Tuesday, December 21, 2010

உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது? சென்னைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ? - Mrinzo

அரண்மனைக்காரன் தெரு என்று ஒரு தெருவை பார்த்ததும் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என பார்த்தேன்.. அதன் பின் அது ஆர்மினியன் தெரு என தெரிய வந்தது...
அது என்ன அர்மினியா ? அதன் வரலாறு என்ன ?
அதற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது போன்ற பல சுவையான , வரலாற்று தகவலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் , Mrinzo நிர்மல் ..
இவர் நம் பிலாக்கில் எழுதிய சிரோ டிகிரி விமர்சனம் , டி டெக்ஸ்ட் போன்றவை பரவலானா வரவேற்பு பெற்றன... எனவே தொடர்ந்து எழுதுமாறு கேட்டு கொண்டேன்.. 
எனக்கோ விஷமம் தெரியும்..ஆனால் விஷயம் தெரியாது.. விஷயம் தெரிந்தவர் எழுதும் கட்டுரையும் இதில் இடம் பெறட்டுமே என்ற எண்ணமே அவரை எழுத காரணம்..
சரி, அவர் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.


*********************************************************
  வரலாற்று பார்வை 
ர்மினியா என்ற ஒரு நாடு இருக்கிறது, அது ரஷ்ய federation இல் இருந்த ஒரு நாடு, இப்போது அது ஒரு சுதந்திர நாடு.


இந்த அர்மினியாவிற்கும் Genocide கும் , நமக்கு தெரியாத ஒரு கொடூர சம்பந்தம்  உண்டு, 18 ஆம் நுற்றாண்டில் நடந்த ottaman மன்னர்களால் இந்த அர்மேனியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யபட்டார்கள்.
இந்த அர்மினியர்கள்தான் உலகில் தங்களை முதல் கிறிஸ்துவ நாடு என்று தங்களை பிரகடனபடுத்தி கொண்டவர்கள் அதாவது முதலாவது நுற்றாண்டில்.

 இது ரோமர்கள் கிறிஸ்துவத்தை தழுவதற்கும் முன்பு.
மதத்தின் பெயரால் நடந்த 18 ஆம் நுற்றாண்டு  படுகொலை இன்றும் தொடர்கிறது. அன்றைய   Ottaman empire இன்றைய Turky எனப்படும் நாடு. இந்த மனித படுகொலைகளை பற்றி எழுதி கொண்டே  போகலாம்,

 ந்த அர்மினியாவுகும் சென்னைக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

இந்த அர்மேனியர்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்கள், அதாவது Vasko da Gamma இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு.
 சென்னையிலுள்ள "St Thomas Mount" ஒரு அர்மேனியார்தான் என்ற ஒரு மாற்று செய்தி உண்டு, மேலும் கணிசமான அர்மேனியர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்,

அர்மேனியர்கள் தெரு என்ற ஒரு தெரு இருக்கிறது, அங்கு St Mary;s church என்ற ஒரு 240 வருட பழைய தேவாலயம் ஒன்றும் உள்ளது,




 Kojah Petrus Woskan என்ற சென்னை வாழ் அர்மினியார்த்தன் சைதாபேட்டை Marmalong பாலம் ( அந்த பாலத்தை மறைமலை அடிகள் பாலம் என சிலர் "தமிழ்" படுத்தி இருக்கின்றனர்..ஆனால் வரலாற்று காரணம் கூறும் கல் வெட்டு பக்கத்திலேயே இருக்கிறது - பதிப்பாசிரியர் )




  மற்றும் St Thomas மௌண்டின் 164படிக்கட்டை கட்டியவர்.
ராயபுரதிலுள்ள Arthoon Road எனபது ஒரு அர்மேனியர் பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறதாம் அடுத்த முறை சென்னை வரும்போது இந்த இடங்களுக்கு செல்லவேண்டும்.

Mrinzo நிர்மல்



26 comments:

  1. //"St Thomas Mount"//

    மிக மிக தவறான தகவல் .. பிருங்கி முனிவர் பெயரால் பிருங்கி மலை என்று அழைக்கப் பட்டு பின்பு மருவி பரங்கி மலை என்றாகி, ஆங்கிலேயர்கள் புனித தாமஸ் மலை என்று மாற்றி விட்டனர் என்பதே உண்மை

    ReplyDelete
  2. புதிய தகவல் எல் கே .
    நன்றி

    ReplyDelete
  3. //பிருங்கி முனிவர் பெயரால் பிருங்கி மலை என்று அழைக்கப் பட்டு பின்பு மருவி பரங்கி மலை என்றாகி//

    இதுவும் ஒரு அறியாமையால் வந்த தவறான தகவல்.

    தோம்ஸ் மவுண்ட் அல்லது பறங்கி மலை என்பது, அடையார் ஆற்றுக்கு இப்பக்கம் அமைந்த ஒரு குண்டு. அடையார் ஆற்றுக்கு அப்பக்கமும் ஒரு தோம்ஸ் மலை இருக்கு, அதை இப்போது சின்னமலை என்றழைக்கிறோம்.

    தோமஸ் மவுண்ட் சென். தாமஸ் அவர்கள், ஏசுவின் சீடர் வசித்த பின்னர் அங்கேயே மரித்த இடம் என்று கருதுகின்றனர்.

    தோமஸ் மயிலாப்பூரில் சில மக்களை கிறித்தவர்களாக மாற்றினார், அங்கு ஒரு சிறிய கிறித்தவ கோயிலையும் நிறுவினார், அந்தக் கோயிலின் பழைய எச்சங்கள் இன்றும் சென்.தாமஸ் பசிலிக்காவில் நீங்கள் சென்றால் பார்க்கலாம்.

    தோம்ஸ் மவுண்ட், போர்த்துகேயர்களால் எல் கிராண்ட் மோண்டி என்றார்கள். அங்கும் ஒரு தேவலாயம் பழம்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. பின்னர் அதனை இடித்து போர்த்துக்கேயர்கள் ஒரு கிறித்தவ கோயிலைக் கட்டினர்.

    ஆர்மினியர்களுக்கும் சென்னைக்கும் 7ம் நூற்றாண்டு முதலே வணிக தொடர்புகள் இருந்துள்ளன. இதனால் தான் பறங்கி மலையில் பழைய ஆர்தோடக்ஸ் கிறித்தவ தலம் அழியாமல் பாதுக்காக்கப்பட்ட்து.

    13 நூற்றாண்டில் சென்னைக்கு வந்த மார்க்கோ போலோ, தான் முதன் முதலில் இதனை பிரங்கி மலை என்றார். அதனால் தான் சென். தோமசை இங்குள்ள மக்கள் பிருங்கி முனிவர் என்றனர்.

    freinghi என்றால் வெளிநாட்டவர் என்றுப் பொருள்படும். அதனால் தான் இங்கிருந்த கோயிலை பிரங்கி கோயில் என்றும், தோமஸின் கல்லறையை பிருங்கி முனிவர் சமாதி எனவும் அறியப்பட்டது. இதனால் இது பிரங்கி மலை என்றாகி பின்னர் பறங்கி மலையானது.

    போர்த்துகேயர்கள் சென்னைக்கு வந்த போது 16ம் நூற்றாண்டில், இங்கு Sassanian Pehlevi எனப்படும் பாரசீக நாட்டு கிறித்தவரின் குருசைக் கண்டனர். இந்த குருசும் Sassanian Pehlevi மொழியில் உள்ள கல்வெட்டையும் இன்றும் நீங்கள் பிரகாரத்தில் காணலாம்.

    ஆர்மீனியர்கள் தோம்ஸ் மவுண்டின் கோயில் சிதைவடையாமல் பல்லவர் காலம் தொட்டே பாதுகாத்து வர உதவி உள்ளனர் என்பது வியப்பான செய்தி.

    ReplyDelete
    Replies
    1. தாமசு பசலிகா இத்தாலியில் இருக்கு என வாட்டிக்கன் தரவு சொல்வது பொய்யா.

      Delete
    2. தாமசு பசலிகா இத்தாலியில் இருக்கு என வாட்டிக்கன் தரவு சொல்வது பொய்யா.

      Delete
    3. அப்ப யேன் யேசு சபை யை தவிர யாரும் இது பற்றி ஒரு குறிப்பு ம் சொல்லவில்லை. வாடிகன் இது உண்மை யென யேன் சொல்லவில்லை

      Delete
  4. இயேசுவின் பனிரண்டு சீடர்களில் ஒருவர்தாம் செயின்ட் தாமஸ் எனவும் அவர் சென்னையில் வைத்துக் கொல்லப் பட்ட இடம் பரங்கி மலை எனவும் முன்பு கேள்விப்பட்ட ஞாபகம். இது பற்றி வரலாறு அறிந்தவர்கள்தாம் சரியாகச் சொல்ல முடியும்.

    ReplyDelete
  5. அர்மினியா பற்றிய தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  6. பல சந்தேகங்களுக்கு விடை "வீரமா முனிவர்" (இவர்கூட ஒரு வெள்ளைக்காரன்தான்) எழுதிய "கிறிஸ்தவமும் கீழைத்தேசங்களும்" என்ற நூலில் இருக்கும் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  8. புதிய தகவல். மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நல்ல பதிவு..அதற்கு இடம் கொடுத்த பார்வையாளனுக்கும் நன்றி.

    ----செங்கோவி
    ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

    ReplyDelete
  10. http://en.wikipedia.org/wiki/Thomas_the_Apostle

    அங்கீதாவின் கருத்துக்கள் எனக்கும் சரின்னு படுது...ஏசுவின் சீடர்களில் முதன்மையான தாமஸ் அவர்களின் முயற்சி தான் தாமஸ் மவுண்ட்...சாந்தோம் சர்ச் கூட ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது saint.thom church அப்டிங்கிறது தான் தான் சாந்தோம் னு உருமாரிருச்சு..உண்மையில் தாமஸ் அல்பேனியர் ஆ னு தெரில..இவர் galilie (பெத்லஹெம்) ஐ சேர்ந்த கிறிஸ்துவர்...

    ReplyDelete
  11. ஆர்மீனியர்கள் தோம்ஸ் மவுண்டின் கோயில் சிதைவடையாமல் பல்லவர் காலம் தொட்டே பாதுகாத்து வர உதவி உள்ளனர் என்பது வியப்பான செய்தி.
    "
    ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  12. இது பற்றி வரலாறு அறிந்தவர்கள்தாம் சரியாகச் சொல்ல முடியும்.”

    ஆராய்ச்சி தேவை

    ReplyDelete
  13. Nice info ! Thanks for sharing.”

    நன்றி

    ReplyDelete
  14. செங்கோவி said...
    நல்ல பதிவு..அதற்கு இடம் கொடுத்த பார்வையாளனுக்கும் நன்றி.

    ----செங்கோவி

    நன்றி செங்கோவி

    ReplyDelete
  15. சாந்தோம் சர்ச் கூட ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது saint.thom church அப்டிங்கிறது தான் தான் சாந்தோம் னு உருமாரிருச்சு”

    அட..இப்ப்டி ஒண்ணு இருக்கா?

    ReplyDelete
  16. புதிய தகவல். மிக்க நன்றி”

    மிகவும் மகிழ்ச்சி

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    நன்றி

    ReplyDelete
  18. பல சந்தேகங்களுக்கு விடை "வீரமா முனிவர்" (இவர்கூட ஒரு வெள்ளைக்காரன்தான்) எழுதிய "கிறிஸ்தவமும் கீழைத்தேசங்களும்" என்ற நூலில் இருக்கும் என நினைக்கின்றேன்.


    அதுவும் ஒரு பார்வையாக இருக்குமே தவிர , ஒட்டு மொத்த தீர்ப்பாக இருக்குமா என்பது சந்தேகம்தான்

    ReplyDelete
  19. அர்மினியா பற்றிய தகவலுக்கு நன்றி!


    நன்றி

    ReplyDelete
  20. தாமஸை பிருங்கி முனிவர் என்று இங்கு விளக்கம் கொடுத்துள்ளது முற்றிலும் தவறு. பிருங்கி முனிவர் யுக காலத்தைய சித்தா . ஆராய்து பதிக்கவும். மேலும் அந்த பதிவை நிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்

    அது சரி! புனித தாமஸ் மலை என்றும், பரங்கிமலை
    என்றும் அழைக்கப்படும் அம்மலையின் உண்மையான பெயர்
    என்னவாக இருக்கும் என்று யாராவது ஆராய்ச்சி செய்துள்ளார்களா
    என்பது பற்றித் தெரியவில்லை.
    >
    > 'பரங்கி' என்பது பொதுவாக வெள்ளையரைக் குறிக்கும் இழிவான
    சொல். இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை,
    வெள்ளையர்கள் 'கருப்பர்கள்' என இழிவு படுத்தியதால், பதிலுக்கு
    நம்மவர்களும், வெள்ளையனை 'பரங்கியர்கள்' என இழிவு படுத்தி
    யுள்ளனர். (பரங்கிப் பழம் போன்ற நிறத்தில் அவர்கள் இருந்ததால்
    விளைந்த காரணப்பெயர்).
    >
    > அவ்வாறு ஒரு இழிவான குறிப்புப் பெயரையா, ஒரு
    மலைக்கு, அதுவும் புனிதமான பெரியவர் தாமஸ் வழி
    பட்ட அல்லது அடக்கம் செய்யப்பட்ட மலைக்குச் சூட்டுவர்?. அது
    எங்ஙனம் ஆங்கிலேயரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்?. அதனால்
    தான் ஆங்கிலேயர்கள் அதனை மறுத்து புனித தாமஸ் மலை என்று
    பெயர் சூட்டினரோ?.
    >

    ReplyDelete
  21. > சரி! புனித தாமஸ் வருகை தருவதற்கு முன்னால், பரங்கியர்கள்
    இந்தியா வருவதற்கு முன்னால் அந்த மலைக்கு ஒரு பெயர் இருக்க
    வேண்டுமே! அதுவும் தமிழில் தானே இருக்க வேண்டும்! அந்தப்
    பெயர் என்ன?. ஏன் அந்தப் பெயர் பின்னால் மறைந்து போனது?
    (பாரியின் 'பறம்பு மலை' பின்னால் 'பிரான் மலை' ஆன மாதிரி!).
    பரங்கி மலையின் பெயருக்கான மூலம் தான் என்ன?..
    >
    > இதோ விடை..
    >
    > அது உண்மையில் பரங்கிமலை அல்ல. 'பிருங்கி மலை' என்பதே
    சரியானதாகும்.
    >
    > அது சரி! யார் இந்த பிருங்கி? ஏன் இந்த மலைக்கு அவர்
    பெயர்? அதற்கு ஏதாவது சான்று இருக்கின்றதா?.
    >
    > இருக்கிறது.
    >
    > அது...
    >
    > பிருங்கி முனிவர் வரலாறு*
    >
    > முனிவர்கள் பலருள் சிவனின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர்
    பிருங்கி. மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். தீவீரம்
    என்றால் அதி தீவீரம். சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட
    மாட்டார். அது அந்த சிவனின் மனைவியான சக்தியாக இருந்த
    போதிலும் கூட. அந்த அளவுக்குச் சிறந்த பக்தியுடையவர்.
    >
    > ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் வந்தார் பிருங்கி
    முனிவர். அங்கே தம்பதி சமேதராய், சிவ பார்வதி ரூபமாய் ரி
    சபாரூடனராய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்தனர் இருவரும். முனி
    வர்கள் பலரும் அவர்களை வலம் வந்து தொழுது வணங்கிக்
    கொண்டிருந்தனர்.
    >
    > ஆனால் பிருங்கியோ இறைவனை வணங்க மனம் ஒப்பாமல்
    ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். காரணம், சிவனோடு சக்தியும்
    உடன் இருந்ததே. சிவனை மட்டுமே இதுகாறும் வணங்கி வந்த
    தாம், சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என
    எண்ணினார் முனிவர். அதனால் ஔர் முடிவிற்கு வந்தார்.
    >
    > சிவனை மட்டுமே வழிபட எண்ணித் தம்மை ஔர் வண்டாக
    உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை
    மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் சென்று வி
    ட்டார்.
    >
    > இதனால் கடும் கோபம் கொண்டாள் சக்தி. தன்னை முனி
    வர் அவமானப்படுத்தி விட்டதாகவும் கருதினாள். "என்னை
    வணங்காத உனக்கு என் சக்தி மட்டும் எதற்கு?. அதனை எனக்கே
    கொடுத்து விடு" எனச் சினத்துடன் கட்டளையிட்டாள்.
    >
    > "அவ்வாறே தந்தேன்" என முனிவர் கூறி தமது சக்தியைத்
    துறந்தார், வெறும் எலும்புக் கூடாய், நிற்கக் கூடத் திராணியற்றுக்
    கீழே விழப் போன அவரை, சிவன் தனது கோலைக் கைப்பி
    டியாய்த் தந்து காப்பாற்றினார்.
    >

    ReplyDelete

  22. > பின்னர் பார்வதியை நோக்கி, "நானும் நீயும் சரி சமம் என்று
    உணராமல், நீ என்னில் பாதி என்பதையும் மறந்து, என்னை
    வணங்குவதும் உன்னை வணங்குவதும் ஒன்று தான் என உணராமல்,
    எனது பக்தனைத் துன்பத்திற்கு உள்ளாக்கியதால், நீ சிவ அபராதம்
    செய்தவளாகிறாய். எனவே இந்தப் பாவம் நீங்கப் பூவுலகம் சென்று
    தவம் செய்" எனக் கட்டளையிட்டார்.
    >
    > அவ்வாறே தேவியானவள் பூவலகம் வந்து தவம் செய்து
    இறைவன் அருள் பெற்றாள். அவள் அவ்வாறு தவம் செய்த தி
    ருத்தலம் தான் திருநாகேஸ்வரம்.
    >
    > அங்கு மற்ற இடங்களைப் போலல்லாது, இறைவனும், இறைவி
    யும் தனித் தனியே வீற்றிருக்கின்றனர். வெளிப்பிரகாரத்தி
    ல் அம்பாள் சன்னதி உள்ளது. கோயிலின் உட்புறத்தே இறைவன்
    வீற்றிருக்கின்றார்.
    >
    > இறைவன் பெயர் ஸ்ரீசெண்பகாரண்யேசுவரர்
    >
    > இறைவி பெயர் கிரிஜ குஜாம்பாள்.
    >
    > இறைவிக்கு, தவக் கோலத்தில் இருப்பதால், இடையூறு இருக்கக்
    கூடாது என்பதற்காக அபிஷேக ஆராதனை கிடையாது. வருடம்
    ஒரு முறை பச்சைக் கற்பூரம் போன்றவை கொண்டு காப்பிடப்படுகி
    றது.
    >
    > சிவன் அது போன்றே பிருங்கி முனிவரிடம், " சிவனும் சக்தியும்
    ஒன்று என அறியாமல் நீர் நடந்து கொண்டதால், பூவுலகம் சென்று
    தவம் செய்து என்னை அடைவீராக" எனக் கட்டளையிட்டார்.
    >
    > அவ்வாறே பிருங்கி முனிவர் பூவுலகம் வந்து தவம்
    செய்தார். அவ்வாறு அவர் தவம் செய்த மலை தான் பிருங்கி
    மலை. அது தான் பின்னர் மருவி பரங்கி மலையாகி உள்ளது.
    (பறம்பு மலை, பிறம்பு மலையாகிப் பின்னர் பிரான் மலையானது
    போல்).
    >
    > அவ்வாறு பிருங்கி முனிவர் தவம் செய்து வழிபட,
    இறைவன் அவருக்கு நந்தி ரூபமாய்க் காட்சி அளித்தார். அவ்வாறு
    காட்சி அளித்த தலம் தான், சென்னை, பரங்கிமலை இரயி
    லடி அருகே உள்ள நந்தீசுவரர் ஆலயம்.
    >
    > இறைவன் பெயர் நந்தீசுவரர்
    >
    > இறைவி பெயர் ஆவுடை நாயகி
    >
    > இத் திருத்தலத்திலிருந்து நேரே நோக்கினால் பரங்கிமலை தெரி
    யும். காஞ்சி மகாப் பெரியவரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து
    சிறப்பித்ததுடன், இதன் பெருமையை எடுத்துரைத்துள்ளார்கள். இது
    பற்றிய வரலாற்றுக் குறிப்பினை இத்திருக்கோயிலில் காணலாம்.
    >
    > மிகவும் பழங்காலத் திருத்தலம் என்பது கோயிலின் அமைப்பி
    னைப் பார்க்கும் பொழுதே விளங்கும்.
    >
    > வாய்ப்புள்ளவர்கள் சென்று வரலாமே!. பிருங்கியின் அருளும்
    பெற்று வரலாமே!
    >
    >
    > * பிருங்கி முனிவர் பற்றிய வரலாற்றினைத் தெரிவித்தவர் மி
    கவும் வயதான ஒரு பெரியவர். திருநாகேசுவரத்தில், கிரி
    ஜகுஜாம்பாள் சன்னதி அருகே வாயிற்புறத்தில் அமர்ந்திருப்பார்.
    வருவோர் போவோரிடம் வாய் ஔயாமல் பிருங்கி முனிவரின்
    கதையைக் கூறிக் கொண்டிருப்பார். பல் இல்லாததாலும், அவர்
    பேச்சு மிகவும் குழறலாக இருப்பதாலும், அவர் கூறுவதை
    பெரும்பாலும், யாரும் செவி மடுப்பதில்லை. மேலும் பலருக்குப்
    பல்வேறு அவசரம் வேறு. சிலர் பணத்திற்காக அவ்வாறு கூறுகி
    ன்றாரோ எனக் கருதி மறுதலித்துச் செல்கின்றனர். அவர் யாரிடம்
    காசு கேட்பதில்லை. யாராவது பணமோ, பழம் போன்றவை
    கொடுத்தாலோ மறுப்பதும் இல்லை. எனக்கு, முதலில் அவர் கூறி
    யது புரியாததால், திரும்பக் கூறுமாறு கேட்டுக் கொண்டேன். சலி
    ப்பேதும் படாமல் கூறினார்.
    >
    > பிருங்கி முனிவர் வரலாறு பற்றி ஏதும் புத்தகத்தில் வந்துள்ளதா
    என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா