Thursday, October 7, 2010

எந்திரன் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?

எந்திரன் வரலாறு காணாத வெற்றி பெற்று, அனைவரையும் கவர்ந்துள்ளது.. ஆனாலும சிலருக்கு ,சுமார் இரண்டு சதவிகிதம் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது..

யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?

1 சன் டீவி, தினகரன் போன்றவற்றின் போட்டியாளர்களுக்கு ( ஒரு செய்தி தாள் இரண்டு நாட்கள் கேலி படம் வெளியிட்டது )
2 வெற்றியாளர்களை கண்டால் பொறாமை படும் மனம் கொண்டவர்களுக்கு..
3 சினிமா என்றால் அதில் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு
4 நீதி போதனையை எதிர்பார்த்து படம் பார்க்க செல்பவர்களுக்கு
5 தமிழ் படத்துக்கு இதெல்லாம் தேவையில்லை என்ற தாழ்வு மனப்பன்மை கொண்டவர்களுக்கு..
6 காதல் என்பதுதான் உயிர் அல்லது மனதின் ஆதார குணம். மனம் செயல்பட ஆரம்பித்தால் காதல் அங்கு தோன்றும் என்ற யதார்த்தம் புரியாதவர்களுக்கு
7 காதல் என்றால் காமம் எனும் தப்பர்த்தம் கொண்டவர்களுக்கு
8 ஆபாசம் இல்லாத சினிமாவை ஏற்க மனம் இல்லாதவர்களுக்கு
9 வெளிநாட்டு படக்கள் போல இல்லையே என , வெளி நாட்டு படத்தை அளவு கோளாக கொளபவ்ர்களுக்கு
10 கிராபிக்ஸ் திகட்டுகிறது, திரை கதை சரி இல்லை என உண்மையிலேயே நினைப்பவர்களுக்கு..

இப்படி இருந்தாலும், படத்தை வெற்றி பெற செய்தது, படத்தை திட்டுபவர்கள்..அவர்கள் அனைவரும் தலா இரண்டு முறை, திட்டுவதற்கென்றே படம் பார்த்தனர்.. ரசிகர்களிலேயே சிலர் இன்னும் பார்க்கவில்லை..
அனால் பிடிக்காதவர்கள் அனைவரும் பார்த்து விட்டனர்.,.. இன்னும் பார்க்கின்றனர்..

4 comments:

  1. அனைத்துமே உண்மை. ரசிகர்களே இன்னும் சில பேர் படம் பார்க்கவில்லை. ஆனால் பிடிக்காதவர்கள் தான் இரண்டு முறை மூன்று முறை பார்த்துள்ளனர். சாரு ஒரு லிங்க் கொடுத்துள்ளார் (கு மணி) அந்த விமர்சனத்தையும் பாருங்கள்.

    ReplyDelete
  2. உங்களுக்கு எழுத ஒண்ணுமில்லை அதான்
    அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு
    இருகிரிர்போலும்

    ReplyDelete
  3. "உங்களுக்கு எழுத ஒண்ணுமில்லை அதான்
    அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு
    இருகிரிர்போலும்"


    அப்படி இல்லீங்க .. இப்ப அடிக்கிற எந்திரன் அலைல , ஒரு நல்ல கதை எழுதினாலும் கண்டுக்க மாட்றாங்க..
    போதும் னு நினைசாலும் அறிவு ஜீவிகள் விட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க .. என்ன செய்றது..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா