலர் அதை ரசிப்பது வினோதம்

    ReplyDelete
  9. இப்பொழுதெல்லாம் வன்முறைகள் இல்லையென்றால் படமே முழுமையடையாது என்று நினைக்கிறார்கள்...

    இது போன்ற காட்சிகளை பார்த்து இளைய சமுதாயம் கேட்டு போகிறது என்பதும் மறுக்க முடியாத் உண்மை..

    ReplyDelete
  10. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப்படம் ஒருவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைப் பற்றியது. உண்மையை எடுத்துச் சொல்லும்போது அது ரத்தமும் சகதியுமாகத்தான் இருக்கும். பரிதாலா ரவி பற்றி அறிந்து கொள்ள ஒரு ஆந்திர நண்பருடன் உரையாடுங்கள். அவனின் தாண்டவம் உங்களுக்குப் புரியும். படத்தில் காட்டியதெல்லாம் ஒன்றும் இல்லை.

    நான்..

    ReplyDelete
  11. நான் இன்னும் பார்க்கவில்லை, படத்தின் டிரெய்லரே ரொம்ப மோசம், இரத்தம், இரத்தம், இரத்தம்............
    இளைய சமுதாயம் பார்க்க கூடாத படம்.

    காசு குடுத்தா எதுல வேண்டுமானாலும் நடிக்கலாமா?

    ReplyDelete
  12. வன்முறை மட்டும் மீது மட்டும் ஏன் சார் கோபம்?

    பள்ளிக் குழந்தைகளை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதை நியாயப் படுத்தும் மைனா, களவானி போன்ற படங்களை புகழும் நம்மால் இதைமட்டும் ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை?

    ReplyDelete
  13. அன்னை தெரசா ஒரு முறை தன சமூக பணிகளுக்காக நன்கொடை வாங்க சென்றார் ... ஒரு பணக்காரரிடம் கை ஏந்தினார்... அந்த பணக்காரர் எச்சில் துப்பி , இதை கொண்டு செல் என பரிகாசம் செய்தார்.. அன்னை தெரசா சற்றும் அயரவில்லை " சரி.. இதை நான் வைத்து கொள்கிறேன்... என்னை நம்பியுள்ள நலிவடைந்த மக்களுக்கு வேறு எதாவது கொடுங்கள்" என்றார் ..


    ...Humility! She was a great inspiration for many.

    ReplyDelete
  14. நான் இந்த படத்த இன்னும் பாக்கல..பாக்குற ஐடியாவும் இல்ல..

    நல்ல பதிவு...

    ReplyDelete
  15. நான் இந்த படத்த இன்னும் பாக்கல..பாக்குற ஐடியாவும் இல்ல..”

    அருமையான முடிவு

    ReplyDelete
  16. ...Humility! She was a great inspiration for many.


    ஆம்..

    ஆனால் அவர் போன்றோரை மறந்து விட்டு, வேறு எதையோ ஆராதிக்கிறோம்

    ReplyDelete
  17. வன்முறை மட்டும் மீது மட்டும் ஏன் சார் கோபம்? ”

    எல்லா தீமையும் கெட்டதுதான்

    ReplyDelete
  18. இளைய சமுதாயம் பார்க்க கூடாத படம்”

    இளைய சமுதாயம் மட்டும் அல்ல..

    எந்த சமுதாயமும் பார்க்க கூடாத படம்
    .

    ReplyDelete
  19. நல்ல செய்தி !”

    நன்றி கனாகாதலரே

    ReplyDelete
  20. இது போன்ற காட்சிகளை பார்த்து இளைய சமுதாயம் கேட்டு போகிறது என்பதும் மறுக்க முடியாத் உண்மை”

    இளைய சமுதாயம் மட்டும் அல்ல... எல்லா சமுதாயமும்தான்

    ReplyDelete
  21. உண்மையை எடுத்துச் சொல்லும்போது அது ரத்தமும் சகதியுமாகத்தான் இருக்கும்”

    இருக்கட்டும்.. ஆனால் அதை ஆராதிப்பதுபோல இருக்க கூடாது என்பதுதான் நம் விருப்பம்...

    இரு தர்ப்புக்கு இடையே சண்டையில் பாதிக்கப்பட்டடு அப்பாவிகள்தானே..

    ReplyDelete
  22. அருமையான கமெண்ட். இது போல் வன்முறை நோக்கில் எடுக்கப்படும் படங்களுக்கு இது ஒரு அருமையான சவுக்கு அடி. நான் நெடு நாளாக கூற விரும்பியதை நீங்கள் கூறி விட்டீர்கள்.. நன்றி நண்பரே. இது போன்ற படங்களை மக்கள் கண்டிப்பாக ஆதரிக்கவே கூடாது. இன்னும் சொல்ல போனால் இந்த படத்தின் ட்ரெயிலரை கூட பார்க்க கூடாது. என்ன ஒரு கொடூர சிந்தனை. ? கேட்டால் உண்மை சம்பவம் என்று தத்துவம் வேறு ... ஏன் நாட்டில் வேறு எந்த நல்ல உண்மை சம்பவங்களும் நடந்ததே இல்லையா? இது போன்ற படங்கள் வரத்தொடங்கின என்றால் மேலை நாடுகளில் குரூர எண்ணங்கள் கொண்ட “சைக்கோகள்” போல நம் நாட்டின் மக்களும் மனதளவில் பாதிக்கபட வாய்ப்பு உள்ளது.. இது வேடிக்கையாக சிலருக்கு தோன்றலாம் ஆனால் இது உண்மை... எனக்கு வருத்தம் என்ன வென்றால் நல்ல குடும்பத்தோடு பார்க்ககூடிய படங்களை நடித்த சூர்யாவுக்கு ஏன் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் வந்தது??? காசு கொடுத்தால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற கேவலமான எண்ணம் இவ்ருக்கும் வந்து விட்டதோ என எண்ண தோன்றுகிறது... இந்த படம் நல்ல வேளை “பிளாப்” ஆனது... மிக்க சந்தோஷம். !!!!!!!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா