
" அம்மா.. அப்பா எங்கே மா "
மழலை குரலில் கேட்ட மகளை கண்ணிருடன் பார்த்தாள் ரம்யா... தன் பேராசை தன் கணவனை பலி வாங்கி விட்டது என சொல்ல முடியவில்லை... சொன்னாலும் புரிகிற வயசு மகளுக்கு இல்லை ..
அது பேராசையா அல்லது அப்பாவித்தனமா என இன்னும் புரியவில்லை.. இதை யாரிடம் சொன்னாலும் நம்பவும் மாட்டார்கள்.. தலையை பிய்த்து கொண்டாள்..
************************************************************************************
அன்று சமைத்து கொண்டிருந்த போதுதான், மிளகாய் பொடி தீர்ந்து விட்டத்து நினைவுக்கு வந்ததது... வாங்குவதற்காக கடிக்கு சென்றாள்.. தாடி , மீசையுடன், பரதேசி போல காணப்பட்ட ஒருவர் , சாலை ஓரத்தில் கிடப்பதை பார்த்தாள்... அனாலும் நின்று பார்க்க வில்லை...
திரும்ப வரும்போதும் அவர் அங்கேயே இருப்பதை பார்த்தாள்.. யாரும் கவனிக்க வில்லை...
அருகே சென்றாள்...
" தண்ணி.. தண்ணி.. " முனகினார் அவர்..
கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்தாள்..
கொஞ்சம் குடித்ததுமே , அவருக்கு தெம்பு வந்து எழுந்து அமர்ந்தார்...
" யாரும் அக்கறை காட்டாத என் மேல் அக்க்கரை காட்டியதற்கு நன்றி... சின்ன உதவி என்றாலும் , எனக்கு இது , இப்போது பெரிய உதவி...உனக்கு எதாவது செய்யணுமே "
தன் அழுக்கு துணி பையை துழாவினார்...
" அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் " புறப்பட முயன்றாள்..
அவர் மூன்று கற்களை எடுத்தார்...
" இதை வச்சுக்க,,,, நீ கேட்கும் மூன்று விஷயங்களை , இந்த கற்கள் நிறை வெற்றி தரும்... கல்லை வீசி எரிந்து, நீ விரும்புவதை கேட்கலாம்.. ஒரு கல் ஒரு முறை எறிந்ததும் சக்தி இழக்கும் " சொல்லியபடி நடந்து சென்றுவிட்டார்
***********************************************************************
" ஹே... இதெல்லாம் எதாவது துஷ்ட சக்திகள் வேலையா இருக்கும்... நம க்கு வேண்டுவதை உழைத்து சம்பாதிப்போம்... வரம் எல்லாம் வேண்டாம் "
கணவன் கர்ஜித்தான்..
" ஒரே ஒரு மோரை மட்டும் கேட்கலாம் ங்க.. பொண்ணு படிப்பு செலவுக்கு பயன்படும் "
அவனுக்கு விருப்பம் இல்லாமல் சம்மதித்தான்...
ஒரு கல்லை எடுத்து கொண்டாள்..
என்ன கேட்பது?
பணம்?
ஒரு லட்சம்? இரண்டு லட்சம்? பத்து கோடி?
ரொம்ப கேட்க வேண்டாம்..ரொம்ப குறைவாகவும் வேண்டாம்..
" எனக்கு பத்து லட்சத்து பத்து ரூபாய் , இன்னும் ஒரு வாரத்தில் வேண்டும் " கண் மூடி கேட்டு கல்லை வீசி எறிந்தாள். பத்து ரூபாய் யை வேண்டுமென்றே செர்த்துய் கொண்டாள்.... வரத்தை இப்படித்தான் சோதிக்க வேண்டும்....
திடீரென, பயங்கர காற்று வீசியது,, கதவுகள் அடித்து கொண்டன..
" என்னடி ... காசு கொட்டுதா " கணவன் கிண்டலடித்தான்...
" ஒரு வாரம் நு சொல்லி இருக்கேன் .. பொருத்து இருந்து பாருங்க "
**********************************************************************************************************
" மேடம்... ஒரு விபத்து.... உங்க கணவர் மேல லாரி மோதிருச்சு... அவர் பாக்கட்ல உங்க நம்பர் இருந்துச்சு... சரி மேடம்... ஸ்பாட்லயே எல்லாம் முடிஞ்சுருச்சு "
அந்த செய்தி இடி போல அவள் மேல் விழுந்தது ...
************************************************************************************
ஒரு வாரம் கழித்து கணவன் அலுவலகத்தில் இருந்து சிலர் வந்தனர்..
" உங்க கணவர் மாதிரி ஒரு நல்லவரை, உழைப்பாளியை பார்க்க முடியாது... அவர் இழஓஐ எதுவும் ஈடு செய்ய முடியாது.. இருந்தாலும், சக ஊழியர்கள் எல்லாம் கொஞ்சம் நிது திராடு இருக்கோம்... அலுவலகம் தர வேண்டிய பணம், இன்சூரன்ஸ் பணம் எல்லாம் இதில் இருக்கு " கொடுத்து விட்டு சென்றனர்...
அந்த பணத்தை பார்க்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை...
எடுத்து வைப்பதற்காக , அதை பார்த்தாள்... எவ்வளவு இருக்கிறது?
பார்த்ததும் அதிர்சியில் உறைந்தாள்
அதில் இருந்தது, பத்து லட்சத்து பத்து ரூபாய்...
********************************************************************
தன் மகள், அப்பாவை கேட்கும்போதெல்லாம், தான்தான் அவன் சாவுக்கு காரணமோ என தோன்றியது...
திடீரென ஓர் எண்ணம்...
கல்லை எடுத்தாள்..
" இன்னும் ஐந்து நிமிடத்தில் என் கணவன் என் முன் உயிருடன் வர வேண்டும் "
கல்லை எறிந்தாள்..
திடீரென பயங்கர காற்று.... இருள் சூழ்ந்தது....
" அம்மா .. என்னக்கு பயமா இருக்கு " மகள் அலறினாள்...
மகளின் முகம் பயத்தால் வெளிறி போய் இருந்தது....
கதவை யாரோ தட்டினார்கள்...
கணவன் தட்டுவது போலவே இருந்தது.
மகள் பயத்தில் சுருண்டு விழுந்தாள்..
" ஐயோ . எதாவது ஆபத்தா.இயற்கைக்கு மாறாக செனறால், என்னவெல்லாமோ நடக்கிறதே....
சட் என முடிவு செய்தாள்...
" என் கணவன் இறந்தவனாகவே இருக்கட்டும்.... மீண்டும் வர வேண்டாம் "
கல்லை எறிந்தாள்...
கதவு தொடர்ந்து தட்டபடவே , திறந்தாள்....
வெளியே .....
........
...........
யாரும் இல்லை !!!!!!
அங்கன மூணு கல் இவ்விட பார்சல் செய்யு
ReplyDeleteஅடுத்தது என்ன நடக்கும் என்று அறியத்துடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு..! பாராட்டுகள் நண்பரே..!
ReplyDeleteஅடுத்தது என்ன நடக்கும் என்று அறியத்துடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு.
ReplyDelete///
அது தான் மூணு கல்லும் காலியிருச்சே ....
நல்ல கதை
நன்றி தோழரே ..
அருமையான கதை .. அசத்திடீங்க ..
ReplyDeleteநன்றி தலைவா
ReplyDeleteinteresting blog, i will visit ur blog very often, hope u go for this website to increase visitor.Happy Blogging!!!
ReplyDeleteThe Monkey paw ?????
ReplyDelete