Friday, December 24, 2010

மன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் வாட்டர்லூ ?

மயில் ஆடுவதை பார்த்து வான்கோழி ஆட நினைத்து அவமானப்பட்டதாம்..
அது போல , எந்திரனுக்கு இணையாக படம் எடுக்க நினைத்த கமலின் படம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது..
புரியாத புதிர், சேரன் பாண்டியன் போன்ற வெற்றி படங்கள் இயக்கியவர் கே எஸ் ரவிகுமார்,,
அதன் பின் வந்த நாட்டாமை அவர் இயக்கிய முதல் பிரமாண்ட படம்..
அப்பொதெல்லாம் கமல் இவரை பொருட்டாக நினைத்ததில்லை… ஆனால் ரஜினி அவருடன் இணைந்து பணி புரிய முன்வந்தார்.. அந்த கால கட்டத்தில் இது விசித்திரமான கூட்டணியாக பார்க்கப்பட்டது..
அந்த படதின் வெற்றி கமலை சிந்திக்க வைத்தது..
அதன் பின் கே எஸ் ரவிகுமாருடன் அவரும் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார்..



ஆனால் அது இயல்பான கூட்டணியாக அமையவில்லை… இருந்தபோதிலும் படங்கள் தோல்வி அடையாமல் தப்பித்து வந்தன.. கமலில் டார்ச்சரையும் மீறி கே எஸ் ரவிகுமார் தன் திறமையால் படத்தை தூக்கி நிறுத்தி வந்தார்..
இதன் மூலம் வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்து வந்தார்..
ஆனால் எந்திரனை வெல்ல வேண்டும் என்ற ஆரவத்தில் கமல் இந்த படத்தில் அதீத ஆர்வம் காட்டவே, கே எஸ் ரவிகுமார் எதுவும் செய்ய இயலவில்லை , மன்மதன் அம்பு படத்தில்..
வெற்றி இயக்குனர் என்ற பெயர் இந்த படம் மூலம் பறி போவதை அவரால் தடுக்க முடியவில்லை..
முதல் தோல்வியை அவர் சந்திக்கிறார்.. கமலுக்கு தோல்வி எல்லாம் தோசை சாப்பிடுவது போல என்பதால் அவர் கவலைப்படவில்லை..
அந்த படம் குறித்து வலை உலக பிரமுகர்கள் கருத்து உங்கள் பார்வைக்கு….

******************************************************************************

My Photo
படம் பற்றிய விளம்பரங்கள் தொல்லைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப வந்தாலும் அது எந்திரனின் விற்பனை வணிகத் தந்திரத்துக்கு ஒப்பாக இல்லை என்பது நேற்று இத்திரைப்படம் வெளியானபோது தெரிந்துவிட்டது.


கலைஞானியின் இத்திரைப்படம் ஒரு சிறிய சலசலப்பைக்கூட எழுப்பாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.


ஏற்கெனவே படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பின்பு முன் பதிவுகள் களைகட்டும் என்று நினைத்திருந்த தியேட்டர்காரர்கள் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது

உதயம் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களின் எண்ணிக்கைக்கூட மிகக் குறைவுதான். சசிகுமாரின் 'ஈசன்' படத்திற்கு இதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் பேனர்கள் இருக்கின்றன.
இத்திரைப்படம் பி அண்ட் சி தியேட்டர்களில் 3 வாரங்களுக்கு ஓடுவது என்பதே மிகப் பெரிய விஷயம்தான்..

நீலவானம் பாடலுக்கு ஏன் அப்படியொரு இழுப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..? பாடல் காட்சியில் அந்த “நீ”-க்கு கமல் அண்ணன் தனது வாயை இழுத்து வைத்துப் பாடுவதைப் பார்த்தால் “ஏன் இவ்ளோ கஷ்டப்படணும்..? எளிதாகப் புரிவதுபோல் வேறு யாரிடமாவது கொடுத்து எழுத வைத்திருக்கலாமே..?” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

மைனா படத்தில் 13 கோடி லாபம் பார்த்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைச் சொந்தமாக ரிலீஸ் செய்திருந்தால் இதே அளவுக்கு நிச்சயம் நஷ்டத்தைத்தான் சந்தித்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது..

 
- உண்மைதமிழன்
 
My Photoபடம் போட்டு 20 நிமிடங்கள் கழித்துத்தான் ஹீரோவே அறிமுகம் ஆகிறார்
என்னும்போதே ஒரு காதல் சப்ஜெக்ட் படத்துக்கான முதல் சறுக்கல் 
தொடங்கி விடுகிறது


நடிகையை காதலிக்கும் பணக்கார வாலிபன் அவள் மீது சந்தேகப்பட்டு
ஒரு உளவாளியை நியமித்து அவள் கேரக்டரை ஸ்டடி பண்ணுகிறான்.அந்த உளவாளியே அந்த நடிகையுடன் ஜோடி சேரும் சூழ்நிலை எப்படி வருகிறது என்பதை 17 ரீல்கள் இழு இழு என இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



மகாநதி ,குணா படங்களுக்கு பிறகு உலக நாயகன் பட்டம் கிரீடம் வந்த பிறகு அவருக்கு தான் திரையில் தனியாகத்தெரிய வேண்டும் என்ற ஆவேச உந்துதல் ஏற்பட்டு இருக்கிறது.அது ஓவர் ஆக்டிங்கில் கொண்டு போய் விட்டு விடுகிறது.
படத்தில் வள வள என வசன மழை பொழிந்துகொண்டே இருப்பது பெரிய மைனஸ்,அதிலும் ஆங்கில வசனங்கள் அதிகம்


ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,பி சி செண்ட்டர்களில் பொங்கல் வ்ரை ஓடலாம்


-அட்ரா சக்க


முதல் பாதியில் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை மிகப்பெரும் பலவீனம்
கிரேஸி மோகன் அளவிற்கு கமலின் வசனங்கள் சிரிப்பு வரவழைக்கவில்லை
காமெடி என்ற பெயரில் மலையாள ஜோடிகள் செய்யும் ஓவர் ஆக்டிங் எரிச்சலை மூட்டுகிறது.
 
காமெடிப்படம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த சிலர் ஏமாற்றமடைந்து கத்திக்கொண்டிருந்தனர்.
தியேட்டரில் கமல் ரசிகர்களே டல் ஆகிவிட்டார்கள்..ஆவரேஜ் தான்
செங்கோவி


என்னை பொருத்தவரை படம் பாடு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..
1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.
கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.
கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...
பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...
அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல.
- VJ




RAJA said...



அட போங்க பாஸ்....பொதுவா இங்க கத்தாரில குறிப்பிட்ட தமிழ் படம் தான் வரும்.வழக்கம்போல ஆர்வத்துல தான் போனோம்.........முடியல.கமல் நல்ல நடிகர் ஆனா சிறந்த கதை ஆசிரியர் அல்லது வசன கர்த்தா அல்ல.
இடைவேளை வரை படம் பார்க்கலாம்.பிற்பகுதி காமெடி என்கிற பெயரில் சரியான கொத்து.இப்படம் படு தோல்வி என்பதை கதையின் முடிவே சொல்லிவிடும்.யாராலும் ஜீரணிக்க முடியாது.


மொக்க படம் தல....
தமிழ் (இந்திய) சினிமால ஒரே ஒரு ஜாம்பவான் மட்டும்தான்.....
ஏன்னா எந்திரன் இங்க மும்பை பிவிர் ல தமிழ் வெர்ஷன் எட்டு ஷோ, தெலுங்கு வெர்ஷன் நாலு ஷோ, ஹிந்தி வெர்ஷன் ஆறு ஷோன்னு அமர்க்களமா ரிலீஸ் ஆகி சும்மா அதிர வச்சிது,,,, (இது சும்மா சாம்பிள்)... எல்லா தியேட்ட‌ர் லிஸ்ட்ட‌ போட்டா தாங்க‌ மாட்டீங்க‌.... நொந்துருவீங்க‌....
ஆனா மன்னாரு அம்பு ரென்டே ஷோ.... மொத்தம் இருபது பேர்தான் அதுவும் ஈவ்னிங் ஷோவுக்கு.....
மொத்த‌த்துல‌ க‌ம‌ல் ஊரான் காசுல‌ க‌ள்ள‌க்காத‌லியோட‌ ஊர்சுத்த‌ போன‌ ப‌ட‌ம்... அவ்ளோதான்....
உத‌ய‌நிதி த‌ப்பிச்சாச்சி.... ஜெமினி செத்தானுங்க‌....
தியேட்ட‌ர்கார‌ன் த‌ல‌யில‌ துண்டுதான்....
- sivakasi maappillai




Sudhar said...



Director KS Ravikumar recently told in an Interview that Kamal used to tell 5 story in 5 hrs (or minutes ?). But he always copy or take a lead of Hollywood movies.
Why *** he is not using his original story ?

 
 
'கமல் ரசிகன்'ன்னு பச்ச குத்தாத குறையா சுத்தற எனக்கே இந்த படம் பிடிக்கலை.
மேக்கிங்க், கேமரா போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய ஆளுங்க எடுக்கற படத்துல நல்லாத்தான் இருக்கும். சினிமா ரசிகனுக்கு அதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். சொல்ல வந்த கதையை தொய்வில்லாம, ரசிக்கும்படியாகவும் சொல்வது ரொம்ப முக்கியம்.படம் ஓடும் போதே கதை இப்படித்தான் போகும்னு அவனுக்குள்ளே ஒரு ஐடியா இருக்கும், ஆனால் அதையும் மீறி சில இடங்களிலே 'அட' அப்படின்னு தோணனும். முக்கியமா க்ளைமேக்ஸ் 'நச்'சுன்னு இருக்கணும். இப்படி எதுவுமே இல்லாம, சவ சவன்னு படம் போகுது.
எனக்கு இந்த படத்தில் மொக்கையாக தோன்றிய விஷயங்கள் சில:
1. பல காட்சிகளும், கதாபாத்திரங்களும், சம்பவங்களும் ஏற்கனவே பல படங்களில், முக்கியமாக கமல் படங்களில் பார்த்ததாகவவே இருப்பது. உ.தா. கமல் மனைவி இறந்து போனது, தாலி சென்டிமென்ட், பிராமண பாஷை, கமல் தெலுங்கு பேசி சமாளிப்பது, ஆள் மாறாட்ட குழப்பம்
2. கமலுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் எப்படி வந்ததென்று சொல்லாதது
3. க்ளைமேக்சில் எல்லோரும் குழப்பமாக பேசி கடைசியில் சுபமாக முடிப்பது
4. தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் மன்மதன் அம்பு ஒரு மொக்கை அம்பு
-Aruna

29 comments:

  1. >>> கமல் ரசிகனாக இருப்பினும் அவர் படங்களை பெரும்பாலும் திரை அரங்கில் பார்ப்பதில்லை. தொலைக்காட்சி அல்லது டி.வி.டி தான். ரொம்ப நாள் ஆயிற்றே..பார்க்கலாம் என்று ரிசர்வ் வேறு செய்துவிட்டேன். 120 ரூபா டிக்கட் நூறு ரூபா....வாங்க யாருமே இல்லையா...தியேட்டர் வாசல்ல முடிஞ்சா வித்து பாக்கறேன். Lets see.

    ReplyDelete
  2. @சிவகுமார்... அய்யோ பாவம் :(

    ReplyDelete
  3. //வெற்றி இயக்குனர் என்ற பெயர் இந்த படம் மூலம் பறி போவதை அவரால் தடுக்க முடியவில்லை..
    முதல் தோல்வியை அவர் சந்திக்கிறார்.//

    :)))))))))))))))))
    விஜயோடு மின்சார கண்ணா , மாதவனோடு எதிரி , சூர்யாவோடு ஆதவன் ..எல்லாம் வசூல் சாதனைப்படங்களோ ? :)))

    ReplyDelete
  4. விஜயோடு மின்சார கண்ணா , மாதவனோடு எதிரி , சூர்யாவோடு ஆதவன் ..எல்லாம் வசூல் சாதனைப்படங்களோ ? :)))

    ஹா ஹா...

    சபாஷ் ..சரியான கேள்வி.

    நியாயமான கேள்விதான்.

    ஆனால் சாதா அடிக்கும், மரண அடிக்கும் வித்தியசம் இருக்கிறதே

    ReplyDelete
  5. //விஜயோடு மின்சார கண்ணா , மாதவனோடு எதிரி , சூர்யாவோடு ஆதவன் ..எல்லாம் வசூல் சாதனைப்படங்களோ//

    ஆதவன் தோல்வி படம் இல்லை(48 கோடி வசூல் ) - சந்தேகம் எண்டா பதிவர் கேபிள் சங்கரிடம் கேட்கவும்

    ReplyDelete
  6. பிச்சைக்காரன்! இந்த உலகம் என்னவோ உங்க காலடியில தான் இருக்கு ஆனா மன்மதன் விட்ட அம்பு உங்க தலைக்கு மேல தான் இருக்கு, ஆகாயத்துல ராக்கெட் வேகத்துல போயிட்டிருக்கு! படம் நிச்சயம் வெற்றிபெறுவதை பார்க்கத்தான் போகிறீர்கள்! ஏனென்றால் கமல் ரசிகர்களுக்கு பிடிக்காத படமெல்லாம் மக்களுக்கு ரொம்பவும் பிடிக்கும், நல்லாவும் ஓடும்!!

    ReplyDelete
  7. எதுவும் சொல்வதற்கில்லை.... படத்தை மட்டம் தட்ட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டீர்கள்... இனி யாரும் உங்களை தடுக்க முடியாது.... நடத்துங்கள்...

    உங்களுடைய நடுநிலைத்தன்மை பறிபோனது தான் மிச்சம்...

    வலையுலக பிரமுகர்கள் கருத்தை எல்லாம் போட்டிருக்கிறீர்களே.... ஏன் கேபிள் சந்காரின் வரிகள் எதையும் போடவில்லை... அவர் பாசிடிவ் விமர்சனம் எழுதிவிட்டார் என்பதால் தானே...

    ReplyDelete
  8. @ philosophy prabhakaran

    பாஸ்..இதில் என் கருத்து எதுவும் இல்லை.. அவர்கல் சொன்னதை அப்ப்டியே தொகுத்து தந்து இருக்கிறேன்..

    சரி..கேபிள் என்ன சொல்கிறர்ர்..
    பாருங்கள்


    ****************************

    டத்தின் பெரும்பாலான காட்சிகள் செல்போனில் பேசியபடியே நகர்வதால், முதல் பாதியின் தொய்வை தவிர்க்க காட்சிகள் இல்லாததாலும், கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. கமலுக்கும், த்ரிஷாவுக்குமிடையே காதல் என்ற விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். என்ன தான் பல Positive விஷயங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவான உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

    மன்மதன் அம்பு – இலக்கையடைந்தும் தைக்கவில்லை.
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  9. னென்றால் கமல் ரசிகர்களுக்கு பிடிக்காத படமெல்லாம் மக்களுக்கு ரொம்பவும் பிடிக்கும், நல்லாவும் ஓடும்!”

    யாருக்கும் பிடிக்கவில்லை என்பதைத்தானே பதிவர்கள் கருத்து சுட்டி காட்டுகிறது

    ReplyDelete
  10. அடக் கொடுமையே....!
    என்ன எல்லாரும் இப்படி சொல்றாங்க...!
    படம் பப்படம் தானா....???!!!!

    ReplyDelete
  11. // Sathish Kumar said...

    அடக் கொடுமையே....!
    என்ன எல்லாரும் இப்படி சொல்றாங்க...!
    படம் பப்படம் தானா....???!!!!

    //

    சந்தேகம் வேறயா??

    போய் பாருங்க... நொந்து போவீங்க‌

    ReplyDelete
  12. //
    ஏன் கேபிள் சந்காரின் வரிகள் எதையும் போடவில்லை... அவர் பாசிடிவ் விமர்சனம் எழுதிவிட்டார் என்பதால் தானே...
    //

    கேபிள் தல ஒரு கமல் அபிமானி.... எப்போவும் இமயமலையோட பரங்கிமலை ரோட்டோர கல் எல்லாத்தையும் கம்பேர் பண்ணுவார்.... அவரு விமர்சனம் நடுநிலை தவறி ரொம்ப நாள் ஆயாச்சி....

    அத எப்படி கணக்குல எடுக்க முடியும்....

    ReplyDelete
  13. // Silicon Sillu said...

    பிச்சைக்காரன்! இந்த உலகம் என்னவோ உங்க காலடியில தான் இருக்கு ஆனா மன்மதன் விட்ட அம்பு உங்க தலைக்கு மேல தான் இருக்கு, ஆகாயத்துல ராக்கெட் வேகத்துல போயிட்டிருக்கு!
    //

    வாய்ல நல்லா வருது.... போங்கய்யா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க... இந்த படத்துக்கு கூட்டிட்டு போய் ஹாலிடே மூட ஸ்பாயில் பண்ணிடாதீங்க‌

    ReplyDelete
  14. ஹா ஹா . மாப்பிள்ளை . நீங்க சென்னை வரும்போது சொல்லுங்க . நேருல போயி கேபிளோட விவாதிப்போம் . தனியா போனா நம்மை குழப்பி விடுகிறார்

    ReplyDelete
  15. //ஹா ஹா . மாப்பிள்ளை . நீங்க சென்னை வரும்போது சொல்லுங்க . நேருல போயி கேபிளோட விவாதிப்போம் . தனியா போனா நம்மை குழப்பி விடுகிறார்

    //

    நீங்க சொல்றது உண்மை நண்பா....

    நல்ல கன்வின்சிங் பவர் கேபிள் தலக்கி.... ஆனா உண்மை வேற மாதிரி இருக்கும்....

    கண்டிப்பா சென்னையில் சந்திக்கலாம்... நீங்கள் மும்பை வந்தாலும் சந்திக்கலாம்

    ReplyDelete
  16. படம் எதிர்பார்த்ததுதான் :-)

    ReplyDelete
  17. மாப்பிள்ளை . உங்கள் போன் நம்பர் மெயில் செய்யுங்கள் .

    ReplyDelete
  18. கமல் படம் ஓடாம போச்சுனா உங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் போலேயே

    ReplyDelete
  19. படம் 'இந்தியன் ஸ்டாண்டர்ட்' தானே?! :-)))

    ReplyDelete
  20. கமல் படம் ஓடாம போச்சுனா உங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் போலேயே"

    அவரொட எந்த ப்டம் ஓடி இருக்கு ??

    ReplyDelete
  21. படம் 'இந்தியன் ஸ்டாண்டர்ட்' தானே?! :-)))

    ஹா ஹா

    ReplyDelete
  22. உங்கள் அனைவரின் கருத்தையும் மறுக்கிறேன்... கமலின் தீவிர ரசிகன் நான்..படம் சூப்பர்...!!! ஏன் எல்லாரும் இப்படி சொல்றீங்கன்னு தெரியல.. கமல பத்தி குறை சொல்லனும்னு நினச்சிட்டு போனா கண்டிப்பா படம் புடிக்காது.. மும்பை எக்ஸ்ப்ரஸ் எனக்கு பிடித்த படம் தான்.. அதை உள்ளுணர்ந்து பார்த்திருந்தால் படம் புரிந்திருக்கும், ஆனால் மேலோட்டமாக அதன் வெளிபாடுகளை மட்டும் நோக்கி சரியில்லை என்று பொசுக்குன்னு சொல்லிடுறீங்களே..!!! ஏன் பா இப்படி..???

    ReplyDelete
  23. யார் என்ன சொன்னாலும், மன்மதன் அம்பு - நசுங்கின சொம்பு என்று பாக்ஸ் ஆஃபீஸ் ரிசல்ட் சொல்லியுள்ளது..

    மாயாஜால் தியேட்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமையே நிறைய காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை... இத்தனைக்கும் படம் ரிலீஸ் ஆகி 3 நாட்கள் தான் ஆகிறது... ஓப்பனிங் வீக் எண்ட் கூட ஃபுல் ஆகலேன்னா, அந்த படத்தை பத்தி பேசறதே வேஸ்ட்

    ReplyDelete
  24. நண்பரே, அருமையான விமர்சனம் மிக்க நன்றி. உள்ளத்தனையது உயர்வு என்பார்கள். ரஜினி சார் விஷயத்தில் இந்தக்குறள் மிகவும் பொருந்தும். எவ்வித அகந்தையும் அற்ற ஒப்பற்ற மனிதன். இதே கமலை தன் அண்ணன் என்றும் சீனியர் என்றும் பொதுமேடையில் சொன்ன பெருந்தன்மை, இந்த டப்பா படத்தைக்கூட பார்த்துவிட்டு பாராட்டி நாலுவார்த்தை சொல்ல மனம் யாருக்கு வரும்? அவரே தலைவர்! எல்லாப்புகழும், எல்லா வெற்றியே அவருக்கே சேரும். உள்ளத்தனையது உயர்வு.

    ReplyDelete
  25. படம் மொக்கை.. ஏனென்றால் படத்துக்கு கூட்டமே வரல்ல என்று எழுதுபவர்களுக்கு ஒருகேள்வி.. சகீலா படத்துக்கு கூட்டம் வருது.. அது நல்ல படமா.. உங்கள் பேர் கொண்டவர் பற்றி ஒரு பழமொழி உண்டு.. அது போன்ற பதிவு இது.

    ReplyDelete
  26. உங்கள் பேர் கொண்டவர் பற்றி ஒரு பழமொழி உண்டு.. அது போன்ற பதிவு இது"

    ஹா..ஹா... அந்த பழமொழி இதில் பொருந்தாது...

    நீங்கள் சொல்ல நினைக்கும் பழமொழி என் பெயர் கொண்டவரை சம்பந்தப்ப்டுத்தி வரும்..ஆனால் இந்த பதிவில் என் கருத்து எதுவும் இல்லை... விமர்சகர்கள் கருத்தை, நல்லோரின் கருத்தை அப்படியே தொகுத்து தந்து இருக்கிறேன்

    ReplyDelete
  27. இந்த டப்பா படத்தைக்கூட பார்த்துவிட்டு பாராட்டி நாலுவார்த்தை சொல்ல மனம் யாருக்கு வரும்”

    ஹா ஹா

    ReplyDelete
  28. உங்கள் அனைவரின் கருத்தையும் மறுக்கிறேன்... கமலின் தீவிர ரசிகன் நான்”

    அய்யோ பாவம் :(

    ReplyDelete
  29. ஓப்பனிங் வீக் எண்ட் கூட ஃபுல் ஆகலேன்னா, அந்த படத்தை பத்தி பேசறதே வேஸ்ட்


    நச்னு சொன்னீங்க

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா