ஒரு வாரம் ஒரு வேலையாக லீவு எடுத்து இருந்தேன்... அந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டதால், வேறு என்ன செய்வது என தெரியவில்லை.. போர் அடித்தது..
ஆர்வமூட்டும் அளவுக்கு சினிமா எதுவும் ரிலிஸ் ஆக வில்லை.. ராவணன் இரு முறை பார்த்து தொலைத்தாகி விட்டது..
இந்த நிலையில் , திட்டக்குடி என்ற படத்தை பற்றி அண்ணன் கேபிள் சங்கர் எழுதிய விமர்சனம் ஆரவத்தை தூண்டியது.. நெகடிவாக எழுதி இருந்தாலும், பிட் பட ரேஞ்சுக்கு அவர் வர்ணித்து எழுதிய அழகு , மனதை கொள்ளை கொண்டது..
ஆனாலும், ஒரு பிட் படத்தை பார்க்க அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்ற சோம்பலும் இருந்தது...
அப்போதுதான், நண்பர் உண்மை தமிழன் , அவருக்கே உரிய அழகுடன், படம் இலக்கியத்தரம் வாய்ந்தது , சிறுகதை போல இருக்கிறது என்றெல்லாம் எழுதி இருப்பதை பார்த்தும், ஆர்வம் அதிகமானது...
இருவர் வெவ்வேறு விதமாக சொல்வதால், எதுதான் உண்மை என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதற்கு என்னை குறை சொல்ல முடியாது... எனக்கு இந்த வாரம் வேறு வேலை எதுவும் இல்லை...
எனவே கிளம்பினேன் , படத்துக்கு....
அட ஆண்டவா...
எல்லோரும் எதோ கத்தி கொண்டே இருப்பது போல தோன்றியதே தவிர, நான் எதிர்பார்த்த காட்சி எதுவும் வரவில்லை.... ஒன்றும் வித்தியாசமக இல்லை... எல்லா படங்களிலும் இருப்பதுதான்...
சுருக்கமாக சொன்னால், நம்ம டேஸ்டுக்கு இல்லை...
இலக்கியம் மாதிரியும் இல்லை... அட ஆண்டவா..
இந்த படத்தை பொறுமையாக பார்த்து , இதை இலக்கியம் என்று வேறு சொன்ன , நண்பர் உண்மை தமிழனுக்கு , கோயில் கட்டி கும்பிட உத்தேசித்து இருக்கிறேன்...
அனைவரும் நிதி உதவி செய்யுமாறு, பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
இந்த கோயிலில் வழிபட்டால், சகிப்பு தன்மை, எதையும் தாங்கும் இதயம் போன்றவை கிடைக்கும்...
Wednesday, June 30, 2010
பதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்!!!!! - நிதி உதவி தேவை
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
June
(26)
- பதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்!!!!! - நிதி உதவ...
- தியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் ...
- ஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி !!!
- ராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா
- சினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா ?
- அமானுஷ்ய அதிர்ஷ்ட கல் !!!!!
- கூண்டு கிளி
- மனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் ?
- கனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு
- உமர் ( ரலி ) தொழுகை செய்ய மறுத்து ஏன் ?- வரலாற்று...
- தேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்?...
- பொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்
- உன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்
- நேரங்கெட்ட நேரத்தில் , கருவறை போராட்டம் - பெரியார்...
- தியாகி
- மனிதனுக்கு , குரு அவசியமா ?
- இரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்
- தினமும் என்னை கவனி
- வினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள...
- தொடர்ந்து வா. தொட்டு விடாதே
- உன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்
- கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
- நான்வெஜ் சாப்பிடாத நல்ல வளர்ப்பு._ஜே கே உரையாடல்
- பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும்,...
- சில நேரங்களில் சில பதிவர்கள்
- கன்னம் தொடும் கவிதை ஓசை
-
▼
June
(26)
கோவில் கட்டுங்க. நான் வேண்டாம்னு சொல்லலை..!
ReplyDeleteஉண்டியல், நிதி வசூலிப்புன்னு மட்டும் இறங்கிராதீங்க..!
என் பேரு கெட்டுப் போயிரும்..!
:-) :-)
ReplyDeleteநிதி வசூல் இல்லாம கோயிலா !!!!
ReplyDelete