Tuesday, June 29, 2010

தியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் முடிவது ஏன் ? - ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்


அந்த சாமியார் சரி இல்லை..இன்னொரு சாமியாரிடம் போய் தியானம் கற்க போகிறேன் என எழுத்தாளர் சாரு நிவேதிதா சொன்னதும் ஆச்சர்யம் ஏற்படவில்லை.. நாம் எல்லோரும் செய்வதுதான் இது..

தியான வகுப்புகளுக்கு செல்வது என்று பேஷன் ஆகி விட்ட சூழ் நிலையில், இதை பற்றி, நம்ம ஜே கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்றார்னு பார்ப்போம்..

அவருடன் ஒரு விவாதம்

( பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.. இன்னும் பொருத்தமாக இருக்கிறது... )

**************************************************************************


Q: சார். எல்லோரும் தியானம் , யோகா எல்லாம் பண்றாங்க.. கிளாஸ் எல்லாம் போறாங்க

எனக்கும் இதை பத்தி தெரிஞ்சுக்க ஆசிய இருக்கு,, .. தியானம் னா என்ன?

K: சார், தியானம் பான போறேன்னு சொல்லிட்டு தியானம் செய்ய முடியாது.. நேத்து அரை மணி நேரம் தியானம் செஞ்சேன் ,, சுபர இருந்துச்சு னு சொன்னிங்கன்னா, நீங்க ஒன்னும் பண்ணலைன்னு அர்த்தம்.

Q: என் உணர்வே இல்லாம தியானம் செஞ்சேன் சார்.. எதோ ஒரு சொல்லில் அடங்காத அமைதி கிடைத்தது..இது தியானமா ?

K: சார், நான் சொன்னதை கவனிசீங்களா ?

Q: ஆமா , சார்

K: தியானத்தை நீங்க செய்யவே முடியாது... அதன் அழகு உங்களுக்கு புரியாமல், செயற்கையாக எதையாவது செய்யலாம்.. அனால் தியானம் அப்படி அல்ல ..

Q: முயற்சி செய்றேன்

K: சரி,,, ஏன் தியானம் செய்யணும்... ?

Q: கோபமா இருக்கேன்னு... கஷ்டத்துல இருக்கேனா , தியானம் செஞ்சா , மனம் அமைதி ஆகும்

K: இது தியானம் அல்ல.. கோபத்தை கட்டு படுத்துதல்..

Q: ஆனாலும் இது பயன்படுதே , சார்

K: ஆமா,, ஆமா.. பயன் மிக்கதுதான்.. அனால் இதை தியானம் என சொல்ல வேண்டாம் .

Q: ஆனால் கண் மூடி உட்கார்ந்தா, நல்ல இருக்கே !!

K: நீங்க தியானம் செய்றேன்னு உட்கார்ந்தா, அது தியானம் அல்ல.. இதை ஏற்க கஷ்டமா இருக்கலாம்..ஆனா இதுதான் உண்மை

Q: சார், என்னை துரத்தும் எண்ணங்களில் இருந்து, நான் செய்யும் தியானம் என்னை காப்பாத்துது.. என் கவலைகளை மறக்க செய்யுது

k : ஓஹோ..எண்ணங்கள் இல்லாம போகணும்.,,,, கவலை மறக்கணும்... இதற்கு தியானம் தேவை இல்லையே .. ஒரு சினிமாவுக்கு போனால் போதுமே ..ஹா ஹா ..



Q: சார், தீவிர யோசிப்பின் மூலம்தான் உண்மையை அறிய முடியுமா?

K: எண்ணங்களின் தன்மை அறிந்து கொள்ளும்போது, எண்ணம் தனக்குரிய இடத்தில் தன்னை வைத்து கொள்ளும்... எண்ணமே இருக்க கூடாது எனபது இல்லை.. அதற்கு என இடம் உண்டு.. இந்த தெளிவு இருந்தால், தியானம் என்ற பெயரில் எதையாவது செய்து, மனதின் என்ன ஓட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டி இருக்காது..

Q: இந்த நிலைதான் தியான நிலையா?



K: ஹா ஹா ...மூச்சை கட்டு படுத்துவது, மந்திரம் சொல்வது, இதெல்லாம் தியானம் இல்லை.. இந்த பயிற்சி செய்தால் , தியான வகுப்பில் கலந்து கொண்டால், மிக பெரிய அனுபவம் கிடைக்கும் , கடவுள் தரிசனம் கிடைக்கும் என்றெல்லாம் சில சாமியார்கள் சொல்ல கூடும்.. சில பயிற்சிகளையும் சொல்லி தர கூடும்...

இந்த பயிற்சிகளை செய்யும் போது, ஒரு வித அமைதி கிடைக்கும், சில அனுபவங்கள் கிடைக்கும்..

" அப்பாட,,கடைசியில் எனக்கு எதோ கிடைத்து விட்டது..இந்த சாமியார் என்னை ஏமாற்றவில்லை என நினைத்து கொள்கிறீர்கள்.. இல்லையா?

ஆனால் இது எல்லாமே மனதின் தந்திரம்தான். மனதின் இந்த இயல்பை புரிந்து கொண்டால், மனதை அதற்குரிய இடத்தில் வைக்கும் ஆற்றல் கிடைக்கும். இல்லை என்றால், மனதின் பிடியிலேயே சிக்கி கொண்டு, ஒவ்வொரு "தியான " முறையாக செய்து பார்த்து ஒவ்வொரு அனுபவமாக பெரும் விளையாட்டில் சிக்கி கொள்வீர்கள்..

Q: எண்ணமே இல்லாத நிலைதான் உயர்ந்த நிலையா.. ?

K: எண்ணமே இல்லாத நிலை அம்னீசியா . ஹா ஹா

Q: சைக்கோ அனலிசிஸ் , ஒருவகை தியானமா ?

K: ரொம்ப மோசமா போய்க்கிட்டு இருக்கு... சைக்கோ அனலிசிஸ் என்பது மனதை ஆராயும் மனோ தத்துவ முறை... மனம் என்பது மனமே ஆராயும் வினோத நிலை இது... கூட்டு பயிற்சி என்றெல்லாம் பல பயிற்சிகள் இருக்கின்றன... இதெல்லாம் தியானம் என சொல்ல முடியாது..

பாருங்கள்.. தியானம் என்ற விஷயத்தை எவ்வளவு காமடி ஆக்கி விட்டார்கள் . ஹா ஹா

Q: என்னத்தை ஆராயாமல், சும்மா ஒரு சாட்சியாக பார்க்க சொன்னிர்கள்.. இதில் எண்ணம் இல்லையா... மனம் ஈடுபடவில்லியா?

K: கவனிப்பவர் என யாரும் இல்லாமல், கவனிப்பு மட்டும இருக்க வேண்டும்.. சரி தவறு என எண்ணத்தை பிரிக்க வேண்டாம்.. எந்த அர்த்தமும் கொடுக்க வேண்டாம்... அப்போது நான் என்ற உணர்வு இருக்காது..

Q: எவ்வளவு நேரம் இப்படி செய்ய வேண்டும்? எந்த திசையை நோக்கி அமர வேண்டும்? என்ன சாப்ட வேண்டும்? எந்த நேரத்தில் செய்ய வேண்டும்...இதை பற்றி எல்லாம் சொல்லுங்க சார்

K: இப்படி எல்லாம் முறை படித்தி செய்தால், அது தியானமே அல்ல... நான் சொன்னதை நீங்கள் கவனிக்கவே இல்லை ...

Q: நீங்க எப்ப தியானம் பண்ண ஆரம்பிசீங்க?

K: ஏற்கனவே சொல்லிட்டேன்.. திரும்பவும் கேட்கறீங்க.. தியானம் பண்ண யாரும் தீர்மைத்து விட்டு பண்ண முடியாது.. அப்படி செய்தால் அது தியானம் அல்ல.. வேறு யாரும் சொல்லி தந்து பண்ணுவது தியானம் அல்ல.. ஒரு முறையை பின் பற்றுவது தியானம் அல்ல.. ஒரு குருவோ சாமியாரோ சொல்லி தந்ததை செய்வது , பொழுது போக உதவும்..ஆனால், அது தியானம் அல்ல.

Q: சார் .. தன்னந்தனியா போகும் போது, அழகான பூ ஒன்றை பார்த்து என்னையே நான் மறக்குறேன்.. பாத்து நிமிடம் கழித்த பின் சுய நினைவுக்கு திரும்புகிறேன்..தினமும் அந்த பூவை பரற்கும் போது அதே அமைதி கிடைக்கிறது... இது தியான நிலையா?



K: இல்லை

Q: நமக்குள் ஆத்மா என ஒன்று இருக்கிறது... இது எதனாலும் பாதிக்கப் படாது..

K: இதெல்லாம் மனதின் கற்பனைதான்... இப்படி திட்டவட்டமாக , ஆத்மா இருக்கிறது - இல்லை, கடவுள் இருக்கிறார்- இல்லை , என நினைத்தால், உண்மையை உணர முடியாது...

சரி, இவ்வளவு நேரம் பேசியதை பற்றி சுருக்கமமாக சொல்லி முடித்து கொள்ளலாமா ?

Q: சரி.

K: எண்ணம் என்பதற்கும் தியானம் என்பதற்கும் உள்ள உறவை விவாதித்தோம்... எண்ணத்தை கட்டு படுத்துவது தியானம் அல்ல என பார்த்தோம்..

ஒரு குறிப்பிட்ட குருவை பின்பற்றி அவர் சொல்வத்தை செய்வது, மனதுக்கு மகிழ்ச்சியை தரும்... உடலுக்கும் கூட சுகமாக இருக்கலாம்.. ஆனால் இதுவெல்லாம் தியானம் அல்ல. .. இது எல்லாமே மனதின் விளையாட்டுதான்..

லவ் என்ற விஷயத்தில் மட்டும் தான் நான் என்ற உணர்வு இல்லாமல் போகிறது...

திட்டமஈட்டு தியானம் செய்யும் கிடைக்கும் காட்சிகள் எல்லாம் மனதின் மாய தோற்றங்கள் தான்.

உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், தியானம் என்பதை கண்டு பிடிக்க முடியும். எண்ணம் , சிந்தனை, ஆசை எல்லாவற்றிற்கும் உரிய இடம் இருக்கிறது.. அதனோடு சண்டை போட வேண்டாம்.

அந்த நிலையில் , உண்மையான தியானம் என்பது கிளாஸ் சென்று கற்று கொள்ளும் விஷயம் அல்ல என்பது புரியும்.

மனதில் அன்பு இருந்தால், அன்பு மிக்க சமுதாயம் உருவாகும்.. அது இல்லாமல், நான் தியானம் செய்தேன் என சொல்வதில் அர்த்தம் இல்லை .. எதனை ஆசிரம் சென்றாலும், எத்தனை சாமியார்களை பார்த்தாலும் பயன் ஒன்றும் ஏற்பட போவதில்லை...

நிதர்சனம் என்ற உண்மை நிலை வேறு , உண்மை என்பது வேறு..

1 comment:

  1. wonderful superb.............
    please convert j.k speech in tamil

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா