Tuesday, December 28, 2010

சுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mrinzo Nirmal

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய கேளுங்க, சுகம்கொடுக்குற பொண்ணுக்கு மனசு இருக்கு பாருங்க.

 ஈசன் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில்   தஞ்சை செல்வி படிய பாட்டை கேட்டீர்களா.?


 எனக்கு தெரிஞ்சி "சுகம் குடுக்குற பொண்ணு" என முதல்  முறையா ஒரு பொண்ணு சொலற மாதிரி நம்ம தமிழ் படத்தில் வந்தது இதுதான் முதல் முறை என்று  நினைகேறேன். ஒரு பொண்ணோட கதைதான் பாட்டு, அந்த பாட்டு சொல்லும் அர்த்தத்திற்கு Irony யான ஒரு background music.


 கதைய கேட்கும் போது ஏற்படும் உணர்வை அந்த rhythem  மறைகிறது, இதுதான் நம்ம ஸ்டைல், சோகத்தை சொன்னாலும் ஒரு கும்மாளத்தோடு சொல்லுறது. இந்த Back  ground music ....



  • அந்த பெண் அவளது வறுமையை தனது உடலால் வென்றதை சொல்லுதா?!!! 
  • விபச்சாரம் பாவம்.. அதை செய்பவர்கள் பாவி என்று சொல்லும் கலாச்சார கனவான்களுக்கு குடுக்குற மரண அடியா?


  •  என்னோட கனவுகள் உடைந்துபோனாலும் மத்தவங்க   கனவுகளுக்காக    இந்த கூத்தா?!!



இப்படி பல நெனைப்பு நமக்கு ஏற்படுது இந்த பாட்டை கேட்கும்போது.  


இந்த தஞ்சை செல்வி என்ற பாடகியை பார்க்கணும்னா...  http://www.cinefundas.com/2010/11/22/thanjai-selvi-speaks-about-easan ,


--Mrinzo Nirmal

9 comments:

  1. கண்டிப்பாக ரொம்ப நெகிழ வைத்த பாடல்.. பிரபாகரன் பாடல் வெளியானபோதே இதை பற்றி விளக்கியிருந்தார்..

    ReplyDelete
  2. கண்டிப்பாக ரொம்ப நெகிழ வைத்த பாடல்.. பிரபாகரன் பாடல் வெளியானபோதே இதை பற்றி விளக்கியிருந்தார்.."

    ஆமாம்..

    என் நண்பர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்திப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

    ReplyDelete
  3. இந்தப் பாடலை பற்றி நான் ஏற்கனவே ஒருமுறை விலாவரியா எழுதியிருந்தேன்... நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_23.html

    ReplyDelete
  4. வலிகளை சொல்லும் பாடல்.. இந்த பாடலை பற்றி நான் ஒரு பதிவு கூட போட்டிருந்தேன்..

    http://verumpaye.blogspot.com/2010/11/blog-post_26.html

    ReplyDelete
  5. @பிரபா , வெறும்பய
    உங்கள் பதிவுகளை முன்பே பார்த்துவிட்டேன் . கருத்தையும் சொல்லிவிட்டேன் .
    இந்த இடுகை நண்பர் நிர்மலின் எழுத்து

    ReplyDelete
  6. அற்புதமான பாடல் நண்பரே ...

    ReplyDelete
  7. //என் நண்பர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்திப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது// பார்வையாளன், ஜெயமோகனும் உங்க நண்பரா...சொல்லவேயில்லை?

    http://www.jeyamohan.in/?p=10972

    ReplyDelete
  8. என்னை ரொம்ப பாதித்த பாடல். அந்த பெண்ணின் முகமும் கண்ணீரும், நடனமும் நெடு நாள் நினைவில் நிற்கும்

    ReplyDelete
  9. படம் பார்க்கலை...அதனால் காட்சி அமைப்பு பத்தி என்னாலே சரியா புரிஞ்சுக்க முடில...ஆனால் fm இல் கேட்டு இருக்கேன்...வித்யாசமான வரிகளோடு..வித்யாசமான குரலில்..நாட்டுப்புற இசையில் கேட்டு இருக்கேன்...இந்த மாதிரி பாடல் வரிகளை படத்தில் வச்சதுக்கு தயாரிப்பளருக்கு தைரியம் தான்(மதுரைவாசிங்க எப்பவும் unique தான்:))) ...நான் உன்னொரு வாட்டி கேட்டு பார்த்துட்டு மீண்டும் இந்த பதிவை படிச்சால் சரியா இருக்கும்னு தோணுது...அப்புறம்...பார்வையாளன் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...:)))

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா