Thursday, June 17, 2010

பொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்

ஆலயம் செல்வது நல்லதா ? இல்லையா?

இந்த கேள்விக்கு பொதுவான பதில் சொல்ல முடியாது..

1 சிலருக்கு வாழ்க்கை என்பதே குருவாக இருக்கும். சகலமும் சொல்லித்தரும். அவர்கள் அனுபவமே அவர்களுக்கு போதுமானது.
இவர்களுக்கு கடவுள் , கோயில், குரு, ஆன்மீகம் என்பதெல்லாம் தேவை இல்லை.. இவை இல்லாமலேயே , அவர்கள் முழுமையாக வாழா முடியும். ஆனால், இது போன்ற தெளிவு இல்லாமல், போலி நாத்திக வாதம் பேசினால், சமுதாயத்திற்கு இழப்பில்லை, அவர்களுக்கு இழப்பு..

2 சிலருக்கு, ஏதோ ஒரு கடவுள் மீது , ஒரு குரு வின் மீது ஈர்ப்பு ஏற்படலாம். ( கால் வலியை குணப்படுத்தினார் என்று ஒருவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு அல்ல. அதற்கு மருத்தவ்ரே போதும் ) . உண்மையான தேடல் இருக்கும் போது, உண்மையான வழிக்காட்டி கிடைப்பார் அது கடவுளாகவும் இருக்கலாம் , மனிதராகவும் இருக்கலாம். .. அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். ..

3 என்னை போல பொறுக்கியாக இருப்பது மூன்றாவது வழி. "நர"கல் பதிவர் போன்ற பொறுக்கி வேலை செய்வதை சொல்ல வில்லை..
நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் , ஒவ்வொன்றாக பொறுக்கி , மனதில் சேர்த்து கொள்வது. இந்த சாமி, அந்த சாமி , இந்த கருத்து, அந்த கருத்து என்றெல்லாம் இல்லாமல் , அறிவே கடவுள், உயிரே கடவுள், சிவனே முதல் தெய்வம், கடவுளை நம்புகிறவன் காட்டு மிராண்டி, பெண் ஏன் அடிமையானாள், சுயநலத்தின் மேன்மை, அன்பே ஆண்டவன், உண்மைக்கு பாதை இல்லை,. உனக்கு நீயே குரு என்று எல்லாவற்றையும் , விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு பார்வையாளனாக பார்ப்பது , பிச்சைக்காரன் போல எல்லாவற்றையும் சேர்த்து கொள்வது ஒரு வழி.ஆலயமும் செல்ல வேண்டும், நாத்திக கூட்டமும் செல்ல வேண்டும் ஒரு பார்வையாளனாக ..

அந்த வகையில், ஒரு கோயில் பற்றி , எனக்கு தெரிந்ததை , பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முருகன் கோயில் பல இருந்தாலும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட கோயிலுக்கு , தனி மதிப்பு உண்டு.
அவரால் நான்கு பாடல்கள் பாடப்பட்ட சிறப்பு உடையது சிறுவாபுரி, பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்..
சென்னைக்கு அருகில் உள்ள , இயற்கை அழகு கொஞ்சும் ஒரு இடம்தான் சிறுவாபுரி. ( சென்னை - நெல்லூர் - கல்கத்தா நெடுஞ்சாலை )
நான் ஒரு வேலையாக கும்மிடிபூண்டி செல்லும் போது, இங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.

1 பாற்கடலில் எடுத்த , அமுதை தேவர்கள் சாப்பிட்ட பின், இங்கிருந்து தான் டேக் ஆப் ஆனார்கள்

2 லவன்- குசன் ஆகியோர் , ராமரை வென்ற இடம்
3 சூரபத்மனை வென்ற பின், முருகன் இளைப்பாறிய இடம்..

சரி.. அருணகிருனாதர், பாடிய பாடல் என்ன ? படித்து பாருங்கள்,,, பக்திக்காக இல்லா விட்டாலும் , பாட்டின் இனிய தமிழுக்காக

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

சிருவாபுரியில் வீற்று இருக்கும் செல்வா.. ஏன் முன் முன்னால் வா என அன்புடன் அழைக்கிறார், அருணகிரியார் ...

**************************************************

ஆறு வாரம் , ஒரே கிழமை சென்று வழிபட்டால் நல்லது என்றார்கள்..

*******************
ஒரு நண்பர் தரும், மேலதிக தகவலை, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

Anonymous said... சிறுவாபுரி நல்ல அமைதியான கோவில். சொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி வேண்டினால் நிச்சயம் நடக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு மேலதிக தகவல் மட்டுமே.
நாத்திக,பகுத்தறிவு ஆசாமிகள் உங்கள் கும்மிக்காக அல்ல.

Guru

*******************


அந்த பகுதியில், தர்க்கா ஒன்று இருக்கிறது... இஸ்லாமிய நண்பர்கள் அதை பற்றி தகவல் கொடுத்தால் அனைவருக்கும் பயன்படும்.... நான் சென்ற நேரம் அங்கு யாரும் இல்லை..

18 comments:

 1. I will be thankful if u explain , y do u hate this post?

  ReplyDelete
 2. //அவர்களுக்கு இழப்பு//

  என்ன இழப்பு?

  //உண்மையான தேடல் இருக்கும் போது, உண்மையான வழிக்காட்டி கிடைப்பார் அது கடவுளாகவும் இருக்கலாம் , மனிதராகவும் இருக்கலாம். .. அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். //

  எதை ஏன் தேடவேண்டும்? என்ன தேடுகிறார்கள்?

  அருணகிரியார் சிறுவாபுரியில் முருகனைப்ப்ற்றி பாடினார். சரி. அவர் அங்கே என்ன தேடினார்?

  இக்கேள்விகள் கிண்டலுக்காக கேட்கப்படவில்லை.

  To make you search for the answers and tell us.

  ReplyDelete
 3. அருணகிரி தேடியது அவருக்கு கிடைத்துவிட்டது ...

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. o Amalan Rayen Fernando said...

  //அவர்களுக்கு இழப்பு//

  என்ன இழப்பு?

  ******************
  தங்கள் வாழ்க்கையை வாழாத இழப்பை சொல்கிறேன்.

  கடவுள் இல்லை என உண்மையிலேயே தோன்றினால், கடவுளை ஜாலியாக கிண்டல் செய்து கொண்டு வாழலாம். தப்பில்லை...அல்லது கடவுள் பற்றி அக்கறை இல்லாமலும் வாழலாம் .. அது அவரவர் விருப்பம்..

  ஆனால், மனதில் கடவுள் நம்பிக்கை வைத்து கொண்டு, சும்மா வெறும்பேச்சாக , நாத்திக வாதம் பேசுவது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் விஷயம்..

  அதேபோல, கடவுள் நம்பிக்கை இல்லாமல்,. சும்மா ஊரை ஏமாற்றவோ , அல்லது தன்னை தானே ஏமாற்றி கொள்ளவோ , ஆன்மிக வேடம் போடுவதும் தவறு..

  நீங்கள் நீங்களாக இருங்கள்...உங்களுக்கு உண்மையாக இருங்கள்... அவ்வளவுதான்...

  ReplyDelete
 6. இதை கிண்டலாக நான் நினைக்கவில்லை... அப்படியே நீங்கள் கிண்டல் செய்தாலும், அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது..

  "எதை ஏன் தேடவேண்டும்? என்ன தேடுகிறார்கள்?

  அருணகிரியார் சிறுவாபுரியில் முருகனைப்ப்ற்றி பாடினார். சரி. அவர் அங்கே என்ன தேடினார்?"


  தேடல் என்பது ஆளாளுக்கு மாறுபடும் ஒன்று.. அவர் தேடியது தவறு.. நான் தேடுவதுதான் சரி என சொல்ல முடியாது.... அருணகிரிநாதர் என்ன தேடினார் என்பதை எல்லாம் நாவலில்தான் எழுத முடியும் என்றாலும், தனி பதிவில் அதை பற்றி ஒரு அறிமுகம் தருகிறேன்... அதை ஜஸ்ட் ஒரு தகவலாக எடுத்து கொள்ளுங்கள்...

  ReplyDelete
 7. இன்னும் இரு கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.

  என்ன தேடவேண்டும்?

  அருணகிரியார் என்ன தேடினார்?

  ReplyDelete
 8. " என்ன தேடவேண்டும்?"

  இதை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது... நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.. தேடலை எப்படி அடைவது என்பதற்கு வேண்டுமானால் வழிகாட்டியை அணுகலாம்.. நம்மில் பலர் , எதை தேடுவது என்பதற்கே வழிகாட்டியை நாடுகிறார்கள்.. அதுதான் பிரச்சினை..

  ReplyDelete
 9. marudhu said...

  //I will be thankful if u explain , y do u hate this post?//

  becoz you did not scold those vinavu

  ****************

  boss.. y r u hating them this much?

  ReplyDelete
 10. அருணகிரியார் தேடியதை பின்னர் எழுதுவீர்கள். ஓகே.

  மற்றவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதற்கு அவரவர்தான் தீர்மானிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள்.

  ஏன் தேடவேண்டும் என்பதற்கு பதில் இல்லை.

  ’போலி நாத்திகவாதிகள்’ வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதெல்லாம் மிகையான பேச்சு.

  அவர்கள் கடவுள் நம்பிக்கை மனதில் வெளியில் கடவுள் இல்லயென்ற்ம் நம்பிக்கையாளர்களைப்பகடி செய்தும் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.

  முதலில் அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருக்கலாமல்லவா? ஆனால் அவர்கள் சொல்லமாட்டார்கள். அப்படியே சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இல்லயா?

  ’வாழ்க்கை’ நீங்கள் ஒரு வரையறை வைத்துக்கொண்டு அதன்படி வாழாதவர்கள் அவ்வாழ்கையை இழக்கிறார்கள் என்று சொல்வது சரியா?

  உங்களுக்கு எது வாழ்கையோ பிறருக்கும் அதுவா?

  ஆச்சரியமாக இருக்கிறதே!

  பார்வையாளன் என அழைத்துக்கொண்டு, இப்படியா முடிப்பது?

  ‘போலி நாத்திகர்கள்’ எதையும் இழக்கவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களப்பார்த்து நீங்கள்தான் மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்.

  ReplyDelete
 11. "ஏன் தேடவேண்டும் என்பதற்கு பதில் இல்லை."

  பாஸ், தேடித்தான் ஆக வேண்டும் நான் சொல்லவில்லையே ...

  எதையும் தேடாமல், வாழ்க்கையை அதன் போக்கில் ரசிப்பது பிடித்து இருந்தால், ஒரு பார்வையாளன் போல அப்படியும் வாழலாம் என்றுதானே சொல்லி இருக்கிறேன்... ஆத்திகம், நாத்திகம்- என்பதெல்லாம் இல்லாமல் ஜாலியாக இருப்பதை , மூன்றாவது வழியாக - நான் விரும்பும் வழியாக- சொல்லி இருக்கிறேனே .. கவனமாக படியுங்கள், தலைவரே ..

  "போலி நாத்திகர்கள்’ எதையும் இழக்கவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களப்பார்த்து நீங்கள்தான் மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்"

  உண்மையான நாத்திகர்கள், தெளிவாக இருப்பதையும், மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்... அதை பார்த்து , எனக்கும் மகிழ்ச்சிதான்...
  அதே சமயம், அவர்களில் சிலர், தங்கள் கொள்கைக்காக வயதான காலத்திலும் கூட கஷ்ட படுவதையும் பார்த்து இருக்கிறேன்... அவர்கள் அப்படி இருக்கையில், நீங்கள் சொல்வது போல, போலி நாத்திகவாதிகள், வெற்றிகரமாக வாழ்வதும் உண்மைதான்...

  இதை பார்த்து , என்னை போன்ற பார்வையாளர்கள் என்ன செய்ய முடியும்.. இந்த நிலைக்கு வருத்தப் பட வேண்டியது, உண்மையான நாத்திக வாதிகள்தான்.

  ReplyDelete
 12. "’போலி நாத்திகவாதிகள்’ வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதெல்லாம் மிகையான பேச்சு."

  தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி... இது வார்த்தை பிழை...

  போலியாக நாத்திகம் பேசி, வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் உண்டு .. மறுக்கவில்லை...

  ஆனால், உண்மையான நாத்திக வாதிக்கு , ஒரு கொள்கை வீரனுக்கு கிடைக்கும் மன நிம்மதி ( ஆன்மிக பாஷையில் , ஆத்மா திருப்தி ) போலிகளுக்கு கிடைக்குமா என தெரியவில்லை...

  நீங்கள் சொன்ன கருத்து மிகவும் சரியானது... வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் , ஒவ்வொரு விதமாக வரையறை செய்ய முடியும்... அந்த விதத்தில், ஒரு வரையரைன்படி, போலி நாத்திகவாதிகளின் வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கிறது..
  ( உண்மையான நாத்திகவாதிகளின் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது )

  அதே போல போலி ஆன்மிக வாதிகளும் , சந்தோஷமாக வாழ்கிறார்கள்...உண்மையானவர்கள் கஷ்டபடுகிறார்கள்..

  இன்னொரு விதமாக வாழ்க்கையை வரையறை செய்தால், உண்மைகள் வெற்றி பெறுகிறார்கள்.. போலிகள் படு தோல்வி அடைகிறார்கள்..

  ReplyDelete
 13. சிறுவாபுரி நல்ல அமைதியான கோவில். சொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி வேண்டினால் நிச்சயம் நடக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு மேலதிக தகவல் மட்டுமே.
  நாத்திக,பகுத்தறிவு ஆசாமிகள் உங்கள் கும்மிக்காக அல்ல.

  Guru

  ReplyDelete
 14. "இது ஒரு மேலதிக தகவல் மட்டுமே.
  நாத்திக,பகுத்தறிவு ஆசாமிகள் உங்கள் கும்மிக்காக அல்ல.

  Guru "

  நல்ல தகவல்... பலருக்கு உபயோகமாக இருக்கும்.... உங்கள் அனுமதி இருக்கும் என்ற நம்பிக்கையில் , இதை என் பதிவிலேயே சேர்த்து விடுகிறேன்..

  ReplyDelete
 15. ஆத்திகம், நாத்திகம் பேசுபவர்களை விட, இரண்டையுமே நம்பி/நம்பாமல் இருப்பவர்கள் (Agnostics) ஆபத்தானவர்கள். உங்களை நீங்களே பொறுக்கியாக அறிவித்துக்கொண்டதை நான் ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 16. கோயம்பேடு, சிறுவாபுரி, சுருட்டப்பள்ளி இது மூன்றிற்கும் ஒரு பொதுவான பொதுவான விஷயம் இருக்கிறது. மூன்றிலுமே ராமாயணத்தின் வெவேறு நிகழ்சிகளின் references வருகிறது. மேலும் இந்த பாற்கடல் அமுதம் இத்தியாதி references சிறுவாபுரி, சுருட்டப்பள்ளி கோவில்களில் சொல்லப்படுகிறது.
  சிறுவாபுரி போகும் வாய்ப்பு எனக்கு இன்னும் வாய்கவில்லை

  ReplyDelete
 17. "மூன்றிலுமே ராமாயணத்தின் வெவேறு நிகழ்சிகளின் references வருகிறது. மேலும் இந்த பாற்கடல் அமுதம் இத்தியாதி references சிறுவாபுரி, சுருட்டப்பள்ளி கோவில்களில் சொல்லப்படுகிறது"

  அட .. அப்படியா... மற்ற இரண்டு இடங்களுக்கு நான் சென்றதில்லை... தகவலுக்கு நன்றி .. விரிவில் சென்று பார்த்து விட்டு, என் அனுபவத்த்தை பகிர்ந்து கொள்கிறேன்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா