Friday, October 1, 2010

எந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள், சில பதில்கள்

படத்தின் கதை என்ன ?

அது இந்நேரம் எல்லோர்க்கும் தெரிஞ்சு இருக்கும்.. தெரியாதவங்களிடம் சொல்லி , அவுங்க படம் பார்க்கும் அனுபவத்தை கெடுப்பதும் தப்பு

சரி..இது ரஜினி படமா, அல்லது ஷங்கர் படமா?சுஜாதா படம்.. படத்தின் பலம் வசனம்தான்.. திரைக்கதை எல்லாம் அவ்வளவு பிரமாதாம் என சொல்ல முடியாது.. சங்கர் படத்தின் வழக்கமான காட்சியமைப்பு இல்லாதது ஒரு பிளஸ் பாயிண்ட் .. ரஜினியை எந்த இமேஜ் வளையத்தில் சிக்காமல் நடிக்க வைத்து இருப்பதும் ஷங்கரின் சாதனை..
ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு வித்தியாசமான ரஜினியை பார்த்த திருப்தி கிடைக்கிறது... நடிப்பின் பல உச்சங்களை தொட்டுள்ளார் ரஜினி..
படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக விளம்பர படுத்தினாலும் , அப்படியெல்லாம் இல்லை.. ஆனால் ரஜினியின் நடிப்பு உலகத்தரம்..
அறிமுகப்பாடல் , சண்டை என ரசிகர்களுக்கு வழக்கமான ரஜினி படத்துக்கு கைதட்டி விசில் அடிக்கும் சந்தர்ப்பம் இல்லை.. ஆனால் நடிப்புக்கும், டயலாக் டெலிவரிக்கும் விசில் பட்டையை கிளப்புகிறது..
ரஜினி இல்லை என்றால் இந்த படம் சாதாரண படம்தான்..காமடி, இசை , ஐஸ்வர்யா ராய் ??

காமடி நடிகர்களை விட ரஜினிதான் காமடி நன்றாக செய்கிறார்.. இசை சொல்லவே வேண்டாம்.. ரகுமான் .. நல்ல மூடில் இருந்திருக்கிறார் .. பின்னணி இசையும் பாடல்களும் அருமை..
கதையில் ஐஸ்வர்யா ராய்க்கு முக்கிய இடம்.. சும்மா வந்து போகும் நிலை இல்லை .. கச்சிதமாக பொருந்துகிறார்...


படத்தின் பிளஸ் மைனஸ் என்ன ?

மைனஸ் நிறைய.. இதை ஒரு அறிவியல் படம் என சொல்கிறார்கள்..ஆனால் அறிவியல் படம் மாதிரி இல்லை.. ஒரு பொழுது போக்கு படம்தான்.. ரோபோ கேரக்டர் சக்தி வாய்ந்தது என சொல்லி விடுவதால், சண்டைகளில் விறு விறுப்பு இல்லை.. வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது... சம்பவங்களை இன்னும் யோசித்து அமைத்து இருக்கலாம்..
பிளஸ் என்று பார்த்தால் , சுஜாதாவின் பங்களிப்பு... வலுவான, ஒற்றை வார்த்தையுடன் படம் முடிவது,, அதன் தரத்தை உயர்த்துகிறது..
செண்டிமெண்ட் இல்லாமல் இருப்பது, ஒரு விதத்தில் பிளஸ் என்றால், ஒரு விதத்தில் மைனஸ்... கேரக்டர்ர்கள் மேல் முழு ஈடுபாடு வரவில்லை..

அறுபது வயது ஆள் கதநயாகனாக நடிக்கலாமா?

அப்படி நடிப்பதுதான் சினிமா.. விஞ்ஞானி என்றால் விஞ்ஞானிதான் நடிக்க வேண்டும்.. முப்பது வயது ஆள் என்றால் முப்பது வயது ஆள்தான் நடிக்க வேண்டும் என்றால் , சினிமாவே எடுக்க முடியாது..

மொத்தத்தில் படம் எப்படி?


நடிப்பு , வசனம் , இசை - outstanding

கதை - good

திரைகதை ----------- bad
அனைவரும் பார்த்து கைதட்டி, சிரித்து மகிழ வைக்கிறது படம் என்பது பெரிய பிளஸ் .. படம் முடிவில் , படத்தில் பணியாற்ரியவ்ர்கள் பெயர் போடும் பொது , அனைவரும் கைதட்டி பாராட்டுவது படத்தின் வெற்றி

மொத்தத்தில் எந்திரன் , திரை அரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய நல்ல அனுபவம் ( இன்னும் மெருகு ஏற்றி இருக்க முடியும் )

4 comments:

  1. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

    ReplyDelete
  2. "muthal naale paarthachaa?"

    தலைவர் படமாச்சே ..அதனால்தான்.. முதல் காட்சிக்கு சென்று , ஆடல் பாடல், விசிலுடன் ரசிப்பது தனி அனுபவம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா