Monday, December 6, 2010

மகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற சிறுவர்கள்


மீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அது என்ன நிகழ்ச்சி என்பது முக்கியமில்லை.. நான் சொல்லப்போகும் சம்பவம் ஓர் உதாரணம்தான்..எங்கு வேண்டுமென்றாலும் நடக்க முடியும்..
நான் நிகழ்ச்சியை கவனிப்பதுடன், ஆடியன்ஸ் அந்த நிகழ்ச்சியை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் கவனித்து வந்தேன்..
குறிப்பாக சிறுவர்களின் ரெஸ்பான்ஸ் சூப்பராக இருந்தது..
ஒரு குறிப்பிட்ட தலைவரைப்பற்றி பேசினார்கள்…  அந்த தலைவர் உண்மையிலேயே ஒரு மகத்தான மனிதர்…
அவர் செய்த சாதனைகளைப்பற்றி பேசும் போது, கைதட்டல், விசில் என அமர்க்களப்பட்டது விழா அரங்கம்..
ஆனால் மிக அதிகளவில் வரவேற்கப்பட்ட ஒரு விஷயம், அந்த தலைவரின் சாதனையோ, அவர் திறமையோ அல்ல..வரலாற்றை சொல்லும்போது, “ காந்தி சுட்டுகொல்லப்பட்டார் “ என ஓர் இடத்தில் சொல்லப்பட்டது..
அந்த இடத்திற்கு கிடைத்த கைதட்டலும், விசிலும், சந்தோஷமும் இருக்கிறதே !!
அடேங்கப்பா..  நான் அசந்து விட்டேன்..
பெரியவர்களுக்கு சில அரசியல் சார்புகள், விருப்பு , வெறுப்பு இருக்கலாம்… அந்த அடிப்படையில் ஒரு மனிதனின் மரணம் மகிழ்ச்சி தந்து இருக்கலாம்..
அதை நாம் தவறு என சொல்ல முடியாது…
ஆனால், சின்னஞ்சிறுவர்களுக்கு ஏன் இந்த மகிழ்ச்சி ?
அவர்கள் காந்தியை பற்றியோ , அந்த விழா நாயகர் பற்றியோ முழுமையாக படித்து இருக்க வாய்ப்பில்லை..
சிறுவயதில் இருந்தே ஒருவர் மேல் துவேஷத்தை வளர்க்க முடியும் என்றாலும் , அந்த துவேஷம் முழுமையாக வளர சில ஆண்டுகள் ஆகும்..
ஆனால் அவர்களோ சின்னஞ்சிறுவர்கள்..
ஆகவே யாரோ சிலர் காந்தி மேல் அவர்கள் மனதில் ஒரு எதிர் கருத்தை விதைத்து விட்டார்கள் என சொல்ல முடியாது..
சின்னஞ்சிறிய வயதில், ஆக்‌ஷன் ஹீரோக்கள்தான் நம்மை கவர்வார்கள்..
ஆக்‌ஷன் ஹீரோ இடத்தில் நம்மை வைத்து மகிழ்ந்து கொள்வோம்..
ஆக்‌ஷன் ஹீரொவுக்கு எதிரானவர்கள் நமக்கும் எதிரானவர்கள்..ஆக்‌ஷன் ஹீரொவுக்கு எதிரான பண்புகள், தீங்கான பண்புகள்.
இந்த அடிப்படையில் பார்ப்போம்.

காந்தி என்றால் நம் நினைவுக்க வருவது, அவர் எந்த பிரிவினருக்கும் தனிப்பட்ட தலைவர் அல்லர்..
ஒரு மதத்தினாரால் கொல்லப்பட்டார் என்பதற்காக இன்னொரு மதத்தினர் அவரை முழுமையாக ஏற்றனர் என சொல்ல முடியாது..
நலிந்தவர்களுக்கு குரல் கொடுத்ததால், வசதியானவர்கள் எரிச்சலடைந்தனர்..
ஆனால் நலிந்தவர்களின் பிரத்தியேக தலைவராக அவர் தன்னை காட்டிகொள்ளவில்லை…
அவர் அனைவரும் ஒருங்கினைந்த ஒரு சமுதாயத்தையே விரும்பினார்..
எனவே அவர் ஒட்டு மொத்த மக்களின்  தலைவராக விளங்கினார்..
ஆனால் இது ஆக்‌ஷன் ஹீரோக்களின் பண்பு அல்லவே..
ஒருவரை அழித்துதான் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதுதானே அவர்கள் இலக்கணம்..
அந்த வகையில் காந்தி ஹீரோ இலக்கணத்தை மீறியவர் ஆகிறார்.
அடுத்தபடியாக , ஹீரோ என்றால் சண்டை போட வேண்டும்.. ஆக்ரோஷமான அறிக்கைகள் விட வேண்டும்


ஆனால் காந்தி என்றால் நினைவுக்கு வருவது , அவர் ஓர் அஹிம்சைவாதி என்பதுதான்..
இவர் எப்படி ஹீரோவாக முடியும்?
எனவே இவர் நம் ஹீரோ அல்ல என்ற முடிவுக்கு வந்து இருப்பார்கள் அந்த சிறுவர்கள்..
ஹீரோ இல்லை என்பது ஓக்கே..
அவர் மரணம் ஏன் சந்தோஷம் அளிக்கி்றது…?
சண்டையை விரும்பாத ஒருவரை எதிர்க்கிறோம் என்றால் நாம் சண்டைக்கு தயாராக இருக்கும் வீரர்கள் என்ற அர்த்தம் வருகிறதே..
அந்த அடிப்படையில் அவரின் எதிரியாக நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதே இதற்கு காரணம்.
மற்றபடி, சித்தாந்த ரீதியான காரணங்கள் இருக்க வாய்ப்ப்பில்லை…
ஒரு காலத்தில் நான் இப்படி இருந்தேன் என்பதால் இப்படி கணிக்கிறேன்.
மற்றபடி இது அறிவியல்பூர்வமான அலசல் அல்ல…

அந்த சிறுவர்களுடன் பேச முடிந்தால் , நான் சொல்ல விரும்புவது..
 • காந்தி உங்கள் எதிரி அல்ல.. வலுவான எதிரிகள் வேறு இடத்தில் இருக்கிறார்கள்..
 • சண்டை போட விரும்பாதவரை எதிர்ப்பது வீரம் அல்ல
 • அவர் அன்று சமரச போக்கை கடைபிடித்தார் என்றால் அதற்கு காரணம் அன்று இருந்த நிலை அப்படி.. வேறு வழி இல்லை…
 • அவரை விட சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்லத்தக்க வகையில் வேறு அரசியல் தலைவர் இந்தியாவில் இல்லை ( இயக்கத்தலைவர்களுடன் ஒப்பிட வில்லை )

16 comments:

 1. காந்திஜியை தனக்கு பிடித்தமான தலைவர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள் .அது தான் தவறு

  ReplyDelete
 2. இந்தக்குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பெரிய கேள்விக்குறியதாகவே இருக்கிரது.வழிகாட்டும் தலைவர்களும் ஊடகங்களும் இந்த வருங்கால சந்ததியினரை நன்கு குழப்பி இருக்கிரார்கள்.

  ReplyDelete
 3. குறைகளே சொல்ல முடியாத மனிதர் காந்தி என்று சொல்லலாம். அவர் மீதிருக்கும் குறைகளையும் நியாயப்படுத்திவிடலாம்.

  நல்ல மனிதர்

  ReplyDelete
 4. குறைகளே சொல்ல முடியாத மனிதர் காந்தி என்று சொல்லலாம்”

  .குறைகள் இருக்கலாம்..

  ஆனால் இன்று இருக்கும் அரசியல்வாதிகள் முன்பு அதெல்லாம் ஒன்றுமே இல்லை..

  ஆனால் இவர்கள் அவரை குறை சொல்வது கேலிக்குரியது

  ReplyDelete
 5. Lakshmi said...
  இந்தக்குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பெரிய கேள்விக்குறியதாகவே இருக்கிரது “

  ஆம் அம்மா... ஆனால் தெளிவன சிந்தனை கொண்ட அடுத்த தலைமுறையும் உருவாகி வருகிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது

  ReplyDelete
 6. வருத்தத்துக்குரிய நிகழ்ச்சி :(

  ReplyDelete
 7. வருத்தத்துக்குரிய நிகழ்ச்சி :(


  ஆமாம்..என்ன செய்வது

  ReplyDelete
 8. காந்தி பற்றி எழுத அழைத்திருந்தீர்கள்... உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி...

  நிச்சயம் எழுதுகிறேன்... ஆனால் கால அவகாசம் தேவை... இப்பொழுது எனக்கு தெரிந்தவற்றை எழுதினால் அது சின்ன பசங்களோட சோஷியல் புக் மாதிரி இருக்கும்... ஆதலால் நான் சிறிய ஆராய்ச்சி, சில புத்தகங்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்... எப்பொழுது சாத்தியப்படும் என்று தெளிவாக கூற முடியவில்லை... ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் எழுதிவிடுகிறேன்...

  ReplyDelete
 9. இது என்ன விசித்திரம்? என்னால் நம்பமுடியவில்லை. எங்கு நடந்த சம்பவம் இது என்று சொல்லமுடியுமா?

  ReplyDelete
 10. @ சுரேஷ்
  சில நாட்கள் சென்ற பின் சொல்கிறேன் . இப்போது சொல்வது நியாயம் அல்ல

  ReplyDelete
 11. @பிரபாகரன்
  என்ன தோணுதோ அதை எழுதுங்க . ஒரிஜினாலிட்டி முக்கியம்

  ReplyDelete
 12. பெற்றோரும் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களே. என் வீட்டில் காந்தி ஹால் ஷோகேஸில் உள்ளார். என் குழந்தைகளும் அவரைப் பற்றி அறிந்துள்ளனர்.
  விரைவில் காந்தி பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 13. @மாதவி
  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . குழந்தைகளுக்கு நாம் கொடுக்ககூடிய மிகசிறந்த பரிசு , நல்ல பண்புகள்தான் . அதை நீங்கள் வழங்குவது நிறைவாக இருக்கிறது. ஆசி வழங்க வயதில்லை . உங்கள் குழந்தைகளை வாழ்த்தி மகிழ்கிறேன்

  ReplyDelete
 14. @ என் நண்பர்கள்(வெவ்வேறு தளங்களில் உள்ளவர்கள்) அவரை திட்டும்போது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் காரணம் கேட்கும்போதுதான் ஆச்சரியமே.. ஆம் அவர்கள் ஒருவருக்கு கூட தாங்கள் ஏன் திட்டுகிறோம் என்ற காரணத்தை சொல்ல தெரியவில்லை. பின்பு பகத்சிங்,நேதாஜி குரூப்கள், ஆர்.எஸ்.எஸ் குரூப்கள் போன்ற விஷமிகளின் வேலை என்பதை நானும் உங்களை போன்ற அணுபவத்திற்கு பின்பு புரிந்து கொண்டேன்.. பின்பு நான் அவர்களுக்கு இதை விளக்கும் போது கூட சிலரே இதை அக்கறையோடு கேட்பார்கள்.. பின்புதான் தங்கள் இச்சை அரிப்பை எதாவது நல்ல தலைவர்களை கண்டபடி திட்டி தீர்த்துகொள்ளும் கூட்டம் அந்நேகம் என விளங்கிகொண்டேன்.

  ReplyDelete
 15. " பகத்சிங்,நேதாஜி குரூப்கள், ஆர்.எஸ்.எஸ் குரூப்கள் போன்ற விஷமிகளின் வேலை "

  அவர்களை எல்லாம் விஷமிகள் என சொல்ல கூடாது.. காந்தியின் கொள்கைகளை அவர்கள் விரும்பவில்லை...அவ்வளவுதான்..
  ஆனால் சிலர் கொள்கை எதுவும் இல்லாமல், துவேஷ அடிப்படயில் செயல்படுவதே வருத்தம்

  ReplyDelete
 16. Thaan Seitha Thavarugalai Oppukollum Thairiyam Ulagilaye Gandhi Oruvarukku Thaan Undu.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா