Monday, December 6, 2010

உலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகிளு அறிவியல் ( வயது வந்தோருக்கு மட்டும்)

மனிதனுக்கு இருக்கும் ஒன்று பறவைக்கு இல்லை..
ஃபீலிங்ஸ் ?
அதை சொல்லவில்லை…
இன்னொன்று…
ஆம்.. நீங்கள் நினைப்பது சரிதான்..
”அது”தான்..
ஆனால் பறவைக்கும்  “ அது “ உண்டு என கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்…  இதில் உலக சாதனை செய்துள்ளது ஒரு பறவை.
அறிவியல் கண்டுபிடிப்பு என்ற வகையில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..



ஒரு பறவை இனத்துக்கு ஒரு தனி சிறப்பு இருப்பதை வட அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆம்.. இதன் ஆணுறுப்பு 420 மில்லி மீட்டர் நீளமுடையுது.. வேறு எந்த பறவைக்கும் இந்த அளவு நீளம் கிடையாது..
அலாஸ்கா பல்கலையை சேர்ந்த டாக்டர். கெவின் மெக்க்ராக்கன் மற்றும் அவரது சகாக்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு வகை அர்ஜெண்டினா வாத்துக்கு உலகிலேயே நீளமான ஆணுறுப்பு இருப்பதாக கூறுகிறார் இவர்.
பறவைகள் “அந்த” மேட்டரை எப்படி செய்கின்றன என்று ஆய்வதை முழு நேர பணியாக ( இப்படி ஒரு பணியா ? ! ) கொண்டுள்ள டாக்டர் . ரௌர் மல்டர் ( மெல்பர்ன் பலகலைக்கழகம் ) கூறுகையில் “ இது ஒரு வியத்தகு கண்டு பிடிப்பு என்றார்..
பொதுவாக பறவைகளுக்கு “அது” இருக்காது. சில பறவைகளுக்கு கொஞ்சமாக *** இருக்கும்… இவ்வளவு நீளமாக இருப்பது இது வரை பார்த்திராத ஒன்று என்கிறார்..
”சில உயிரினங்களில் நீளம்தான் , காதலை முடிவு செய்யும்.. உதாரணமாக மயிலின் மனதை பார்த்து அதற்கு காதலி கிடைப்பதில்லை.. தோகையின் அடிப்படையில்தான் லவ்..
      அதே போல இந்த வகை வாத்துக்களுக்கு லவ் விண்ணப்பம் என்பது “ அதுதான் “.. காதலை வளர்க்கும் போட்டியில், பரிணாம வளர்ச்சியில் , இது இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது என்கிறார் டாக்டர். கெவின் மெக்க்ராக்கன் .
போட்டி மனப்பான்மை இவற்றுக்கு அதிகம் என்பதற்கு ஆதாரம் காட்டுகிறார் இவர்..
”அதன் உறுப்பில் இறகு போன்ற அமைப்பு இருக்கிறது…
இது தன் கடமை ஆற்றும்போது ( இனிமையான கடமை ) , அதற்கு முன் ஏதாவது ஆண் பறவை அசிங்கம் செய்து தொலைத்து இருந்தால் ( அதாவது இந்த பறவையின் பார்வையில் அது அசிங்கம் ) , அதை துடைத்து எடுத்து விடும் இந்த இறகு. ( ஒரு பணியை செய்யும்போது , ஆட்டோமேட்டிக்காக இன்னொரு பணியும் நடக்கும் )
அந்த அளவுக்கு சின்சியர் ஆனவை இவை “ என்கிறார் இவர்..
இதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறது என்பதை பற்றியெல்லாம் எழுதி பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை ..கெட்ட வரைக்கும் போதும்..
சரி… அதன் படம் எங்கே என்கிறீர்களா…

அதை பார்க்க வேண்டுமானால் கீழே பாருங்கள் என  கப்பித்தனமாக(!!)  ( பிரபாகரன் வலைத்தளத்தில் நடந்த ஓர் ஆரோக்கியமான விவாதத்தில் கிடைத்த வார்த்தை இது .. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி )  ஜோக் அடிக்க விரும்பவில்லை.

படம் கடைசியில் இருக்கிறது. கண்டு களியுங்கள்.
பார்க்க விரும்பாதவர்கள், இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்


*****************************************















































image

16 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  2. அருமையான தகவல்... இதெல்லாம் வயதானோருக்கா... இல்லவே இல்ல இத கல்வி சம்பந்தப்பட்ட சமாச்சாரமுங்கோ... நன்றியுங்கோ...

    ReplyDelete
  3. நல்லதொரு தகவல் பதிவு.. இம்புட்டு பெரி...

    படித்து முடித்ததும் மனதுக்குள் வந்த கேள்வி. அது சிறிதாக சில பறவைகள் இருந்தால் நிவர்த்திசெய்ய யாரிடம்போகும்?

    ReplyDelete
  4. இல்லவே இல்ல இத கல்வி சம்பந்தப்பட்ட சமாச்சாரமுங்கோ... ”

    உண்மைதான்.. ஆனால் சிலர் சண்டைக்கு வரக்கூடும் என்பதால் அந்த எச்சரிக்கை

    ReplyDelete
  5. படித்து முடித்ததும் மனதுக்குள் வந்த கேள்வி. அது சிறிதாக சில பறவைகள் இருந்தால் நிவர்த்திசெய்ய யாரிடம்போகும்?"

    இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களில் இறங்க ஆசைதான்..
    சிலர் திட்டுவார்களொ என பயமாக இருக்கிரது

    ReplyDelete
  6. நான் பாக்கல! (வயது வரல!!):-)

    புதுசா இருக்கு! படம் தலைகீழா இருக்கா பாஸ்? தொடருங்கள்!

    ReplyDelete
  7. ஜீ... said...
    நான் பாக்கல! ""

    சரி... நாங்க நம்பிட்டோம்..

    சந்தோஷமா ?

    ReplyDelete
  8. ஆத்தீ...எம்புட்டு நீளம்...

    ReplyDelete
  9. ஹரிஸ் said...
    ஆத்தீ...எம்புட்டு நீளம்."

    இது ப்ள்ஸ்ஸா அல்லது மைனஸா என்ற விவாதத்தில் என்னை இறக்கிவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  10. அம்மாடியோவ் இவலோ பெருசா !!!! பறவையின் நீளதைவிட பெருசா இருக்கே. பாவம் பெண் பறவை.

    இப்படிக்கு
    ஒன்றும் அறியாதவன்

    ReplyDelete
  11. இப்படிக்கு
    ஒன்றும் அறியாதவன்"

    நம்பிவிட்டோம்..
    சந்தோஷமா?

    ReplyDelete
  12. Mathi Sutha...

    "எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா..."

    நானும் பாக்குறேன்... ஒரு பதிவு விடாம
    எல்லாப் பதிவிலும் இதை எழுதுகிறாயே.. இதுக்கு என்ன அர்த்தம்...

    ReplyDelete
  13. // கப்பித்தனமாக(!!) (பிரபாகரன் வலைத்தளத்தில் நடந்த ஓர் ஆரோக்கியமான விவாதத்தில் கிடைத்த வார்த்தை இது .. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி) //
    ஹா... ஹா... ஹா...

    எனக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லை என்பதால் பதிவை படிக்கவில்லை... படத்தையும் பாக்கலைங்க... கண்ண மூடிக்கிட்டே ஸ்க்ரோல் பண்ணேன்... நம்புங்க...

    ReplyDelete
  14. இதுக்கு என்ன அர்த்தம்.."

    சகோதரர் மதி சுதா மிகவும் ஃபாஸ்டாக இருக்கிறார் என அர்த்தம்

    ReplyDelete
  15. படத்தையும் பாக்கலைங்க... கண்ண மூடிக்கிட்டே ஸ்க்ரோல் பண்ணேன்... நம்புங்க.”

    நம்பிட்டோம்

    திருப்தியா

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா