Thursday, December 30, 2010

கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்

 

லகின் மற்ற இசைகளுக்கும் கர்னாடக இசைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

இந்த இசை மட்டுமே ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான இசை என்ற முத்திரையை சரியாகவோ தவறாகவோ பெற்று விட்டது…

 

இது குறித்து நண்பர் Mrinzo நிர்மலின் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 

**********************************************************************

 

ர்நாடக இசையின் மாதம் இது, நம்மால இந்த இசையை ரசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.  நம்ம ஊர் சாஸ்த்ரிய இசை என்று புகழ்கிறோம்.அது தமிழில் இல்லை என்று வருந்துகிறோம்.

நம்ம ஊர்லதான் இருக்கு என்றாலும் நாம் அந்நியப்பட்டுகிடக்கிறோம். ஓர் இசையை இப்படியா சமுகத்தின் பெருவாரியான மக்களிடம் இருந்து அந்நியபடுத்துவது.

இதெல்லாம் உங்களோட Problem , அந்த இசையின் problem இல்லை என்று சொல்லுவாங்க.

சரி எங்களுக்கு ரசனை இல்லைதான், அதை ரசிக்கிறவர்கள் எதை ரசிக்கிறார்கள்? யார் ரசிக்கிறார்கள்? இப்படித்தான் தொன்று தொட்டு இந்த இசை அந்நியப்பட்டு கிடந்ததா?

.

எனக்கு கோபமெல்லாம் அது தமிழில் பாடவில்லை என்றோ அது ஒரு சிறு குழுவின் கையில் இருக்கிறதோ இல்லை.

எனக்கு கோபமெல்லாம் அது ஏன் பக்தியை தவிர எந்த பாடலுக்கும் அங்கு இடமில்லை?

உலகில் உள்ள எல்லா சாஸ்திரிய சங்கீதம் போலத்தானே இதுவும்.

கடவுளுக்கு இந்த இசையை மட்டும்தான் பிடிக்கும்போல...

பக்தியை பிரித்து இந்த இசையை பார்க்கமுடியவில்லையே?

சரி இந்த இசை ஒரு மேட்டுகுடி இசையென்று வைத்து கொள்ளவோம்,

நீங்க தலித்தை, தீண்டாமையை, தொழிலாளியை பற்றி பாடவேண்டாங்க

அதுக்கு நாட்டுப்புற பாட்டு இருக்கு,  

atleast உங்க சகோதரி பற்றி, பெறந்த குழதையை பற்றி, ஒரு நட்பை பற்றி, சாப்பாடை,உங்க சோகத்தை, உங்க காதல் அதன் வெற்றி , தோல்வியை பற்றி, மனிதனை பற்றி இப்படி எவள்ளவோ பற்றி பாடலாம்ல.

இந்த ஹிந்துஸ்தானி இசையை பாருங்க..

பக்திக்கு பஜன், காதலுக்கு கவிதைக்கும் சோகத்துக்கும் கசல், கொண்டாட்டத்துக்கு கவாலி என்று எப்படி பல கோணங்கனில் பரந்து கிடக்குது.

ம்ம்,ஒரு வேளை இந்த இசை கடவுளின் காதல், கடவுளின் செயல் அவரது கருணை, அன்பு மேலும் நூறாண்டுக்கு முன்பு நடந்தவற்றை பற்றி மட்டும்தான் பாடமுடியுமோ?

பக்தி இருக்கவேண்டியதுதான் ... அதற்கு இப்படியா? 100 ஆண்டு கழித்து ஓர் ஆராய்ச்சியாளன் இந்த இசையை வைத்து நமது சமுகத்தை ஆராய்ந்து எழுதினால் என்ன எழுதுவான்?

- Mrinzo Nirmal

-

22 comments:

  1. தவறு...தவறு...கர்நாடக இசையில் இப்போ நிறைய பாடகர்கள் பாரதியார் பாட்டுகள்(சின்னசிறு கிளியே ) கூட பாடுறாங்க..ஒரு பாடகி சபாவில் ..ராமாயணம்..மற்றும் அறிவுகதைகள் எலாம் அழாகாய் விளக்கி அழகான தமிழ் பாட்டுகளை பாடுவதை டிவி யில் பார்த்து இருக்கேன்..அது ஒரு காலத்தில் தான் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் தான் கத்துக்கிறாங்க..அவங்க தான் பாடுகிராங்கனு இருந்தது.....ஜேசுதாஸ் சார் ஒரு கிறித்துவர்..ஆனால் அவர் பாடவில்லையா சாஸ்திரிய சங்கீதம்...இது அவங்க அவங்க ரசனை பொறுத்து மட்டுமே...யாருக்கு அதில் ஆர்வம் இருக்கோ...அதை கத்துக்குவாங்க..ரசிப்பாங்க...இதெல்லாம் இப்போ பெரும்பாலும் மாறிபோச்சு....ரெண்டாவது, பக்தியில் கூட அவங்க பாடும் டாபிக்கை உத்து கவனிச்சால் தெரியும்...கண்ணனை கோபியர்கள் காதல் செய்ததை விவரித்தல் காதல் பாட்டு...சீதாவை ராமன் பார்த்த பார்வையை விவரிப்பதும் காதல் பாட்டு...இதிலும் நவரசங்கள் இருக்கலாம்...(எனக்கு மருந்துக்கு கூட கர்நாடக இசை தெரியாது...ஆனாலும் சில நேரங்களில் கேட்பேன்...ராக ஆலாபனைகள் புரியாட்டியும் தமிழில் சில பாடல்கள் கொஞ்சி கொஞ்சி பாடும்போது என்னவோ பிடிச்சு தான் போகுது...:)))

    ரெண்டாவது...நமக்குள் நிறைய பழமையை நாகரிக முன்னேற்றேம்னு தொலைச்சுட்டு வரோம்...இது ஒன்னாவது தொலையாமல் இருக்கட்டுமே..:)))

    ReplyDelete
  2. யாருங்க இந்த mrinzo nirmal... அவரை நம்ம நண்பர்கள் வட்டத்திற்கு அறிமுகப் படுத்தி வைக்கிறா மாதிரி ஒரு பதிவு போடுங்களேன்...

    ReplyDelete
  3. உங்களுக்கு ஒரோ mirinzo nirmal கிடைத்திருப்பது போல எனக்கு ஒரு Jayadev Das கிடைத்திருக்கிறார்... இது போன்றவர்களின் பின்னூட்டங்கள் மென்மேலும் ஊக்கம் அளிக்கின்றன...

    ReplyDelete
  4. ரசனை சார்ந்த விஷயம் -இதுவும் உண்மை ,நிர்மல் சொல்லுரதுளையும் உண்மை இருக்கு .ஆனால் இது ஒரு சாரரின் இசை அப்டின்னு சொல்லிற முடியாது ,ஒரு அம்பது வருஷம் முன்னாடி -நம் மக்களுக்கு மாற்று இசையின் அறிமுகம் இல்லை அதனால எல்லாருமே கர்நாடக இசைய ரசிச்சாங்க இது உண்மை ,திருவாடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை -எல்லாம் நம்மூருல பீதொவேன் மாறி கொண்டாடுனாங்க ..எல்லா இடத்துலயும் இது பரவலா இருந்துச்சு ,..அது மட்டுமே நமக்கு கிடைச்சதால அதன் ரசனை பரவலா இருந்துச்சு .அப்புறம் மாற்று இசை ,சினிமா இசை ,வெளி நாட்டு இசை இதெல்லாம் போக போக நம் மக்களுக்கு கிடைச்சுது ,வேகமான -துள்ளலான இசை ,மெதுவான உருக்கமான இசை ,இப்படி பலவகைகள் கிடைத்தது எம்பதுகளில் இந்த மாற்றம் அவர் அவர் விருப்பமாக வந்தது ..இதுக்கப்புறம் அது ஓரளவுக்கு ஒரு வட்டத்துக்குள்ள அடைய ஆரம்பிச்சுது ,இப்போ கொஞ்ச காலமா -கொஞ்சம் பரவா இல்லை ,இசை சென்றடைய மொழி பிரச்சனை இல்லை -அது ஜனரஞ்சகமா இருக்கணும் ,ஜனரஞ்சகமா நெறைய பாடல் இருந்தாலும் மேடைகளில் பாடுறவங்க தங்களோட மேதமைய காட்ட ஏதோ ஒரு கஷ்டமான ராகத்த பாடி அவங்களையும் நம்மளையும் கஷ்ட படுத்துறது தான் சிக்கல் .ஆனால் இத நிச்சயம் ஒத்துக்கணும் -பக்தி பாடல்கை தவிர்த்து வேறு பாடல்கள் அவளவாக யாரும் முயலவில்லை ,கொஞ்சம் பாரதியார் பாடல்கள்,தேச பக்தி பாடல்கள் வெளி வந்துருக்கு ,இன்னும் சமூக பாடல்கள் எல்லாம் முயற்ச்சி பண்ணனும்

    ReplyDelete
  5. புதுவருட வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. நல்ல பல விடயங்கள் பகிரப்பட்டள்ளது இருவருக்கும் நன்றிகள்..

    தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    அழியா வடுக்கள்

    ReplyDelete
  7. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ம்ம்ம்ம்...மிக மிக ஆழமாக பார்க்கவேண்டிய விடயம்.

    ReplyDelete
  9. உங்களுக்கும் , உறவுகளுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பார்வையாளன் அவர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  12. @லக்‌ஷ்மி

    நன்றி

    ReplyDelete
  13. நன்றி சிவகுமார்

    ReplyDelete
  14. ந்ன்றி கஸாலி

    ReplyDelete
  15. நன்றி இனியவன்

    ReplyDelete
  16. பிரபாகரன்..
    உங்கள் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவேன்

    ReplyDelete
  17. வ்ரிவான ஆழமான கருத்துக்களுக்கு ந்ன்றி ஆனந்தி மேடம்

    ReplyDelete
  18. Dear Mr.Paarvaiyaalan ,this posting is very good. I just happen to see your your posting and I am sending my comments to you.
    I had a similar experience like this and I want to share this with you.Around 10 years ago I was travelling in a TN Government bus to Neyveli and the bus was bound to Kumbakonam.Conductor switched on the VCD Player and played Azhgan movie which was directed by K,Balachander.I was enjoying the movie.Bus was not at all crowded ,hardly 10 to 15 passengers in the bus.Just before the Chengalpat a group of passengers agitated that the movie was not upto their taste and they wanted another movie.They particularly demanded Vijaykanth or Vijay movie.Conductor played movie of Vijaykanth. Later they were all enjoying the movie and I was crying inside my heart for travelling with such a low sense people. Personally I have the same opinion like about Carnatic music. I hate Carnatic music.

    Thulasi Ram

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா