Sunday, June 20, 2010

மனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் ?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்குள் நான் புக விரும்பவில்லை... ஆனால், பலதரப்பட்ட சிந்தனையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்... உங்கள் தேடலுக்கு இவை உதவ கூடும்... எதை தேடுவது , எதை மறுப்பது, எது இலக்கு என்பதை எல்லாம் தீர்மானித்து கொள்ள வேன்டியது நீங்கள்தான்..

நான் எதையும் பிரச்சாரம் செய்யவில்லை... ஒரு பார்வையாளனாக , பகிர்ந்து கொள்கிறேன்..
இன்று பார்க்க இருப்பது , கிறிஸ்தவ மதம் சார்ந்தது

********************

ஏவாள் தோட்டத்தில் பாம்பை சந்திதாள். இந்த பழத்தை சாப்பிடு என்று ஆசை காட்டியது பாம்பு..கடவுளின் எச்சரிக்கை நினைவுக்கு வர, மறுத்தாள் ஏவாள்.
"இதை சாப்பிட்டால் உன் அழகு கூடும். அழகு இல்லாவிட்டால், ஆதாம் வேறு பெண்னை நாட கூடும் என்றது பாம்பு..

" சும்ம சொல்லாதே. இங்கு என்னை விட்டால், வேறு பெண் இல்லை "

பாம்பு அவளை அழைத்து சென்று, கிணற்றை காட்டியது. " பார், அவன் ஒரு பெண்ணை மறைத்து வைத்து இருக்கிறான் "
தன் அழகான உருவத்தை பார்த்தாள் .
அவள் மனதில் பொறாமை, பயம், கோபம் எல்லாம் தோன்ற , பழம் சாப்பிட ஒப்புக்கொண்டாள்.

(நாம் செய்யும் பல தவறுகளை , மிகவும் சரியானது என நினைத்துதான் செய்கிறோம்..)


***************************
உலகில் நிலவும் அமைதி இன்மை, சண்டைகளை பார்த்து மனம் நொந்த நோவா இறைவனிடம் முறையிட்டார்
" கடவுளே.. உலகில் இவ்வளவு கஷ்டம் இருக்கும், ஏற்ற தாழ்வுகள் இருக்கும், பிரச்சினை இருக்கும் என்பதெல்லம் அறியும் ஆற்றல் படைத்தவர் நீங்கள். பின் ஏன் இப்படி படைத்தீர்கள்? . மனிதனை படைத்தது, அவனை கஷ்டப்படுத்தி ரசிப்பதர்காகவா? "

கடவுள் பேசினார்

" நல்லோரின் பிரார்த்தனைகளுக்கு எப்போதும் பலன் உண்டு. உங்கள் வேலையை நீங்கள் உணர வேன்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன். நீயும் , உன் வ்ழிதோன்றல்களும், ஒன்றும் இல்லாத இந்த உலகில் இருந்து . புதிதாக ஒன்றை படைப்பீர்கள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து அமைப்பதுதான், உலகம்.. செயலுக்கும் , விளைவுக்கும் நீங்களே பொறுப்பு. மனிதனை படைத்து மட்டுமே நான். துன்பங்களுகு நான் காரணம் இல்லை. அவனே அதை உருவக்கி கொள்கிறான் ."

*************

சாத்தான் , தன் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த போது, ஒரு மனிதன் எதொ ஒன்றை தரையில் இருந்து எடுப்பதை பார்த்தனர்..

" அவன் உண்மையின் ஒரு துண்டை கன்டுபிடித்து விட்டான் "

சாத்தானின் நன்பர்கள் , கவலை பட்டனர். ஒரு துளி உண்மை போதுமானது. அவன் ஆன்மா காப்பாற்றப்படும். நரகத்திற்கு வரும் ஆட்களின் எண்ணீககையில் ஒன்று குறையும்.

சாத்தான் சிரித்தது " கவலை வேண்டாம். அவன் அந்த ஒரு துளி உணமயை வைத்து என்ன செய்வான் தெரியுமா? உண்மையை சொல்லி தருகிறேன்.. நான் தான் மீட்பன் ,குரு , கட்வுள் என்று சொல்லி ஒரு கூட்டத்தை சேர்க்க ஆரம்பிப்பான். கடைசியில் எல்லொரும் நம்மை வந்து சேர்வர்கள்.. எப்பொதும் நடப்பதுதானே !!! "

1 comment:

  1. மத வேற்றுமைகளை மறந்து விட்டு , இதில் இருக்கும் அழகை பார்க்கலம்.

    கடவுள் நினைத்து இருந்தால், பழமே இல்லாமல் செய்து இருக்கலாமே. பழத்தையும் படைத்து, கட்டுப்பாட்டையும் விதிப்பானேன்?

    படைப்பதுடன் என் வேலை முடிந்தது. இனி உன் வாழக்கை உன் கையில் என நச் என சொல்லுவதாகவே எனக்கு தோன்றுகிறது...

    ஆக, கடவுள் இருக்கிறார் , இல்ல்லை, யார் படைத்தார் என்பதெல்லாம் முக்கியம் அல்ல.. நம் செயல் மட்டுமெ முக்கியம் என இதை விட சிறப்பாக சொல்ல முடியும் என தோன்ற்வில்லை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா